

பிறந்த நாள் 9.10.2024. – நங்கநல்லூர் ஜே கே சிவன் வல்லக்கோட்டை முருகன்
கார் வேகமாக கட்டவாக்கத்திலிருந்து படப்பை நோக்கி பறந்தது. போகும் வழியில் வல்லக்கோட்டை முருகன் ஆலயம் செல்ல விருப்பம். இன்னும் அரை மணி நேரத்தில் ஆலயத்தை சாத்தி விடுவார்களே. தெருவெல்லாம் ஒரே லாரி மயமாக இருக்கிறதே. கார் ட்ரைவர் பெயர் கண்ணன். என் இஷ்டதெய்வம் பெயர் கொண்டவர். ”இன்னீக்கி நீங்க முருகனைப் பார்க்க போறீங்க. இதோ கொஞ்சம் நேரம் தான். சல்லுனு போயிடலாம்.”
மனதில் முருகன் தோன்றினான். என்னை அறியாமல் என் மனம் திருப்போரூர் சிதம்பர ஸ்வாமிகள் பாட்டு ஒன்றை நினைத்தது. வாய் மெதுவாக பாடியது.
”ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கித் தீது புரியாத தெய்வமே – நீதி
தழைக்கின்ற போரூர்த் தனிமுதலே, நாயேன் பிழைக்கின்ற வாறுநீ பேசு”
ஆமாம் 85 வருஷங்களில் எத்தனையோ தப்பு பண்ணி இதோ முருகா உன்னிடம் வருகிறேன். என்னை மன்னித்தருள். நல்லவனாக்கு.
முருகன் பேசும் தமிழ்க் கடவுள். ஒளவையுடன் பேசி ” சுட்ட பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா?” என கேட்டு திணறடித்தவன். அப்பனுக்கு பாடம் சொன்னவன். ‘முட்டை முதலா கோழி முதலா?’ என்று பொய்யா மொழிப் புலவரை சிந்திக்க வைத்தவன். நெஞ்சமெனும் வெஞ்சமரில் அஞ்சேல் என வேல் காட்டி வினை தீர்ப்பவன். முன்பு பல வருஷங்களுக்கு முன் வல்லக்கோட்டையில் தரிசனம் தந்தவன்.
இதோ வள்ளலார் கேட்டதையே நானும் அப்படியே கேட்கிறேன் முருகா. இன்னருள் புரியவேண்டும்.
”அப்பா நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும்
ஆருயிர்க்கெலாம் அன்பு செய்தல் வேண்டும்
எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே
எந்தை நினதருள் புகழை இயம்பிடல் வேண்டும்
செப்பாத மேல்நிலை மேல் சுத்த சிவ மார்க்கம்
திகழ்ந்தோங்க அருட்ஜோதி செலுத்தியிடல் வேண்டும்
தப்பேதும் நான் செயினும் நீ பொறுத்தல் வேண்டும்
தலைவா நினைப்பிரியாத நிலமையும் வேண்டுவேனே.
பிறியாதென்னொடுகலந்து நீஇருத்தல் வேண்டும்
பெருமான்நின் தனைப்பாடி ஆடுதல்வேண் டுவனே.
அணுத்துணையும் சினங்காமம் அடையாமை வேண்டும்
மருளாய உலகமெலாம் மருள்நீங்கி ஞான
மன்றிடத்தே வள்ளல் உனை வாழ்த்தியிடல் வேண்டும்
ஸ்ரீபெரும்புதூரில் இருந்து 9 கி.மீ. தூரத்தில் உள்ள வல்லக்கோட்டை முருகன் கோயிலுக்கு வயது 1200 வருஷம். பாரத தேசத்திலேயே மிகப்பெரிய 7 அடி உயர முருகன் வள்ளி தேவானை சமேதனாக நிற்கிறான். வல்லான் எனும் ஒரு ராக்ஷஸனை முருகன் வீழ்த்தி ஸ்தாபித்த க்ஷேத்ரம் வல்லக்கோட்டை.
