
வைராக்ய சதகம்- பர்த்ருஹரி – நங்கநல்லூர் J K SIVAN
ஸ்லோகங்கள் 61-70
61. परेषां चेतांसि प्रतिदिवसमाराध्य बहुधा प्रसादं किं नेतुं विशसि हृदय क्लेशकलितम् । प्रसन्ने त्वय्यन्तः स्वयमुदितचिन्तामणिगणो विविक्तः संकल्पः किमभिलषितं पुष्यति न ते ॥
பரேஷாம் சேதாம்ஸி ப்ரதிதி³வஸமாராத்⁴ய ப³ஹுதா⁴ ப்ரஸாத³ம் கிம் நேதும் விஶஸி ஹ்ருʼத³ய க்லேஶகலிதம் ।
ப்ரஸந்நே த்வய்யந்த: ஸ்வயமுதி³தசிந்தாமணிக³ணோ விவிக்த: ஸங்கல்ப: கிமபி⁴லஷிதம் புஷ்யதி ந தே ॥ 61 ॥
‘ஹே மனமே, எப்போதும் எப்படியாவது மற்றவர்களை திருப்திப்படுத்தி அதன் மூலம் பெருமை அடையவேண்டும் என்று பிரயாசைப் படுகிறாயே , எதற்கு இந்த வெட்டி வேலை? ஒரு கணமாவது, உன் சந்தோஷத்தை உன்னிடமிருந்து பெற முயலவில்லையே. உன்னுள்ளே புதையலாக சந்தோஷம் உள்ளதே. உன் எண்ணம் உள் நோக்கி சென்றால், அற்புதமான சர்வ சக்தி பொருந்திய சிந்தாமணி எனும் உன் சிந்தைக்குள்ளேயே இருக்கும் ஆத்மா எனும் மாணிக்கம் உனக்கு ஆனந்தம் அளிக்குமே. உன் கவலைகள் எல்லாம் தீருமே. உன் ஹ்ருதயத்தில் ஆத்மா குடிபுகுந்தால் அதன் ஆனந்தத்தை நீ உணர்ந்தால் உன்னைப்போல் பாக்கியசாலி எவன்? அது உன்னை அழகாக நன்றாக வழி நடத்துமே .
62. परिभ्रमसि किं मुधा क्वचन चित्त विश्राम्यतां स्वयं भवति यद्यथा भवति तत्तथा नान्यथा । अतीतमननुस्मरन्नपि च भाव्यसंकल्पयन् नतर्कितसमागमाननुभवामि भोगानहम् ॥
பரிப்⁴ரமஸி கிம் முதா⁴ க்வசந சித்த விஶ்ராம்யதாம் ஸ்வயம் ப⁴வதி யத்³யதா² ப⁴வதி தத்ததா² நாந்யதா² ।அதீதமநநுஸ்மரந்நபி ச பா⁴வ்யஸங்கல்பயந் நதர்கிதஸமாக³மாநநுப⁴வாமி போ⁴கா³நஹம் ॥ 62 ॥
பர்த்ருஹரி இந்த ஸ்லோகத்தில் மனதுக்கு புத்திமதி சொல்கிறார். ஹே மனமே, எதற்கு வீணாக, வியர்த்தமாக அங்குமிங்கும் அலைகிறாய்? ஓரிடத்தில் நிலையாக நில். எது நடக்கவேண்டுமோ அதை எவரும், எதனாலும் நிறுத்த முடியாது. உனக்கு அப்பாற்ப்பட்ட ஒரு சக்தி உன்னுள்ளேயே இருக்கிறதே அது நடத்தும் வேலை அது. உன் செயல்பாட்டில் எதுவும் இல்லை. அதெல்லாம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டவை. ஆத்மாவை உணர்ந்து அமைதியாக இரு. உன் திட்டம் எதுவும் நடக்காது. வருவதை ஏற்றுக்கொள்ள தயாராக இரு. பதட்டம் வேண்டாம். பயம் வேண்டாம். உணர்ச்சிகளுக்கு அங்கே இடமில்லை. நடந்ததோ, நடப்பதோ, நடக்கப்போவதோ எதுவும் உன் கையில் இல்லை.
