
யஞ சேனி – நங்கநல்லூர் J K SIVAN
திடீரென்று ஏன் த்ரோபதை என் மனதில் தலை நீட்டினாள்?. கிருஷ்ணா என்று அவளும் பெயர் கொண்டதனாலா? ஆஹா, எவ்வளவு அற்புதமானவள் அவள்… உடனே மனம் வலை பின்னியது. என்னென்னவோ மசாலா சேர்த்து ஒரு பண்டம் கதையாக உருவானது. அது தான் இது.
”தொச்சா” (தொரைசாமி ஐயர்), தஞ்சாவூர் பரசுராம அக்ரஹாரத்து பூர்விக ஏழை. கிருஷ்ண பக்தர். மஹா பாரதம் ப்ரவசன ஜீவிதம். மனைவி சரோஜா 11 வருஷங்களுக்கு முன் போய்விட்டாள். மூன்று பெண்களில் ரெண்டு
பேருக்கு கல்யாணம் பண்ணி கடைசி பெண் ஜெகதீஸ்வரிக்கு எப்போது என்று கேள்விக்குறி..
ரெண்டு தலைமுறையாக வீட்டில் திரௌபதி மான சம்ரக்ஷண படம் பூஜையில். கிருஷ்ணனின் அபயஹஸ்தம் தான் நம்பிக்கை. கடைசிவரை சரோஜா பூஜித்த படம். அடுத்த தெரு திரோபதை அம்மன் கோவிலில் தினமும் விளக்கேற்றி தியானம். அம்மாவைப் போல் ஜெகதீஸ்வரிக்கும் கிருஷ்ணன் திரௌபதி உபாசனா தெய்வம். ஜெகதீஸ்வரி ரவி வர்மா ஓவியம் போல் ரொம்ப அழகான பெண். ஆனால் பிறவியிலிருந்து திக்குவாய்.
தொச்சாவின் மாமா பிள்ளை ராமுடு ஒரு விஷயம் சொன்னார்.
நம்ம ஊர் கோபாலய்யர் மெட்றாஸ்லே பிரபல தமிழ் பத்திரிகை ‘சுகபோதினி’ ஆசிரியர். ”சுகபோதினி போடு போடுன்னு போடறது. பலே எழுத்தாளர்கள் எல்லாம் எழுதறா. நீங்க விஷயஞானம் தெரிஞ்சவர். ஸ்வாரஸ்யமா கதைகள் எழுதுங்கோ. பத்திரிகையில் போடுவா.
” ராமு, நாங்க கிருஷ்ணன் புகழ் பாடி பொழச்ச குடும்பம். கிருஷ்ணன் தான் ராமன். ராம நாடக கீர்த்தனைகள் பூரா அத்துப்படி, நானும் பாடுவேன். ஆனா சாரீரம் கட்டை. ஸ்ருதி பேதம் வரும். எனக்குள் நானே பாடிப்பேன் . நிறைய வாசிப்பேன், யோசிப்பேன், பேசுவேன். எழுதினதில்லே. என் பொண்ணு ஜெகதீஸ்வரி எழுதுவோ..பேசத்தான் ஸ்ரமப்படுவோ. அவள் கிட்டே சொல்றேன்”
”அடுத்த மாசம் சிறு கதைப் போட்டி. முதல் மூணு பேருக்கு பத்தாயிரம் ரூபா பரிசு. ஜெகதீஸ்வரியை எழுதச் சொல்லுங்கோ. அதிர்ஷ்டம் இருந்தா பரிசு கிடைக்கட்டுமே .
”ஆஹா. சந்தோஷமா. நான் அவகிட்டே இப்பவே எழுத சொல்றேன்”. பெண்ணிடம் சொன்னார்.
”ஜெகதீஸ்வரி நீ எப்போவும் ஏதாவது எழுதரையே , ஒரு சிறு கதை போட்டிக்கு எழுதிப் போடு, கிருஷ்ண பரமாத்மா மனசு வச்சால் நம்ம குடும்பமும் ஸ்ரமமில்லாமே ஓடுமே.மா”.
‘ எ எ எ எ ழுதறேன்பா.’
