

பிறந்தநாளில் ஆலய தரிசனம். 2 – நங்கநல்லூர் J K SIVAN
9.10.2024
வஞ்சுவாஞ்சேரிக்கு அருகே என்னென்ன ஆலயங்கள் பார்க்க முடியும் என்ற என் எண்ணத்தை பூர்த்தி செய்ய ஸ்ரீநிவாஸன் முடிச்சூர் போகலாம். கிட்டே தான் இருக்கிறது. பீமேஸ்வரர் ஆலயம், அப்புறம் கட்டவரம் சென்றால் அங்கே பெரிய நரசிம்மர் ஒருவர் இருக்கிறார். வரும் வழியில் வல்லக்கோட்டை ஆலயம் திறந்திருக்கும். முருகனை தரிசிக்கலாம் என்றார். ஆவலோடு அவர்களுடன் காரில் விரைந்தோம்.
வஞ்சுவாஞ்சேரியிலிருந்து அரைமணி நேரத்தில் முடிச்சூருக்கு சென்றோம். அங்கே தான் பீமேஸ்வரர் ஆலயம் இருக்கிறது.
பஞ்சபாண்டவர்கள் இந்தப்பக்கம் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வந்த போது பீம சேனன் பிரதிஷ்டை பண்ணி வணங்கிய சிவன் ஆலயம் இது என்று ஐதீகம். சிவபெருமானுக்கு இங்கு அதனால் பீமேஸ்வரர் என்று நாமம். சிவா விஷ்ணு கோயில் என்றால் தான் எல்லோருக்கும் தெரிகிறது. அம்பாள் பெயர் வித்யாம்பிகை. தெற்கு நோக்கி காட்சி தருகிறாள். சிம்ம வாஹினி. அம்பாள் சந்நிதி கோஷ்டத்தில் ப்ராஹ்மி, வாராஹி, வைஷ்ணவி. தரிசனம் பெற்றேன்.
சம்பிரதாயமாக ஆலய வாசலில் ஒருபக்கம் விக்னேஸ்வரர் இன்னொருபக்கம் ஷண்முகம்..மூலவரை நோக்கி நந்தியெம்பெருமான்.
கோவிலை ஒட்டி ஒரு பெரிய குளம் அழகாக இருக்கிறது. குளத்தை சுற்றி நிரியக மரங்கள் செடிகள். குளக்கரையில் ஆஞ்சநேயர் சந்நிதி.
பீமேஸ்வரர் ஐந்தரை அடி உயர சிவலிங்கமாக கிழக்கு நோக்கி அருள் பாலிக்கிறார். ஆயிரக்கணக்கான வருஷங்கள் வயதான ஆலயம் என்று சொல்ல முடியாத அளவு இன்றளவும் அது பராமரிக்கப்பட்டு வருகிறது என்று அறியும்போது மனது சந்தோஷப்படுகிறது. கோஷ்டத்தில் தக்ஷிணாமூர்த்தி, லிங்கோத்பவர், ப்ரம்ம துர்க்கை , சண்டிகேஸ்வரர்.சந்நிதிகள் பக்தர்களுக்கு மன மகிழ செய்கிறது.
ஒரே கோவில் வளாகத்தில் பீமேஸ்வரரர் ஆலயத்தில் தாமோதர பெருமாள் ஆலயமும் இருக்கிறது. நாராயணன் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக சேவை சாதிக்கிறார். எதிரே குட்டியாக ஒரு கருடாழ்வார் சந்நிதி. அருகே இராம தூதன் ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது.
தாமோதர பெருமாள் ஆலயத்தில் தன்வந்திரி, தும்பிக்கை ஆழ்வார், நின்ற கோலத்தில் நரசிம்மர் சந்நிதிகள் அபூர்வமாக இருக்கிறது,
முடிச்சூருக்கு பேர் வந்த கதை வேடிக்கையாக இருக்கிறது. 1300 வருஷங்களுக்கு முன்பு காமேஸ்வரன் என்ற சிவபக்தன் ஒருவன் இங்கே வசித்தான்..அவனுக்கு ஒரு சிறு சிவலிங்கம் கிடைத்து அதை வழிபட்டான். அதே ஊரில் விஸ்வம் என்ற ஒருவருக்கு வளர்ப்பு மகள் வாசுகி. காமேஸ்வரன் வாசுகி ஒருவர்ப்பிற்கு நேசித்தாலும் வளர்ப்பு அப்பா விஸ்வத்துக்கு தன் பெண்ணை காமேஸ்வரனுக்கு கொடுக்க விருப்பமில்லை. காமேஸ்வரன் வாசுகி இருவரும் தங்களுக்கு கல்யாணம் நடக்கவேண்டும் என்று சிவனை வேண்டினார்கள். பீமேஸ்வரர் எனும் சிவன் விஸ்வத்தின்முன் ஆலய அர்ச்சகர் பரமேஸ்வரனாக உருவெடுத்து உன் பெண் வாசுகியையும் காமேஸ்வரனையும் கோவிலுக்கு அழைத்துவா என்று கட்டளையிட்டார்.
பீமேஸ்வரர் சந்நிதியில் இருவருக்கும் கல்யாணம் இனிது நடைபெற்றது. அதனால் இந்த ஊருக்கு மணமுடிச்ச நல்லூர் என்றாகி பின்னர் சுருங்கி முடிச்சூர் ஆகிவிட்டது. ஆகவே இன்றும் பீமேஸ்வரர் ஆலயம் ஒரு பரிஹாரஸ்தலம். இங்கு கல்யாணம் ஆகவேண்டும் என்று வேண்டிக்கொண்டு வரும் பக்தர்கள் விருப்பம் நிறைவேறுகிறது. காமேஸ்வரன் வழிபட்ட சிவலிங்கம் இப்போது பீமேஸ்வரர்.
இங்கே தான் நரசிம்மபல்லவனுக்கும் ரெண்டாம் புலிகேசிக்கும் பெரிய யுத்தம் நடந்தது. அப்போது இந்த ஆலயம் சிதைந்து பின்னர் புதுப்பிக்கப்பட்டது. வருஷாவருஷம் கார்த்திகை தீபம் இங்கே ஒரு பெரிய விளக்கில் தீபமாக ஒளி தரும். 1300 வருஷ வயதான விளக்கு இன்றும் அங்கே காணலாம்.
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.

