KAVERI RIVER SIDE NARASIMMAN J K SIVAN

திருச்சி ஆற்றழகர் நரசிங்க பெருமாள் தரிசனம். – நங்கநல்லூர் J K SIVAN
நரசிம்மர் கோபமாக நம்மை தண்டிக்கும் கடவுள் இல்லவே இல்லை. அருள் நிறைந்தவர். நிறைய வீடுகளில் நரசிம்மனை பார்க்க முடியாது. உண்மை யில் அவர் கோபமாக இருந்தது கொடியவர்கள் மேல் தான். சிறு குழந்தை பிரகலாதனுக்கு அருள்வதற்காக, அவனை பாதுகாக்க அதே நேரம் மிகக் கொடிய ஹிரண்யனை கடினமான அவன் பெற்ற வரம் வரம்பு மீறாமல் அதன்படியே அவனை வதம் செய்வதற்கும் அவர் பட்ட பாடு அவரை நமக்கு கோபாக்னி நிறைந்தவராக காட்டுகிறது.
கோவில்களுக்கு செல்லும்போது அந்தந்த கோவில் களைப் பற்றி ஓரளவாவது விசேஷ விஷயங்களைத் தெரிந்து கொண்டு செல்லும்போது நம்மால் ரசித்து வழிபட முடிகிறது. ஸ்தல விசேஷம், புராண சரித்திரம், பகவானின் மஹாத்மியம் தெரிந்தால் நமனு முன் னோர்கள் போல் நாமும் பலனடைய முடியும்.
எனக்குத் தெரியாத மூன்று நரசிம்மர்களை நேற்று ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்மன் சொன்னபோது நான் அடைந்த சந்தோஷத்தை எழுத்தில் வெளிப்படுத்த முடியவில்லை. யார் அந்த மூன்று நரசிம்மர்கள்?
நரசிம்ம பிரபத்தி ஸ்லோகம் ஒன்றில் “தாய், தந்தை, சகோதரன் நண்பன் அறிவு செல்வம் எஜமான் என பல ரூபங்களில் இக பரலோகம் பூரா நரசிம்மனே உள்ளான். நரசிம்மனைக் காட்டிலும் உயர்ந்தவர் ஒருவரும் இல்லை. ஆகவே, நரசிம்மனே உன்னைச் சரணடைகிறேன்” என்கிறது.
திருச்சி ஸ்ரீ ரங்கத்தில் மேட்டழகிய சிங்கர், காட்டழகிய சிங்கர், ஆற்றழகிய சிங்கர் என மூன்று நரசிங்கங்கள் இருப்பதை அறியாமல் இன்றுவரை தரிசனம் நான் எப்படி தரிசனம் பெற்றிருக்க இயலும்?
ஆற்றழகிய சிங்கர் பூமிக்கு அடியில் இருந்து வந்தவர். திருச்சி திருவெறும்பூருக்கு அருகிலுள்ள ஒரு சிறு கிராமம் தான் சோழமாதேவி. ராஜராஜ சோழன் மனைவி பெயரில் ராஜா அமைத்த ஆலயம். ராஜராஜ விண்ணகரம் என்றும் பெருமாள் கோவில். வந்த பாண்டியர்களும் குறுநில மன்னர்களும் தமிழகத்தைப் பல ராஜ்யங்களாக பிரித்து ஆண்ட காலத்தில் இந்த ஆலயம் சிதிலமாகி மண்ணில் புதைந்தது.
பல நூற்றாண்டுகளுக்கு பிறகு ஒருநாள் ஒரு விவசாயி கோயில் இந்த இடத்தை தோண்டியபோது லக்ஷ்மி நரசிம்மர் .வெளியே வந்தார். ஆச்சர்யத்தில் ஊரே கூடியபோது கூட்டத்திலிருந்து ஒரு சிங்கத்தின் கர்ஜனை கேட்டது. ஒருவருக்கு சுவாமி வந்தது. ”நான் காவிரியின் வடகரையில் காட்டழகிய சிங்கராக தோன்றி விலங்குகளிடமிருந்து மக்களைக் காப்பது போல் துஷ்டர்களிடமிருந்து காப்பாற்ற, தென்கரையில் கோவில் கொள்ளப் போகிறேன்.”என்று அருள்வாக்கு கிடைத்தது.
ஊர்மக்கள் பிறகு சும்மா இருப்பார்களா? நரசிம்ம மூர்த்தியை காவிரி தென்கரையில் அமைந்திருந்த மண்டபத்துக்குக் கொண்டு சென்று பிரதிஷ்டை பண்ணி தினமும் வழிபாடுகள் குறைவின்றி நடந்தன.
