SURUTTAPALLI SIVA TEMPLE J K SIVAN

1. 5.2025 புனித யாத்திரை.- நங்கநல்லூர் J K SIVAN
பள்ளிகொண்ட ஈஸ்வரன் ஆலயம் -சுருட்ட பள்ளி.
ஒரு அற்புத சிவாலயம் ஸ்ரீ பள்ளி கொண்டீஸ்வரர் கோவில். தமிழ்நாடு ஆந்திரா எல்லையில் ஊத்துக் கோட்டை அருகே ம் சித்தூர் மாவட்டம், நாகலாபுரம் தாலுக்காவில் சுருட்டப்பள்ளி எனும் ஊரில் அமைந்துள் ளது. பரமேஸ்வரன் படுத்துக் கொண்டிருக்கும் உலகத் திலேயே ஒரே கோவில் இது. பார்வதி தேவி, மரகதாம் பிகை மடியில் தலை வைத்து ஆலஹால விஷத்தின் கொடுமையைப் பொறுத்துக்கொண்டு படுத்திருக் கிறார். ப்ரம்மா, விஷ்ணு, ரிஷிகள்,முனிவர்கள் கவலையோடு பார்க்கிறார்கள். ஆலகால விஷத்தை நெஞ்சில் தேக்கி மயக்கத்தோடு கண் மூடியவாறு பரமேஸ்வரன் காணப்படுகிறார். சிற்பி உயிரோட்டம் கொடுத்து அமைத்த விக்ரஹம். பிரதோஷ காலத்தில் தரிசனம் பெற ரொம்ப கும்பல் இருக்கும். நெருக்கி தள்ளும் பக்தர்கள் கூட்டம் சேரும் ஆலயம்.
இங்கே வால்மீகிஸ்வரர் – மரகதாம்பிகை, விநாயகர் – சித்தி, புத்தி, சாஸ்தா – பூரணை, புஷ்கலை, குபேரன் – கவுரிதேவி, சங்கநிதி மற்றும் பதுமநிதி இப்படி அனை வரும் தத்தம் மனைவியருடன் உள்ள சந்நிதிகள் அற்புதம். மூலவர் பெயர் வால்மீகிஸ்வரர். எதிரில் ராமலிங்கம்.
வழக்கமான துவார பாலகருக்கு பதில் விசேஷமாக இங்கே சங்கநிதி- வசுந்தராவுடனும், பத்மநிதி- வசுமதி யுடனும் காணலாம். அம்பாள் மரகதாம்பிகை நின்ற திருக்கோலத்தில் சிம்ம வாஹினி. சன்னதிக்கு வெளியில் துவார பாலகியருக்கு பதிலாக பாற்கடலிலி ருந்து கிடைத்த காமதேனுவும், கற்பகவிருட்சமும். வேறே எங்காவது இதெல்லாம் காண முடியுமா?.
மரகதாம்பிகை சன்னிதி அருகில் ராஜராஜேஸ்வரி, மகாலட்சுமி, சரஸ்வதி, அன்னபூரணி ஆகிய தேவிகளின் சிலைகள் உள்ளன. கையில் கிளியுடன் அழகிய வடிவில் ஞானதுர்க்கை காட்சி தருகிறார். வடக்கு பிரகாரத்தில் சுப்பிரமணியர் தனது இரு தேவியர்களுடன் தென்திசை நோக்கி நின்ற கோலத்தில் அருள்கிறார்.
ராஜயோகத்தை தரும் ராஜமாதங்கி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதற்கு கீழே ஒரு சுரங்கப்பாதை காணப்படுகிறது. எங்கே போகிறது? யாருக்குத் தெரியும்?
விசாலமான கோவில். ப்ரஹாரத்தில் விநாயர், முருகன், பிருகு முனிவர், பிரம்மா, விஷ்ணு, மார்க்கண்டேயர், நாரதர், சந்திரன், குபேரன், சூரியன், சப்தரிஷிகள், இந்திரன் சந்நிதிகள். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமையப்பெற்றது இந்த ஸ்தலம். இங்கே அநேகமாக எல்லா மூர்த்திகளும் குடும்ப சமேதராக காட்சி தருவது, முக்கிய அம்சம்.
