
பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN
மஹா பெரியவா வாக்கு
இன்று அனுஷம். விடிகாலையிலேயே உடலும் உள்ளமும் சுத்தமாக மஹா பெரியவா படத்தின் முன் ஒரு சிறு தீபம், சில புஷ்பங்களை மனதார அவரை வேண்டிக்கொண்டு சாற்றி விட்டு கண்ணை மூடி அவர் திருவுருவத்தை மனக் கண் முன்னே நிறுத்தி கைகட்டி வாய் பொத்தி நிற்கும்போதே கண்டு பிடித்து விட்டார்.
”என்னடா கேள்வி பதிலா இன்னிக்கும்?”
”ஆமாம் பெரியவா, மனசிலே சில சந்தேகங்கள், புரிபடாத விஷயங்கள், உங்களை விட்டா யார் கிட்டே கேப்பேன். சொல்லுங்கோ?”
‘ம்ம்ம் கேளு. அதுக்கு முன்னாலே மறுபடியும் ஞாபகப் படுத்தறேன். நீயா முட்டி மோதி விழுந்து எழுந்து தான் balance பண்ணனும். நீயே ஆத்மானுபவத்தை தேடி அனுபவிச்சா தான் புரியும். எவ்வளவு தான் காசி ஹல்வா ன்னு அதை பத்தி வர்ணனை பண்ணினாலும் ஒரு விள்ளல் வாயிலே போட்டுண்டா தான் ருசி என்னன்னு புரியும்..”
”புரியறது பெரியவா”
”அத்வைதம் னா என்ன தெரியுமா உனக்கு?”
”அந்த பேர் தெரியும். பெரியவா. த்வி ன்னா ரெண்டு. அத்வைதம் என்றால் ரெண்டாக இல்லாதது”
”எது ரெண்டா இல்லாதது?’
”………….”
‘தெரியலையா, சொல்றேன் கேட்டுக்கோ. ப்ரம்மம் தான் ஒன்றாக இருப்பது. சத்யம். அது தான் பிரபஞ்ச காரணம். சர்வ வியாபி. ஸ்ரிஷ்டி , ஸ்திதி, லயம் எல்லாமுமாக இருப்பது. மாயை எனும் சக்தி தான் இந்த பிரபஞ்சத்தை ஒவ்வொருத்தருக்கும் வேறே மாதிரியா காட்டி காந்த சக்தி மாதிரி இழுக்கிறது. அதனாலே தான் மாயாலோகம் என்று பேர். உண்மையிலே அது இல்லாத ஒன்று. நிஜமாக இருப்பது போல் ஏமாற்றுவது. அதை புரிந்து கொண்டால் மீதி இருப்பது தான் சத்யம். உருவமில்லாமல் நாம் நினைக்கும் உருவத்தில் அதை மனதில் அனுபவிக்க முடியும். நமது சகல இன்ப துன்பங்களும் மாயையால் கவரப்பட்டு நமது புலன்கள் நமக்கு அளிக்கிறது. மனசை அது போன பக்கம் போகாமல் இழுத்து பிடித்து பகவானாகிய ஆத்மா மேல் செலுத்தி அதில் ஆனந்தம் காண்பவன் ரிஷி, ஞானி. எல்லாம் அவனே, சர்வம் ப்ரம்ம மயம் என்று புரிந்து கொண்டவன்.”
ஆதாரமான களிமண் குயவனால் பல உருவங்களை பெறுகிறது. பகவானை மாயக் குயவனார் என்று சித்தர்கள் பாடுவார்கள். அந்த மாயக் குயவனார் பண்ணும் பாண்டங்கள் தான் உலகில் ஜீவராசிகள். இதில் விசித்திரம் என்னவென்றால் பகவானே களிமண், பகவானே குயவன், பகவானே அவன் பண்ணும் பாண்டங்கள் எனும் விசேஷ தத்வம்.அப்போது தான் சர்வம்ப்ரம்ம மயம் பிடிபடும் .புரியும்.
”பெரியவா அடிக்கடி எந்த மதத்திலும் கடவுள் ரெண்டில்லை என்று சொல்வீர்களே..”
”கடவுள் என்பது ஒரே ஒரு சக்தி , ஒரே சத்யம் தான். ரெண்டாவது சக்தி வேறே இல்லை என்பதும் அவரே ரெண்டு மூன்று கடவுளாக தோற்றம் அளிக்கிறதும் வேறே. தன்னையே பிரிச்சுண்டு ஒவ்வொரு காரியத்தை செய்யும் போது த்ரிமூர்த்தியாக வழிபடுகிறோம். அத்வைதத்தை சரியா புரிஞ்சுக்காமல் அதை விமர்சிப்பது ரொம்ப தவறு.” ஆத்மாவையே தெரியாதவன், நினைக்காதவன் பல பிறவி எடுத்த பிறகு தான் அத்வைதத்தை உணர முடியும். ‘அஸ்தி ‘ (இருக்கிறது) என்று ஒப்புக்கொள்பவன் தான் ஆஸ்திகன். ”நாஸ்தி’ (இல்லை) என்று நம்புபவன் நாஸ்திகன். இமயமலை இருக்கிறதா இல்லையா? இருக்கிறது என்று பார்க்காதவன் கூட சொல்வான். தான் பார்த்ததில்லை அதைப் பற்றி தெரியாது என்பவன் அது இல்லை என்று சொல்வானா? அது போல் தான் கடவுளின் ப்ரம்ம ஸ்வரூபத்தை உணர்வது”
”பெரியவா, நாஸ்திக வாதம்….என்பதின் ஆதாரம் என்ன?
.
”கடவுள் இல்லை, அடுத்த பிறவி என்பது இல்லை, பல லோகங்கள் என்பது இல்லை…என மறுப்பது எதையோ ஒன்றை மனதில் ஆதாரமாக வைத்துக்கொண்டு அது கிடையாது என்று சொல்வது. எது ஆதாரமாக மனதில்
உள்ளதோ அதையே சரியாக தெரியாத நிலை”
கடவுள் மீது பூரண நம்பிக்கை இருந்த காலத்தில் நீதிக்கும் நேர்மைக்கும், நியாயத்துக்கு கட்டுப்பட்டு நடந்தார்கள். மனா சாக்ஷியை மதித்தார்கள். பொய் சொல்ல கூசினார்கள். அதனால் தான் அப்போது கோர்ட், கேஸ், போலீஸ் பத்திரப்பதிவு ஆபிஸ் அதிகம் தேவைப்படவில்லை. ஆஸ்திகத்தை வளர்ப்பது ஒழுக்கம், தர்மம் வளர உதவும். மனசாக்ஷியை அவமதிப்பதால் தான் பொய் , சூது, ஏமாற்றுவது, கொலை, கொள்ளை போன்ற சமுதாயத்துக்கு எதிரான சக்திகள் வளர்கிறது.
தச்சுவேலை, வீடு கட்டும் மேஸ்திரி வேலை, எலெட்ரிஷியின் வேலைக்கு கூட ஆதாரமாக ஒரு கல்வி, பயிற்சி கற்றுக் கொடுக்க ஒரு குரு வேண்டும். எனவே அத்வைத சிந்தாந்தம் முழுமையாக அறிய ஒரு தக்க குருவின் உபதேசம், வழி நடத்தல் வேண்டும்.
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



