
அஷ்ட பைரவர்கள் – நங்கநல்லூர் J K SIVAN
மகா விஷ்ணு அலங்காரப்ரியர். பரமேஸ்வரன் அபிஷேகப்பிரியர். சிவாலயங்களில் விசேஷ நாட்களில் விபூதி , சந்தனம், பன்னீர், பழங்கள், கரும்பு சாறு, தயிர், பால், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், என்று சதா ஜலதாரையுடன் இருக்கும் சிவனுக்கு அபிஷேகம் செய்தால், அவர் மூர்த்தி குளிர்ந்து மனம் நமக்கு குளிரும். வாரிக் கொடுக்கும் வள்ளல். வரம் தருவதில் அவருக்கு இணை எவரும் இல்லை.
சிவனின் அம்சமான பைரவருக்கு சந்தன அபிஷேகம் மிகவும் உகந்தது. புனுகு, அரகஜா, ஜவ்வாது, கஸ்தூரி, கோரோசனை, குங்குமப்பூ. பச்சை கற்பூரம் ஆகியவையும் அபிஷேகத்தில் சேர்த்துக்கொள்வார்கள்.
எல்லா அஷ்டமிகளிலும் பைரவருக்காக விரதம் இருப்பார்கள். செவ்வாய்க்கிழமை அன்று வரும் அஷ்டமி விசேஷம்.
காசி என்றாலே பைரவ க்ஷேத்ரம் என்று பெயர் பெற்றது. வாரணாசியில் எட்டு பைரவர்களின் கோவில்கள் உள்ளன. அஷ்ட பைரவர்கள் என்று அவர்களுக்கு பெயர். காவல் தெய்வங்களாக பாதுகாப்பவர்கள் வீட்டைக் காக்கும் நாய்க்கு கூட பைரவன் என்று பெயர் உண்டு. பைரவர் வாஹனம் நாய்.
வாரணாசியில் கோயில் கொண்ட அஷ்ட பைரவர்கள்: அஷ்டாங்க பைரவர், பீஷண பைரவர், சந்த் பைரவர்,கபால பைரவர் க்ரோதன பைரவர், ருரு பைரவர், ஸம்ஹார பைரவர், உன்மத்த பைரவர். சிவ மஹா புராணம் பரமேஸ்வரன் புனிதமான வாரணாசியை (காசி) கால பைரவரிடம் ஒப்படைத்து விட்டு ” இனி இங்கு நீயே என்றும் ஆட்சி புரியவேண்டும். பக்த கோடிகளை பாதுகாக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார் என்கிறது.
காசியில் மரணம் அடைந்தவர்களின் பாபங்களை கால பைரவர் நீக்குகிறார் என்று திட நம்பிக்கை பக்தர்
களுக்கு உண்டு. காசியில் எதிர்மறை , தீய சக்திகள் அண்டாமல் பாதுகாப்பவர்கள். பைரவர்கள் நம்மை பாபங்களிலிருந்து ரக்ஷிப்பவர்கள். காசியை ஆள்பவர் காலபைரவர் என்பதால் அவரை தரிசிக்காமல் காசி யாத்திரை நிறைவு பெறாது.
ஸ்ரீ பதுக்க பைரவர். காலபைரவரின் குழந்தை அம்சம். காசி விஸ்வநாதனை வணங்குபவர்கள் முதலில் இந்த பைரவரை தான் தரிசித்து தொழுவார்கள்.
சிவ மஹா புராணம் இந்த பைரவர் ஒரு சிறந்த ப்ராமண சிவ பக்தனின் குழந்தை. அந்த பிராமணனின் பக்தியை மெச்சி காசி விஸ்வநாதர் ”என்னை யார் தரிசிக்க காசி வருகி றார்களோ அவர்கள் முதலில் உன் குழந்தையை தரிசித்து வணங்குவார்கள் ” என்று வரம் தந்ததால் இது வழக்கம் என்கிறது புராணம். குழந்தை வடிவான இந்த பைரவரை வணங்கி பக்தர்கள் பைரவ மந்திரத்தை உச்சரித்தால், சகல சம்பத்தும் சந்தோஷமும் சகல கார்ய சித்தியும் பைரவர் அருளால் அடைவார்கள் என்கிறது புராணமும் நம்பிக்கையும்.
