ஞானி கபீர் தாஸர் – நங்கநல்லூர் J K SIVAN

முகநூல் பக்கங்களில் நான் காணாத ஒரு பெயர் கபீர் தாசர். அற்புதமான பக்தர். ராமானந்தரின் சிஷ்யர்.
பக்திக்கு மதம்,குலம்,ஜாதி கிடையாது. ஆண் பெண் வித்யாசம் கிடையாது. வயது கணக்கில் வராது. இதெல்லாம் பகவானுக்கே இல்லை என்கிறபோது பக்தனுக்கு எவ்வாறு இருக்கும்?

காசி அருகே ஒரு குளம் அதன் பெயர் லஹர் தாலாப். அதில் ஒரு பெரிய தாமரை இலைமேல் ஒரு சின்ன குழந்தை. அந்த ஊரில் ஒரு ஏழை இஸ்லாமிய நெசவாளி நீரு என்பவருக்கு வெகுகாலம் குழந்தை இல்லை, அவர் கண்ணில் இந்த குழந்தை படுவானேன்! அளவிலா சந்தோஷத்தோடு இந்த குழந்தையை எடுத்துக் கொண்டு நீரு வீட்டுக்கு ஓடி மனைவி நீராவிடம் ”இந்தா ஒரு அழகிய குழந்தை. இன்று எனக்கு கிடைத்தது. நாம் வணங்கும் பகவான் நம் மேல் பரிவோடு தந்த பரிசு நமக்கு ” என்று அவளிடம் கொடுத்தார்.

நீருவின் இஸ்லாமிய குடும்பத்தினர் உறவினருக்கு இப்படி ஒரு குழந்தையை அவர் எடுத்து வளர்ப்பது பிடிக்கவில்லை. யாரோ ஒருவர் ”நீரு, இந்த குழந்தை சாதாரண குழந்தை இல்லை. சைத்தான். உடனே கொன்றுவிடு” என்று கூட நச்சரித்தார். நீரு காதில் வாங்கவில்லை. திடீரென்று பலர் முன்னிலையில் அந்த இஸ்லாமிய வெறியர் ஒரு கூரான கத்தியை அந்த சிறிய சிசுவின் நெஞ்சில் பாய்ச்சினார். குழந்தைக்கு ஒன்றுமே ஆகவில்லை, ஒரு சொட்டு ரத்தமும் வெளியேறவில்லை. வலிக்கவில்லை. சிரித்தது அப்போது
அந்த குழந்தை ஒரு ரெண்டடி ஸ்லோகம் வேறு சொல்லியது. அந்த குழந்தை மானுட ரகம் அல்ல. தெய்வீக சக்தி வாய்ந்தது என்று புரிந்தது. அதிசயித்தனர்.

அந்த குழந்தைக்கு எல்லோரும் ”கபீர்” என்று பெயர் வைத்தார்கள். அரேபிய மொழியில் ”உன்னதமான” என்று அர்த்தம்.

ஹிந்து மதத்தை சார்ந்தவராக இருந்திருக்கலாம் என்றாலும் இஸ்லாமிய குடும்பத்தால் எடுத்து வளர்க்கப் பட்டதால் கபீர் ஒரு இஸ்லாமியர் என்றே அடையாளம் காணப்படுகிறார். ஒரு பாடலில் கபீர் தான் எந்த மனித தேகத்திலும் பிறவாதவன் என்கிறார். ஆகாரம் இல்லாமலேயே வளர்ந்த குழந்தை கபீர். அவரது வளர்ப்பு பெற்றோர் கவலை கொள்ளவே ஒரு பசுவின் பாலில் வளர்ந்தார்.

கபீர் யார், அவரது உண்மையான பெற்றோர் யார், எந்த ஊர், எதுவுமே தெரியாத ரகசியமாகவே இருக்
கிறது.சிக்கந்தர் லோடி ஆண்ட காலத்தில் காசியில் இருந்தவர் என்று மட்டும் அறிகிறோம். அவர் ஸ்ரீ ராமானந்தரின் பிரதம சீடர் என்பது தெரிந்த விஷயம்.

இளம் வயதில் தியானத்திலும் தனிமையிலும் அமைதியாக கழிந்தது. சாதுக்களை பக்தியோடு அணுகி அவர்களோடு சம்பாஷித்து ஞானம் பெற்றவர். அவர்களுக்கு சேவை செய்து ஆசி பெற்றவர். பெற்றோர் திருமணம் செய்து வைத்தார்கள். ஆயினும் குடும்பத்தில் பற்று ஏற்படவில்லை. காசியில் அவரை எங்கும் காணலாம். நெசவுத்தொழில் கற்று அதில் ஜீவனம் நடத்தியவர். மதத்திற்கு அப்பாற்பட்டவர் கபீர்.
அன்பு, இறை நம்பிக்கை, மக்கள் சேவை, தயை, சத்யம், எளிமை, பக்தி, எல்லாம் எந்த மதத்திற்கும் அடிப்படை ஆதாரம், பொதுவானது, என்று உணர்ந்தவர். ஆகவே ஹிந்து சனாதன தர்மம், இஸ்லாமிய நம்பிக்கைகள் இரண்டையும் வித்தியாசமின்றி சமமாக ஏற்றவராக விளங்கினார். கபீர் ஒரு வேதாந்தி, கவிஞன், ஆன்மீகவாதி. கபீர் தாசர் ஹிந்தியில் இயற்றிய உயர்ந்த தத்துவ, எளிய, ஞானப் பாடல்கள் இன்றும் பலரால் பாடப்பட்டு வருகிறது. கபீரின் ஞான வாக்கியங்களில் சிலவற்றை மட்டும் இங்கே தருகிறேன். கபீர் எழுதிய ரெட்டை அடி ஞான வாக்கியங்களை தோஹே என்பார்கள் சில தோஹேக்களை உங்களுக்கு வழங்குகிறேன்.

