விக்ரமாதித்தன் வேதாள கதைகள்  –   நங்கநல்லூர்  J K SIVAN
ராஜா  பர்த்ருஹரி சந்நியாசியான கதை

சில பழங்கதைகளை சொல்லும்போது  ஏற்கனவே சொன்ன விஷயம் நடு  நடுவே  வரத்தான் செய்கிறது.
அதை வெட்டி விட்டு தொடரலாமென்றால் கதை ஜோடனையின் அழகு, கோர்வை பின்னமாகிவிடுகிறது. மனதுக்கு வருத்தமாகிறது. சரி, இருந்து விட்டு போகட்டும்   என்பதால், பழசை  சுருக்கமாக சொல்லி கதையை மேலே ஓட்டிக்கொண்டு போக வேண்டிய  நிலை அமைகிறது.

தேவலோகத்து அமராவதிப்‌ பட்டணத்துக்கு ஓப்பான ஐஸ்வர்ய நகரம் கன்யாபுரி யின் ராஜா பர்த்ருஹரி. பராக்ரமசாலி. பல ராஜாக்களை சிறைப்பிடித்து வைத்திருந்ததால் பல ராணிகள் பர்த்ருஹரியிடம் வந்து காலில் விழுந்து ராஜாக்களுக்கு உயிர் பிச்சை வேண்டினார்கள்‌. அவன் தம்பி விக்ரமாதித்தன். பலே கெட்டிக்காரன். பர்த்ருஹரி  கலைஞன். அழகை ரசிப்பவன். முன்னூற்று அறுபது அழகிகளை கல்யாணம் பண்ணிக்கொண்டவன்.  அவனது அந்தப்புரம்  ஒரு பெரிய கலைக்கூடம். இருந்தும் அப்பாவுக்கு  மரண காலத்தில் கொடுத்த  சத்ய வாக்குப்படி  அவனுக்கு பிள்ளைகள்‌ இல்லை. அவன் மனைவிகளில் அதி அழகி ஒருவள். அனங்கசேனை. எல்லோரையும் விட அவள் மேல் அவனுக்கு பிரேமை.

அந்த ஊரில்  சகல சாஸ்திரங்களையும் கற்றுணர்ந்த ஒரு பிராமணன். முதுமை வறுமை ரெண்டும் அவனை வாட்டியது. பூமிதேவியை நோக்கி வரமிருந்தான். 
ஹே பிராமணா! உன்‌ தவத்தினால்‌ மிக்க மகிழ்ச்சிஅடைந்தேன்‌. உனக்கு வேண்டியதைக்‌ கேள்‌; தருகிறேன்” என்றாள்‌ பூமிதேவி.
“தேவி! என்மீது உனக்குக்‌ கருணை பிறந்திருப்பது பாக்கியமே! வறுமையிலும் முதுமையிலும் இருந்து எனக்கு விடுதலை கொடு ”
”இந்தா ஒரு தேவலோக மாதுளம்‌ பழம்‌. இதைச் சாப்பிடு, நீ என்றும் இளமையுடன்‌ இருப்பாய்‌!”பூமி தேவி மறைந்தாள். 
சந்தோஷமாக வீடு திரும்பிய கிழ பிராமணன் வீட்டில் யோசித்தான். “நானோ பரம ஏழை. அடுத்த வேளைச்‌ சாப்பாடு எங்கு கிடைக்கும்‌ என்று காத்துக்‌ கொண்டிருக்கிறேன்‌. சாகாமலும்‌ யெளவனமாகவும்‌ இருப்பதால் எனக்கு என்ன பலன்‌? சுகத்தை அனுபவிக்கத்‌ திரவியம்‌ இல்லை ? யாருக்கும் நான் உதவவும் முடியாது. சிறிது
காலமாவது பிறருக்கு உதவியாயிருப்பவன்‌ எவ்வளவோ மேலானவன். உயர்ந்த குணங்களை உடையவன்‌ சிறிது காலம்‌ ஜீவித்திருந்தாலும்‌ அவன்‌ வாழ்வு புரணமானதாகிறது. பரந்த அறிவு. ஆண்மை,உயர்பதவி, நேர்மை போன்ற குணங்களுடையவன்‌, கொஞ்ச காலம்‌ வாழ்ந்திருந்தாலும்‌, அவன்‌ வாழ்வு மற்றவர்களுக்கு நல்ல பலன் தரும். 
மற்றவர்களின்‌ சந்தோஷமே தன்‌ சந்தோஷமாகக்‌ கொண்டவன்‌ நேர்மையாளன்‌.
தலைவன்‌.  ஒருவன்  தன்னுடைய குலம்‌, நடத்தை, குணம்‌ ஆகியவற்றால்‌ பலனைக்‌ கொடுக்காவிட்டால்‌, அவன்‌ பிறப்பு ப்ரயோஜனமில்லாதது.”  இப்படி நினைத்த பிராமணன்  பழத்தைச்‌ சாப்பி\டாமல்  ராஜா பர்த்ருஹரி தான் சிறந்தவன் அவனிடம் கொடுப்போம் என்றும் இளமையோடு அந்த நல்ல ராஜா ஆளட்டும். எல்லோருக்கும் நல்லது என்று  ராஜாவிடம் சென்றான்.
 