புராண சம்பவம் ஒன்று சொல்கிறேன்.துர்வாச மகரிஷி யின் சாபத்தால் இந்திரன் பதவி இழந்தான் . அசுரர்கள் இந்திரலோகத்தை ஆக்கிரமித்தனர். மீண்டும் தான் இழந்த இந்த்ர பதவியைப் பெற பாற்கடலை கடைந்து, அம்ருதம் பெற்றால் தான் உண்டு. வேறே வழியில்லை என்று தேவகுரு ப்ரஹஸ்பதி சொல்லிவிட்டார்.
மஹா விஷ்ணுவின் உதவியோடு, வாசுகி என்ற பெரிய நாகத்தைக் கயிறாகவும், மந்திர மலையை மத்தாகவும் கொண்டு, தேவர்கள் ஒரு புறமும், அசுரர்கள் ஒரு புறமுமாக பாற்கடலை ஒரு ஏகாதசி தினத்தில் கடைந்தனர். ரெண்டு பக்கமும் தேவர்களும் அசுரர் களும் பலமாக இழுத்ததில், வாசுகிக்கு வலி தாங்க முடியாமல் விஷத்தை கக்கியது. தேவர்களும், அசுரர்களும் பயந்து இதிலிருந்து தங்களை காப்பாற்றிக்கொள்ள பரமேஸ்வரனை வேண்டினர். சிவன் தன் நிழலில் தோன்றிய சுந்தரமூர்த்தி நாயனாரை அனுப்பி அந்த விஷத்தை எல்லாம் திரட்டி எடுத்து வர கூறினார். சுந்தரர் மொத்த விஷத்தையும் ஒரு நாவல் பழம் போல் திரட்டி சிவனிடம் தந்தார். அப்போது முப்பத்து முக்கோடி தேவர்களும், “சிவ பெரு மானே! இந்த விஷத்தை வெளியில் வீசினால் அனைத்து ஜீவராசிகளும் அழியும். இந்த இக்கட்டான சூழ் நிலையிலிருந்து எங்களை காத்திடுங்கள்”என மன்றாடினர். உடனே சிவன் ‘விஷாபகரண மூர்த்தி’ யாகி அந்த கொடிய நஞ்சினை ஒரே மூச்சாக ‘லபக்” என்று விழுங்கினார். இதைக் கண்டு பயந்த லோக மாதா பார்வதி, சிவனை அப்படியே சாய்த்து தன் மடியில் கிடத்தி அவரது வாயிலிருந்த விஷம் கழுத்தி னை விட்டு கீழே உள்ளே செல்லாதவாறு கை வைத்து அழுத்தினாள். இதனால் சிவனின் கழுத்தில் (கண்டத்தில்) நீலநிறத்தில் விஷம் தங்கிவிட்டது. பரமேஸ்வரனுக்கு அன்று முதல் “நீலகண்டன்’ என பெயர். விஷத்தை தடுத்து அம்ருதம் கிடைக்கச் செய்ததால் அம்பாளுக்கு “அமுதாம்பிகை’ என பெயர். இது நடந்த இடம் சுருட்டப்பள்ளி என்கிறார்கள். சிவபுராணமும், ஸ்கந்த புராணமும் இதெல்லாம் பற்றி சொல்கிறது. பரமேஸ்வரன் பள்ளி கொண்டதால் “பள்ளி கொண்டீஸ்வரர்’ எனப்படுகிறார். பிரதோஷ காலத்தில் இத்தலத்து ஈசனை வழிபட்டால் சகல செல்வங்களும் கிடைக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.
இது ஒரு ஆயிரம் வருஷ கோவில். விஜயநகர பேரரசர் வித்யாரண்யரால் கட்டப்பட்டது. இங்குள்ள சிவ பெரு மான் மனித உருவில், ஆலகால விஷம் உண்ட பிறகு பார்வதி தேவியின் மடியில் தலை வைத்து படுத்த கோலம். இந்த ஸ்தலத்தை தான் முதன் முதலாக ப்ரதோஷ பூஜை வழிபாடு நடந்தது. பாற்கடலில் தோன்றிய சங்கநிதி பத்மநிதி த்வாரபாலகர்கள் . இங்கே அபூர்வமாக தக்ஷிணாமூர்த்தி சந்நிதியில் அவரை மனைவி தாராவுடன் தரிசனம் தரிசிக்கலாம்.
