
ஸ்ரீ ராம தரிசனம் – 1. நங்கநல்லூர் J K SIVAN துளசி தாசர்
உத்தரப்பிரதேசம் பாரத தேசத்தின் பெரிய ராஜ்ஜியம். அதில் எத்தனையோ ஊர்கள். ஒன்று ராஜாபூர் அதில் பிறந்த எத்தனையோ பேர்களில் ஒருவர் பெயர் ராம் போலா. இந்த பெயரில் அவர் யார் என்றே ஒருவருக்கும் தெரியாது. மோகன்தாஸ் கரம் சந்த் யார் என்று தெரியுமா? இந்த பாரத தேசத்தில் மட்டும் அல்ல, உலகத்திலேயே பல பேருக்கு இது கேள்விக்குறி? அதே சமயம் காந்தி என்று ஒரு பெயர் சொன்னால் உலகமே அறியும். அட நமது தேச பிதாவா? அவர் பெயரை மோகன்தாஸ் கரமச்சந்த் என்று திருப்பி கேள்வி கேட்பார்கள். அப்படித்தான் ராம்போலாவை தெரியாத நமக்கு அவருடைய உலகமறிந்த பெயர் துளசிதாசர் என்றால் நன்றாக தெரியும். துளசி தாசர் வாழ்ந்த காலம் , 1532-1623. துளசிதாசர் ராம சரித மானஸ் எனும் இராமாயணம் எழுதும் முன் தென்னிந்தியாவிற்கு நடந்து வந்திருக்கிறார். திவ்ய தேச யாத்திரையாக இராமேசுவரம் வந்ததாகவும் அங்கே கம்பராமாயணத்தின் கேட்கும் பேறு பெற்றதாகவும் கம்பன் காவியத்தின் நயங்களை தன்னுடைய காதையில் பல இடங்களில் கையாண்டுள்ளதாகவும் ஆராய்ச்சி யாளர்கள் சொல்கிறார்கள். துளசிதாசருக்கு தமிழ் தெரியுமா என்று என்னைக் கேட்க வேண்டாம். கம்பருடைய தமிழ் எனக்கே புரியாத துளசி தாசர் எப்படி ரசித்தார் என்று கேட்டால் என்ன பதில் சொல்வது?. யாராவது ஏதாவது சொன்னால் பேசாமல் கேட்போம். அது அவர்கள் வேலை. தொடர்ந்து இதுபோல் ஏதாவது சொல்லட்டும்.துளசிதாசருக்கு இராமபக்தி அதிகம். சைவம், வைணவம், சாக்தம் சம்பிரதாயங்களையும் சமமாகப் பாவித்துப் பெருமை பெற்றவர். கணேசர், சிவபெருமான், பார்வதி, சூரியன் என அனைத்து தெய்வங் களையும் போற்றியவர் என்பதால் தனிப்பெருமை பெற்றவர் என அறிகிறோம். துளசி தாசர் ரொம்ப நல்லவர்.
துளசி தாசர் அப்பா பெயர்: ஆத்மாராம் துபே, அம்மா பெயர்: உலேசி. பிறந்த வருஷம்: விக்ரமி சாம்வாட் 1554 (கி.பி. 1532 ஆம் ஆண்டு). பாவம், சிறுவயதிலேயே பெற்றோரை இழந்தவர். வறுமையில் வாடிய நிலையில் வால்மீகி இராமாயணக் கதையை மக்களிடையே பிரசாரமாகச் சொல்லி அதன் பலனாக வாழ்க்கையை நடத்தி வந்தார். அவரது நல்லதிர்ஷ்டம் அவருக்கு இராமபக்தியும் புத்தி கூர்மையும் அறிவும் பெற்ற குணசீலியான ரத்னாவளி என்கிற மனைவி கிடைத்தாள் .
துளசிதாஸரின் குரு நரஹரி தாஸ், அவருக்கு சேவை செய்து கல்வி கற்றார். அவரிடமிருந்து தான் முதன் முதலாக இராமனின் வீரச்செயல்களை அறிந்தார். பரவசம் அடைந்தார். இதுவே இராமசரிதமானசா வை அவர் இயற்ற மூல காரணம் எனலாம்.
துளசி தாஸரின் குரு நரஹரிதாஸ், வட இந்தியாவில் வைணவ மத ஸ்தாபகரான ராமாநந்தாவிலிருந்து வந்த தெய்வீக தலைமுறையினரின் ஆறாவது சந்ததி ஆவார். .