“மஹாராஜா,  பாம்புகளை ஆபரணமாக அணிந்து பரமசிவனும்‌, பிதாம்பரத்தைத்‌ தரிக்கும்‌ மகாவிஷ்ணு
தங்களுக்குச்‌ சர்வ மங்களங்களையும்‌ அளிப்பார்களாக!. இந்தாருங்கள் இந்த தெய்வீக பழத்தை சாப்பிடுங் கள்”
“இந்தப்‌ பழம்‌ உனக்கு எப்படிக்‌  கிடைத்தது? பூமியில் இது போன்ற ஒளிமயமான சிவந்த மாதுளையை பார்த்ததே இல்லையே. ” – பர்த்ருஹரி.
பூமி தேவி வரப்பிரசாதமாக இதை கொடுத்து   ‘மரணமும் கிழத்தன்மையும் அண்டாது சாப்பிடு” என தந்தாள். நீண்ட ஆயுளோடு. நெறி தவறாமல்‌ ஆட்சி புரியும்‌ அரசனே நாட்டுக்குத்‌ தேவை. ஆகவே தங்களிடம்‌ கொண்டு வந்தேன்‌.அழியாத இளமையையும்‌ நீண்ட  ஆயுளையும்‌ பெறுவீர்களாக!” என்றான்‌ கிழ பிராமணன். அந்தணன்‌ ராஜா கொடுத்த பரிசுகளோடு சென்றான். 
 
பர்த்ருஹரிக்கு ஒரு யோசனை.  “இந்தப்‌ பழத்தைச்‌ சாப்பிட்டு அமரத்தன்மை நான் அடைவதை விட என் அழகி  அநங்கசேனை சாப்பிட்டால் என்றும் எனக்கு இளம் அழகிய மனைவியாகவே இருப்பாளே”
நான் வெகுகாலம் இருந்து அதற்குள் அவள் இறப்பதை நான் எப்படி சகிப்பேன்.

”இந்தா அநங்கசேனை, என் ப்ரியே, இந்த அபூர்வ சக்திவாய்ந்த மாதுளம்‌ பழம். இதை நீ சாப்பிட்டால்  ,மரணமின்றி என்றும் இளமையாக வாழலாமாம்‌! இதைச்‌ சாப்பிடு!” என்று அவளிடம் பர்த்ருஹரி பழத்தை கொடுத்தான். 
 
அந்நகசேனைக்கு  ஒரு கள்ளக்  காதலன் ஒருவன்‌ இருந்தான்‌. அரண்மனை குதிரை லாயத்திலிருந்த குதிரைப்‌ பாகனிடம்‌ அவளுக்கு மோகம்‌! அவன் கிழவனாகி விட்டால் எனக்கு சுகம் எப்படி? அவனே என்றும் மரணமின்றி இளமையோடு இருக்கட்டும் என்று அவனிடம் கொடுத்துவிட்டாள்  அந்த கள்ளி.
 
