
‘’ வித்யாபதியும் விஸ்வவசுவும்” – நங்கநல்லூர் J K SIVAN
ஓடிஷா (நம்ம பழைய ஒரிஸ்ஸா தான்!) ஒரு காலத்தில் பழைய பெரிய ராஜ்ஜியம். அதன் ராஜ வம்சாவளியை மேலெழுந்தவாரியாக பார்த்தாலே கூட ஒரு புகழ் பெற்ற வம்சம் “சைலோத்பவ” வம்சம். அந்த வம்ச செப்பேடு மாதவராஜ் என்ற புகழ்பெற்ற ராஜாவை பற்றி சொல்கிறது. அந்த வம்சத்தில் ராஜாக்களுக்கு மாதவராஜ், மாதவஸ்ரீ, மாதவ வர்மா, மாதவ பிரவ்ரித்தன், போன்ற மாதவனை வழிபடும் பக்த ராஜாக்களை சொல்கிறது.!!. ஒரிஸ்ஸாவில் மாதவ (கிருஷ்ண)
பக்தர்கள் அநேகர். அவர்களுக்கு த்வாதச மாதவம் என்று பன்னிரண்டு மாதவ க்ஷேத்ரங்கள் வழிபாட்டு ஸ்தலங்களாக உள்ளன. ஆரம்ப காலத்தில் கிருஷ்ணன் மாதவனாக அதுவும் நீல மாதவனாக இந்த பிரதேசத்தில் மக்களால் வழிபடப்பட்டான். அது இன்றும் தொடர்கிறது நீல என்றால் கருநீலத்தை குறிக்கும். “மா” என்றால் தாய் உலகைக்காக்கும் சக்தி “தவ” என்றால் வெண்ணிறம் அதாவது இந்த பிரபஞ்சம். கருநீல மாதவன் காக்கும் சக்தியாக உபாசிக்கப்படுவது நியாயம் தானே. ஆகவே தான் நீலகந்தார மலைக்குகையில் நீல கல்லாக நிற்கும் ஜகந்நாதனை “மகா நீலமணி” என்று பக்தர்கள் தரிசனம் செய்வது வழக்கம் . நமது கதை இன்று இந்த குகையில் தொடங்குகிறது
விஸ்வவசு ஒரு பன்றி மேய்க்கும் வேடர் குலத்தவன். கிருஷ்ணனை நீல மாதவனாக இந்த குகையில் தினமும் கண்டு களித்து வழிபட்டவன்.
“நீல மாதவா, நிறைய விளைச்சல் உண்டு பண்ணு, மழை கொடு. மாடு, ஆடு பன்றிகள் எல்லாவற்றையும் அபிவிருத்தி செய். குடும்பத்தில் எல்லோரையும் நன்றாக ஆயுளோடு வியாதியின்றி வாழச்செய். இந்த வேண்டுகோள் நிறைவேற்றபட்டது. விஸ்வ வசுவுக்கும் மகிழ்ச்சி. காட்டில் விளையும் கீரை, பழங்கள், காய்கள் வீட்டிலிருந்து , பால், வெண்ணை யெல்லாம் நீல மாதவனுக்கு தினமும் படைப்பான் நெய்வேத்யம் செய்து பிரசாதத்தை தன் மனைவி மகளுக்கு அளித்தான் அவர்களும் சுபிக்ஷமாக வளர்ந்தார்கள். இதில் ஒரு ரகசியம் என்னவென்றால் காட்டில் எங்கோ இடுக்கில் ஒரு மலைக்குகையில் இந்த நீல மாதவன் விஸ்வவசுவுக்கு மட்டும் காட்சியளித்துக் கொண்டிருந்தான். வேறு யாருக்கும் நீல மாதவன் இருக்கும் இடம் தெரியாது. நீல மாதவன் கலியுகத்தில் கிருஷ்ணனின் அவதாரம் என்று பல பண்டிதர்கள் சொல்லி அந்த ஊர் ராஜா இந்த்ரத்யும்னன் நீல மாதவன் எங்கு அவதாரமாகி காட்சியளிக்கிறான் என்று ஊர் ஊராக ஆள் மேல் ஆளாக விட்டு தேடிக் கொண்டிருந்தான்.
