NARASIMMA JAYANTHI J K SIVAN

மே 11, 2025 நரசிம்ம ஜெயந்தி – நங்கநல்லூர் J K SIVAN
ஹிந்துக்கள் ரொம்ப ரொம்ப பாக்கியசாலிகள் என்பதற்கு காரணம் ஒவ்வொருநாளும் ஏதாவது ஒரு தெய்வத்தோடு நமக்கு சம்பந்தம் கிடைக்கிறது. இன்று நரசிம்ம ஜெயந்தி. நிறைய நரசிம்மனைப் பற்றி பலமுறை எழுதி இருக்கிறேன்.
மஹா விஷ்ணுவின் நாலாவது அவதாரம் நரசிம்மன். ஹிரண்யகசிபுவை வதம் செய்ய ப்ரஹ்லாதனை காப்பாற்ற அவதரித்த நாள் தான் நரசிம்ம ஜெயந்தி.
மார்கழி 23ம் நாள் திருப்பாவை பாசுரத்தில் ஆண்டாள் கண்ணனை நேரில் காண்கிறாள். அவள் மனதில் அந்த கம்பீரன் ஒரு பெரிய சிம்மமாக எழுந்து வருவதை நினைவூட்டுகிறது. கண்ணன் சிங்கம் தானே. அவனல் லவோ நரனாகவும் சிம்மமாகவும் கலந்து சேர்ந்து அவதரித்தவன் . ப்ரஹ்லாதனுக்கு அருள் புரிந்து அவன் தந்தையை, கொடியவன் ஹிரண்யனை, வதம் செய்தவன். நரசிம்மனை ஆண்டாள் மட்டுமா நேரில் கண்டாள் .
ஒரு சாதாரண மனிதரும் பாசுரங்கள் பாடாமலேயே நரசிம்ம தரிசனம் பெற்ற விஷயம் தான் இப்போது சொல்லப்போகிறேன்.
ஆந்திராவில் மட்டப்பள்ளியில் ஒரு லக்ஷ்மிநரசிம்மர் கோயில் மிகப் பிரபலமானது. ஜன நடமாட்டம் இல்லாத வனப் பகுதியில் ஒருகாலத்தில் இருந்தது. அங்கே வாழ்ந்த ஒரு காட்டுவாசிக்கு மட்டப்பள்ளி நரசிம்மன் மீது எல்லையற்ற பக்தி. அவன் வசித்த இடத்திலிருந்து கோவில் ரொம்ப தூரம். ஆபத்தான காட்டுப் பகுதியில் நடந்து போய் தான் கோவிலை அடைய முடியும்.
அந்த காட்டு வாசி ஒருநாள் நரசிம்ம ஸ்வாமியை தரிசிக்க அரிசி, பருப்பு, காய், கனிகள் ஆகியவற்றை மூட்டைகட்டி தலையில் வைத்துக்கொண்டு மட்டப் பள்ளிக்கு நடந்தான் . காட்டில் இரண்டு பகல், ரெண்டு இரவு நடப்பது எவ்வளவு சிரமம் என்பது நடந்தால் தான் தெரியும். ஒருவழியாக நடந்து மட்டபள்ளி அடைந்தபோது அவனது துரதிருஷ்டம் பூஜை நேரம் எல்லாம் முடிந்து நரசிம்மனின் ஆலய வாசல் மூடி இருந்தது. இரவு நேரம். இருள் இன்னும் முழுதாக ஆக் ரமிக்கவில்லை. நக்ஷத்ரங்களின் ஒளி முணுக் முணுக் மட்டும். மற்றபடி இருட்டு. ரொம்ப களைத்துப் போய் அந்த வயதான காட்டுவாசி என்ன செய்யலாம் என்று யோசித்தபோது கோயில் வாசலை ஒட்டி ஒரு சிறு கூரை வேய்ந்த ஒட்டு வீடு கண்ணில் பட்டது.
”சரி, இந்த இரவு இங்கே கட்டையைப் போடுவோம். பொழுது விடிந்தவுடன் நரசிம்ம தரிசனம் பெறலாம்” என்று அந்த வீட்டின் சிறிய திண்ணையில் துண்டை விரித்து படுத்தான் . அடுத்த கணமே நடந்துவந்த களைப்பில் அசந்து உறங்கிவிட்டான் .
