

விஞ்ஞான நௌகா — நங்கநல்லூர் J K SIVAN
ஆதி சங்கரரின் ஒரு அஷ்டகம்.
அநேகர் அறியாத அற்புத ஸ்தோத்ரம் இது. ஆதி சங்கரரின் 8 ப்ரம்ம தத்வ ஸ்லோகங்கள். அஹம் ப்ரம்மாஸ்மி – நானே பிரம்மமாக இருக்கிறேன்- என்ற மஹா வாக்கியத்தை அடிப்படையாகக் கொண்டவை.
तपोयज्ञदानादिभिः शुद्धबुद्धि- र्विरक्तो नृपादेः पदे तुच्छबुद्ध्या ।परित्यज्य सर्वं यदाप्नोति तत्त्वं परं ब्रह्म नित्यं तदेवाहमस्मि ॥ १॥
Tapo yajnadaanaadibhissudhabudhir-Virakto nripaadau pade tuchchabudhya Parityajya Sarvam Yadaapnoti Tatvam Param Brahma nityam Tadevaaham asmi
தபோ யஜ்ஞாதநாதிபிஸ்ஸுதபுதிர்- விரக்தோ நৃபாদௌ படே துச்சবுধ்யா பரித்யஜ்ய ஸர்வம் யதாப்நோதி தத்வம் பரம் பிரம்ம நித்யம் ததேவாஹம் அஸ்மி ., 1
மனம் எப்போது பரிசுத்தமாகும்? தியானத்தால் மட்டுமே. பகவான் மீது முழு மனதும் ஈடுபட்டு பூரணமாக தன்னை மறைந்த நிலையில் மனம் ஈடுபடுவது தான் தியானம். தியானம், தியாகம், தானம் ஆகியவற்றால் நம் மனதைத் தூய்மைப்படுத்தி ஜனக மஹாராஜா, மாதிரி, நாமும் தாமரை மலர் தண்ணீராக, விரக்தியோடு, அனைத்தையும் தியாகம் செய்ய முடியுமானால், நாமே பிரம்மம் என்ற தெய்வீக சக்தி பெறலாம். உலக சுகங்களில் விருப்பின்றி, பற்றின்றி, இருக்க நம் எல்லோராலும் முடியாதே. வைராக்கியம் மனதில் இருந்தால் தான் இது சாத்தியம் . அப்போது தான் நாமும் ஆதி சங்கரராகலாம். ப்ரம்மம் புரியும்.
2. दयालुं गुरुं ब्रह्मनिष्ठं प्रशान्तं समाराध्य मत्या विचार्य स्वरूपम् । यदाप्नोति तत्त्वं निदिध्यास विद्वान्- परं ब्रह्म नित्यं तदेवाहमस्मि ॥ २॥
Dayaalum Gurum Brahmanishtam Prasantham Samaraadhya Bhaktyaa vichaarya swaroopam Yadaapnoti Tatvam Nididhyaasya vidvaan Param Brahma nityam Tadevaaham asmi
தயாளும் குரும் பிரம்மநிஷ்டம் பிரசாந்தம் ஸமாராধ்யா ভக்த்யா விசார்ய ஸ்வரூபம் ॥
யদாப்நோதி தத்வம் நிদிধ்யஸ்ய விদ்வாந் பரம் ப்ரஹ்ம நித்யம் ததேவாஹம் அஸ்மி., 2
பிரம்மத்தை அறிவது தான் ஞானத்தின் உச்சி. எளிதில் எல்லோராலும் இதை அடையமுடியாது. நிறைய ரூபாய் கொடுத்து ஸ்பெஷல் டிக்கெட் இதற்கு வாங்க வழியில்லை. ஒரு சரியான குரு வேண்டும். அவர் வழிநடத்தி அவர் அறிவுரைப்படி பிரம்மத்தைத் தேடும் வைராக்கியமும், அமைதியும் பொறுமையும் அவசியம். முழு மனதோடு, பக்தியோடு குருவை வணங்கி அவர் கருணையால் தன்னை ஆராய்ந்து,மீண்டும் மீண்டும் ஆழ்ந்த தியானத்திற்குப் பிறகு தான் ஒரு பக்தன் பிரம்மத்தை உணர முடியும். அப்புறம் அவனுக்கு ”நாமே பிரம்மம் என்ற தெய்வீக மற்றும் வற்றாத கருத்து” நெஞ்சில் ஆழமாக பதிகிறது.
