PATTINATHAR’S MOTHER. J K SIVAN

அம்மா, இதை  வாங்கிக்கோ –  நங்கநல்லூர்  J K SIVANபட்டினத்தார்
பட்டினத்தார்  ஒருகாலத்தில்  கடல் கடந்து கப்பல் வியாபாரத்தில் நிறைய  பணம் சம்பாதித்தாலும்  மனதை  பணம்  நிரப்பவில்லை.  அடி மனதில்  ஏதோ ஒரு குடைச்சல்.  ஊரார், உற்றார், குடும்பம், சொந்தம் பந்தம் பாசம்  எல்லாம்  நெஞ்சை விட்டு அகல ஆரம்பித் தது.  ஏதோ  ஒரு தேடல்  மனதில் கொழுந்து விட்டு எரிந்தது.   தேசாந்திரியாக ஒவ்வொரு இடமாக  கால் போன பக்கம்  நடந்தார். ஒருநாள் அம்ம  இறந்தாள்  என்ற செய்தி காதில் விழுந்தது.  கால்கள் தானாகவே  அவர் வாழ்ந்த  இடத்துக்கு  கொண்டு சென்றது.
சில்லிட்ட  அசைவற்ற தாயின் மரக்கட்டை  உடல்  அவரை  வரவேற்றது.  மௌனமாக  அந்த முகம்   ”அப்பனே  இப்போவாவது வந்தாயா. எனக்கு  செய்ய வேண்டிய காரியத்தை செய்வாயா?”  என்று  கேட்பது போல்  தோன்றியது. ஒரு  இயந்திரம்  போல் செயல் பட்டார்.  அம்மாவின் உடலை தூக்கிச் சென்று  தீயிட்டார்.  தாயின் உடல் மட்டுமல்ல  அவர்  மனமும் வெந்தது.  அவள் விட்டுப்போன  பாசம்  பழைய நினைவுகளாக  உரு வெடுத்து  அவர் மனதைப் பிழிந்து  வார்த்தைகளாக  உருவெடுத்து அவரைக்  கதற வைத்தது.  அது எளிய தமிழில்  உணர்ச்சி பூர்வமாக  நமக்கு எழுத்தில் அச்சாகி  அளிக்கப்பட்டது. ”அடடா  இவரைப் போல் இன்னொருவர் உண்டா?” என   நம்மை  இன்றும்  வியக்க வைக்கிறது.
” ஐயிரண்டு திங்களா யங்க மெலா நொந்து பெற்றுப் பையலென்ற போதே பரிந்தெடுத்துச் -செய்யவிரு
கைப்புறத்தி  லேந்திக் கனக முலை தந்தாளை யெப் பிறப்பிற் காண்பேனினி.1
‘ஒன்றா ரெண்டா,  பத்து மாதம்  படாத பாடு பட்டு  உடல் வலிக்க  என்னை  வயிற்றில் சுமந்தாய். அடே பயலே  என்று செல்லமாக  கூப்பிடுவாய். முடிந்த போதெல்லாம்  உன்  இரு  கையே  எனக்கு இருக்கை  யானது. பசித் ததா எனக்கு என்று எனக்கே  தெரியாது. ஆனால்  உனக்குத் தெரிந்து அன்போடு என்னை  மார்பகத்தில் அணைத்து  பால் கொடுத்து வளர்த்தாயே. இனி நான் உன்னை  எப்போது, எங்கே, எந்த  பிறவியில் காண்பேன்?”