63. एतस्माद्विरमेन्द्रियार्थगहनादायासकादाश्रय श्रेयोमार्गमशेषदुःखशमनव्यापारदक्षं क्षणात् । स्वात्मीभावमुपैहि संत्यज निजां कल्लोललोलां गतिं मा भूयो भज भङ्गुरां भवरतिं चेतः प्रसीदाधुना ॥ ६३॥
ētasmādviramēndriyārthagahanādāyāsakādāśraya śrēyōmārgamaśēṣaduḥkhaśamanavyāpāradakṣaṁ kṣaṇāt । svātmībhāvamupaihi saṁtyaja nijāṁ kallōlalōlāṁ gatiṁ mā bhūyō bhaja bhaṅgurāṁ bhavaratiṁ cētaḥ prasīdādhunā
ஏதஸ்மாத்³விரமேந்த்³ரியார்த²க³ஹநாதா³யாஸகாதா³ஶ்ரய ஶ்ரேயோமார்க³மஶேஷது:³க²ஶமநவ்யாபாரத³க்ஷம் க்ஷணாத் । ஸ்வாத்மீபா⁴வமுபைஹி ஸந்த்யஜ நிஜாம் கல்லோலலோலாம் க³திம் மா பூ⁴யோ ப⁴ஜ ப⁴ங்கு³ராம் ப⁴வரதிம் சேத: ப்ரஸீதா³து⁴நா ॥ 63 ॥
என் மனமே, ஹ்ருதயமே , உங்கள் ஆரோக்யம எதில் இருக்கிறது தெரியுமா? இந்த அடர்ந்த காடு போன்ற உலகத்தின் மாயா ஜாலங்களில் மயங்காமல் ஜாக்கிரதையாக அதிலிருந்து விலகி இருப்பதில் தான். இந்த அடர்ந்த காட்டில் நீ புகுந்து கடந்து தான் போகவேண்டும். ஆகவே உன் பாதையை ஒளிமயமாக்கிக் கொள் . துன்பம் தவிர். அதற்கான ஞானம் உன்ன்னுள்ளே பெறு . வைராக்கிய சித்தத்தோடு நட . அப்போது உன்னை எந்த இடர்ப்பாடும் நெருங்காது. புலன்களை அடக்கி ஆள். அதன் வழி போகாதே.
64. . मोहं मार्जय तामुपार्जय रतिं चन्द्रार्धचूडामणौ चेतः स्वर्गतरङ्गिणीतटभुवामासङ्गमङ्गीकुरु । को वा वीचिषु बुद्बुदेषु च तडिल्लेखासु च श्रीषु च ज्वालाग्रेषु च पन्नगेषु च सुहृद्वर्गेषु च प्रत्ययः ॥ ६४॥
mōhaṁ mārjaya tāmupārjaya ratiṁ candrārdhacūḍāmaṇau cētaḥ svargataraṅgiṇītaṭabhuvāmāsaṅgamaṅgīkuru । kō vā vīciṣu budbudēṣu ca taḍillēkhāsu ca śrīṣu ca jvālāgrēṣu ca pannagēṣu ca suhr̥dvargēṣu ca pratyayaḥ
மோஹம் மார்ஜய தாமுபார்ஜய ரதிம் சந்த்³ரார்த⁴சூடா³மணௌ சேத: ஸ்வர்க³தரங்கி³ணீதடபு⁴வாமாஸங்க³மங்கீ³குரு ।
கோ வா வீசிஷு பு³த்³பு³தே³ஷு ச தடி³ல்லேகா²ஸு ச ஶ்ரீஷு ச ஜ்வாலாக்³ரேஷு ச பந்நகே³ஷு ச ஸுஹ்ருʼத்³வர்கே³ஷு ச ப்ரத்யய: ॥ 64 ॥
அடாடா, இந்த புலன்கள் எவ்வளவு தீய சக்தி கொண்டவை ! எப்படி புத்தியை, மனத்தை, கலக்குகிறது. தவறான வழியில் வலுக்கட்டாயமாக இழுத்துச்செல்கிறது. அதை எதிர்த்து தடுத்து, அப்புறப்படுத்த மனதை கல்லாக்கிக் கொள் . உறுதியாக இரு. அதற்கு அந்த கங்கையும் பிறையும் சூடிக்கொண்டு இருக்கிறானே பரமேஸ்வரன் அவனை துணைக்கோள். கங்கை நதி உனக்கு அருகிலேயே இருக்கிறாளே, அங்கே முழுகி கரையோரம் அமர்ந்து தியானம் செய்.
