
ஆடி வெள்ளி அம்பாள் தரிசனம் – நங்கநல்லூர் J K SIVAN
இன்று ஆடி வெள்ளிக்கிழமை. என் பெண் வீட்டில் உள்ள அற்புதமான ராஜராஜேஸ்வரி விக் ரஹத்துக்கு அபிஷேகம் பூஜை.சர்க்கரை பொங்கல் நைவேத்தியம்.
காலில் அடிபட்டு ஐஸ்கட்டி பாக்கெட் வீக்கத்தின் மேல் வைத்து அசையாது படுத்திருந்தாலும் காதில் அம்பாள் ஸ்லோகங்கள் ஒலிக்கிறது. அம்பாள் காருண்ய தேவதை.அருள் ப்ரவாஹத்தை வாரி வழங்குபவள்
மஹாபெரியவாளின் காமாக்ஷி. நெமிலியில் சுண்டுவிரல் அளவு தங்க விக்ரஹ பாலா திரிபுரசுந்தரி குசஸ்தல ஆற்றில் பக்தருக்கு கனவில் தோன்றி தான் இருப்பதை அறிவித்து அவர் கையில் கிடைத்து நெமிலியில் அவர் வீடே ஆலயமானவள்.
லலிதாம்பாள் ஆசியோடு ஆயுதம் தங்கி ஒன்பது வயதில் பண்டாசுரனை எதிர்த்தவள். அவனையும் அவன் சேனையையும் அழித்து அம்பாளோடு ஐக்யமானவள். ஒரு கையில் ஜெப மாலை, மற்றொரு கை புஸ்தக பாணி. நெமிலியில் சாக்லேட் நைவேத்தியம். கை நிறைய எனக்கு சாக்லேட் பிரசாதம் கொடுத்தார்கள். மூர்த்தி சிறியது கீர்த்தி மிகப்பெரியது.
ஸ்ரீ வித்யா உபாசனை மிகவும் பொறுப்பாக ஜாக்கிரதையாக சாஸ்த்ரோக்தமாக செய்யவேண்டியது. மந்த்ர உச்சாடனம் சரியாக இருக்கவேண்டும். ஸ்ரீ லலிதாம்பிகை சிவந்தவள். உதய சூரியனுடனும் குங்குமம் எனும் சிந்தூர வண்ணம். மாணிக்க சிவப்பு கற்களை ஆபரணமாக அணிந்தவள். பிறைச் சந்திரனை சைகையில் சூடியவள் பிரசன்ன வதனம். இவல் மஹா பெரியவாளுக்கு எங்கள் நங்கநல்லூரில் நேரில் தரிசனம் தந்து குடிக்க தீர்த்தம் தந்ததைப் பற்றி முன்பே எழுதி இருக்கிறேன். இப்போது சுருக்கமாக மீண்டும் சொல்கிறேன்.
மஹா பெரியவா நடந்தே எல்லா சிவஸ்தலங்களும் செல்பவர். ஒருதடவை திரிசூலம் மலை அடியில் உள்ள அருமையான அமைதியான திரிசூலநாதர் கோவிலை விஜயம் செய்துவிட்டு திருசூலநாதர் திரிபுர சுந்தரி தரிசனத்துக்குப் பிறகு மெதுவாக வடக்கு நோக்கி நடந்து வந்தார். அப்போது மீனம்பாக்கத்துக்கும் பரங்கிமலைக்கும் இடையே பழவந் தாங்கல் ரயில் நிலையம் கிடையாது. பரங்கிமலை ரயில் நிலையம் அருகேபுராதனமான நந்தீஸ்வரர் பிருங்கி மகரிஷிக்கு தரிசனம் கொடுத்த சிவாலயம் இருக்கிறது. அம்பாள் ஆவுடை நாயகி அழகி. அவளை தரிசிக்க நங்கநல்லூர் வழியாக நடந்து வந்தார். நங்கநல்லூர் உருவாகாத காலம். பழவந்தாங்கல் கிராமம் வழியாக நல்ல வெயில் நேரத்தில் நடந்தார். ரொம்ப களைப்பு. வழியில் ஒரு அரசமரம். அதன் அடியில் சற்று இளைப்பாற அமர்ந்தார். தொண்டர்கள் சற்று தள்ளி வெவ்வேறு இடங்களில் அமர்ந்து சிரம பரிகாரம் செய்தார்கள். மஹா பெரியவாளுக்கு தாகம், தொண்டை வறள மெல்லிய குரலில் சற்று தள்ளி அமர்ந்திருந்த மடத்து தொண்டர்களில் ஒருவரைக் கூப்பிட்டு ”கொஞ்சம் குடிக்க ஜலம் கொண்டுவாடா ” என்றார், தொண்டர் எழுந்து எங்கோ சென்றார். உண்மையில் பெரியவா ஜலம் கேட்டது தொண்டர் காதில் விழவில்லை. அவர் வேறு எதற்கோ எழுந்து போய் இருக்கிறார்.”சரி அவன் வரட்டும் என்று மஹா பெரியவா காத்திருந்தபோது ஒரு சிறு பெண் குழந்தை குரல் கேட்டது. ஜபம் பண்ணிக்கொண்டிருந்த பெரியவா கண்ணைத் திறந்து பார்த்தார்.லக்ஷணமாக ஒரு ஐந்து ஆறு வயது சிறு பெண் கையில் ஒரு சுத்தமான சொம்பு நிறைய ஜலத்தோடு எதிரில் நிற்கிறாள் . .’இந்தாங்கோ குடிக்க ஜலம் ‘ . சொம்பை நீட்டினாள்.