3. यदानन्दरूपं प्रकाशस्वरूपं निरस्तप्रपञ्चं परिच्छेदहीनम् । अहम्ब्रह्मवृत्त्यैकगम्यं तुरीयं परं ब्रह्म नित्यं तदेवाहमस्मि ॥ ३॥
Yad Aananda roopam prakasa swaroopam Nirastha prapancham parichcheda soonyam Aham Brahmavruthyaikagamyam tureeyam Param Brahma nityam Tadevaaham asmi. 3
யத் ஆநந்த ரூபம் பிரகாச ஸ்வரூபம் நிரஸ்த ப்ரபஞ்சம் பரிச்சேத சூன்யம் அஹம் ப்3ரஹ்மவ்ருʼத்யை ககாம்யம் துரீயம் பரம் பிரம்ம நித்யம் ததேவாஹம் அஸ்மி., 3
”தேஜஸ், ஓஜஸ்” என்கிறார்களே அது என்ன ஸார்? தேஜஸ் என்பது புறத்தில் , வெளியே முகத்தில் காணும் ஒரு ஒளி. எவன் உள்ளே சுத்தமாக இருக்கிறானோ அந்த பளபளப்பு வெளியே அவன் முகத்திலும் பிரதிபலிக்கும். அகத்தின் அழகு முகத்தில் என்று அதனால் தான் சொல்கிறோம். ஓஜஸ் என்பது ஆத்ம ஒளி. பார்க்க முடியாது. வெளியில் அதை தேஜஸ் அதிகமாக தெரிவதன் மூலம் அறியலாம்.
ஞானி சதா சர்வ காலமும் பேரின்பத்தில் நிறைந்த வடிவத்தைக் கொண்டவன். உலக ஈர்ப்புகளை ஒதுக்கி தன்னில் தானாகிய ஆத்மாவை அனுபவிப்பவன். நம்மைப்போல் இல்லாதவன் . நாம் காணும் உலகை துறந்தவன். ஆத்ம ஞான தாகம் எப்போதும் கொண்டவன். பிரம்மத்தில் திளைப்பவன்.
4. यदज्ञानतो भाति विश्वं समस्तं विनष्टं च सद्यो यदात्मप्रबोधे । मनोवागतीतं विशुद्धं विमुक्तं परं ब्रह्म नित्यं तदेवाहमस्मि ॥ ४॥
Yad ajnanato bhati viswam samastham Vinashtam cha sadyo yadaatma prabodha Manovaagatheetham visudham vimuktam Param Brahma nityam tadevaaham asmi. 4
யத் அஜ்ஞாநதோ பதி விஸ்வம் ஸமஸ்தம் விநாஷ்டம் ச ஸদ்யோ யদாத்மா ப்ரபோধா ॥
மநோவாগதீதம் விஶுதம் விமுக்தம் பரம் ப்ரஹ்ம நித்யம் ததேவாஹம் அஸ்மி., 4
இதுவரை நானோ நீங்களோ எப்போதாவது ஒரு நாள் ‘நான் தான் ப்ரம்மம்’ என்று சொல்கிறோமா? ப்ரம்ம ஹத்தி என்று தான் மற்றவர்களை கூசாமல் திட்டுகிறோம். நாம் சொல்லிக்கொள்ளாவிட்டாலும் உண்மை
யில் நாம் தான் ப்ரம்மம். நாம் தான் ஆத்மா. எத்தனை படித்தாலும், எவ்வளவு தரம் கேட்டாலும் எழுதினாலும் பாடினாலும் போதவே போதாது. தனிமையில் அமர்ந்து ஆத்ம விசாரம் பண்ணினால் ”நான்” உண்மையிலே யே யார் ? என்று ஆராய்ந்தால் தான் கொஞ்சம் முன்னேறமுடியும். ரமணர் நமக்கு அவர் இப்படி அனுபவத்தில் கண்டதை அழகாக பலமுறை சொன்னவர்.
உலகம் மாயையால் சூழப்பட்டது. பல பிறவிகளை எடுத்தும் நமக்கு இது ஏனோ இன்னும் புரியவில்லை. அறிவு போதவில்லை. இந்த அஞ்ஞானம், அறியாமை நம்மை ஆத்ம ஞானம் பெற முடியாமல் தடுக்கிறது. மனம் வாக்கு காயம் மூன்றையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்து, புலன்களுக்கு அப்பாற்பட்ட சுதந்திரத்தை நாம் இன்னும் அனுபவிக்கவில்லை. தெய்வீகம் அடைய முடிந்தால் தான் நாம் தெய்வமாகலாம். மனிதன் என்பவன் தெய்வமாகலாம் என்பது ரொம்ப ரொம்ப சாத்தியம். நிச்சயம். ஆனால் வெறுமே PBS மாதிரி பாடினால் தெய்வம் ஆக முடியாது. கடினமாக முயன்று வைராக்கியத்தோடு ஆத்ம வேட்கையில் ஈடுபட வேண்டும்.
