
நா காக்க, சினம் காக்க – நங்கநல்லூர் J K SIVAN
உலகத்தில் கோபப்படாத ஜென்மமோ, ஜந்துவோ கிடையாது எனலாம். பிருகு முனிவர், துவாச மகரிஷி, நரசிம்ம ஸ்வாமி பற்றி சொல்லவே வேண்டாம். மாந்தர்கள் நாம் கோபத்தால் பல சீர் குலைவுகளை
அடைகிறோம். வாழ்க்கையில் பல நல்ல மணித்துளிகள் பாழாகிறது.
கோபம் என்பது ஒரு மனோதத்வ சமாச்சாரம். உடல் உள்ள அமைதி இழக்க செய்யும் ஒரு குறைபாடு. உணர்வு. எது இதை தூண்டுகிறது என்றால், ஏமாற்றம், சுடு சொல், அவமானம் ,பொறாமை, துரோகம், இயலாமை, நிராசை, முதுமை, அநியாயம், அக்கிரம செயல்கள், அநீதியான ஒரு சூழ்நிலை. இவற்றால் துன்புறும்போது நாம் அடையும் நிலை தான் கோபம். பொறுமை இன்மையாலும், அகம்பாவத்திலும் கோபம் வளர்கிறது
கோபம் கண்ணையும், அறிவையும் மறைக்கும்போது தான் உலகில் குற்றங்கள் நடைபெறுகிறது.
கோபத்தின் காரணமாக நமது உடலில் ரத்த அழுத்தம் அதிகமாகிறது. அட்ரீனலின் போன்றவை வேகமாக இயங்கும். படபடவென்று மார்பு துடிக்கும். சுவாசம் நெருப்பாக வேக வேகமாக வெளியேறும்.நிதானம் போய்விடும். சரியாக மூளை சிந்திக்காது. அதனால் தப்புகள் தவறுகள் புரிகிறோம். நட்பு, உறவுகளை இழக்கிறோம். கோபம் மனக்கட்டுப்பாடு இல்லாதபோது உருவாகிறது. ” முட்டாளுக்கு மூக்கு மேலே கோபம் , ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு ”என்கிறோம்.
கோபத்தை தவிர்க்க என்ன செய்யவேண்டும்?1 2 3 4 5 என்று எண்ணுங்கள், ஒரு டம்ப்ளர் தண்ணீர் குடியுங்கள் என்றெல்லாம் சொல்கிறார்களே. ஏன்./ மூச்சுக்கட்டுப்பாடுக்காக, நாலைந்து வினாடிகள் ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டால் கோபம் கொஞ்சம் அடங்கும். மனதில் எந்த எண்ணம் கோபத்தை விளைவித்ததோ அதை விட்டு வேறு எண்ணம் ஏதாவது சிந்திக்கவேண்டும். கோபமாக இருக்கும் இடத்தை விட்டு, மனிதர்களை விட்டு கொஞ்சம் வெளியே செல்லவேண்டும். பத்து நிமிஷ ஒய்வு போதும். இதனால் ஹார்மோன்கள் சமநிலைக்கு வரும். பழிவாங்கும் எண்ணத்தை விடுத்தால் மன அமைதி பெறலாம். மன்னிப்பதும் மறப்பதும் அற்புதமான மருந்து. தியானம் மனதை கட்டுப்படுத்தும்.
கோபம் உருவாவது எங்கே? நமது குடும்பத்தில், பணிபுரியும் இடத்தில், விவாதங்களில் உலகத்தில் கோபப்படாதவனே இல்லை. கோபப்பட்டு அப்புறம் வருந்தாதவனும் இல்லை. கோபத்தின் விளைவுகளை சரி செய்வது சிந்திய பாலை திரட்டுவது போல் பிரயோஜனம் இல்லாத செயல். கொட்டின வார்த்தைகளை அள்ளமுடியாது. நாவினால் சுட்ட வடு.
கோபத்தை அடக்க கற்க வேண்டும். உடலும் உள்ளமும் சீராக இருக்கும். கோபம் தூக்கத்தை விழுங்கிவிடும். சாப்பாடை வெறுக்க வைக்கும். உடலை நடுங்க வைக்கும். பிறரை மதிக்க, அவர்களிடம் குறை காணாமல் அன்பாக இருக்க முடிந்தவர்கள் மனித தெய்வங்கள்.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