ஸ்ரீ ருரு பைரவர் முக்கண்ணன். பைரவரின் இளம்பருவ உருவம். இவர் ஒரு குரு பைரவர், ஆனந்த பைரவர் நமக்கு ஞானம் தருபவர். வாழ்க்கையில் சௌபாக்கியம் வெற்றி தருபவர். வெண்ணிற வஸ்திரம், ஜொலிக்கும் ஆபரணங்கள், அவரது ஞான சக்தியை உயர்த்திக் காட்டுகிறது. ருரு பைரவர் தெற்கு வடக்கு திசைகளை ரக்ஷிப்பவர். வாரணாசியில் ருரு பைரவர் ஆலயம் ஹனுமான் காட் GHAT டில் உள்ளது.
ஸ்ரீ சந்த் பைரவரும் முக்கண்ணன் தான். பைரவரின் இளம் பருவ உருவம். நீல நிற மேனி கொண்டவர். அதீத சக்தி கொண்டவர். எதிரிகளை நிர்மூலம் செய்யும் சக்தி அளிப்பவர். தெற்கு திசையில் நமக்கு பாதுகாப்பு அளிப்பவர். காசியில் துர்கா குண்டம் எனும் இடத்தில் உலா துர்கா தேவி ஆலயத்தில் அவரை தரிசிக்கலாம்.
ஸ்ரீ அசிதாங்க பைரவர் கூட முக்கண்ணர் தான். பைரவரின் அமைதியான தயாள ஸ்வரூபம். பக்தர்களின் பாபங்களை, சாபங்களை நீக்குபவர். ஒளிமயமான தேக காந்தி உடைய பைரவர் இவர். திரிசூலம், டமருகம், வாள் ஆகிய வற்றை ஏந்தியவர். ஆக்க பூர்வ எண்ணங்கள், சக்தியை அளிப்பவர். நமது முயற்சிகளில் வெற்றி தேடித்தருபவர். கிழக்கு பக்கத்துக்கு பாதுகாவலர் இவர். காசியில் இவரை மைடகின் எனும் பகுதியில், மகா ம்ருத்யுஞ்ஜயர் ஆலயம் அருகே, வ்ருத்த காளேஸ்வர் எனும் ஸ்தலத்தில் தரிசிக்கலாம்.
ஸ்ரீ க்ரோதன பைரவர் மற்றொரு முக்கண்ணர். ஐவரும் பைரவரின் இளைய உருவம். நீல நிற மேனி. இவரை ஆதி பைரவர் என்பார்கள். நமக்கு பலத்தையும், தைரியத்தையும் அளிப்பவர். இது போதுமே வாழ்க்கையில் முன்னேறுவதற்கு. இவரை புகை மண்டலமாக ஆலயத்தில் தரிசிக்கலாம். தென்மேற்கு திசைக்கு காவலர். வாளும் கேடயமும் கைகளில் ஏந்திய உருவம். நமக்கு வரும் சகல இடையூறுகளையும் நீக்குபவர். காசியில் இந்த பைரவரை ஸ்ரீ பதுக்க பைரவர் ஆலயத்தில் தரிசிக்கலாம். காமாச்ச எனும் ஸ்தலத்தில் உள்ளது.
காசியில் ஸ்ரீ கபால பைரவர் த்ரிநேத்ரி. முக்கண்ணர். பைரவரின் இளம்பருவ உருவம். மஞ்சள் நிற மேனி அழகர். பைரவரின் வஜ்ராயுத அம்சம். கையில் வாள், தீர்த்த பாத்திரம் ஏந்தியவர். இந்திராணி சக்தி குரு. யானை வாஹனர். பக்தர்களின் செயல்களில் காரியங்களில் முழுமனதோடும், நேர்மை, நல்லொழுக்கத் தோடும் ஈடுபட அருள்பவர்.வட மேற்கு திசைக்கு அதிபதி. இந்த ஆலயம் ஆலைப்பூர் என்னும் ஸ்தலத்தில் உள்ளது.
ஸ்ரீ ஸம்ஹார பைரவர் கூட முக்கண்ணர் தான். இளமையான உருவம். பத்து கரங்கள் கொண்டவர். சர்ப்பங்களை மாலையாக அணிபவர். பயத்தை போக்குபவர்.எட்டு வித செல்வங்களை அளிப்பவர். பொன்னிற மேனி கொண்டவர். நாயை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் இராகு கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள்.இவருடைய சக்தி வடிவமாக சப்தகன்னி
களில் ஒருத்தியான சாமுண்டி விளங்குகிறாள்.கரங்களில் கதாயுதம், பாசம், அங்குசம், கபாலம், டமருகம், திரிசூலம், வாள் , ஏந்தியவர். பக்தர்களின் பாபங்களை போக்குபவர். வட கிழக்கு திசைக்கு அதிபதி. சம்ஹார பைரவரை காசியில் கை காட், GHAT அருகே பதான் தர்வாஜா என்ற ஸ்தலத்தில் தரிசிக்கலாம்.
