

வில்வநல்லூர் வில்லியனூரானது. -நங்கநல்லூர் J K SIVAN
29த் தேதி செப்டம்பர் மாதம் நண்பர் அரும்பாக்கம் ஸ்ரீனிவாசன் காரில் மூன்று நரசிம்மரை தரிசித்தோம். அப்போது வழியில்புதுச்சேரியை சேர்ந்த வில்லியனூர் என்ற பெயர் பலகை பார்த்துவிட்டு அங்கே உள்ள ஆலயத்தை தேடிச் சென்றோம்.
வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோயில். புதுச்சேரி – விழுப்புரம் சாலையில் புதுச்சேரி பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. காலை மணி பதினொன்றேகால் ஆகிவிட்டது. சீக்கிரம் கோவில் கதவு மூடுவதற்குள் செல்லவேண்டும் என்று பறந்தோம். கோகிலாம்பிகை சமேத காமீஸ்வரரர் தரிசனம் கிட்டியது. காமீஸ்வரரின் வேறு பெயர்கள் மிரமீஸ்வரர், நரசிங்கநாதர், நடுவழிநாதர், வைத்திய நாதர், வில்வனேசர் . அம்பாளுக்கும் வேறு பெயர்கள் உண்டு, குயிலம்மை, முத்தம்மை. ஸ்தல வ்ருக்ஷம் வில்வம். ஆயிரம் ரெண்டாயிரம் வருஷ சிவாலயம். வில்வம் எங்கும் சூழ்ந்த ஊர் இது. வில்வநல்லூர் என்று பெயர் பெற்றிருந்தது. போகப்போக வில்வ மரமும் குறைந்து பேரும் குறைந்து வில்வநல்லூர் வில்லியனூராகிவிட்டது.
இந்த கோயில் வளாகம் இரண்டு ஏக்கர் பரப்பளவைக் கொண்டுள்ளது மற்றும் அதன் அனைத்து கோபுரங்களும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இந்த சிவாலயத்தை வில்லியனூர் பெரிய கோவில் என்கிறார்கள். சர்வ வேலைப்பாடுகள் நிறைந்த அருமையான ஆலயம்.
சிவனது அடிமுடி காண விஷ்ணுவும் பிரம்மாவும் கீழும் மேலும் சென்றபோது ப்ரம்மா தான் முடியைப் பார்த்ததாக பொய் சொல்லி சாபம் பெற்றார் அல்லவா. வருத்தப்பட்ட பிரம்மன் சிவனிடம் தனது பாவத்தை போக்கும்படி வேண்ட, சிவன் ”நீ தொண்டை நாட்டில் முத்தாறு நதிக்கரையில் வில்வ வனம் படைத்து சிவ பூஜை செய்தால் சாபம் நீங்கும்” எனக் கூறி மறைந்தார். பிரம்மனும் சிவன் கூறியபடி பிரம்ம தீர்த்தம் உண்டாக்கி இந்த ஸ்தலத்தில் சிவ பூஜை செய்து சாபத்திலிருந்து விடுபட்டார் என்கிறது ஸ்தல புராணம்.
தர்மபால சோழன் என்று ஒரு ராஜா. அவன் ராஜ்யம் கமலாபுரி. அவனுக்கு ஏதோ கர்ம வினையால் வெண் குஷ்டம். இங்கே வந்தான். குளத்தில் ஸ்நானம் செய்து .காமேஸ்வரனை வழிபட்டான். அவன் காலத்தில் இந்த பகுதி முழுக்க எங்கு பார்த்தால் வில்வ மரங்கள். இங்கே ஒரு ஊரை உருவாக்கினான் சிவாலயம் ஒன்று கட்டினான். ஊருக்கு வில்வநல்லூர் என பேர் வைத்தான். .
