MAYIL RAVANAN PART 3 J K SIVAN

மயில் ராவணன் – நங்கநல்லூர் J K SIVAN
part 3. ‘என் தந்தை ஹனுமான்
மயில் ராவண தன்னைத் தானே பாராட்டிக் கொண்டா ன் . தனது சாமர்த்தியத்தை முன் ஹனுமான், ராம லக்ஷ்மணர்கள், விபீஷணன் எல்லோருமே கொசு, ஈ, வண்டு …. இல்லாவிட்டால் அத்தனை பேர் கண்ணிலும் மண்ணைத்தூவி விட்டு எவ்வளவு சுலபமாக ராம லக்ஷ்மணர்களை கடத்திக் கொண்டு வந்து விட்டான்.
ஹனுமான் வால்கோட்டையை கட்டி ஜாக்கிரதையாக ராமலக்ஷ்மணர்களை பாதுகாத்துக் கொண்டிருப்பதாக எண்ணினான். வால்கோட்டையிலிருந்தவர்களை அவனே சுலபமாக கோட்டை விட்டதை அறியவில்லை.
மயில் ராவணன் வந்து சென்ற சிறிது நேரத்துக்குப் பிறகு விபீஷணன் அனுமனிடம் வந்தார். ”ஆஞ்சநேயா, ராம லக்ஷ்மணர்கள் ஜாக்கிரதையாகத்தானே உன் கோட்டைக்குள் இருக்கிறார்கள். யாராவது வந்தார்
களா?”’
”என்ன ஆயிற்று விபீஷணரே உங்களுக்கு, இப்போ தானே அரை நாழிக்கு முன்னால நீங்கள் வந்து என் வாயில் புகுந்து வெளி வந்தீர். எல்லாம் பத்திரமாக இருக்கிறது. சந்தோஷம் என்று என்னிடம் சொல்லி விட்டு செண்றீர்கள். எதற்கு மறுபடியும் இப்படி கேட்கி றீர்கள்?
”ஹனுமான், என்ன சொல்கிறீர்? நான் உம்மை வந்து பார்க்கவே இல்லையே. உமது வாய்க்குள் போகவே இல்லையே. ஏதோ குளறுபடி நடந்திருக்கிறது….மீண்டும் ஹனுமான் வால்கோட்டைக்குள் விபீஷணன் ஹனுமா ர் வாய் மூலம் நுழைந்து உள்ளே சென்று பார்த்து விட்டு வந்தார்
.‘ஐயோ மோசம் போய்டோமே’ ஹனுமான்,, ‘உள்ளே பாதுகாப்பாக இருந்த ராம லஷ்மணர்களைக் காணலை. நீர் யாரை உள்ளே விட்டீர்?. நான் கூறியது போலவே ஆகிவிட்டதே ….மயில் ராவணன் மாயாவி என்று படித்து படித்து சொன்னேனே, ஏமாந்து விட்டீரே அனுமானே….அவன் என் உருவில் வந்து உம்மை ஏமாற் றி ராம லஷ்மணர்களை கடத்திட்டுப் போயிட்டான் . இப்போ என்ன செய்வது? எது நடக்கக்கூடாது என்று பயந்தோமோ அது நடந்து விட்டதே.
விபீஷணன் கோவென அழைத்துவங்க, ஹநுமானுக்கு தலை சுற்றியது. மூச்சு நின்றுவிடும் போல் ஆனது. சற்று சுதாரித்துக்கொண்டு ஒருவரை ஒருவர் தேற்றிக் கொண்டார்கள்.
‘ஏமார்ந்து விட்டோமே. விபீஷணன் உருவில் மயில் ராவணன் வந்து தந்திரம் பண்ணி சொன்னபடி, சொன்ன நேரத்துக்குள் ராம லஷ்மணர்களை கடத்திச் சென்று விட்டானே. இப்போதென்ன செய்வது ?ராம லக்ஷ்மணர்களை காளிக்குப் பலி கொடுக்க அல்லவோ கடத்திச் சென்றுள்ளான்.
‘ஐயா, விபீஷணரே, என்னால் நடந்த தவறுக்கு நானே பொறுப்பு. உம்மால் முடிந்தால் அதல பாதாளத்தில் அவன் அரண்மனைக்கு போகும் வழியை உடனே எனக்கு சொல்லுங்கள்.