யை நினைத்தாலே உன்னை புனிதமடையச் செய்வாள். ஜாக்கிரதை. நீர்க்குமிழி மேல் அமர்ந்து நீ கடலில் பிரயாணம் பண்ண முடியாது. யோசித்துப் பார். இந்த நிரந்தரமில்லாத உலகத்தில் எதை நீ அடைய முடியும், எது உன்னோடு என்றும் இருக்கும்? மயங்காதே மனமே, மாய உலகு உன்னை மயக்க முயற்சிக்கும். இடம் கொடுக்காதே.
65. चेतश्चिन्तय मा रमां सकृदिमामस्थायिनीमास्थया भूपालभ्रुकुटीकुटीविहरणव्यापारपण्याङ्गनाम् । कन्थाकञ्चुकिनः प्रविश्य भवनद्वाराणि वाराणसी रथ्यापङ्क्तिषु पाणिपात्रपतितां भिक्षामपेक्षामहे ॥ ६५॥
cētaścintaya mā ramāṁ sakr̥dimāmasthāyinīmāsthayā bhūpālabhrukuṭīkuṭīviharaṇavyāpārapaṇyāṅganām । kanthākañcukinaḥ praviśya bhavanadvārāṇi vārāṇasīḥ athyāpaṅktiṣu pāṇipātrapatitāṁ bhikṣāmapēkṣāmahē
சேதஶ்சிந்தய மா ரமாம் ஸக்ருʼதி³மாமஸ்தா²யிநீமாஸ்த²யா பூ⁴பாலப்⁴ருகுடீகுடீவிஹரணவ்யாபாரபண்யாங்க³நாம் ।
கந்தா²கஞ்சுகிந: ப்ரவிஶ்ய ப⁴வநத்³வாராணி வாராணஸீ ரத்²யாபங்க்திஷு பாணிபாத்ரபதிதாம் பி⁴க்ஷாமபேக்ஷாமஹே ॥ 6
செல்வத்தை நாடாதே. ஓரிடத்தில் நிற்காத வாஸ்து அதை நீ எப்படி உனதாக்கிக் கொள்ள முடியும்? நிழலைப் பிடிக்க லையாதே. ரமா எனும் அந்த லக்ஷ்மி அடிக்கடி இடம் மாறுபவள். அவளை ஸாஸ்வதம் என நினைத்து ஏமாறாதே. பேராசை பல பெரிய சாம்ராஜ்யங்களையே அழித்திருப்பதை ஞாபகத்தில் வை.
66.अग्रे गीतं सरसकवयः पार्श्वयोर्दाक्षिणात्याःपश्चाल्लीलावलयरणितं चामरग्राहिणीनाम् । यद्यस्त्वेवं कुरु भवरसास्वादने लम्पटत्वं नो चेच्चेतः प्रविश सहसा निर्विकल्पे समाधौ ॥ ६६॥
agrē gītaṁ sarasakavayaḥ pārśvayōrdākṣiṇātyāḥ paścāllīlāvalayaraṇitaṁ cāmaragrāhiṇīnām । yadyastvēvaṁ kuru bhavarasāsvādanē lampaṭatvaṁ nō cēccētaḥ praviśa sahasā nirvikalpē samādhau ॥ 66
அக்³ரே கீ³தம் ஸரஸகவய: பார்ஶ்வயோர்தா³க்ஷிணாத்யா: பஶ்சால்லீலாவலயரணிதம் சாமரக்³ராஹிணீநாம் ।
யத்³யஸ்த்வேவம் குரு ப⁴வரஸாஸ்வாத³நே லம்படத்வம் நோ சேச்சேத: ப்ரவிஶ ஸஹஸா நிர்விகல்பே ஸமாதௌ⁴ ॥ 66 ॥
ஹே , மனமே, உனக்கு ரெண்டு வித வாய்ப்பு. அங்கே பார் உன் எதிரே ஒரு நாட்டிய மேடையில் வாத்ய இசையோடு, கை வளையல்கள், கங்கணங்கள் ஒலிக்க ஒரு பெண் வனப்போடு அழகாக நடமாடுகிறாள். அது உன்னை ஈர்க்க வேண்டுமா, அல்லது திரும்பி உட்கார்ந்து மனதை ஒரு நிலையில் ஈடுபடுத்தி ஆத்ம விசாரத்தில் செலுத்தி, கண்ணும் கருத்தும் உள்நோக்கி தேடலில் தியானத்தில் ஈடுபடுத்த போகிறாயா? எதை நீ விரும்புகிறாய் என்பதை பொறுத்து உன் நிம்மதி ஆனந்தம் காத்திருக்கிறது. புத்திசாலி மனதை த்யானத்தில் தான் ஈடுபடுத்தி பயனடைவான்.