முந்தித் தவங் கிடந்து முந்நூறு நாட் சுமந்தே யந்தி பகலாச் சிவனை யாதரித்துத் -தொந்தி
சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ  வெரிய த்தழன் மூட்டுவேன்.2
‘நான்  உன் மகனாக பிறக்கவேண்டும் என கனவினிலும் வேண்டியதில்லை.  ஆனால்  நான் மகனாக  உனக்கு பிறக்கவேண்டும் என்று  எத்தனை  வருஷம்  தவம்  இருந்தாயோ?  நீ  நிறைய  கோவில்களுக்கு  சென்று,  எங்கெங்கோ சுற்றி,  விரதமிருந்து  யார் சொன்னபடி எல்லாமோ உன் உடலை வருத்திக் கொண்டு சிவனை வேண்டி,   நான் பிறந்தேன் என்று சொல்ல கேட்டிருக்கிறேன்.  ஒன்றா இரண்டா  முன்னூறு  நாள் போல் என்னை இரவு பகலாக  கண் விழித்து  ஜாக்ரதையாக  காத்து அல்லவோ பெற்றாய்.  அதற்கெல்லாம்  பிரதி உபகாரம் நான் என்ன செய்கிறேன் பார்.  நிறைய  தீயை மூட்டி  உனது  உடலை  எரிக்கிறேன். எப்படிப்பட்ட   பிரதிஉபகாரம் !!
வட்டிலிலுந் தொட்டிலிலு  மார் மேலுந் தோண் மேலுங் கட்டிலிலும் வைத்தென்னைக்  காதலித்து –  முட்டச்
சிறகிலிட்டுக்  காப்பாற்றிச்  சீராட்டுந்  தாய்க்கோ விறகி லிட்டுத்  தீ மூட்டுவேன்.3
‘என்னைத்   தாலாட்டினாய்,  சீராட்டினாய்,  ஊஞ்சலில் வைத்து ஆட்டினாய்,  பாடினாய்.  உன் மார் மேலும்  தோள் மேலும் நான்  எத்தனையோ காலம்  சுகமாக  தூங்கியிருக்கிறேன். எனக்கென்று தந்தத்திலும் தங்கத்திலும்  தொட்டில் செய்தாய்.  உலகிலேயே  நீ  அதிக  பாசம் அன்பு, காதல் வைத்த  ஒரே  ஜீவன் நான் ஒருவனே. தாய்ப் பறவை  சிறகுக்குள் தனது குஞ்சுகளை  அணைத்து காப்பது போல்  என்னை  உன்னருகி லேயே  வைத்து அணைத்து  காப்பாற்றி  வளர்த்தாய்.  அந்த உடலுக்கு  நான்  இப்போது என்ன  கைம்மாறு செய்கிறேன் பார். நிறைய  காய்ந்த விறகுகள் கொண்டு வந்திருக்கிறேனே. அவற்றின் மீது உன் தலையை வைத்து எரிக்கிறேன்.  தக தக வென்று தீ  என் நெஞ்சைப் போல் உன் உடலும் எரியட்டும்.
நொந்துசுமந்துபெற்றுநோவாமலேந்திமுலை தந்துவளர்ந்தெடுத்துத்தாழாமே – யந்திபகல்
கையிலேகொண்டென்னைக்காப்பாற்றுந்தாய்தனக்கோ மெய்யிலேதீமூட்டுவேன்.4
எனக்கு  என்ன சொல்வதென்றே வார்த்தை வரவில்லை அம்மா.  சொன்னதையே  திருப்பி திருப்பிச்    சொல்கிறேன்.  எது நினைத்தாலும்  அது உன் நினைவாகவே அல்லவோ மாறி விடுகிறது?.  எத்தனை நோன்புகள்,  எத்தனை  எதிர்பார்ப்புகள், என்னை பத்துமாத  காலம்   வயிற்றில் தாங்கி, வயிறு   முன் தள்ளி வர, நான் உள்ளே  உன்னை விண்  விண் என்று உதைக்க,   பல்லைக் கடித்துப்  பொறுத்துக் கொண்டு , பெற்று வளர்த்து  பாலூட்டி வளர்ந்த  உன்   மெய்க்கு —  உண்மையாகவே  —  மெய்  என்றால்  உடம்பு தானே –அதை தீயிலே இட்டு  எரிக்கிறேன்.