”ஆஞ்சநேயா, பாதாள இலங்கைக்கு போவது அத்தனை எளிதல்ல.ரொம்பவே கடினம். நடு சமுத்திரத்திலே லக்ஷக் கணக்கான கடல் தாமரை படர்ந்திருக்கும். அவற்றில் ஒரு தாமரை பெரியதாகவுமிருக்கும். சரீரத்தை சுருக்கிக் கொண்டு அதன் தண்டுக்குள்ளே புகுந்து சென்றால் பாதாள இலங்கையின் அக்னிக் கோட்டை முதலில் தென்படும். அந்த கோட்டையின் உச்சியிலே மச்சவல்லப னெனும் ஒரு ராட்ஷசன் இருப்பான். அவன் மகா பலசாலி. அவனை வெல்வது கடினம். அவனோடு ரெண்டரை லட்சம் சேனைகள் உண்டு. அவர்கள் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதத்தில் பலசாலிகள். தந்ரசாலிகள். அந்த கோட்டைகுள்ளே போனால் குளம் ஒன்று இருக்கும். அந்த ஊர் ஜனங்கள் எல்லாம் அந்த குளத்தில் இருந்து தான் பூஜைக்கு நீர் கொண்டு போவார்கள். அதையும் தாண்டிப் போனால் அந்த ஊரில் உள்ள அனைத்து கட்டடங்களும் அரண்மணை போலத்தான் இருக்கும். அங்கே போனால்தான் மயில் ராவணனின் அரண்மனை எதுன்னு கண்டு பிடிக்க முடியும். ஏனெனில் அவன் தன் இருப்பிடத்தை மாற்றிக் கொண்டே இருப்பான். எது உண்மையான அரண்மணை என யாருக்கும் தெரியாது’
”விபீஷணரே, எது எப்படியானாலும் சரி, என் ராமன் மேல் ஆணை. அவனைப் ப்ரார்த்தித்துக் கொண்டு இதோ புறப்படுகிறேன் பாதாள இலங்கையை தேடிக் கொண்டு”
ஹனுமான் நடு சமுத்திரத்துக்கு சென்று அங்கு ரெண்டு லட்சம் தாமரைகள் இருப்பதைக் கண்டு அவற்றில் பெரிய தாமரை செடியை தேடினார். அதை கண்டு பிடித்து தனது சரீரத்தை சுருக்கி வைத்துக் கொண்டு தாமரைத் தண்டில் உள்ளே ஒரு புகைப் போல புகுந்து சென்று பாதாள இலங்கையை சீக்கிரம் அடைந்தார். .
‘அட , இதென்ன நம் ஊரில் புதிய குரங்கு ஒண்ணு வந்துள்ளது’ என அனுமானை விசித்திரமாகப் பார்த்துக் கொண்டு இருந்த ராக்ஷசர்கள் அனுமானை சூழ்ந்து கொண்டு அவரை பிடித்துத் தாக்கப் பாய்ந்தார்கள். தன்னைப் பிடிக்க வந்த அனைவரையும் தாக்கிய அனுமான் விஸ்வரூபத்தை எடுத்து அனைவரையும் தனது வாலில் சுற்றி கீழே அடித்தார். ராக்ஷசர்களை அவர் அடித்து அடித்து துவம்சம் செய்யத் துவங்க அந்த நேரம் பார்த்து அங்கு மச்சவல்லபன் எனும் மயில் ராவணனின் கோட்டைத் தளபதி கோபமாக வந்தான்.
‘ஹே குரங்கே, நீ யாரடா இங்கு வந்து என் வீரர்களை அடிப்பது…..வா….வந்து என்னுடன் மோதடா’ என கோபமாக கத்திக் கொண்டே வந்து அவனும் அனுமாருடன் போர் செய்யலானான். இருவரும் மாறி மாறி அடித்துக் கொண்டாலும், அனுமானால் மச்சவல்லபனைக் வெற்றி கொள்ள முடியவில்லை. மச்சவல்லபனாலும் அனுமாரை எளிதில் வெல்ல முடியவில்லை. இருவருமே களைத்து விழுந்தார்களே யோழிய யாருக்கும் வெற்றி கிட்டவில்லை.