67. प्राप्ताः श्रियः सकलकामदुघास्ततः किं न्यस्तं पदं शिरसि विद्विषतां ततः किम् । सम्पादिताः प्रणयिनो विभवैस्ततः किं कल्पस्थितास्तनुभृतां तनवस्ततः किम् ॥ ६७॥
prāptāḥ śriyaḥ sakalakāmadudhāstataḥ kiṁ nyastaṁ padaṁ śirasi vidviṣatāṁ tataḥ kiṁ । sampāditāḥ praṇayinō vibhavaistataḥ kiṁ kalpasthitāstanubhr̥tāṁ tanavastataḥ kim ॥ 67
ப்ராப்தா: ஶ்ரிய: ஸகலகாமது³கா⁴ஸ்தத: கிம் ந்யஸ்தம் பத³ம் ஶிரஸி வித்³விஷதாம் தத: கிம் । ஸம்பாதி³தா: ப்ரணயிநோ விப⁴வைஸ்தத: கிம் கல்பஸ்தி²தாஸ்தநுப்⁴ரு’தாம் தநவஸ்தத: கிம் ॥ 67॥
ஹே , மனமே உன்னிடம் நறுக்கென்று நாலு கேள்விகள் கேட்கிறேன். 1. உன்னிடம் உலகத்தின் அத்தனை செல்வம் இருந்தால் ஒன்று பாக்கியில்லாமல் உனது அத்தனை ஆசைகளும் பூர்த்தியடைந்துவிடுமா? அதனால் உன்னையே நன்றியோடு நினைக்கும் நண்பர்கள் உறவினர்கள் கிடைப்பார்களா? 2 உன் தேகம் உலகம் உள்ளவரை சாஸ்வதமாக இருந்துவிடுமா? 3.எந்த வஸ்துவால் உன் புலன்களின் ஆசைகள் விருப்பங்கள் மனோரதங்கள் எல்லாம் முழுதுமாக நிறைவேறிவிடும்? எந்த வஸ்துவால் உன் சகல எதிரிகளும் உன்னை சரணடைவார்கள்?4. எந்த பட்டம், விருது உன்னை அமரனாக்கிவிடும்? அதற்கப்புறம் எந்த கவலையும் இல்லாமல் வைக்குமா? எதுவும் வேண்டாம் போதும் என்று சொல்ல வைக்குமா?
68. भक्तिर्भवे मरणजन्मभयं हृदिस्थं स्नेहो न बन्धुषु न मन्मथजा विकाराः । संसर्गदोषरहिता विजना वनान्ता वैराग्यमस्ति किमितः परमर्थनीयम् ॥ ६८
bhaktirbhavē maraṇajanmabhayaṁ hr̥disthaṁ snēhō na bandhuṣu na manmathajā vikārāḥ । saṁsargadōṣarahitā vijanā vanāntā vairāgyamasti kimitaḥ paramarthanīyam
ப⁴க்திர்ப⁴வே மரணஜந்மப⁴யம் ஹ்ருʼதி³ஸ்த²ம் ஸ்நேஹோ ந ப³ந்து⁴ஷு ந மந்மத²ஜா விகாரா: । ஸம்ஸர்க³தோ³ஷரஹிதா விஜநா வநாந்தா வைராக்³யமஸ்தி கிமித: பரமர்த²நீயம் ॥ 68 ॥
மனதில் ஜனனம் மரணம் திரும்ப திரும்ப நேருவதைப் பற்றியும், அதனால் விளையும் சம்சார சாகர தூரம், துன்பம் பற்றிய பயம் இருந்தால் அதிலிருந்து மீள ஒரே வழி பரமேஸ்வரனை மனதில் நினைப்பது ஒன்றே. சொந்த பந்தம் நட்பு எல்லாம் உலக சம்பந்தங்கள் தான். உலக சம்பந்தப்பட்ட எதுவுமே மாறிக்கொண்டே தான் இருப்பது, அழியப்போவது. அமைதியான வனத்திற்கு சென்று தனியாக தியானம் செய். உலகத்தின் பிடியிலிருந்து உன்னை விடுவித்துக் கொள் என்கிறார் பர்த்ருஹரி. பற்றற்று இப்படி பரமனைப் பிடித்தவனுக்கு நிகர் எவனும் இல்லை.
