
108 அடி உயர தெய்வங்கள் – நங்கநல்லூர் J K SIVAN
நான் பிரமித்த 108 அடி உயர ரெண்டு ”மஹா”க்களில் ஒருவர் மாரிஷியஸ் எனும் வெளிநாட்டு ஊரில் இருக்கும் ”மஹா’ தேவன், அவரை நான் நேரில் பார்க்கும் பாக்யம் இன்னும் நேரவில்லை.
2007 ல் முகநூலில் ”மாரிஷியஸ் மஹாதேவன்” என்று அந்த விஸ்வரூபனைப் பற்றி எழுதியது ஞாபகம் இருக்கிறது. நின்ற கோலம். ஜடாமுடி. கங்கா தளப் எனும் குளக்கரையில். அந்த குளம் பூரா நமது பாரத தேசத்தில் இருந்து எடுத்துச் சென்ற கங்கா ஜலம்.
மகா தேவன் நம்ம ஊர் ஹரித்வாரில் நிற்கும் ரிஷி கேசன் மாதிரி. தலையில் பிறைச்சந்திரன். உடலெல்லாம் நாகாபரணம். இடையில் புலித்தோல். மஹா சிவராத்ரி இங்கே கோலாகலமாக நடக்கும். ஒரே சமயத்தில் பத்தாயிரம் பேர் அடியில் நின்று பார்க்கும் மேடை. ஒரு ஹிந்து தெய்வத்தை வெளிநாட்டில் மறக்காமல் சில ஹிந்து நேசர்கள் கொண்டாடாடுவது மனதுக்கு ரொம்ப திருப்தி.
அடுத்த ‘உயர்ந்தவர்’ பெங்களூரு எஜிபூரா எனும் ஊரில் உள்ள ”மஹா’ விஷ்ணு. இந்த ரெண்டாமவர் விஸ்வரூப மஹா விஷ்ணு. அவருக்கு மஹா கும்பாபிஷேகம் ஜூன் 2ம் தேதி கோலாகலமாக நடந்தது..
தமிழகத்தில் நாமக்கல் அருகே குரக்கோட்டை எனும் கிராமத்தில் நிறைய பாறைகள் பூமிக்கடியே கிடைக்கிறது. அவை அத்தனையும் சிலை வடிக்க மிகவும் தோதானவை. இங்கிருந்து உருவான விக்ரஹங்கள் எத்தனையோ கோவில்களில் வழிபடப்படுகிறார்கள். அங்கே தான் 200 அடி நீள பாறை ஒன்றை சிற்பிகள் கண்டுபிடித்து அதை கஷ்டப்பட்டு உடையாமல், வெளியே எடுத்தார்கள். அதற்கே எத்தனையோ மச்சான்கள். 600 டன்னுக்கு
குறையாத எடை , 30 அடி அகலம் கொண்ட ஒரே கல் பாறை. அங்கேயே விஸ்வரூப மஹா விஷ்ணுவின் முகம் மட்டும் வடிவமைத்தார்கள். பிறகு 300-400 சக்ரங்கள் கொண்ட நீளமான ஊர்தி தயாரித்து மஹாவிஷ்ணு நத்தை வேகத்தில் பெங்களூருக்கு பிரயாணமானார். லார்ஸன் அண்ட் டூப்ரோ அமைத்த ஸ்பெஷல் ஊர்தி ஜிபூரா வருவதற்குள் வழியெல்லாம் பல கட்டிடங்கள் இடிக்கப்பட்டு, தெருக்கள் அகலப்படுத் தப்பட்டு, பல வாரவாதிகள் பலப்படுத்தப்பட வேண்டி இருந்தது. இடிந்த வீடுகளை மீண்டும் கட்டிக் கொடுத் துவிட்டு புறப்பட்டார்கள். இப்படி ஐந்து ஆறு வருஷங்கள் ஆகியது.
முற்றிலும் வடிவமைத்த விஸ்வரூப மஹாவிஷ்ணுவை நிற்க வைக்க L & T நிறுவன க்ரேன் பிரயாசைப்பட்டு ஒரு வருஷம் மேல் ஆகியது.
எதற்கு ஏஜிபுரா? யார் இந்த விஷ்ணுவை நிறுவியது?. இதற்கெல்லாம் ஒரே வரி பதில்; ஆந்திராவில் பெனுகொண்டாவைச் சேர்ந்த ஒரு ராம பக்த குடும்பம் பெங்களூரில் எஜிபுரா கிராமத்தில் கிட்டத்தட்ட நூறு வருஷங்களுக்கு முன் குடியேறியது. அங்கே ஒரு கோதண்டராமர் கோவிலை ஸ்தாபித்தார்கள். கோவிலுக்கு முன்னால் இருந்த காலி இடத்தில் இந்த விஸ்வரூப மஹாவிஷ்ணு வந்து நிற்கவேண்டும் என்று இப்போதைய அந்த வம்ச குடும்ப தலைவர் டாக்டர் ஸதானந்தாவுக்கு தணியாத ஒரு தாகம். கோடியில் பணத்தை வாரி இறைத்தார். அநேக பக்தர்கள் வேறு பொருளும் பணமும் கொடுத்தார்கள். யார் என்ன நினைத்தால் ஆசைப்பட்டால் என்ன? மஹா விஷ்ணுவுக்கு ஏஜிபுரா பிடித்து விட்டதால் அங்கேவந்து நிற்க சங்கல்பித்தார் என்பது தான் முடிவு.