5. निषेधे कृते नेति नेतीति वाक्यैः समाधिस्थितानां यदाभाति पूर्णम् । अवस्थात्रयातीतमद्वैतमेकं परं ब्रह्म नित्यं तदेवाहमस्मि ॥ ५॥
Nishedhe krute neti neteeti vakyaih Samadhisthithaanaam yadaabhaathi poornam Avasthaathrayaatheetham advaitam ekam Param Brahma nityam tadevaaham asmi. 5
நிஷேதே க்ருதே நேதி நீதீதி வாக்யைঃ ஸமாதிஸ்থிதாநாம் யদாভாதி பூர்ணம் ॥ அவஸ்தாத்ரயாதீதம் அத்வைதம் ஏகம் பரம் ப்ரஹ்ம நித்யம் ததேவாஹம் அஸ்மி., 5
“அது இல்லை”, “இது இல்லை” என்ற வார்த்தைகள் தான் நம்மிடமிருந்து ஒவ்வொரு நாளும் வெளிப் படுகிறது. .எதனால்? நமக்கு எதிர்பார்ப்பு நிறைய இருக்கிறது.அது நிறைவேற வழியில்லை. ஆகவே ஏமாற்றம், மற்றவர்களிடம் அது இருப்பதை பார்க்கும்போது பொறாமை,கோபம் ஆத்திரம் எல்லாம் வருகிறது .நமது மன அமைதியை தின்றுவிடுகிறது.
ஞானிக்கு இதே வார்த்தைகள் வேறு அர்த்தத்தில் தோன்றுகிறது. இது இல்லை, இது இல்லை, என ஓவ்வொன்
றாக விட்டு விடுபவன். ‘தான் தேடுவது வேறே’ என்று விலக்குபவன். தியானத்தில் நன்றியோடு இறைவனை அணுகுபவன். முக்தன் சமாதி நிலையில் நுழைந்து முழுவதுமாக ஞானப்ரகாசமாக திகழ்கிறான். விழிப்பு,
கனவு, ஆழ்ந்த உறக்க நிலைகளுக்கு அப்பாற்பட்ட நான்காவது நிலையாகிய துரீயத்தில் இருப்பவன் ப்ரம்ம ஞானி. தானே ப்ரம்மமானவன். நமக்கும் அந்த நாள் எந்த பிறவியிலாவது ஒரு நாள் வந்திடுமா?
6.यदानन्दलेशैः समानन्दि विश्वं यदाभाति सत्त्वे तदाभाति सर्वम् । यदालोकने रूपमन्यत्समस्तं परं ब्रह्म नित्यं तदेवाहमस्मि ॥ ६॥
Yad Aanandalesaih samanandi viswam Yadaa bhaati satve sada bhati sarvam Yadaalochite heyam anyat samastham Param Brahma nityam tadevaaham asmi. 6
யத் ஆநந்தலேசை : ஸமாநந்தி விஸ்வம் யதா பதி ஸத்வே ஸதா பதி ஸர்வம் யதாலோசிதே ஹேயம் அந்யத் ஸமஸ்தம் பரம் பிரம்ம நித்யம் ததேவாஹம் அஸ்மி., 6
இந்த பிரபஞ்சத்தை எது ஆனந்த மயமாக்குகிறது? ப்ரம்மம். பேரின்பத்தை அது ஒன்றே தர வல்லது. உலகத்தில் நான் அடையும் அல்ப சுகம், பேரின்பமாகாது. எல்லாம் சின்ன சின்ன விஷயங்கள் தானே. ஆத்மாவை பற்றிய ஞானம் ஒன்றே சூரியனின் ஒளியை விட அதிக பிரகாசம் தருவது. சூரியனின் ஒளி சிறிது சிறிதாக வளர்ந்து அந்தியில் அஸ்தமனம் அடைகிறது. பிரம்மத்தின் ஒளி எப்போதும் ஒரேநிலையில் ஒளிர்வது. நான் என்ற எண்ணம், என்னால், எனக்கு, எனக்காக, என்னுடைய –ஆகிய எண்ணங்கள் இருக்கும் வரை பிரம்மத்தை நெருங்கவே முடியாது. ஆகவே இந்த ஜட மாய உலகம் பிரம்மத்தின் பக்கமே அணுக முடியாது.
அடிக்கடி நமக்கு நினைவூட்டவே தான் ‘அஹம் ப்ரம்மாஸ்மி’ நான் தான் ப்ரம்மம் என்ற உபநிஷத மஹாவாக்யம் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். நாம் எல்லோருமே ப்ரம்மஸ்வரூபம் தான். அதை ஒரு கணமேனும் உணர்ந்தால் நமது வாழ்வு உன்னதமாகும்.
