
ஸ்வாமி தேசிகனின் ஸ்ரீ ஸ்துதி – நங்கநல்லூர் J K SIVAN
ஸ்லோகம் 12-18
12. आसंसारं विततमखिलं वाङ्मयं यद्विभूतिर्यद्भ्रूभङ्गात्कुसुमधनुषः किङ्करो मेरूधन्वा ।
यस्यां नित्यं नयनशतकैरेकलक्ष्यो महेन्द्रः पद्मे तासां परिणतिरसौ भावलेशैस्त्वदीयैः ॥ १२॥
Asamsaaram vithatha makhilam vaangmayam yad vibhuthi Yath brungaath kusuma dhanusha kimkaro merru dhanwaa
Yasyaam nithyam naya nasa thakair yeka lakshyo mahendra Padme thaasaam parina thirasou bhava lesai thwadheeyai
ஹே புண்யவதி, யார் இந்த சரஸ்வதி, பார்வதி, சசி, போன்ற தெய்வீக பெண்மணிகள், பெண் தெய்வங்கள்? உன்னுடைய அம்சங்கள், உன் திருமேனியின் மற்ற பெயர்கள் தானே..உன் சங்கல்பத்தின் உருவங்கள், தோற்றங்கள் தானே. ஞானத்தை நீ பரப்பும்போது நீ தான் ஸரஸ்வதி. காமனை சுட்டெரிந்த காமேஸ்வரன் நீ காமேஸ்வரியாக அவதரித்த போது தானே..ஆயிரம் கண்ணுடையான் இந்திரன் மனைவி சசி , உன் தோற்றமே. உனக்கே வேறு பெயர்கள் உண்டே, சாம்ராஜ்ய லக்ஷ்மி, இந்த்ராணி. மஹா லக்ஷ்மி , எல்லாம் உன் அனுக்ரஹ ஸங்கல்பம் தான்.
13. अग्रे भर्तुः सरसिजमये भद्रपीठे निषण्णामम्भोराशेरधिगतसुधासम्प्लवादुत्थितां त्वाम् ।
पुष्पासारस्थगितभुवनैः पुष्कलावर्तकाद्यैः क्लृप्तारम्भाः कनककलशैरभ्यषिञ्चन्गजेन्द्राः ॥ १३॥
Agre Bharthu sarasijamaye bhadra peede nishannam Amboraase adhika sudhaa samplavaadh udheeyathaam thwaam
Pushpa saarai swagitha bhuvanai pushkala varthakaadhyi Klupaarambha kanaks kalasair abhyashinchan gajendraa
மஹா லக்ஷ்மி மஹா ராணி. அவளுடைய பட்டாபிஷேகம் எப்படி இருக்கும்! அவள் சிம்மாசனம் எது? ஸ்ரீமந் நாராயணனின் திரு மார்பு எனும் திருக்கோவில். . இந்த ஸ்லோகம் முழுக்க முழுக்க தாயார் மேல் தியானம் பற்றியதின் மகுட மணி.
மஹாலக்ஷ்மி தாயே, நீ பாற்கடலில் உதித்த திருமணி.. புஷ்களா, ஆவர்த்தகம் எனும் பெரும் மேகங்களி லிருந்து பூமாரி பொழிகிறது உன் மீது. அந்த மலர் மலையில் உலகமே முழுகி மறைந்து போய் விட்டது. அஷ்ட திக் கஜங்கள் தும்பிக்கையில் பெரிய தங்க கலசங்கள் தானி அவற்றில் நிறைய புனித நீர் நிரப்பி உனக்கு அபிஷேகம் செய்தன. இந்த அபிஷேகம் சாதாரணம் அல்ல. உன் பட்டாபிஷேகம். சகல மகரிஷிக
ளின் வேத மந்த்ர கோஷம் வானைப் பிளந்தது. இது அற்புத விசேஷம் அல்லவா!