69. तस्मादनन्तमजरं परमं विकासि तद्ब्रह्म चिन्तय किमेभिरसद्विकल्पैः । यस्यानुषङ्गिण इमे भुवनाधिपत्य- भोगादयः कृपणलोकमता भवन्ति ॥ ६९॥
tasmādanantamajaraṁ paramaṁ vikāsi tadbrahma cintaya kimēbhirasadvikalpaiḥ । yasyānuṣaṅgiṇa imē bhuvanādhipatya – bhōgādayaḥ kr̥paṇalōkamatā bhavanti ॥ 69
தஸ்மாத³நந்தமஜரம் பரமம் விகாஸி தத்³ப்³ரஹ்ம சிந்தய கிமேபி⁴ரஸத்³விகல்பை: । யஸ்யாநுஷங்கி³ண இமே பு⁴வநாதி⁴பத்ய- போ⁴கா³த³ய: க்ருʼபணலோகமதா ப⁴வந்தி ॥ 69 ॥
உன் மனது எதை நாட வேண்டும் தெரியுமா? என்றும் சாஸ்வதமான, காலத்தை வென்ற, மிக உன்னதமான, ஞான ஒளி மிக்க, ஸத்யத்தை , பிரம்மத்தை, ஆத்மாவை. அதைவிட்டு எதற்கு இந்த தற்காலிக சுக நாட்டம்? குப்பை குப்பையாக உலக ஈர்ப்பு எண்ணங்கள், வெறும் கற்பனையான அற்ப சுகங்கள் மீது ஆர்வம்? ஞானி இதை அறிந்து ப்ரம்ம ஆனந்தத்தை தேடி அடைகிறான்.
70. .पातालमाविशसि यासि नभो विलङ्घ्य दिङ्मण्डलं भ्रमसि मानस चापलेन । भ्रान्त्यापि जातु विमलं कथमात्मनीनं न ब्रह्म संस्मरसि निर्वृतिमेषि येन ॥ ७०॥
pātalamāviśasi yāsi nabhō vilaṅghya diṅmaṇḍalaṁ bhramasi mānasa cāpalēna । bhrāntyāpi jātu vimalaṁ kathamātmanīnaṁ na brahma saṁsmarasi nirvr̥timēśi yēna
70. பாதாலமாவிஶஸி யாஸி நபோ⁴ விலங்க்⁴ய தி³ங்மண்ட³லம் ப்⁴ரமஸி மாநஸ சாபலேந । ப்⁴ராந்த்யாபி ஜாது விமலம் கத²மாத்மநீநம் ந ப்³ரஹ்ம ஸம்ஸ்மரஸி நிர்வ்ரு’திமேஷி யேந ॥ 70॥
மனமே உன் கதியைப் பார்த்தாயா? எவ்வளவு துர்பாக்கியம் உனக்கு? ஒரு நிலையில்லாமல், அலைமோதி, தடுமாறி, ஆசை வயப்பட்டு நீ பூமியிலிருந்து பாதாளத்தை நோக்கி தலை குப்புற விழுகிறாயே , மேலே எழும்புகிறாய், காற்றாடி போல் திசை தெரியாமல் அலைகிறாய். தள்ளாடும் மனிதனால் நேர்வது இதெல்லாம். செல்வத்தை நாடாதே, உலக பற்று ஈர்க்கும் ஆசா பாசங்களுக்கு ஆளாகாதே. சாஸ்வதமான பிரம்மத்தை நாடு, பற்றை அறு . நிம்மதி பெறு .பேரானந்தம் உனக்காக காத்திருக்கிறதே. எங்கும் அதை தேடி ஓட வேண்டாம். உனக்குள்ளேயே அது உள்ளதே.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