பிருகு முனிவர், பிரம்மா, மகாவிஷ்ணு, மார்க்கண் டேயர், நாரதர், சந்திரன், குபேரன், சூரியன், அகத்தியர், புலஸ்தியர், கவுதமர், தும்புரர், வசிஷ்டர், விசுவாமித் திரர், வால்மீகி, தேவேந்திரனோடு விநாயகர், வள்ளி- தெய்வானையுடன் முருகன் ஆகியோரும் அருள் பாலிக்கிறார்கள்.
சென்னை – திருப்பதி நெடுஞ்சாலையில், சென்னை யிலிருந்து 60 கி.மீ. ஊத்துக்கோட்டையிலிருந்து 2 கி.மீ தொலைவிலும் சுருட்டப்பள்ளி உள்ளது.
ஆந்திர கோவில்களில் தட்டில் காசு போடு என்று ஜாடை காட்டி கேட்கும் அர்ச்சகர்களை அங்கு தான் கண்டேன். ஒரூ முக்கி யமான விஷயம். மறந்து போகாமல் சொல்லி விடுகிறேன். இந்த ஆலயத்தின் கம்பீரமான ஐந்தடி உயர அழகிய நந்தியை பார்க்காமல் போக மனசு இடம் கொடுக்காது.
5 நிலை கொண்ட ராஜகோபுரம். மரகதாம்பிகை சன்னிதி முன்பாக சாளக்கிராம கணபதியும், வள்ளி-தெய்வானையுடன் சுப்பிரமணியரும், இடது புறம் அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர் ஆகிய நாயன்மார் களின் திருவுருவச்சிலைகளும், வால்மீகி மகரிஷியின் சிலையும் உள்ளது. அதற்கு அடுத்து ஏகபாத திரிமூர்த்தி காட்சி அளிப்பது அரிய ஒன்றாகும். தான் ஒருவராய் படைத்தல், காத்தல் தொழில் புரிபவராக பிரம்மா, விஷ்ணுவை தன்னிடத்தே கொண்ட சிவவடிவமே ‘ஏகபாத திரிமூர்த்தி’ ஆவார். பிரம்மா நான்கு முகங்க ளுடன் அன்ன வாகனத்துடனும், சிவன் நந்தியுடனும், விஷ்ணு கருடாழ்வாருடனும் ஒரே கல்லில் மிக அழகான சிற்பமாக காட்சி அளிக்கிறார்கள்.
வரசித்தி விநாயகர் தனி சன்னிதியில் காட்சி தருகிறார். தேவர்களுக்கு ஏற்பட்ட வெப்ப நோயை தணிப்பதற்காக, சிவன் தனது கையில் அக்னியுடனும், மூன்று தலை, மூன்று கால்கள், மூன்று கைகளுடன் எடுத்த அவதாரமே ஜுரஹரமூர்த்தி. இந்த சிலை ஒரே கல்லில் செதுக்கப் பட்டுள்ளது.
பிரம்மாவுக்கு கீழே தனி சன்னிதியில் சண்டிகேஸ் வரரை தரிசிக்கலாம். சப்த கன்னிமார்கள் 7 பேரும் தங்களது வாகனங்களுடன் காட்சி தருகின்றனர். இங்கு பிரதோஷ மூர்த்தி வண்ணப்படமாக தனி சன்னிதியில் உள்ளார். இந்த சன்னிதியின் வெளிப்புறத்தில் வேணு கோபாலசுவாமி தனது கரங்களில் புல்லாங்குழலுடன் காட்சி தருகிறார். மற்றொரு பக்கம் வேறெங்கும் காண முடியாத வகையில், நந்தீஸ்வரர் கைகூப்பிய நிலையில் அதிகார நந்தியாக அருள்கிறார்.*
*கிழக்கு பக்கத்தில் ஒரு சன்னிதியில் சீதாதேவி, ராமர், லட்சுமணன் அருள்கின்றனர். அவர்களுக்கு அருகில் பரதன், சத்ருக்னர், ஆஞ்சநேயர் உள்ளனர். இதை கடந்து சென்றால் ராமலிங்கேஸ்வரர், பர்வத வர்த்தினியுடன் தனி சன்னிதியில் காட்சி தருகிறார். அருகில் வால்மீ கிஸ் வரர் சிலை உள்ளது.
வாழ்க்கையில் ஒரு தடவையாவது சென்று தரிசிக்க வேண்டிய ஆலயம் இது.

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2561

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;