எதிரே பழைய படத்தில், இடுப்பில் புல்லாங்குழலுடன் மஞ்சள் வஸ்திரம் மயில் பீலி, கன்னுக்குட்டியோடு கடம்ப மரத்தடியில் கிருஷ்ணன் அபய ஹஸ்தத்துடன் புன்னகைக்கிறான். கையிலிருந்து ஒளிக்கற்றை படத்தின் மூலையில் இரு கரம் சிரமேற் கூப்பிய த்ரோபதையின் இடுப்பில் புடவையாக வளர்கிறது….. கிருஷ்ணன் பின்னால் ஜிலு ஜிலுவென்று யமுனை ஓடுகிறாள்…
ஜெகதீஸ்வரி தீபமேற்றி, மலர் சாத்தி, எதிரே அமர்ந்து வெண்ணை நைவேத்தியம் பண்ணினாள். அடுத்த வீட்டு நாவல் பழ மரத்தில் காய்த்த மூன்று பழங்கள் எதிரே தட்டில் அர்ப்பணித்து அழுதாள். கண்ணை மூடி கெஞ்சினாள்;
”கிருஷ்ணா, எனக்கு என்ன எ எ எ ழுதறதுன்னு தெரியல.. நீ ஹெ ஹெ ஹெ ஹெல்ப் பண்ணுவியா? எத்தனையோ பேருக்கு ஹெல்ப் பண்ணியிருக்கியே. என்னையும் த் த் த் த் ரோபதியா நினைச்சுக்கோயேன்? எங்கம்மா உ உ உன்னையும் அவளையும் எவ்வளவோ வேண்டிண்டு இருக்கா. நானும் தா தா தான்…” ஓவென்று ஜெகதீஸ்வரி திக்கி திக்கி கதறினாள்.
‘அழாதே நான் த்ரோபதி கிட்டேஉன்னைப் பற்றி சொல்றேன்.”
முதுகில் யார் தட்டினது?
திரும்பினாள் ஜெகதீஸ்வரி. திரௌபதி. கருப்பாக, நிறைய அலையலையாக கருங்கூந்தல். வனமாலை அணிந்தவளாக தீர்க்கமான நெற்றி ஆழ்ந்த ஊடுருவும் கண்களுடன் பேசினாள்:
”என்னைப்பத்தி தான் உன்கிட்டே இப்போ சொல்லப்போறேன்..கேட்டுக்கோ. எழுது. என் பேர் கிருஷ்ணா. ஆமாம் கிருஷ்ணனும் நானும் அண்ணா தங்கை. என் உயிர் அவன். அவன் இல்லேன்னா நாங்க யாருமே இல்லை. அப்பப்பா ஒண்ணா ரெண்டா. எத்தனை தடவை தேடித் தேடி காட்டிலேயும் மேட்டிலேயும் நாங்க அலைஞ்சபோது வந்து ஆறுதல் தந்து காப்பாத்தினவன்”
”அம்மா உ உ உ உன்கிட்ட நான் ஒ ஓ ஓ ஓண்ணு கேக்கட்டா? ஏன் தர்மர் சொக்கட்டான் ஆஆஆ ஆடும்போது
கிருஷ்ணன் வந்து காப்பாத்தலை?”‘
எல்லோரும் அப்படிதாண்டி கேட்டா. எது நடந்ததோ அது அத்தனையும் அவனுக்கு தெரியும். இப்படித்தான் நடக்கப் போறதுன்னும் தெரியும்? அப்போ தான் யுத்தம் வரும். மத்தியஸ்தம் பேச தூது போனான். விரும்பியபடியே தூது பலனளிக்காமல் திரும்பினான். யுத்தத்தில் ஆயுதம் தாங்கி பங்கேற்காமல் அர்ஜுனனுக்கு ரதம் மட்டும் ஓட்டினான். .ரதத்தில் அவன் மட்டுமா? ராமன் இல்லையா அவன் ? ரதத்துக்கு மேலே கொடியில் ஆஞ்சநேயனும் இருக்க செய்தான். ஆஞ்சநேயன் யார்? லங்கையையே புரட்டி போட்டவன். அவன் ஒருத்தனே ராவணனை அழிச்சிருப்பான். ஆனால் அவன் ராம பக்தன். தூதன்…’ ராமசாமியின் தூதன் நானடா ராவணா’ என்றவன். ”ராமன் வரப் போறான் உனைக் கொல்ல . அதற்குமுன் சீதையைத் திருப்பிக் கொண்டுபோய் விடுன்னு நல்புத்தி சொன்னவன். தன் பலத்தைக் காட்ட லங்கையை அழிச்சவன்”
அர்ஜுனன் மேல் பீஷ்மதுரோணர்கள் வீசிய அத்தனை மந்த்ர சக்தி மிக்க அம்புகளையெல்லாம் கிருஷ்ணன் தனது முகத்தில், உடம்பில் வாங்கிண்டவன். திருவல்லிக்கேணி போய் வெள்ளை மீசை பார்த்தசாரதி முகத்தைப்பார். உனக்கே தெரியும்..
