
சாணக்ய நீதி – நங்கநல்லூர் J K SIVAN
வேடன் மானைப் பிடிக்க இனிமையாக பாடுவான், அதுபோல் ஒரு காரியத்தை நிறைவேற்ற வேண்டு மானால் இனிமையாக பேச வேண்டும் .
நெருப்பு, நீர், அரச குடும்பத்தில் பிறந்தவர்கள், பெரிய பதவியில் இருப்பவர்கள், முட்டாள், பாம்பு, பெண்கள் இவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
பண்டிதன் என்பவன் சூழ்நிலை அறிந்து பேசுவான், தன் சக்திக்கு தகுந்து நல்ல காரியங்கள் செய்வான், மேலும் தன் கோபத்தின் அளவையும் அறிவான்
குயில் தன் குரல் இனிமையாக மாறும் வரை பொறுமையாக இருந்து பின்பு பாடும். அது போல் ஒரு மனிதன் தன் காலம் கனியும் வரை பொறுமையாக இருந்து காரியத்தை சாதிக்க வேண்டும். ஒரு விஷயம் தெரியுமா? குயில் கூடு கட்டி முட்டை இடாது. காக்கையில் கூட்டில் முட்டையிட்டு, அது பொறிந்து , குயில் குஞ்சு வெளியே வரும். பிறகு ஓடிவிடும். அதன் குரல் அதைக் காட்டிக் கொடுத்துவிடுமே.
நாம் செய்யும் தர்மம், புண்ணிய காரியம், கிடைக்கும் மரியாதை இவற்றை நினைத்து கர்வம் அடையக் கூடாது.
”இதை அளித்தவர் ” என்று கொட்டையாக விளம்பரம் செய்து விட்டு , பையில் சிரிக்கும் போட்டோ ஒன்றை போட்டு பேர் தட்டிக் கொள்பவர்கள் நாம் .
நம் மனதில் அருகில் இருப்பவர்கள் தூரத்தில் இருந்தாலும் அருகில் உள்ளவர்கள் ஆவார்கள், ஆனால் மனதில் தூரமாக இருப்பவர்கள் அருகில் இருந்தாலும் துரமானவர்களே. நிறைய நண்பர்களை, சொந்தக்காரர்களை அப்படித்தானே பார்க்கிறீர்கள் .
முட்களிடம் இருந்து தப்பிக்க காலில் செருப்பு அணிகிறோம். முட்டாள்களிடமும் இருந்து தப்பிக்க அவர்களை அலக்ஷியம் செய்து நெருங்காமல் இருக்கவேண்டும்.
சுத்தமில்லாத ஆடைகளை அணிபவனிடம் , சுத்தமில்லா பற்களை உடையவனிடம் , கடுஞ்சொல் பேசுபவனிடம் , சூரிய உதயத்தின் பின் தூங்குபவனிடம் லக்ஷ்மி தங்க மாட்டாள். அவ்வளவு நாற்றத்தை கொஞ்சம் தூரத்தில் இருக்கும் நம்மாலே தாங்க முடியாதபோது பாவம் அவன் உள்ளே இருக்கும் லக்ஷ்மி என்ன செய்வாள், ஓடத்தானே செய்வாள்.
கையிலும் பையிலும் பணம் உள்ள வரை தான் நண்பர்கள், மனைவி, உறவினர்கள் இருப்பார்கள், பணம் போனால் நமக்கு மதிப்பில்லை. பணம் தான் நிரந்தர சொந்தக்காரன். ”காசே தான் கடவுளடா” அர்த்த முள்ள பாட்டாக தோன்றுகிறதல்லவா?
பாப செய்கையால் சம்பாதிக்கும் பணம் பத்து வருடம் கூப்பிட தாங்காது. ஏற்கனவே இருந்ததையும் காலி செய்துவிட்டு மறையும். பத்தோ இருபதோ வருஷங்கள் கம்பி எண்ண வைத்தாலும் ஆச்சர்யமில்லை.