அதைக் கண்ட அனுமானுக்கு ஓரே ஆச்சர்யம். அனு மான் நினைத்தார் ‘நான் இத்தனைபேரை அலட்சி யமாக வென்றேன், கொன்றேன். இவனை ஜெயிக்க முடியவில்லையே. யார் இவன் இத்தனை பராக்கிரம சாலியா இருக்கான்?’. ……..மூச்சிரைத்து எழுந்திருக்க முடியாமல் இருவரும் கீழே வீழ்ந்து கிடக்க மச்சவல்ல பனிடம் அனுமான் கேட்டார்.
‘மச்சவல்லபா நீ யார்? இத்தனை பலசாலியான உம் முடைய தாயாரும் தந்தையும் யார் என்பதை நான் உமக்கு எதிரியானாலும் எனக்கு ஆச்சர்யமாக இருப்பதால் உண்மையைச் சொல் ?
மச்சவல்லபன் ‘… ஏ , வானரமே…நீ யார் என்னைக் கேள்வி கேட்க? நானெதற்கு உமக்கு பதில் கூற?. குலம் கெட்டவனே, சண்டை செய்ய வக்கில்லாமல் என்ன திசை திருப்பு முயல்கிறாயா….வா….எழுந்து வா…சண்டையிடுவோம்’.
‘மச்சவல்லபா, சிறுவனே, நீ என்ன சொன்னாலும் எனக்கு கோபம் வரவில்லை. அதற்கான காரணமும் தெரியவில்லை. என்னைக் குலம் கெட்டவனே என்றாயே , நான் என்ன குலம் என்பதயும் பின்னர் சொல்லறேன். . நான் உம்மிடம் தோற்று விட்டேன் என்பதை ஒப்புக் கொள்கிறேன். நான் மூன்று உலகிலும் பலருடனும் சண்டைப் போட்டு அவர்களை எல்லாம் பந்தாடி துவம்சம் செய்திருக்கிறேன். அதென்ன பாவ மோ உன்னை என்னால் வெல்லவும் முடியவில்லை. கொல்லவும் முடியலே. நான் வானரமாவே இருக்கேன். நீ யார்? இவ்வளவு பராக்கிரமசாலி நீ ஏன் மயில் ராவண னிடம் சேவகம் செய்கிறாய்? .
‘வானரா, உன்னைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கு து. உன்னைக் கொல்ல என் மனது இடம் கொடுக்க வில்லை. ஏன் என்று காரணமும், தெரியலே. என் அப்பன் யார் என்று கேட்டாயே சொல்கிறேன். என் தகப்பன் மும்மூர்த்திகளையும் ஒத்த பலமுடையவர். சுத்த வீரர், பராக்கிரமசாலி. ராம நாமத்தை தவிர வேறெதுவும் சொல்லாதவர் என்று கேள்வி. அவர் பெயரை ஹனுமான் என்கிறார்கள். என்னோட தாயாரும் திமிதி என்ற மீன் ஆவாள். அவள் இந்த சமுத்திரத் துலேதான் இருந்தாள். இப்போது அவள் எங்கேன்னு தெரியலே. என் பாட்டனார் வாயு பகவான். என் பெயர் மச்சவல்லபன்”’
ஹனுமான் திகைத்தார். ‘அய்யய்யோ…, இதென்னடா கூத்து? நான் இவன் தந்தையா? என் தந்தை வாயு இவன் பாட்டனா? இதென்ன புதுக்கதை? இல்லை .இருக் காது என் தந்தைக்கு என்னைப் போலவே இன்னொரு பிள்ளையும் இருக்கானா? அவர் பெயரும் அனுமனா? நான் மட்டும் தானே அனுமான் !!!! எங்கிருந்தையா வந்தார் இன்னொரு அனுமான். .எங்கிருந்து வந்தார்? நானோ இதுவரைக்கும் கட்டை பிரும்மச்சாரி. திமிதி என்பவளை என் மனைவி என்கிறானே நான் இலங் கைக்கு சென்று இருந்தபோது அங்கு பல ஸ்த்ரீகளும் தாறுமாறாக கிடந்தபோதும் யாரையுமே ஏறெடுத்தும் பார்க்காத நானா திருமணம் ஆனவன்? இதென்ன கோலம்….ஹே…….ராமா…என் பிராணநாத..’ என தன்னுள்ளேயே குழம்பித் தவித்தார் மச்சவல்லபனிடம் மீண்டும் கேட்டார்.