என்னைத்   தாலாட்டினாய்,  சீராட்டினாய்,  ஊஞ்சலில் வைத்து  பாராட்டினாய்,    பாடினாய்.  உன் மார்பில் மேலும்  தோள்மேலும் நான்  எத்தனையோ காலம்  சுகமாக  தூங்கியிருக்கிறேன். எனக்கென்று தந்தத்திலும் தங்கத்திலும்  தொட்டில் வேறு  வைத்திருந்தாய். .  உலகிலேயே  நீ  அதிக  பாசம் அன்பு, காதல் வைத்த  ஒரே  ஜீவன் நான் ஒருவனே. .  தாய்ப் பறவை  சிறகுக்குள் தனது குஞ்சுகளை  அணைத்து காப்பது போல்  என்னை  உன்னருகிலேயே  வைத்து அணைத்து  காப்பாற்றி  வளர்த்தாய்.  அந்த உடலுக்கு  நான்  இப்போது கைம்மாறு செய்கிறேனே.  இங்கே தான் நிறைய  காய்ந்த விறகுகள் கொண்டு வந்திருக்கிறேனே. அவற்றின் மீது உன் தலையை வைத்து எரிக்கிறேன்.  தக தக வென்று தீ  என் நெஞ்சைப் போல் உன் உடலும் எரியட்டும்.
அரிசியோ நானி டுவே  னாத்தா தனக்கு வரிசை யிட்டுப்  பார்த்து மகிழாம – லுருசியுள்ள
தேனே யமிர்தமே செல்வத் திரவியமே  மானே யென அழைத்த  வாய்க்கு.5
பாவம்,  என்  ஆசை அம்மா,  எனக்கு  நேரம் பார்த்து  பசி வரும் முன்பே  நீ உணவளித்து வளர்த்தாயே. இப்போது உனக்கு  பசிக்குமே  இந்தா  கொஞ்சம் அரிசியாவது உன்  வாயில்  இடுகிறேன்.  ஆத்தா, எனக்கு  எத்தனை எத்தனையோ சிங்காரம் பண்ணி, அழகு செய்து, முன்னும் பின்னும்  என்னை பார்த்து மகிழ்ந்த தாயே,  என்னை பேர்  சொல்லியா  கூப்பிட்டாய்.  தேனே,  மானே, கற்கண்டே,  செல்வமே,  அம்ரிதமே, என்று தானே  எப்போதும் வாய்  நிறைய  அழைப்பாய்.  அந்த  வாய்க்கு  நிறைய வறண்டு போன வெறும் அரிசி போடட்டுமா?
அள்ளி யிடுவதரிசியோ  தாய் தலை மேல் கொள்ளி தனை வைப்பேனோ  கூசாமல்  – மெள்ள
முகம் மேல் முகம் வைத்து முத்தாடி யென்றன் மகனே யென அழைத்த வாய்க்கு.6
எல்லாமே  முடிந்து விட்டது. ‘என் மகனே, என் செல்வமே,  முத்தே,  என்று என் முகத்தோடு உன் முகத்தை  ஒட்டி,  வாய்  ஓயாமல்  சொல்லிய  உன் வாய்க்கு  கடைசி, கடைசியாக,  கை நிறைய அள்ளி அரிசி போட்டு விட்டேன். உச்சி முகந்த  உன்  முகத்துக்கும் உடலுக்கும்  கொள்ளி  போட்டு விட்டேன்.  இது தான்  நான் செய்ய முடிந்தது.  இதை நான்  செய்யவேண்டும் என்பது தானே  உன் விருப்பமும் கூட. அதை  நிறை வேற்றிவிட்டேன்  அம்மா. 