பெரிய மனிதன் செய்யும் பெரிய தவறுகள் கூட அவனுக்கு தீமை விளைவிப்பதில்லை.நாம் தான் நிறைய பேப்பரில் பக்கம் பக்கமாக படிக்கிறோமே , ”குற்றம் நிரூபிக்கப் படவில்லையாம்” அதனால் குற்றமே செய்யவில்லையாம்” குப்பன் சுப்பனுக்கு இந்த வசதி கிடைக்குமா?, சிறிய மனிதன் செய்யும் சின்ன தவறுகள் கூட அவனுக்கு துன்பத்தை விளைவிக்கும்.
சிவபெருமான் விஷம் அருந்தினார், மற்றவர்களைக் காப்பாற்ற என்பதால் அது அவருக்கு நீலகண்டன் என்ற பெருமையை தந்தது. ராகு அமிர்தம் அருந்தினார், ஆனால் அது அவர் தலையை இழக்க செய்துவிட்டது.
சாஸ்திரங்களில் கற்க வேண்டிய விஷயம் கோடி உள்ளது, மனிதனின் ஆயுள் காலம் மிகக் குறைவானது, வாழ்க்கையில் பல தடைகள் உள்ளது , ஆதலால் நேரத்தை வீணடிக்காமல் நீரில் பாலை பிரித்து உண்ணும் அன்னப் பறவை போல், நல்ல விஷயங்களை கற்க வேண்டும். எது நல்ல விஷயம் என்பதே எல்லோருக்குமே தெரியாமல் பயனற்ற விஷ(ய)ங்களை படிக்கிறோம். முக்யமானவர்களை ,முக்ய மான விஷயங்களை அறிவதில்லை. வெள்ளைக்காரன் நமது வேதங்களைக் கற்று சென்று தப்பாக அர்த்தம் சொல்லி புஸ்தகத்தை திணித்து நாம் அதைப் படித்து நமது வேதங்களையே சரியாக புரிந்து கொள்வதில்லையே.
விருந்தாளி இருக்கும் போது தனித்து உண்பவன் பாபி ஆவான். நிறைய பேர் வீட்டிலே வந்தவனை ஹாலில் ஒரு தினத்தந்தி கொடுத்து உட்காரவைத்துவிட்டு ”கொஞ்சம் இருங்கோ சாப்பிட்டுவிட்டு வருகிறேன்”என்று சொல்வதில் வெட்கம் அடைவதில்லை.
ஒருவன் நான்கு வேதங்கள் கற்று இருந்தாலும், தன்னை உணராவிட்டால் உணவின் சுவை உணராத பாத்திரத்தை போல் ஆவான். கரண்டிக்கு சாம்பார் டேஸ்ட் தெரியுமா?. பாதம் ஹல்வா டேஸ்ட் அதை வைத்திருக்கும் டப்பாவுக்கு தெரியுமா? ஏதோ பிழைக்க அரைகுறையாக கொஞ்சம் தப்பும் தவறுமாக மந்திரங்கள் கற்று எத்தனையோ பேருக்கு கல்யாணம் நடத்தி பலபேரை மேலே அனுப்புகிற காலம் இது.
ஒரு மனிதனை வசியப் படுத்த பல விஷயங்கள் உள்ளது, அது மிகப் பெரிய மனிதனையும் கட்டுப்படுத்தும், மரங்களை துளைக்கும் ஆற்றல் இருந்தாலும் தேனி பூக்களின் தேனில் மயங்கி கிடக்கும் .
சந்தனம் துண்டு துண்டு ஆனாலும் அதன் மணம் மாறாது, கரும்பை சக்கையாக பிழிந்தாலும் அதன் இனிப்பு போகாது, யானை வளர்ந்தாலும் அதன் குறும்பு மாறாது. அது போல் மேன்மக்களின் குணம் வறுமை வந்தாலும் மாறாது.
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.