”என் இடுப்பு ஒத்தை வஸ்திரத்தை துச்சாதனன் இழுத்து என்னை நிர்வாணமாக்க நினைச்ச ஆபத்தான நேரத்திலே ப்ரவாஹம் மாதிரி வஸ்திரம் என் இடுப்பிலே மேலேமேலே வளர்ந்துண்டே வர பண்ணினவன். துச்சாதனன் கை வலிக்க ஓய்ந்துபோய் மயங்கி கீழே விழப்பண்ணினவன்.. ”ஆபத் பாந்தவா, அனாத ரக்ஷகா” ன்னு கத்தினேன்… அவன் வரலே . அவன் திவ்ய நாமமே எனக்கு வேண்டிய உதவியை செய்தது. அதுக்கு நான் செஞ்ச நன்றிக்கடன் ஒரு சம்பவமா…..அப்புறமா…..
”என்ன ச ச ச ம்பவம் தா தா தாயே அது? சொ சொ சொ சொல்லுங்கோம்மா?- திக்கல் பேச்சு
”இப்போ நினைச்சாலும் ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கு. இந்திரப்பிரஸ்தம் கட்டி ராஜசூய யாகம் பண்றபோது கிருஷ்ணனின் அத்தை பிள்ளை சிசுபாலன் வந்தான். பெரிய கூட்டம். கிருஷ்ணன் தான் முக்கியஸ் தன் யாகத்திலே, அவனுக்கு அக்ராசன பூஜை பண்ணி கௌரவிக்க கூடாதுன்னு சிசுபாலன் கத்தினான். எப்போவுமே கிருஷ்ணனைக் கண்டா அவனுக்கு ஆகாது. அவ்வளவு பெரிய சபையிலே வாய்க்கு வந்தபடி யெல்லாம் கிருஷ்ணனை அவமரியாதையாக பேசினாலும் கிருஷ்ணன் பதில் பேசலே. பேசாம பார்த்துண்டிருந்தான். என்ன தோணித்தோ தெரியல. திடீர்னு கிருஷ்ணன் எழுந்தான். அவன் கண்ணிலே ரௌத்ரம். கருப்பு முகம் நெருப்பாக சிவந்தது.
”சிசுபாலா, இதுவரை உன் அம்மாவுக்கு நான் கொடுத்த சத்தியத்தை நிறைவேற்றிட்டேன். 100 தடவை என்னை அவமதிச்சு பேசினாலும் உன்னை உயிரோடு விட்டு வைத்திருந்தேன். இனி மேல் தப்பமுடியாது. தண்டிக்காமல் விடேன் .உன் கொடிய எண்ணங்கள், இந்த பாபம் நிறைந்த பிறவி முடியும் நேரம் வந்துவிட்டது .”
”வாளை வீசிக்கொண்டு சிசுபாலன் பாய்ந்து கிருஷ்ணனைக் கொல்ல வந்தான். இமைப் பொழுதில் கிருஷ்ணனின் கையில் சுதர்சன சக்கரம் ஒளிவீசி மின்னல் வேகத்தில் சுற்றிப் பறந்தது. போகும் வேகத்தில் கிருஷ்ணனின் வலது ஆட்காட்டி விரலை கீறிவிட்டுப் புறப்பட்டது.