யாரோ எழுப்பினார்கள்? எழுந்து பார்த்தான். நரசிம் மன் கோவில் பட்டாச்சார்யார். அரைத்தூக்கம் கிராமவாசிக்கு. ஏன் எதற்கு இவர் என்னை எழுப் பினார், யார் இவர்? தூக்கக் கலக்கத்தில் காட்டு வாசிக்கு ஒன்றும் தெரிய வில்லை புரியவில்லை.
”கும்பிடறேன் சாமி”
“யாரப்பா நீ? எழுந்திரு. ஏன் இங்கே வந்து படுத்தாய்,? எங்கிருந்து வந்தவன் நீ ?”
” சாமி, நான் அந்தால இருக்கிற காட்டு பக்கம் தாண்டி ஒரு கிராமத்திலே இருக்கேனுங்கோ. நரசிம்ம சாமி பாக்க வந்தே னுங்கோ. உள்ளே போவ முடியல்லீங்கோ. கதவு சாத்திருக்குது. இப்போ திறந்து என்னை உள்ளே உடுவீங்களா? இல்லாட்டி இங்கிருந்தே கதவு திறந்ததும் பாக்கிறேனுங்கோ ”
“அதெல்லாம் வேண்டாம் நீ உள்ளே வா. இங்கே காட்டு மிருகங்கள் ரா வேளையில் உலாவும். ஆபத்து. பாவம் நீ ரொம்ப தூரத்தில் இருந்து வந்திருக்கிறாய். வயதான வன் உன் பக்தியை நான் மெச்சுகிறேன்” என்கிறார் அந்த நல்ல பட்டர்.
கதவைத் திறந்து உள்ளே அழைத்துச் சென்று காட்டு வாசி கொண்டு வந்தவற்றை எல்லாம் நரசிம்மனுக்கு நைவேத்தியம் செய்து, சடாரி வைத்து தீர்த்தம் கொடுத்தார்.
நரசிம்ம ஸ்வாமியை தனிமையில் மிக அருமையாக தரிசித்த காட்டுவாசிக்கு பரிபூர்ணானந்தம். அவன் இதுவரை நரசிம்மனைத் தரிசித்ததில்லை. கேள்விப் பட்டு மனதில் போற்றியதுண்டு.
”ஏம்பா, இருட்டிப்போயிடுத்தே. நீ எப்படி போவே இங்கிருந்து?” என்கிறார் பட்டர்.
”ரொம்ப சந்தோசமுங்கோ. மெதுவா சாமி பேர் சொல்லி க் கிட்டே நடப்பேனுங்கோ.’
”இந்த அகால இருட்டில் போகாதே. கொடிய விலங்குகள் ஜாஸ்தி இந்தப் பக்கம். இதோ இங்கேயே ராத்திரி கோவில் உள் மண்டபத்தில் தங்கி படு. நான் காலை யில் வந்து நடை திறந்த பிறகு வெளிச்சத்தில் போவது நல்லது.”
‘சாமி, ரொம்ப பெரிய மனசுங்கோ உங்களுக்கு. நல்லா யிருப்பீங்க.”
அன்று இரவு கழிந்து மறுநாள் காலை பட்டாச்சார்யார் கதவை திறந்தார். கோவிலுக்குள் உள்ளே யார் இந்த ஆள், அழுக்காக கந்தல் ஆடையுடன் குளிக்காமல் படுத்திருக்கிறான்? ரொம்ப ஆத்திரமடைந்து பட்டர் கிராமவாசியை கடுங்கோபத்துடன் திட்டினார்.
“யாரடா நீ? எப்படி கோயிலுக்குள் நுழைந்தாய்?” என்று ஆத்திரத்தோடு கத்தினார்.
காட்டு வாசி அதிர்ந்து போனான். ராத்திரி உள்ளே விட்ட அதே பட்டாச்சாரி இப்போது ஏன் இவ்வளவு கோபமாக பேசுகிறார்?.