”மச்சவல்லபா, எனக்கு குழப்பமாக இருக்கிறது. .எனக்கொரு விஷயம் தெளிவாய் கூறு. உம்முடைய தந்தை யாரோ அனுமன், அனுமான் என்கிறீரே, யாரையா அந்த அனுமன்? அவர் இப்போ எங்கிருக் கிறார்? யாருக்கு சேவகம் செய்யறார்? நீர் ஏன் அவரை விட்டுட்டு இங்கு வந்து விட்டீர்? எதையும் ஒளிக்காமல் சொல் ?’
”வானரேஸ்வரா, உமக்கு என் மீது சந்தேகமா? நான் பொய் சொல்லவில்லை. இது கதை அல்ல. உண்மை. என் தகப்பன் ஹனுமான் ராம லஷ்மணர்களுக்கு சேவகம் செய்கி றார். சுக்ரீவருக்கு அவரும் ஒரு மந்திரி.
‘பிள்ளாய், நீ மூட்டை மூட்டையாய் பொய் தான் சொல்கிறாய். நான் அனுமானை அறியாதவனென நினைத்தாயா? அவர் கட்டை பிரும்மச்சாரி ஆச்சே. அவருக்கு மனைவி எது ? மனைவி இல்லாதவருக்கு பிள்ளை எங்கிருந்து வருவான் ? உண்மையைக் கூறு. சத்தியமாகக் கேட்கிறேன்…உண்மையை மட்டுமே சொல்”
‘ஒய் .வானரமே, என் பொறுமையை சோதிக்க வேணாம். நான் ஏன் பொய் சொல்ல வேண்டும்?ராமனின் மனைவி சீதையை ராவணன் தூக்கி சென்ற பின் சீதையைக் காணாமல் அனைவரும் தேடிக் கொண்டு இருந்தபோது, என் தந்தை அனுமானும் தன் பங்குக்கு சீதையை தேடி சமுத்திரத்தின் மீது வியர்க்க வியர்க்க பறந்து கொண்டு இருந்தபோது அவர் உடம்பில் இருந்து வழிந்த வேர்வை சமுத்திரத்தில் மீனாக இருந்த என் தாயார் திமிதியின் வாயில் வந்து விழ அவள் அதை முழுங்கினாள். அதனாலே கர்பமுற்ற அவளுக்கு நானும் அனுமானின் மகனாகப் பிறந்துட்டேன். நான் பிறந்ததும் என்னை சமுத்ர கரையிலே விட்டுட்டு அவளும் போய் விட்டாள். சமுத்ர கரையிலே கிடந்த என்னை அந்த பக்கமாக வந்த என் பாட்டனார் வாயு பகவான் பார்த்துட்டு கீழே வந்து என்னை உச்சி மோர்ந்து கொஞ்சினார். என்னோட அங்க லட்ஷணத்தையும் பார்த்த அவரும் என்னை அவர் பேரன் என்பதை புரிந்து கொண்டு எனக்கு என்ன வேணும்னு கேட்க நானும் என் அப்பனைப் பார்க்க வேண்டும் என்று கேட்டேன். அதுக்கும் மேலே என் அப்பனுடைய பலத்துக்கு குறையாத பலம் வேண்டும் என்றும் கேட்டேன். அதற்கு வாயு பகவான் ‘உன் தந்தை ஹனுமான் சில காலம் பொறுத்தே உனக்கு கிடைப்பார். அவர் சீதையை தேடி இலங்கைக்கு சென்றுள்ளார்’ என்ற விவரம் கூறினார். அதையே கூறிட்டு என் அப்பனாருக்குரிய பலத்தையும் எனக்கும் தந்தார். இப்போ புரியுதா என் அப்பனார் யார் என்று? நான் சொன்னதெல்லாம் உண்மை வானரமே’
இப்படியாக மச்சவல்லபன் சொல்லவும் அனுமன் ஆனந்தக் கண்ணீர் விட்டு அழுதபடிக் கூறலானார்.
‘மகனே, மச்ச வல்லபா, நான்தானடா உன் அப்பன் ……நானே தாண்டா அந்த அனுமன்’ என்று கூற மச்சவல்ல பன் திகைபுற்றான். வெட்கம் கொண்டு அடங்கி நின்றான்.
ஸ்வாரஸ்யமான இந்த இடத்தில் நிறுத்தி அடுத்த பதிவில் தொடர்வோம்.

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2561

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;