இலஞ்சியில் சங்கொண்டபுரம் என்ற ராஜ்யத்துக்கு ராஜா பகீரதன். நாரதர் வந்ததை கவனிக்கவில்லை. ஆகவே கோபம் கொண்ட நாரதர் நேராக கோரன் எனும் ராக்ஷஸனிடம் சென்று நீ பகீரதனை வெற்றி பெற்றால்தான் உனக்கு பெருமை என்று அவனை பகீரதன் மீது போர் தொடுக்க வைத்து பகீரதன் தோற்று நாட்டை விட்டு காட்டுக்கு ஓடிவிட்டான்.துர்வாச முனிவர் உதவியினால் முருகனுக்கு ஒரு கோயில் கட்டி வணங்குகிறான். அது தான் வல்லக்கோட்டை. கந்த கோட்டம், குமார கோட்டம் போல் வல்லக்கோட்டம் தான் வல்லக்கோட்டை ஆகியது.கோட்டம் என்றால் கோட்டை. தாம்பரத்திலிருந்து 24 கி.மீ. ஒருகாலத்தில் அருகே திருப்பட்டி என்ற ஊரில் ஒரு முருகன் ஆலயம் வல்லம் என்ற பெயரில் இருந்தது. அதையும் சேர்த்து தான் வல்லக்கோட்டை என்று சொல்வதுண்டு.
திருப்போரூரிலிருந்து திருத்தணிக்கு நடந்து கொண்டிருந்த அருணகிரி நாதர் வல்லக்கோட்டைக்கு வந்திருக்கிறார்.அருமையாக ஏழு திருப்புகழ் பாடல்கள் பாடி இருக்கிறார். இதோ ஒன்று
ஆதிமுத னாளி லென்றன் தாயுடலி லேயி ருந்து ஆகமல மாகி நின்று …… புவிமீதில்
ஆசையுட னேபி றந்து நேசமுட னேவ ளர்ந்து ஆளழக னாகி நின்று …… விளையாடிப்
பூதலமெ லாம லைந்து மாதருட னேக லந்து பூமிதனில் வேணு மென்று …… பொருள்தேடிப்
போகமதி லேயு ழன்று பாழ்நரகெய் தாம லுன்றன்பூவடிகள் சேர அன்பு …… தருவாயே
சீதைகொடு போகு மந்த ராவணனை மாள வென்ற தீரனரி நார ணன்றன் …… மருகோனே.
தேவர்முநி வோர்கள் கொண்டல் மாலரிபிர் மாவு நின்று தேடஅரி தான வன்றன் …… முருகோனே
கோதைமலை வாழு கின்ற நாதரிட பாக நின்ற கோமளிய நாதி தந்த …… குமரேசா
கூடிவரு சூரர் தங்கள் மார்பையிரு கூறு கண்ட கோடைநகர் வாழ வந்த …… பெருமாளே.
அம்மா வயிற்றிலிருந்து வெளிவந்த நாள் முதலாக, பல அழுக்குகள் நிறைந்த உருவத்தோடு ஆசைகள் பல கொண்டு , பெற்றோர்,உற்றோர் மற்றோர் அன்பில் வளர்ந்து எங்கெங்கோ பூமியில் அலைந்து பொருள் தேடி, அழியும் சுகபோகத்தில் ஈடுபட்டுத் திரிந்தாலும் நரகத்தை நான் அடையாமல் இந்த திருவடிகளை கெட்டியாக பிடித்துக் கொள்ள அருள்வாயாக” என்று அர்த்தம்.
வல்லக்கோட்டை முருகன் ஆலய அர்ச்சகர் நான் பாடியதை விரும்பிகேட்டார். முருகன் அருகே அழைத்துச் சென்றார். அவன் பார்வை என் மேல் பட்டது. என் தீவினைகளை நீக்கும் சக்தி வாய்ந்த அருள் பார்வை. நான் பாக்யசாலி. முருகன் கழுத்திலிருந்து மாலைகளை எடுத்து எனக்கு அணிவித்தார். என் மனைவிக்கும் ஒன்று. இதற்கு மேல் சிறந்த பிறந்த நாள் பரிசு உண்டா?
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.


,எங்களுடைய நமஸ்காரங்கள். தங்களுடைய தெய்வ பணி தொடர முருகன் அருள் புரியட்டும்