விஸ்வவசுவுக்கு ஒரு பெண். லலிதா. ராஜாவால் நீல மாதவனை தேட அனுப்பிய வர்களில் ஒருவனான வித்யாபதி அந்த காட்டு பிரதேசத்துக்கு வந்து பசி நேரத்தில் விஸ்வ வசு வீட்டை ஒருநாள் அடைந்தான். லலிதாவுக்கு அவனை பார்த்ததுமே பிடித்து விட்டது. “என்னோடேயே இருந்து விடேன்”! என்று அவனை கெஞ்சினாள்.
“கரும்பு தின்ன கூலி எதற்கு?” என்று அவளிடம் சொல்லிவிட்டு விஸ்வவசுவின் வருகைக்காக காத்திருந்தான் வித்யாபதி. காலை மாலை இருவேளையும் காட்டின் உட்பகுதிக்கு சென்று நீல மாதவனை வழிபடுவது தானே விஸ்வவசுவின் வேலை. விஸ்வவசுவுக்கும் வித்யாபதியை பிடித்து விட்டது.
இருவருக்கும் திருமணம் முடிந்து மூன்று மாதமாகி விட்டது. வித்யாபதிக்கு தான் வந்த வேலை ஞாபகம் வந்து விட்டது.
“நான் செல்லவேண்டும் ராஜா தலையை வாங்கி விடுவார்” என்று ஒரு நாள் மனைவியிடம் சொல்லி கிளம்பினான்.
” உங்கள் தலை ராஜாவுக்கு எதற்கு? அவருக்கு தலை இல்லையா?”
“ஜோக் அடிக்காதே. நான் ஒரு வேலையாக தான் அனுப்பப்பட்டேன். தேடி கண்டுபிடிக்கிற வேலை!”.
“யாரை, எதை. என்னை தான் தேடி கண்டுபிடித்து சொந்தமாகவும் ஆக்கி விட்டீர்களே”
“நான் தேடி வந்தது அந்த நீல மாதவனை”
“நீல மாதவனா? என்று ஆச்சரியமாக கேட்ட லலிதாவை “ உனக்கு நீல மாதவனை தெரியுமா ? என்றான்
“என் அப்பா அந்த நீல மாதவனின் பரம பக்தர். தினமும் காலை மாலை இருவேளை அந்த தெய்வத்தை வணங்கி விட்டு தான் மறுவேலை அவருக்கு
“எங்கு இருக்கிறார் நீல மாதவன்?
அப்பாவுக்கு மட்டும் தான் தெரியும். நீல மாதவன் யாரையும் அனுமதிப்பதில்லையாம்”
வித்யாபதி எப்படியோ விஸ்வவசுவை சம்மதிக்க வைத்து நீலமாதவன் இருக்குமிடம் அழைத்து செல்லப் பட்டான். ஒரு கண்டிஷன். வீட்டிலிருந்து குகை வரை கண்ணை கட்டி தரிசனம் ஆனபின் மீண்டும் கண்ணை கட்டி வீடு வரை. வழி தெரியக்கூடாது என்பதற்காக வழி தெரிந்து கொள்ள விரும்பிய வித்யாபதி சமயோசிதமாக போகும் வழியெல்லாம் கடுகை நிறைய தெளித்து கொண்டு போனது விஸ்வவசுவுக்கு தெரியாது. அன்றிரவே வித்யாபதி எல்லாரும் தூங்கும்போது வீட்டை விட்டு வெளியேறி ராஜாவிடம் சென்று தனக்கு நீல மாதவன் இருக்குமிடம் தெரியும் என்று சொன்னவுடனே. ராஜா படைவீரர்களை அனுப்பி விஸ்வவசுவை கைது செய்து, நீல மாதவன் விஸ்வவசுவை சிறை மீட்டு, கோவில் கட்ட சொல்லி, வேப்ப மரமாக உருவெடுத்து கடலில் மிதந்து வந்து, விஸ்வகர்மாவால் அரைகுறை சிற்பமாக செய்யப்பட்டு இன்று வரை பூரியில் ஜகன்னாதராக , சுபத்ரையாக பலராமனாக காட்சி தருகிறார்கள்.
Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.