14, आलोक्य त्वाम् अमृत सहजे विष्णु वक्षः स्थलस्थां. शापाक्रान्ताः शरणमगमन् सावरोधाः सुरेन्द्राः।
लब्ध्वा भुयस् त्रिभुवनमिदं लक्षितं त्वत् कटाक्षैः सर्वाकार स्थिर समुदयां संपदं निर्विशन्ति॥ १४॥
ālokya tvām amṛta sahaje viṣṇu vakṣaḥ sthalasthāṁ, śāpākrāntāḥ śaraṇamagaman sāvarodhāḥ surendrāḥ|
labdhvā bhuyas tribhuvanamidaṁ lakṣitaṁ tvat kaṭākṣaiḥ, sarvākāra sthira samudayāṁ saṁpadaṁ nirviśanti|| 14||
அம்மா, நீ அம்ருதத்தின் சகோதரி. யாரும் உன்னை இப்படி அழைத்திருக்க மாட்டார்கள். தேவர்கள் அனைவரும் தேவிகளோடு சேர்ந்து உன்னை சரணடைந்தார்கள். அவர்களுக்கு புத்துணர்ச்சி, பாதுகாப்பு நீ தானே தருபவள். துர்வாசர் கொடுத்த சாபத்தால் பதவி, ஐஸ்வர்யம் இழந்தவர்கள் இந்த இந்திராதி தேவர்கள். அந்த சாபத்திலிருந்து அவர்களை மீட்டு மீண்டும் பதவி பொருள் பெற நீ தானே விமோசனம் அளிப்பவள். அதற்காகத்தானே தேவாதி தேவர்கள் உன்னை சரணடைந்தவர்கள். உன் கடைக்கண் பார்வை ஒன்றே போதுமே இந்திராதி தேவர்களுக்கு மீண்டும் மூன்று லோகங்களிலும் பதவியும் பெருமையும் பெறுவதற்கு.
15. आर्त त्राण व्रतिभिर् अमृता सार नीलाम्बुवाहैः अम्भोजानाम् उषसि मिषताम् अन्तरङ्गैर् अपाङ्गैः।
यस्यां यस्यां दिशि विहरते देवि दृष्टिस् त्वदीया तस्यां तस्याम् अहम् अहमहमिकां तन्वते संपदोघाः॥१५॥
ārta trāṇa vratibhir amṛtā sāra nīlāmbuvāhaiḥ ambhojānām uṣasi miṣatām antaraṅgair apāṅgaiḥ|
yasyāṁ yasyāṁ diśi viharate devi dṛṣṭis tvadīyā tasyāṁ tasyām aham ahaMahāmikāṁ tanvate saṁpadoghāḥ||15||
தேவி மஹாலக்ஷ்மி, உன் கடை விழி பார்வை விடிகாலையில் செந்தாமரை புஷ்பம் மலர்வதைப் போல் உள்ளது. அதன் சக்தி பிரபஞ்சம் அறியும். தேன் மாறி பொழியும் நீல மேகங்கள் போல கருணை மழை பொழியும் அல்லி விழிகள். பார்வை பட்ட இடத்திலெல்லாம் அளவற்ற செல்வம் நிரம்பும். கதியற்றவர்கள், தீனர்களுக்கு ஒரே புகலிடம் உன் கடைவிழி பார்வை ஒன்றே.
16. மிக அற்புத ஸ்லோகம் இது. இதை சுவாமி தேசிகன் பெருந்தேவி தாயார் முன்பு மனமுருக பாடும்போது தான் தாயார் கனகமழை பொழிந்தாள். வைணவ வாலிபனுக்கு திருமணம் நடைபெற தேசிகர் தாயார் அருளை வேண்டியது அல்லவா ஸ்ரீஸ்துதி ஸ்தோத்ரம். வைணவ ப்ரம்மச்சாரிக்கு ஆச்சர்யம். தங்கக்காசுகள் மழையாக பொழிந்தால் அந்த ஏழை வாலிபனுக்கு சந்தோஷமில்லாமலா இருக்கும்?