“சாமி, நீங்க தானே என்னை எழுப்பி உள்ளார கூட்டி வந்து சாமியைக் காட்டி நான் கொண்டாந்த பிரசாதத் தை நைவேத்தியம் பண்ணி என்னை உள்ளாற வந்து இங்கே படுக்க சொன்னீங்கோ. அதுக்குள்ள மறந்துட் டீயளா?”
பட்டாச்சாரியாருக்கு தலை சுற்றியது. யார் இவன்? எப்படி கோவில் உள்ளே வந்தான்? நான் தானே கதவை சார்த்தி பூட்டி விட்டு சாவியை இடுப்பில் செருகிக் கொண்டு வீட்டுக்குப் போனேன். ”நீங்கதானே உள்ளே கூட்டிப்போய், படுக்க சொன்னீங்க ” என்கிறானே. நான் உள்ளே ஸ்வாமிக்கு அவன் கொண்டுவந்த எதையோ நைவேத்தியம் பண்ணியதாக வேறே சொல்கிறான். என்ன இது?” ‘
எதிரே நரசிம்மன் சந்நிதி. கர்ப்பகிரகத்தை இழுத்துப் பூட்டிய சாவி அவர் இடுப்பில் இருக்கிறது. அவசரமாக பூட்டியிருந்த சன்னதிக்கு சென்றார். பூட்டை இழுத்துப் பார்த்து சாவியால் திறந்தார்.
என்ன ஆச்சர்யம். அந்த அழுக்கு ஆள் சொன்னது போலவே நரசிம்மனுக்கு அவன் கொண்டு வந்த காய், வேர், பழங்கள் எல்லாம் நைவேத்தியம் செய்யப் பட்டிருந்தது.
பட்டாச்சாரியார் கிழவர். பரம்பரையாக நரசிம்மனுக்கு சேவை செய்பவர். பரம பக்தர். அவருக்கு விஷயம் சட்டென்று பொட்டில் அடித்தது போல் புரிந்து விட்டது . நரசிம்மனே தன்னைப் போல் நேரில் வந்து அந்த காட்டுவாசிக்கு அருளி யிருக்கிறான். சன்னதிக்குள் நைவேத்தியம் தவிர அனைத்தும் அவர் வைத்துவிட்டு போனது போலவே இருந்தது. இது வேறு யார் வேலையும் இல்லை. நிரபராதியாக அந்த காட்டு வாசி நிற்கி றான்.அவனை உள்ளே விட்டது, படுக்க வைத்தது எல்லாம் நரசிம்மன், நரசிம்மன், நரசிம்மனே தான்.
”நரசிம்மா, இத்தனை காலமும் பூஜை செய்கிற எனக்கு காட்சி தராமல், எவ்வித ஆசாரமும் இல்லாமல், பக்திக்கு முதலிடம் தந்து வந்த அந்த காட்டுவாசிக்கு அருள் தந்தாயே, என்ன பாக்கியவான் அவன். ”
பட்டர் மேலே பேசமுடியாமல் நரசிம்மனின் கருணையில் உருக அவர் கண்களில் நீர் பிரவாகம் பெருகி தரையில் சொட்டியது.
ஒரு குட்டி அற்புத ஸ்லோகம் நரசிம்மனைப் பற்றி. படியுங்கள்.
”மாதா ந்ருஸிம்ஹ: பிதா ந்ருஸிம்ஹ: .ப்ராதா ந்ருஸிம்ஹ: ஸகா ந்ருஸிம்ஹ: வித்யா ந்ருஸிம்ஹ: த்ரவிணம் ந்ருஸிம்ஹ:
ஸ்வாமி ந்ருஸிம்ஹ: ஸகலம் ந்ருஸிம்ஹ:
”நரசிம்மனே தாய்; நரசிம்மனே தந்தை, சகோதரனும் நரசிம்மனே; தோழனும் நரசிம்மனே; அறிவும் நரசிம்மனே; செல்வமும் நரசிம்மனே; எஜமானும் நரசிம்மனே; எல்லாமும் நரசிம்மனே”
அடுத்த பதிவில் இன்னொரு அற்புத நரசிம்ம அதிசயம் சொல்கிறேன். காத்திருக்கிறீர்களா?

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2561

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;