மிக சந்தோஷத்தோடு சொம்பு ஜலத்தைபருகி விட்டு அந்த பெண்ணிடம் சொம்பை திருப்பிக் கொடுத்தார். முகத்தில் புன்னகையோடு அந்த பெண் சொம்பை வாங்கிக் கொண்டு, அவரைப் பார்த்துவிட்டு அங்கிருந்து சென்றாள். அப்போது தான் வெளியே சென்றிருந்த தொண்டரும் அருகே வந்து நின்றார்.
‘யாரடா அந்த குழந்தை, அது கிட்டே ஜலத்தோடு சொம்பை நீ கொடுத்து அனுப்பினே?”
”பெரியவா க்ஷமிக்கணும். நீங்க ஜலம் கேட்டதே எனக்கு தெரியாது. நான் எந்த குழந்தையும் இங்கே பாக்கலியே . யார் கிட்டேயும் தீர்த்த சொம்பு கொடுத்து அனுப்பலையே ”
சுற்று முற்றும் ஜன நடமாட்டம் இல்லாத இடம். மஹா பெரியவா மீண்டும் கண்ணை மூடிக்கொண்டு தியானம் செய்தார்.
அந்த குழந்தையின் முகம், அவள் உடை ஆபரணம் எல்லாமே அவர் மனதில் அந்த குழந்தை ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி என்று புரிந்துவிட்டது. அடடா அம்பிகையே அல்லவோ வந்து எனக்கு ஜலம் கொடுத்திருக் கிறாள்”
அந்த கிராம பெரியவர்களை எல்லாம் அழைத்துவரச் சொன்னார். பெரியவா வந்திருக்கும் செய் தி
அதற்குள் பரவிவிட்டதால் ஊர்மக்கள் தரிசனத்துக்கு வந்துவிட்டார்கள்.
“இந்த இடத்தில் ஸ்ரீ வித்யா ராஜராஜேஸ்வரி எங்கோ பூமிக்கடியில் இருக்கிறாள். உடனே ஊர்க்காரர்கள் ஒன்று கூடிப்பேசி தோண்டி கண்டுபிடியுங்கள்” என்று சொன்னார் மஹா பெரியவா. பிறகு பெரியவா பரங்கிமலை நோக்கி நடந்துவிட்டார்.
ஊர்க்காரர்கள் மஹா பெரியவா சொன்ன இடத்தில், தோண்டிப் பார்த்த போது அழகே வடிவான அம்பிகை கிடைத்தாள் , தொடர்ந்து ஸ்ரீ சண்டிகேஸ் வரி விக்ரஹமும் கிடைத்தது. காஞ்சிபுரத்திற்கு சென்று மஹா பெரியவாளுக்கு விஷயம் சொன்னார்கள். அம்பாள் பெயர் ” ஸ்ரீ வித்யா ராஜராஜேஸ்வரி .இவளுக்கு ஒரு ஆலயம் எழுப்பி அம்பாளை பிரதிஷ்டை பண்ணி நித்ய பூஜை விடாமல் செய்ய ஏற்பாடு பண்ணுங்கள்” என்று ஆசிர்வதித்தார்.
இந்த விஷயம் தெரிந்தவர்கள் அந்த ஆலயத்துக்கு தரிசனம் செய்ய தவறுவதில்லை.. நான் பலமுறை சென்றிருக்கிறேன். அமைதியான ஆலயம். பழவந்தாங்கல் ரயில் நிலையத்திலிருந்து நேரு காலனி 2வது தெருவில் இந்த ஆலயத்துக்கு நடந்தோ, ஆட்டோ ரிக்ஷாவிலோ கூட வரலாம்.
—
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.