ஆற்றழகிய சிங்கரின் அருளால் மாதம் மும்மாரி மழை பொழிந்து நாட்டில் சுபிக்ஷம். சிந்தாமணி என்ற பெயர் நிலைத்தது.
விஜயநகர சாம்ராஜ்ய ராஜா வீர பூபதி உடையார் ஆற்றங்கரையில் இருந்த ஓடைக்கரை நரசிம்மர் ஆலயத்தை சீரமைத்தார். ஓடத்தில் செல்வோர் நரசிம்மரையும் நெற்றிக்கண் அனுமனையும் வணங்கி விட்டு இக்கரை அல்லது அக்கரையில் சென்று தரிசனம் செய்வது என்பது வழக்கமானது. காவிரிக்கரையில் இருந்த நரசிம்மன் ஆற்றழகிய சிங்கர் ஆனார். வெள்ளம் வந்தால் காப்பாற்றி கரை சேர்ப்பவர். ஸ்ரீஆற்றழகிய சிங்கப் பெருமாள் மடியில் மஹா லக்ஷ்மி.
திருச்சி சத்திரம் பஸ் நிலையத்திலிருந்து 10 நிமிஷம் நடந்தால் ஆற்றழகிய சிங்கரை தரிசிக்கலாம்.
சிந்தாமணி அண்ணா சிலையிலிருந்து ஸ்ரீரங்கம் திருவானைக்கா நோக்கி வண்டிகளில் பயணம் செய்வோர், காவிரி புதுப் பாலத்தின் மேல் ஏறாமல் சற்று முன்பே, வலது புறமாக கீழிறங்கி திரும்பிச் செல்லும் தனிவழிப்பாதையில் 200 அடிகள் சென்றால் உடனடியாக இந்த நரசிம்மரை தரிசிக்கலாம்
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் கடவுள் ”ஸ்ரீமந் நாராயணன்” என பிரஹலாதன் அவனுடைய அப்பாவுக்கு கூறியதை நிஜமாக்கினவர் நரசிம்மன். குழந்தை பிரகலாதனின் தீவிர பக்திக்கும், திட நம்பிக்கைக்கும் கட்டுப்பட்டு மஹா விஷ்ணு எடுத்த அவதாரம் தானே நரசிம்மன்.
கோயிலின் பின்புறக் கதவைத் திறந்து ஒரு ஐந்து படி இறங்கினால் போதும், ஹோ வென்று பெரு மகிழ்ச் சியுடன் பொங்கிப் பெருகிவரும் காவிரியில் நாம் இறங்கிப் புனித நீராடிட முடியும். காவிரி ஆற்றினால் இந்த ஸ்ரீ நரசிம்ஹர் அழகாகத் தெரிகிறாரா அல்லது இந்த நரசிம்ஹரின் அழகினால் காவிரி ஆறு அழகாகத் தோன்றுகிறதா? அவர் பெயரே அதனால் தானே ஸ்ரீ ஆற்றழகிய சிங்கப்பெருமாள்!.
மூலவர் ஸ்ரீ ஆற்றழகிய சிங்கப்பெருமாள் மடியில் அம்பாளை அமர்த்திக்கொண்டு கிழக்கு நோக்கி சேவை சாதிக்கிறார்.
மற்றும் கருடாழ்வார், நம்மாழ்வார், பெருமாள் ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீ இராமானுஜர்+மணவாள மாமுனி சந்நதிகள் உள்ளன .
மூலவரை பிரதக்ஷணமாகச் சுற்றி வரும் பாதையில் பல்வேறு ஊர்களில் உள்ள ஸ்ரீ நரசிம்ஹரை பெரிய பெரிய படங்களாக வைத்துள்ளனர்:
சோளிங்கர்,நாமக்கல்,நாமக்கல்,ஓடத்துறை.ஒத்தக்கடை, ஆனைமலை, மதுரை ஸ்ரீயோக நரசிம்ஹர், சிங்கிரிக்குடி, ஸ்ரீகாட்டழகிய சிங்கர்,பரிக்கல், தாடிக்கொம்பு [திண்டுக்கல்], ஸ்ரீ பிரஹலாத நரசிம்மர்
– பெங்களூரூ,ஸ்ரீசுந்தரலக்ஷ்மி நரசிம்ஹர் -ஆகியோர் படங்களை தரிசிக்கலாம்.திருச்சி ஆற்றழகர் நரசிங்க பெருமாள் தரிசனம். – நங்கநல்லூர் J K SIVAN

– பெங்களூரூ,ஸ்ரீசுந்தரலக்ஷ்மி நரசிம்ஹர் -ஆகியோர் படங்களை தரிசிக்கலாம்.

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2561

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;