7.अनन्तं विभुं निर्विकल्पं निरीहं शिवं सङ्गहीनं यदोङ्कारगम्यम् । निराकारमत्युज्ज्वलं मृत्युहीनं परं ब्रह्म नित्यं तदेवाहमस्मि ॥ ७॥
Anandam vibhum sarvayonim nireeham Sivam sangaheenam yad omkaaragamyam Niraakaaramathyujwalam mruthyuheenam Param Brahma nityam tadevaaham asmi. 7
ஆநந்தம் விভும் ஸர்வயோநிம் நிரீஹம் ॥ஶிவம் ஸங்গஹீநம் யদ் ஓம்காரகாம்யம் நிராகாரமத்யுஜ்வலம் ம்ருʼத்யுஹீநம் பரம் பிரம்ம நித்யம் ததேவாஹம் அஸ்மி., 7
ஆத்ம அனுபவம் என்பது அது அற்புதமான நிலை. முயற்சித்தால், விடாது தேடினால் கட்டாயம் கிடைக்கக் கூடியது. முடிவில்லாதது, தெய்வீகமானது, பிரபஞ்சத்தையே கட்டுக்குள் வைக்க முடிந்தது, அமைதி மய மானது. தனித்வமானது, ” ஓம் ” எனும் ப்ரணவமந்த்ர மூலம். அழிவற்றது, அருவமானது, ஒரு வார்த்தையில் சொல்வதானால் ப்ரம்மம். சதா ஆனந்தத்தை தருவது. .
8/ यदानन्द सिन्धौ निमग्नः पुमान्स्या- दविद्याविलासः समस्तप्रपञ्चः । तदा नः स्फुरत्यद्भुतं यन्निमित्तं परं ब्रह्म नित्यं तदेवाहमस्मि ॥ ८॥
Yad Aananda sindhau nimagnah puman sya-Dvidyavilasah samastha prapanchah Tadaa na sphurathyatbhutam yannimitham Param Brahma nityam tadevaaham asmi. 8
யத் ஆநந்த ஸிந்தௌ நிமக்னஹ புமாந் ஸ்யா- দ்விদ்யாவிலாஸঃ ஸமஸ்தா ப்ரபஞ்சঃ ததா ந ஸ்ফுரத்யத்ভூதம் யந்நிமிதம்பரம் ப்ரஹ்ம நித்யம் ததேவாஹம் அஸ்மி., 8
ஆத்மானுவத்தில் மூழ்குபவனுக்கு அதிலிருந்து வெளி வரவே தோன்றாது. அதிலேயே மேலும் மேலும் இன்னும் ஆழமாக ஈடுபடுவான். எல்லையற்ற பேரின்பக்கடல் ப்ரம்மம். பிரபஞ்ச காரணம் அது. அறியாமையைப் போக்கும் ஞான தீபம். ஈடிணையற்றது. நானே ப்ரம்மம் என்று நம்மை உணரவைப்பது.
9. स्वरूपानुसन्धानरूपां स्तुतिं यः पठेदादराद्भक्तिभावो मनुष्यः । श्रुणोतीह वा नित्यमुद्युक्तचित्तो भवेद्विष्णुरत्रैव वेदप्रमाणात् ॥ ९॥
Swaroopaanusandhanaroopaam sthuthim yah Pathed aadaraal bhakthibhavo manushyah Srunotheeha va nithyam udyukta chitto Param Brahma nityam tadevaaham asmi. 9
ஸ்வரூபாநுஸந்ধநரூபம் ஸ்துதிம் யঃ பதேத் ஆதாரால் பக்திபவோ மனுஷ்யஹ் ஶ்ருணோதீஹ வா நித்யம் உத்யுக்த சித்தோ பரம் ப்ரஹ்ம நித்யம் ததேவாஹம் அஸ்மி., 9
நான் யார் என்ற தேடுபவனுக்கு கிடைக்கும் விடை தான் பிரம்மானந்தம். ஆதி சங்கரர் 9 ஸ்லோகங்களில் இதை எளிதாக ”விஞ்ஞான நௌகா” என்று விளக்குகிறார். இது சம்சார சாகரத்திலிருந்து நம்மை விடுபட வைக்கும் வழிகாட்டி. பக்தி சிந்தனையுடன் இந்த அஷ்டகத்தை, எட்டு ஸ்லோகங்களை அர்த்தம் புரிந்து படித்தால், அதற்கு பரிசு பேரின்பத்துக்கு ஒரு இலவச டிக்கெட். நானே ப்ரம்மம் என்று உணரவைக்க ஒரு சலுகை. இதை எழுதிய ஆதி சங்கரரை வாழ்த்தி வணங்குவோம்.
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