துளசிதாஸை ராமாயணம் இயற்றிய ரிஷி வால்மீகியின் அவதாரம் என்பார்கள். மொத்தமாக 39 நூல்களை இவர் இயற்றியிருக்கிறார். ஆனால் கிடைத்தவை 12 தான் என்கிறார்கள். அவை: வைராக்கிய சிரசந்தீபனீ, இராமாஞா பிரஸ்ன, இராமலாலா நகசூ, ஜானகீ மங்கள், பார்வதீ மங்கள், கிருஷ்ண கீதாவளி, கீதாவளி, விநய பத்திரிக்கா (விரஜ மொழி), தோஹாவளி, பரவை இராமாயணம், கவிதாவளி (விரஜ மொழி), இராம சரித மானஸ் (அவதி மொழி). இதில் ஒன்று கூட நமக்கு பெயரே தெரியாது. அதிக பக்ஷமாக கடைசியில் சொன்ன ராம சரித மானஸ் தான் நமக்கு தெரிந்த அவரது ராமாயணம். துளசிதாஸ் ராமாயணம் என்று பொதுவாக இதை தான் சொல்வோம். நாம் தான் தமிழிலேயே ராமாயணம் படிப்பதில்லையே. இந்தியிலே என்னிக்கி படிக்கப் போறேன்!ராமனுக்காக அர்ப்பணம் செய்யப்பட்ட காவியமான ராமசரிதமானசா , வால்மீகி ராமாயணத்தின் ”அவாதி’ மொழிப் பதிப்பு. ராமசரிதமானசா இதர மொழிகளிலும் மொழி பெயர்த்திருக்கிறார்கள். அவை “போஜ்புரி”, “பிரிஜ்பாஷா ” மற்றும் “சித்ரகுட் மக்களின் உள்ளூர் மொழி”யிலும் உள்ளது.. ராமசரிதமானசா, இந்தியாவில் உள்ள பல இந்துக் குடும்பங்களில் பக்தியோடு பூஜை அறைகளில் இன்றும் பாராயணம் செய்யப்பட்டு , பூஜிக்கப்படுகிறது. இது ”சௌபாய்” என்ற நமது திருக்குறளை போல ரெண்டடி கவிதை வடிவிலான ஸ்லோகங்கள். அர்த்த புஷ்டியானது. இதற்கு இன்னொரு பெயர் ”துளசி-க்ரிதி இராமாயணா ” . இது இந்தியாவில் இருக்கும் இந்திபேசும் இந்துக்களிடேயே மிகவும் பிரபலமானது.
துளசிதாசின் பல செய்யுள்கள் இந்தி பேசும் பிராந்தியங்களில் பிரபலமாக இருக்கும் பழமொழிகளாக இருக்கின்றன. துளசிதாசரின் சொற்றொடர்கள் சாதாரண பேச்சுவழக்கில் அன்றாடம் பேசப்படும் வார்த்தை களாக உள்ளது. மேலும் அதன் மூலத் தோற்றம் பற்றி அறியாமலேயே லக்ஷக்கணக்கான இந்தி பேசுபவர்களால் (உருது மொழி பேசுபவர்களாலும் கூட) பயன்படுத்தப்படுகிறது. அவருடைய பொன் மொழிகள் பழ மொழிகளாக உள்ளது. துளசி தாஸின் போதனைகள் இந்துமத தத்துவத்திற்கு ஒரு பெரும் ஆற்றல் தரும் பலமாக உள்ளது. அவரையும் எப்படி வேண்டுமானாலும் ஏற்றுக் கொள்ளலாம். கவிஞராக, துறவியாக, வாழ்க்கை தத்துவ ஞானியாக ஆச்சார்யனாக, அதற்கெல்லாம் மேலாக ஒரு ஞானி, ராம பக்தனாக. வால்மீகியின் பூவுலக அவதாரம்.
”லோக ரக்ஷகா , சத் சிதானந்தா, பரமாத்மா, கோவிந்தா, பீமா நதிக்கரையில் உறையும் பாண்டுரங்கா, புண்டலீகனுக்கு வாக்களித்து, இடுப்பில் கைவைத்துக்கொண்டு பக்தர்களுக்கு அருள்புரிய காத்திருப் பவனே, யாதவ குலதிலகா , கொடிய பாதகர்களுக்கும் அருளும் காருண்ய மூர்த்தியே, கஜேந்திரனை காத்து மோக்ஷமளித்தவனே, கஜேந்திரன் காலை பிடித்து இழுத்து அதைக் க்கொல்ல நினைத்தததே தவிர முதலை ஒருநாளும் நின்னை நினைக்கவில்லையே. அப்படி இருந்தும் உன் சக்ராயுதம் கஜேந்திரனுக்கும் அந்த முதலைக்கும் அல்லவோ மோக்ஷம் அளித்தது.