அந்த  குதிரைப்‌ பாகனுக்கு அரண்மனை பணிப்பெண் ஒருத்தி மேல் காதல். மோகம், காதல் என்பது
விசித்திரமானது. சாட்டையில்லாப்‌ பம்பரம்போல்‌ அலாதியாக ஆடக்கூடியது ஆசைப்‌ பொம்மலாட்டம்‌! கலா ரசிகையான ராஜபத்தினியின்‌ உயர்தரமான பண்பாடுகளும்‌, மென்மையான அன்பு மொழிகளும்‌ முரடனான குதிரைப்‌ பாகனின்‌ ஆசைக்குப்‌ போதவில்லை! அவனைப்போல்‌ கீழ்த்தரமான கொச்சை வார்த்தைகள்‌ பேசக்கூடிய பணிப்பெண் மேலே தான் அவனுக்கு கவர்ச்சி.  அவளிடம் அந்த  பழத்தை கொடுத்து, “என்‌ அன்பே! இந்தப்‌ பழத்தைச்‌ சாப்பிட்டால்‌ நீண்ட  நாட்கள்‌ உடல்‌ கட்டுத்‌ தளராமல்‌ வாலிபத்துடன் இருப்பாயாம் இதை சாப்பிடு” என்று  சொல்ல மாதுளம்‌ பழத்தை வாங்கிக்கொண்ட  அந்த பணிப்பெண் தன்‌ ஆசை நாயகனான   மாட்டுக்‌ கொட்டிலில்‌ சாணம்‌ முதலிய கழிவுப்‌ பொருள்களைக்‌ கூட்டி எறியும்‌ ஒருவனிடம்  தன்‌
கொடுக்க அவன் தன்னோடு வேலை செய்யும் ஒரு சாணி யை எடுத்து சுத்தம் செய்யும் ஒரு வேலைக்கார பெண்ணிடம் கொடுத்துவிட்டான்.  
அந்த வேலைக்காரி பாலத்தை ஒரு சாணிக் கூடை மேல் வைத்துவிட்டு ஞாபகமறதியாக வீட்டுக்கு சென்று விட்டாள் . 
வேட்டைக்கு புறப்பட்டுக்கொண்டிருந்த பர்த்ருஹரி  குதிரை லாயம் பக்கம் வந்ததுபோது  ஓரமாக ஒரு சாணிக்கூடை மேல் தான்  அநங்கசேனைக்கு கொடுத்த ஒளிவீசும் சிவந்த தெய்வீக மாதுளை இருப்பதை கவனித்தான். திடுக்கிட்டான்.  ”எப்படி எனக்கு பிராமணன் கொடுத்தது போலவே இன்னொரு  மாதுளை இங்கே கிடக்கிறது?  அவனுக்கு பரம சந்தோஷம். ”ஆஹா ஒரு பழத்தை அநங்க சேனை சாப்பிட்டு இன்னொன்றை நானும் சாப்பிட்டால் இருவருமே என்றும் சந்தோஷமாக இருப்போமே ” என்று  அந்த சாணிக்கூடை பெண் யார் என்று கேட்டு அழைத்தான். 
”இந்த பழத்தை எனக்கு கொடு உனக்கு பரிசுகள் தருகிறேன்” என்றான் பர்த்ருஹரி. பரிசுகள் கொடுத்து விட்டு அந்த பழத்தோடு அரண்மனை திரும்பிய பர்த்ருஹரி தனக்கு பழம் கொடுத்த பிராமணனை வரவழைத்தான்.
 
”ப்ராமணா, உண்மையை சொல். நீ பூமி தேவிக்கு தவம் இருந்து கிடைத்த ஒரே ஒரு தெய்வீக மாதுளை என்று சொன்னாயே  அது போல எப்படி இன்னொன்று இருக்க முடியும்?”
”இல்லவே இல்லை மஹாராஜா, பூமியில் எங்கு தேடினாலும் அதுபோல் வேறு ஒரு பழம் கிடைக்கவே கிடைக்காது.   பூமி தேவி கடாக்ஷத்தால் எனக்கு கிடைத்தது ஒன்றே ஒன்று தான். அரசன் தெய்வம். அவனிடம் பொய் சொல்லக்கூடாது.”
 
”இல்லை பிராமணா , நீ கொடுத்தது போல் அதே பழம் இன்னொன்று எனக்கு கிடைத்தது”
”ராஜா, நான் கொடுத்த பழத்தை நீங்கள் சாப்பீட்டீர்களா?அதை என்ன செய்தீர்கள்‌?”
“என்‌ உயிருக்குயிரான அனங்கசேனையிடம்‌ கொடுத்துச்‌ சாப்பிடச்‌ சொன்னேன்‌.”
”ராணி அதை சாப்பிட்டார்களா என்று  விசாரித்தீர்களா?”
அங்கசேனையை வரவழைத்த பர்த்ருஹரி ”நீ  நான் கொடுத்த பழத்தை சாப்பிட்டாயா. உண்மையை சொல்”
”நான்‌ சாப்பிடவில்லை, பிரபோ!”தயங்கி தயங்கி உண்மையை சொன்னாள்  அநங்கசேனை . 
ராஜா குதிரைக்காரனை அழைத்து விசாரிக்கவே, அவன்‌ பழத்தை பணிப்பெண்ணுக்கு கொடுத்ததும்‌, அவள்‌ இடையனிடம்‌ கொடுத்ததும்‌, அந்த  இடையன்‌ சாணிக்காரியிடம்‌ கொடுத்ததுமான இரகசியங்கள்‌ எல்லாம்
வெளிப்பட்டன.
 