இங்கே உள்ள நந்திகேஸ்வரன் விசேஷமானவர். பிரசவ நந்தி என்று எல்லோரும் வணங்குகிறார்கள்.. எல்லா சிவாலயங்களிலும் அம்மன் முன்னாள் சிங்கமோ நந்தியோ இருக்கும். இங்கேயும் ஒரு நந்தி உண்டு. ஆனால் அதற்கு முன்னால் இன்னொரு குட்டி நந்தி இருக்கிறது. அது தான் பிரசவ நந்தி. வில்லியனூரில் காமேஸ்வரர் கோவிலில் பைராவுக்கு நாய் வாகனம் இல்லை.
மூலவர் ஸ்வயம்பு லிங்கம். வருஷா வருஷம் பங்குனி 9, 11, 19ல் சூரியனின் கதிர்கள் மூலவர் மேல் படும்படி சந்நிதி அமைந்துள்ளது. காமேஸ்வரரை பிரம்மன், நரசிம்மன், இந்திரன், சூரியன், ஆதிசேடன், மன்மதன், சந்திரன், தருமபாலன், சகலாங்க சவுந்தரி, கோவிந்தன் ஆகியோர் பூஜித்துள்ளனர்.ஆடிப்பூரத்தில் அம்பாளுக்கு பிரம்மோத்சவம் நடக்கிறது.
குஷ்ட நோயால் பாதிக்கப் பட்டவர்கள் இத் தல தீர்த்தத்தில் நீராடி சிவனை வழிபட்டால் குணமடையும் என்பது நம்பிக்கை. திருமணத்தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், சுகப்பிரசவம் வேண்டுபவர்களும் பிரசவ நந்தியிடம் வேண்டிக் கொண்டு அந்த நந்தியை, தங்கள் வீடு இருக்கும் திசை நோக்கி மாற்றி வைக்கின்றனர். தங்களது கோரிக்கை நிறைவேறியதும் பூஜை செய்து நந்தியை மீண்டும் திசை மாற்றி வைக்கின்றனர்.
இது 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தென்றாலும் பின்னர் பலமுறை புனருத்தாரணம் செய்யப்பட்டுள்ள ஆலயம். நாராயண சம்புவராயர் (1339-63) என்பவர் சுமார் 850 ஏக்கர்கள் (340 ha) நிலம் நன்கொடை அளித்ததாக கல்வெட்டுகள் உள்ளன. கோயிலுக்கு மற்றும் அது ஒசுடு ஏரியால் பாசனம் செய்யப்பட்டதாம்.
நாங்கள் சென்றபோது கோகிலாம்பாளுக்கு பாலாபிஷேகம் நடந்து கொண்டிருந்தது. வழிந்து ஓடும் அபிஷேக பல் கை நிறைய எடுத்து உண்டோம்.
தினசரி பூஜைகள் மூன்று முறை செய்யப்படுகின்றன. அவை, காலை 8:00 மணிக்கு காலசந்தி பூஜை, 12:00 மணிக்கு உச்சிகல பூஜை, மாலை 6:00 மணிக்கு காலசந்தி பூஜை. ஒவ்வொரு சடங்கிலும் நான்கு படிகள் உள்ளன: அபிஷேகம், அலங்காரம், நைவேத்யம் மற்றும் தீபாராதனை. மற்ற சிவன் கோயில்களைப் போல், கோயிலில் எண்ணெயால் அபிஷேகம் செய்யப்படுவதில்லை. அனைத்து வாரங்களும் சோமவாரம், வெள்ளிக்கிழமை பூஜையும், பிரதோஷம், அம்மாவாசை, கிருதிகை, பௌர்ணமி மற்றும் சதுர்த்தி பூஜைகளும் சிறப்பனவை . தமிழ் மாதமான ஆடியில்(ஜூலை – ஆகஸ்ட்) பிரம்மோத்ஸவம் கொண்டாடப்படும் மிக முக்கியமான நிகழ்வாகும்.
புதுச்சேரி செல்லும்போது மறக்காமல் வில்வநல்லூர் காமீஸ்வரனை தரிசிப்பவர்கள் அதிர்ஷ்டக்காரர்கள்.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.