ஆம். கஜேந்திரன் மோக்ஷம் அடைய செல்லும்போது முதலை சிரித்தது
”முதலையே , நீ எதற்காக சிரிக்கிறாய்? என்ன வேடிக்கை இங்கே நடக்கிறது? என்றார் நாராயணன்.
”வேடிக்கையை நானே சொல்லவேண்டுமா. கேள் சொல்கிறேன். நீ பரந்தாமன் பக்தர்களை காப்பவன் என்று புகழ்ந்தாலும் உன்னை எல்லோரும் பாபிகளையும் ரக்ஷிப்பவர் என்று சொல்கிறார்களே. அந்த பேர் உனக்கு தகுமா என்று யோசித்தேன். சிரிப்பு வந்தது”
நாராயணன் புரிந்து கொண்டார். ”ஓஹோ கஜேந்திரனுக்கு மட்டும் மோக்ஷம் கிடைக்கிறது. விண்ணுலகிற்கு ஒளி மிகுந்த தேரில் செல்கிறானே என்று பார்க்கிறாயா? உனக்கும் அதில் இடம் உண்டு என்பதை நீ அறியவில்லை” என்று சொல்லிவிட்டு அந்த தேரில் முதலைக்கும் மோக்ஷம் செல்ல இடமளித்தார் நாராயணன். பக்தர்கள் பக்தி இல்லாதவர்கள் எவருக்குமே மோக்ஷம் தருபவன் நாராயணன். இது துளசிதாஸரின் வாக்கு.
என் கிருஷ்ணா, ஆயிரம் நா படைத்த ஆதிசேஷனாலும் கூட உன் பெருமையை சொல்லி மாளாது. ஒன்று நிச்சயம். விண்ணுலக இந்திராதி தேவர்களுக்கு கூட பூமியில் மானிடனாக அவதரித்து, நீ ராமனாக, கிருஷ்ணனாக, உன் பக்தர்களுக்கு அருள் புரிந்த தேனை விட இனிய அனுபவம் கிடைக்கவில்லை. இனி வாய்ப்பும் இல்லை.
நீ தாயைவிட அன்பில் உயர்ந்தவன். இடுப்பில் அமர்த்தி, மேலே சந்திரனைக் காட்டி தாய் உணவு ஊட்டுவதை விட அதி நேசமாக பக்தர்களுக்கு உதவுபவன். பக்த விஜயத்தில் அப்பப்பா, உன் பக்தர்களுக்கு நீ செய்த சேவையின் இனிமை யார் அறிவார்?
உன் பக்தர்களுக்கு மித மிஞ்சிய அம்ருதத்தை ஊட்டுபவன். அந்த எச்சில் ஏதாவது இருந்தால் அதை அளித்தால் என் ஜென்மம் சாபல்யம் அடையும்.
இதெல்லாம் சொல்பவர் மஹிபதி என்ற மராத்தி கிருஷ்ண பக்தர். பக்த விஜயம் எழுதியவர். 200 வருஷங்களுக்கு முந்தியவர். அவரது பக்த விஜயத்தில் இருந்து தான் ”தெவிட்டாத விட்டலா”என்று தமிழில் 100 பாண்டுரங்கன், விட்டலன் கதைகள், மற்றும் ஆங்கிலத்தில் ”VITOBA THE NECTAR ” என்று ஆங்கிலத்தில் 100 விடோபா கதைகளும் எழுதினேன். தெவிட்டாத விட்டலா புத்தகம் ஒரு நகல் கூட இப்போது இல்லை. 2000 பிரதிகளும் விநியோகமாகிவிட்டது. ஆங்கில பதிவு விடோபா தி நெக்டார் பிரதிகள் இருக்கிறது. வேண்டுமென்று விரும்புவோர் என்னை அணுகலாம். 9840279080 வாட்ஸாப்ப் .
கலியுகத்திலும் சிறந்த கிருஷ்ண பக்தர்கள் விஸ்வாசிகள் வாழ்ந்தார்கள். இன்றும் வாழ்கிறார்கள். உன் பக்தர்கள் எங்கெங்கோ என்னென்ன பெயரிலோ, வாழ்ந்தவர்கள், வாழ்பவர்கள்.
தொடரும்
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.