16. योगारम्भ त्वरित मनसो युष्मदैकान्त्य युक्तम् धर्मं प्राप्तुं प्रथममिह ये धारयन्ते धनायाम्।
तेषां भूमेर् धनपति गृहाद् अम्बरादम्बुधेर्वा धारा निर्यान्त्यधिकम् अधिकं वाञ्छितानां वसूनाम्॥ १६॥
yogārambha tvarita manaso yuṣmadaikāntya yuktam dharmaṁ prāptuṁ prathamamiha ye dhārayante dhanāyām|
teṣāṁ bhūmer dhanapati gṛhād ambarādambudhervā dhārā niryāntyadhikam adhikaṁ vāñchitānāṁ vasūnām|| 16||
கர்ம யோகம் ஆரம்பிக்க சிலர் செல்வத்தை நாடுவார்கள். அதுவே மெதுவாக உன்மேல் பக்தியாக மாறும். குபேரன் வீட்டு கதவை திறந்து உள்ளே சென்றது போல் எங்கும் கண்ணை நிரப்பும் பொற்காசுகள். பக்தி யோகத்தில் ஈடுபட்டவர்களுக்கும் அவ்வாறே , சமுத்திரம் கரை புரண்டு வெள்ளமாக பாய்வது போல் எங்கும் பொன் மயம்.
17. श्रेयस् कामाः कमल निलये चित्रमाम्नायवाचां चूडा पीडं तव पद युगं चेतसा धारयन्तः।
छत्रच्छाया सुभग शिरसश् चामर स्मेर पार्श्वाः श्लाघा शब्द श्रवण मुदिताः स्रग्विणः सञ्चरन्ति॥ १७॥
śreyas kāmāḥ kamala nilaye citramāmnāyavācāṁ cūḍā pīḍaṁ tava pada yugaṁ cetasā dhārayantaḥ|
chatracchāyā subhaga śirasaś cāmara smera pārśvāḥ ślāghā śabda śravaṇa muditāḥ sragviṇaḥ sañcaranti|| 17||
அம்மா பரதேவதே, உன் திருவடிகளை நெஞ்சில், இதயத்தில் சுமந்தவர்களுக்கு இந்த பூ கத்தில் சக்ரவர்த்திகளாவதில் ஆச்சர்யமே இல்லை. சகல சௌபாக்கியங்களும் அவர்கள் வசமே…உன் திருவடிகள் தான் வேதத்தின் சிகரம். சர்வாலங்காரம்.
18 ऊरीकर्तुं कुशलम् अखिलं जेतुमादीनरातीन् दूरी कर्तुं दुरितनिवहं त्यक्थुम् आध्यामविध्याम्।
अम्ब स्तम्बावधिक जनन ग्राम सीमान्त रेखाम् आलम्बन्ते विमल मनसो विष्णुकान्ते दयां ते॥ १८॥
ūrīkartuṁ kuśalam akhilaṁ jetumādīnarātīn dūrī kartuṁ duritanivahaṁ tyakthum ādhyāmavidhyām|
amba stambāvadhika janana grāma sīmānta rekhām ālambante vimala manaso viṣṇukānte dayāṁ te|| 18||
Those with blemishless minds hold on to Your Dayā as their supporting staff in their life’s journey.
அம்மா, வாழ்க்கை பயணத்தில், உன் கருணை, தயை ஒன்றே உள்ளே துன்புறுத்தும் எதிரிகளை வெல்லலாம். பாபங்களை அகற்றலாம். அஞ்ஞானத்தை விலக்கலாம். பிறவிப்பிணி அகலும். செய்ய வேண்டியதெல்லாம் உன்னை தியானம் செய்வது ஒன்றே தான்.
அடுத்த பதிவோடு சுவாமி தேசிகரின் ஸ்ரீ ஸ்துதி நிறைவு பெறும்.
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