உன்மத்த பைரவர் பற்றியும் சொல்கிறேன். இவரும் முக்கண்ணர். அமைதியானவர். தேஹ காந்தி உடையவர். வாள் , கபாலம், கதை, கேடயம் தாங்கியவர். ஹம்ஸ வாஹனர். உன்மத்த பைரவர் ஆலயம் தியோரா கிராமத்தில் இருக்கிறது. காசியிலிருந்து 10 கி.மீ. தூரம்.
ஸ்ரீ பீஷண பைரவரையும் முக்கண்ணராக, இளம் பருவத்தினராக செந்நிற மேனியனாக தரிசிக்கலாம். ஐவரும் ஆயுதம் தாங்கி தான். சாபங்களை நீக்குபவர். வட திசையில் ரக்ஷிப்பவர். வாரணாசியில் இந்த ஆலயத்தை ஜேஷ்டேஸ்வரர் ஆலயம் அருகே சென்று அடையாளம்.
நாகப்பட்டினம் ஜில்லாவில் சீர்காழியில் சட்டநாதருடன் எட்டு பைரவர்கள் உண்டு. திருச்சி உறையூர் பாதையில் ஜெயகாளிகாம்பாள் கோயிலில் அஷ்ட பைரவர்கள் பைரவிகள் வாகனங்களோடு. மற்றும் வாகனங்களுடன் காட்சியளிக்கின்றனர்.
கோயம்புத்தூர் நஞசுண்டாபுரத்தில் காயாந்தஸ்தானம் மயானம் அருகே எட்டடி உயர காலபைரவர் வீற்றிருக்கிறாராம். சென்று தரிசிக்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை..
காஞ்சிபுரம் திருமாகறல் எனும் கிராமத்தில் அர்த்தநாரி பைரவர் இருக்கிறார். .
சில வருஷங்களுக்கு முன்பு, என் நண்பர் அரும்பாக்கம் ஸ்ரீனிவாசனோடு அவருடைய காரில் விழுப்புரம் ,சின்னசேலம் அருகில் ஆறகளுர் என்ற பழைய கிராமத்தில் ஒரு அருமையான சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த ஆயிர வருஷ கோவில் ஒன்றில் பெரியநாயகி சமேத காமநாதீசுவரரை தரிசனம் செய்யும்போது அங்கே அற்புதமான அஷ்ட பைரவர்கள் சந்நிதி இருந்ததால் அவர்களை வணங்கி வேண்டிக் கொண்டது ஞாபகத்துக்கு வருகிறது. காசிக்கு போகாமலேயே அஷ்டபைரவர்களை சந்தித்த பாக்கியசாலி அல்லவா நான்!
காலம் யாருக்காகவும் காத்து நிற்பதல்ல. ஓடிக்கொண்டே இருப்பதே காலம். அதன் ஒட்டத்தில் நாமும் கடத்திச் செல்லப்படுகிறோம். ஒவ்வொரு நிமிஷத்தையும் நாம் அதனால்நமது உலக வாழ்வை பயனுள்ளதாக மாற்றிக்கொள்ள காலபைரவரை வணங்குகிறோம். கால பைரவர் என்று நாம் சொல்லும்போதே அவர் காலத்தை கடக்க நமக்கு வழி காட்டுபவர் என்ற அர்த்தம் கிடைக்கிறது. காலத்தை வெல்லும சக்தி கொண்டவர் கால பைரவர்.. அவர் சிவ பெருமானே. காலனுக்கே காலனானவர் அல்லவா.
காலபைரவரை க்ஷேத்திர பாலகன் என்று சொல்வதுண்டு. கோவில்களை மூடுவதற்கு முன்பு சாவிகளை அவர் ந்நிதியில் வைத்து விட்டு தான் கதவு சாத்துவது வழக்கம். அதேபோல் காலை அவர் சந்நிதியில் வைத்து சாவி வாங்கிக்கொண்டு தான் கதவுகளை திறப்பார்கள்.
நமது முன்னோர்கள் எங்கு பயணம் போகும் போதும் இரவுப் பிரயாணம் செல்லும்போதும் நிறைய முந்திரிபருப்புகளை மாலையாக்கி காலை பைரவருக்கு அணிவித்து வணங்குவார்கள். ஜோதி விளக்குகள் ஏற்றுவார்கள். காலபைரவா, எங்கள் பயணம் நிர்பயமாக நிறைவேற உன் அருள் வேண்டும் என்று வேண்டிக் கொள்வார்கள்.
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.