எப்படிப்பட்ட விஸ்வரூபம்;
உலகிலேயே பெரிய, உயரமான 108 அடி விக்ரஹம் .
தலைக்கு மேல் ஆதிசேஷன் ஏழு முகங்களுடன் குடையாக.
பத்து சிரங்கள்: மஹா விஷ்ணு, சிவன், ப்ரம்மா, ஸ்கந்தன், கணேசன், நரசிம்மன், ஹனுமான், கருடன், அக்னி. ரிஷிமுனி.
தேகத்தில் உள்ள பரிவார தேவதைகள்: சூர்யன், சந்திரன், அக்னி, குண்டலினி சக்ரம், சக்ர ஸ்தானாதிபதிகள்,
நெற்றியில் ஞான நேத்ரம். த்ரிநேத்ரம், சூர்யன்-சந்திரன் -அக்னி
வக்ஷ ஸ்தலத்தில்; மஹா லட்சுமி, தத்தாத்ரேயர், ஸரஸ்வதி , நாரதர், தசாவதார மூர்த்திகள்.
அபய ஹஸ்தத்தில் ; காயத்ரி
விஸ்வரூபத்தில் மேலும் காணப்படுபவை; பஞ்ச பூதங்கள், ஸப்தலோகங்கள், சப்த சமுத்திரங்கள், த்ரி குணங்கள், மலய பர்வதம், மந்தரமலை, கந்தமாதன சிகரம், விந்தியமலை, புனித தீர்த்தங்கள்; காவேரி, தபதி, யமுனை, கிருஷ்ணா, நர்மதை, சரஸ்வதி விஸ்வரூபம்;
சிவ கேசவ ரூபம் என்பதால் கழுத்தில் ருத்ராக்ஷமாலை, நீலகண்ட ஹாரம், சப்தரிஷி கண்ட ஹாரம். கேசவ ஸ்வரூபம் என்று காட்ட வைஜயந்திமாலா, வன மாலை,கீதோபதேச பதக்கம்,.வரத ஹஸ்தத்தில்; சங்க சக்ர பத்மம், கதை, திருநாமம்; அக்னி சூர்ய சந்திர த்ரிநேத்ரம்.
1.5.2025 அன்றே ஏஜிபுரா நேரே ரயிலிலிருந்து இறங்கி மூட்டை முடிச்சுடன் சென்று நெரிசலில் பகலில் அவரை தரிசித்தேன். லக்ஷோப லக்ஷம் பக்தர்கள். ஏஜிபுரா
இப்போது கிராமம் இல்லை. வளர்ந்து விட்ட பெரிய பட்டணம். பெரிய ஏஜிபுரா சாலையில் 25-26 குறுக்கு சாலைகள் கொண்டது. கொரமங்களா நகரம் அருகே உள்ள ஒரு அங்குலம் இடம் இல்லாமல் வியாபாரிகள் கடைகள் நிறைந்த பட்டணம்.
கோவில் நிர்வாகம் எங்களுக்கு ஒரு ஹோட்டலில் தங்க வசதி செய்திருந்தார்கள். மறுநாள் கும்பாபிஷேகம் அன்று திடீரென்று பத்துக்கு மேல் கருடன்கள் விஸ்வ ரூபன் தலைக்கு மேல் நீலவானில் வட்டமிட்ட காட்சி மனதில் இருந்து இன்னும் நீங்க வில்லை. ஏஜிபுரா பூரா அயோத்தியில் ராமபட்டாபிஷேகம் அன்று இருந்தது போல் அழகாக தோரணங்கள், மலர் மாலைகள், வண்ண விளக்குகளுடன் எங்கும் அன்ன தானத் தோடு காட்சி தந்தது. கோவில் வளாகத்திலிருந்து வந்த பக்தி சங்கீத, மந்த்ர ஒலி எங்கும் எதிரொலித்தது.
விஸ்வரூபன் திருவடிக்கு கீழே பந்தலில் உட்கார ஒரு நாற்காலி பிடிக்க எனக்கு ரொம்ப சாமர்த்தியம் தேவை பட்டது. எனது முக நண்பர்கள் சிலர் உதவினார்கள்.
விஸ்வரூபன் கருநிறத்தில் பளபளப்பாக கண்ணைப் பறிக்க புன்னகையோடு கம்பீரமாக நிற்க, கழுத்தில் க்ரேன் நீளமான ராம நாம மாலையை சார்த்தியது. அடுத்து வெட்டிவேர் மாலை. சந்தன ஸ்ப்ரே.
கும்பாபிஷேகத்தை டாக்டர் க்ரேன் மேல் 108 ஆதி உயரத்திற்கு ஏறி குடம் குடமாக ப்ரோக்ஷணம் பண்ணினார் என்று தான் சொல்ல முடியும்.
கும்பாபிஷேகம் முடிந்து வெளியே வர நானும் என் மனைவியும் ரொம்ப நசுங்கினோம், உடல் வலியெல் லாம் தீர எல்லோரும் அழுத்தி பிடித்தார்கள்.
டாக்டருக்கும், என் நண்பர் புதுக்கோடு ராமய்யர் ராமச்சந்திரனுக்கும், என் நண்பர்கள் சிலருக்கும் என் வரவு பிடித்திருந்தது. நான் பாக்யசாலி .
என்னை விரும்புபவர்களும் இருக்கிறார்களே என்று மகிழ்ந்தேன்
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.