முன்னை யிட்ட தீ முப்புரத்திலே பின்னை யிட்ட தீ தென்னி லங்கையில்
அன்னைக யிட்ட தீ யடி வயிற்றிலேயானு மிட்ட தீ மூள்க மூள்கவே.7
பரமேஸ்வரா,  சிவபெருமானே,  ஒரு வேண்டுகோள். கருணை காட்டு. நீ  முற்காலத்தில்  திரிபுரத்தை உன் நெற்றிக்கண்ணால்  ஒரு நொடியில் எரித்தவன். பின்னர் ஒரு காலத்தில்  ராமனாக வந்தாய். உன் பக்தன்  ஆஞ்சநேயன்  இலங்கைக்கு பறந்தான். அந்த மாநகருக்கே  சடுதியில் தீயிட்டான்.  இந்த  நெருப்பெல்லாம்  உண்மையிலேயே  ஒரு நெருப்பாகுமா? இதோ என் அம்மா, எனக்கு  மீண்டும்  கிடைக்காதவள், என்  அடி வயிற்றில்  இப்போது  வைத்து விட்டு  சென்றாளே   அந்த  தீ, நெருப்புக்கு  வேறு எந்த  நெருப்பாவது ஈடாகுமா?  அப்படிப்பட்ட  நெருப்பில் கொஞ்சம்  எடுத்து இதோ என் தாய்  சிதைமேல்  இடுகிறேன்.  கப கப வென்று  அது என் அடி வயிற்று தீபோல்  எரியட்டும்.
வேகுதே  தீ யதனில் வெந்து பொடி சாம்பல்  ஆகுதே  பாவியேன்   ஐயகோ – மாகக்  குருவிபறவாமற் கோதாட்டி யென்னைக் கருதி வளர்த் தெடுத்த கை.8
எனக்கு இனிமேல் அம்மா இல்லை.  என் கண்ணெதிரில்  தீயில்  கலந்து வெந்து போனாள் . பொடியாகி விட்டாள் . அவள் பெயர் இனி சாம்பல்.  ஒரு குருவியின்  நிழல் கூட என் மீது படாமல்  என்னை பாதுகாத்து  வளர்த்த  அந்த  உடல் இனி  ஒரு பிடி சாம்பல் தான்.
வெந்தாளோ  சோணகிரி  வித்தகா  நின்   பதத்தில் வந்தாளோ வென்னை  மறந்தாளோ – சந்ததமு
முன்னையே  நோக்கி  யுகந்து  வரங்கிடந்தென் றன்னை  யீன்றெடுத்ததாய்.9
சிவ பெருமானே, என்  அம்மா எங்கே? நெருப்பில்  வெந்தாளோ?   உன்  திருவடிகளில்  அடைக்கலம்  என்று  வந்தாளோ?  என்னை  மறந்தாளோ?  அவள்  உன்னையே  அல்லவோ சுற்றி சுற்றி வந்து வரமெல்லாம் கிடந்து என்னை  பெற்றவள்.”
வீற்றிருந்தா ளன்னை வீதிதனி லிருந்தாள் நேற்றிருந்தா  ளின்று வெந்து நீறானாள் – பாற்றெளிக்க
வெல்லீரும் வாருங்களே தென்றிரங்காமல் எல்லாஞ் சிவமயமே யாம்.
சே  என்ன மனித வாழ்க்கை இது.   இதோ, இங்கே தான் எப்போதும்  உட்கார்ந்திருப்பாள்.  இந்த தெருவெல் லாம் என்னைத்  தோளில்  சுமந்து நடந்தாள்.  நேற்று  இருந்தாளே?  இன்று??  அடாடா  வெந்து  சாம்பலானாள். ஒரு நாள்  ஓடிவிட்டதே   வாருங்கள் எல்லோரும்  பால்  தெளிப்போம். இனி என் மனத்தில்  இரக்கமோ  ஏக்கமோ வேண்டாம்.  இது உன் செயல், நியதி. என்றும் நடந்தது, நடப்பது, நடக்கப் போவது.  ஸர்வம்  சிவ மயம் , சிவனின் மாயம் , என  ஏற்றுக்கொண்டு  பழையபடி என் வழியே  நடக்கிறேன்.  

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2561

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;