மனம் உடைந்து போன பர்த்ருஹரிக்கு  “மனதைக்‌ கவரும்‌ உருவம்‌. யெளாவனம்‌ ஆகிய இரண்டிலும்‌
ஆடவன்‌ கொள்ளும்‌ அபிமானம்‌ வீண்தான்‌. வில்போன்ற புருவங்களுடைய பெண்கள்‌ உள்ளத்தில்‌ மன்மதன்‌ தான்‌  விரும்பியதையே செய்வான்‌. பெண்களின்‌ எண்ணங்களையும்‌  செயல்களையும்‌ ஒருவராலும்‌ அறியமுடியாது.  பெண்களின்‌ சித்தம்‌, மனிதனுடைய பாக்கியம்‌, அதிக மழை,  மழையின்மை – ஆகிய இவைகளை தெய்வத்தாலேயே தடுக்க  முடியாது என்பார்கள்‌. அவ்விதமிருக்க கேவலம்‌ சாதாரண
மனிதனால்‌ என்ன செய்யமுடியும்‌? மேலும்‌, பெண்களின்‌ சஞ்சலம்‌  நிறைந்த உள்ளத்தைக்‌ கவருவதைவி ட, ஒருவன்‌ காட்டிலே புலி யைப்‌ பிடித்து விடலாம்‌; ஆகாயத்தில்‌ பறக்கும்‌ பறவையைப் பிடித்து விடலாம்‌; தண்ணீரின்‌ நடுவே நீந்தும்‌ மீனைக்‌ கூட  அவன்‌ சுலபத்தில்‌ பிடித்து விடலாம்‌ என்பார்கள்‌.
தத்துவஞானியை,  சுகம்‌, துக்கம்‌, வெற்றி, தோல்வி, வாழ்வு, மணம்‌. ஆகியவற்றை நன்கு பிரித்துக்‌ காட்டக்‌
கூடியவனுமான அறிவாளியையே பெண்களின்‌ நடத்தைகள்‌ கெடுத்து விடும். கெளரவம்‌, உயர்பதவி, போற்றக்கூடிய தன்மை வாய்த்த  குணங்களை உடையவர்களாயிருந்தும்‌, பெண்கள்‌ ஒரு காரணமுமின்றி தாங்களாகவே ஆசைப்பேோதையின்‌  காரணமாகத்‌ துரோகத்தின்‌ சேற்றிலே இறங்குகிறார்கள்‌ .
துறவறத்தைவிட அதிகப்‌ பாக்கியம்‌ அளிப்பது வேறு  எதுவுமில்லை: அறிவைவிடப்‌ பேரின்பம்‌ எதுவும்‌ கிடையாது:  திருமாலைத்‌ தவிர காப்பாற்றுவோரும்‌ இல்லை. சம்சாரத்தைக்‌  காட்டிலும்‌ பெரும்‌ எதிரி வேறு கிடையாது.”

 

ராஜாபர்த்ருஹரி உலகபந்தங்களின்‌ மீது  வெறுப்பு அடைந்தான்‌. அந்நகசேனையைத்  தண்டனைக்கு
உள்ளாக்குவதால்‌ தனக்கு ஒன்றும்‌ பிரயோஜனமில்லை என்பதை அறிந்தான். தம்பி  விக்கிரமாதித்தனிடம்‌
ராஜ்ய பாரத்தை ஓப்புவித்துவிட்டான்‌. கடைசியாக அவன்‌ துறவியாகித்‌ தவம்‌ செய்யக்‌ காட்டிற்குச்‌ சென்றான்‌.
ராஜா  பர்த்ருஹரி 300 அற்புத ஸ்லோகங்களை எழுதி இருக்கிறான் அதில் வைராக்கிய சதகம் 100, நீதி சாரம் 100  சிருங்கார சதகம் 100.  சிலவற்றை உங்களுக்கு அற்புதமான சமஸ்க்ரித ஸ்லோகங்கள்  உங்களுக்கு ஏற்கனவே பல  ஸ்லோகங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறேன். மீண்டும்  பதிவிடுகிறேன்.. இன்னொரு சுவாரஸ்யமான விஷயம். ராஜா பர்த்ருஹரி தான் பட்டினத்தாரின் சிஷ்யன் பத்திரகிரியார்.  பத்திரகிரியார் புலம்பல் அற்புதமான பெரிய  ரெண்டு வரி பாடல்கள் அதையும்  வெளியிட்டிருந்தாலும் மீண்டும் பதிவிடுகிறேன்.  சரி ஒரு முக்கியமான கேள்வி? அந்த பழம் கடைசியில் என்னாச்சு? யார் சாப்பிட்டா? யாருமே சாப்பிடலையா? அப்படீன்னா எங்கே போச்சு? தேடிக்கொண்டிருக்கிறேன். கிடைத்தால் சொல்கிறேன். 
 
Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2565

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;