चलती चक्की देख के, दिया कबीरा रोये । दो पाटन के बीच में, साबुत बचा न कोए ।
Chalti Chakki Dekh Kar, Diya Kabira Roye Do Paatan Ke Beech Mein,Sabit Bacha Na Koye

மாவரைக்கும் இயந்திரம் எனும் கருங்கல் உருளைகளுக்கு இடையே, அரிசியோ பருப்போ அரைபட்டு மாவாகும். இந்த ரெண்டு கருங்கல் உருளைகள் தான் விண்ணும் மண்ணும், நன்மையும் தீமையும், ஆணும் பெண்ணும், மேலும் கீழும் போன்ற ஜோடிகள். இதற்கிடையில் நாம் பருப்பு அரிசி போல் அகப்பட்டுக்கொண்டு நசுங்கி அவஸ்தைப்படுகிறோம். வெளியே தப்பி ஓட வழியேது?

बुरा जो देखन मैं चला, बुरा न मिलिया कोय । जो मन देखा आपना, मुझ से बुरा न कोय ।
Bura Jo Dekhan Main Chala, Bura Naa Milya Koye Jo Munn Khoja Apnaa, To Mujhse Bura Naa Koye

ஹே மனமே, இந்த உலகமெல்லாம் தேடி யாராவது ஒரு மோசமான, ரொம்ப கெட்டவன் ஒருவனை கண்டுபிடிக்கலாம் என்றால் எவனும் அகப்படவில்லை.என் உள்ளே தேடும்போது தான் என்மனதில் நான் அகப்பட்டேன். அடடா நான் அல்லவோ நான் தேடும் மோசமான மனிதன். ஒரு விரலால் யாரையோ சுட்டிக்காட்டும்பது நான்கு விரல்கள் என்னை தானே சுட்டிக்காட்டுகிறது.

काल करे सो आज कर, आज करे सो अब । पल में परलय होएगी, बहुरि करेगा कब ।
Kaal Kare So Aaj Kar, Aaj Kare So Ub Pal Mein Pralaya Hoyegi, Bahuri Karoge Kub

நாளைக்கு நாளைக்கு என்று எதையும் தள்ளிப்போடாதே, இன்றே, இப்போதே என்று காரியத்தை முடி. இந்த தருணத்தை கோட்டை விட்டால் அப்புறம் எந்த ஜென்மத்திலும் அதை பிடிக்க முடியாது. நாளை நமதல்ல. பாடும் போது தான் ”நாளை நமதே”.

ऐसी वाणी बोलिए मन का आप खोये । औरन को शीतल करे, आपहुं शीतल होए ।
Aisee Vani Boliye, Mun Ka Aapa Khoye Apna Tan Sheetal Kare, Auran Ko Sukh Hoye

பேசும்போது தான், நான், எனது, என், போன்ற அகம்பாவம் வேண்டாம். அதில் பெருமை அடைய ஒன்றுமில்லை. தற்பெருமை வேண்டாம். பெரிய ஆளாக,முக்யமானவனாக, காட்டிக்கொள்ளாதே. பேச்சில் எளிமை தன்னலம் இல்லாவிட்டால் கேட்பதற்கு காதில் தேனாக பாயும்.

Dheere Dheere Re Mana, Dheere Sub Kutch Hoye Mali Seenche So Ghara, Ritu Aaye Phal Hoye

ஹே மனமே, மெதுவா மெதுவா நகரு. வாழ்க்கை ஓட்டப்பந்தயம் இல்லை. எல்லாமே மெதுவாக நகரும். அதற்கு காலமென்று பெயர். ஒரே சீராக அசைவது. முன்னோக்கி போகுமே தவிர பின்னோக்கி ஒருபோதும் திரும்பி நகராது. போனால்,கோட்டை விட்டால்,போனது போனது தான். செடியில் மரத்தில் பழமோ, பூவோ,காயோ, அந்தந்த காலம் வந்தால் தான் மலரும்,காய்க்கும். வாழ்க்கையின் பயனும் நாம் எப்படி நடந்து கொண்டோமோ அதற்கேற்ப பலனைத்தரும்.

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2569

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;