”அடடா. அப்போது என்ன நடந்தது தெரியுமா? கிருஷ்ணன் லக்ஷியமே பண்ணவில்லை. விரலிலிருந்து சிவப்பாக ரத்தம் வழிந்ததை நான் தான் முதலில் பார்த்தேன். என்னை அறியாமல் ஓடி கிருஷ்ணனைப் பிடித்து வலது கையை என் மடியில் வைத்துக் கொண்டேன். விலை உயர்ந்த மஞ்சள் பீதாம்பரத்தை யுதிஷ்டிரன் ராஜசூயயாகப் பரிசாக வாங்கி கொடுத்ததை அணிந்தவள், துளியும் யோசிக்காமல் சர் ரென்று கிழித்தேன். ஒரு நீள துண்டை எடுத்து கண்ணன் கைவிரலைத் துடைத்து ரத்தம் கசியாமல் கட்டு போட்டேன். கிருஷ்ணன் என்னைப் பார்த்து சிரித்து ”கிருஷ்ணா ” என்றான். நானும் அவன் பெயர் கொண்டவளல்லவா? கண்களில் நீர் மல்க நானும் ” கிருஷ்ணா” என்றேன். என்னை வாரி அணைத்தான். நாங்கள் என்றும் இணைபிரியாத சகோதர சகோதரிகள், அந்த நாள் தான் அப்புறம் உலகத்தில் எல்லோரும் கொண்டாடும் ரக்ஷா பந்தன் தினமாகியது. சகோதரர்களின் கைகளில் சகோதரிகள் ரக்ஷை கட்டி அன்பும் நேசமும் எங்கும் பரவும் நாள். பந்தபாசம் தான் எல்லோரையும் வாழவைக்கிறது.
‘அ அ அ அம்மா உங்களை கல்யாணம் ப ப ப பண்ணிக்கொள்ள கர்ணனும் ஆஅ ஆ ஆ ஆசைப்பட்டாரா? உ உ உ உ ங்களுக்கும் அப்படி எண்ணமா ?”
‘அடி அசடே..எனக்கு கணவனாக வருபவன் பதினாலு உயர்ந்த குணங்கள் கொண்டவனாக இருக்க மகாதேவனை வேண்டினேன். ஐந்து பேரிடம் அது கலந்து இருந்ததால் மஹாதேவன் எனக்கு பஞ்ச பாண்டவர்களை கணவர்களாக கொடுத்தார். கர்ணனை ஒருபோதும் நான் விரும்பியதில்லை. ஒரு வீரனாக மதித்தேனே தவிர மனதில் இடம் தரவில்லை. அவன் எண்ணம் பற்றி எனக்கு என்ன அக்கறை? நான் அவன் மனைவி யாகி இருந்தால் நீங்கள் வணங்கும் ‘மஹாபாரதி ‘யாக இருப்பேனா? என் கிருஷ்ணன் என்னை மதித்தோ உதவியோயிருப்பானா? என் தந்தை துருபதன் நான் அர்ஜுனன் மனைவியாக வேண்டும் என்று வரம் கேட்டு யாகத்தில் பிறந்து யஞசேனியாக புகழ்பெற்றிருப்பேனா?”
என் கஷ்டம் யாருக்கும் வேண்டாம். அப்படிப்பட்ட கஷ்டம் வருவதாக இருந்தால் நிச்சயம் கிருஷ்ணன் சகோதரனாக இருக்க வேண்டும்.”
ஜெகதீஸ்வரி கண்ணைத் திறந்தபோது எதிரே கிருஷ்ணன் வழக்கம்போல் சிரித்தான். மனத்திரையில் ஓடிய சம்பவம் அவளை பேனா எடுத்து எழுத வைத்தது. யஞசேனி தன்னைப் பக்கங்களில் நிரப்பிக்கொண்டாள். ஜெகதீஸ்வரி ‘ரோபோ’ போல எழுதி ”யஞசேனி”யை உறையில் போட்டு சுகபோதினிக்கு அனுப்ப ஆசிரியர் கோபாலன் உறையை பிரித்து படித்தார்.
‘ஆஹா, அசாத்தியம். வித்யாசமான கதை. இதுக்கு தான் முதல் பரிசு . ” வாசு, போய் எழுதினவரைப் பார்த்து போட்டோ பிடிச்சுண்டு வா. ”
உதவியாசிரியன் வாசுவுக்கு ஜெகதீஸ்வரியே யஞசேனியாகத் தோன்ற ‘கல்யாணமே வேண்டாம்’ என்றிருந்தவனுக்கு சத்குணங்கள் கொண்ட அழகிய ஜெகதீஸ்வரியைப் பிடித்தது. கிருஷ்ணன் படத்தை இருவரும் சேர்ந்து நமஸ்கரித் தார்கள். ரெண்டு குடும்பத்துக்கும் திருப்தியோடு சித்திரையில் கல்யாணமாம். பத்திரிகை வந்தவுடன் தஞ்சாவூர் போவோம்.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.


