
நிர்வாண தசகம் – (தஸ ஸ்லோகி) நங்கநல்லூர் J K SIVAN
ஆதி சங்கரர்
நிர்வாண தசகம் – 3 & 4
न माता पिता वा न देवा न लोका न वेदा न यज्ञा न तीर्थं ब्रुवन्ति ।
सुषुप्तौ निरस्तातिशून्यात्मकत्वात्तदेकोऽवशिष्टः शिवः केवलोऽहम ॥३॥
Na matha pitha vaa na deva na loka,Na veda na yagna na theertham bruvanthi,
Sushupthou nirasthadhi soonyath makathwath,Thadekovasishta Shiva kevaloham. 3
ந மாதா பிதா வா ந தேவா ந லோகா ந வேதா ந யஜ்ஞா ந தீர்தம் ப்ருவந்தி |
ஸுஷுப்தௌ நிரஸ்தாதிசூந்யாத்மகத்வாத்ததேகோ(அ)வசிஷ்ட: சிவ: கேவலோ(அ)ஹம் ||௩||
நான் எது இல்லை, என்று இதுவரை ரெண்டு ஸ்லோகத்தில் சொன்ன ஆதி சங்கரர் மூன்றாவது ஸ்லோகத்தில் இன்னும் எதெல்லாம் கூட ‘நான்’ இல்லை என்று விவரிக்கிறார்.
‘நான்’ யாருக்கும் தாயும் இல்லை, தந்தையும் இல்லை. எனக்கும் அப்படி யாரும் இல்லை. நான் வானுலகில் வாழும் தேவதைகளோ தெய்வங்களோ இல்லை. அப்படி ஏதாவது பூமியில் காணப்பட்டால் நான் அதுவும் இல்லை. நான் வேதம் எதுவும் இல்லை. ஹோம குண்ட அக்னியோ யாக யஞமோ இல்லை. அப்படியானால் நான் ஒருவேளை புண்ய நதிகளோ என்று நீங்கள் எண்ணினால் அதுவும் தவறு. நான் அதுவும் இல்லை. நான் தூக்கத்திலும் இருப்பவன். திரும்ப மூன்றாவது முறை சொல்கிறேன். நான் சிவன், ஆத்மன். எங்கும் எதிலும் உள்ளவன். எதைப் பிரித்து எடுத்தாலும் அதற்கு பின்னாலும் உள்ளவன் நான் தான் .
சங்கரர் மேலே சொன்னதெல்லாம் ப்ரஹதாரண்யக உபநிஷத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
न साङ्ख्यं न शैवं न तत्पाञ्चरात्रं न जैनं न मीमांसकादेर्मतं वा ।
विशिष्टानुभूत्या विशुद्धात्मकत्वात्तदेकोऽवशिष्टः शिवः केवलोऽहम ॥४॥
Na sankhyam na saivam na thath pancha rathram, Na jainam , na meemamskader matham vaa,
Visishtanubhoothya vishudhath maka thwath, Thadekovasishta Shiva kevaloham. 4
ந ஸாங்க்யம் ந சைவம் ந தத்பாஞ்சராத்ரம் ந ஜைநம் ந மீமாம்ஸகாதேர்மதம் வா |
விசிஷ்டாநுபூத்யா விசுத்தாத்மகத்வாத்ததேகோ(அ)வசிஷ்ட: சிவ: கேவலோ(அ)ஹம் ||௪||
இன்னும் இப்படி வரிசையாக நான் யார் எல்லாம் இல்லை என்று சொல்லிவிட்டால் கடைசியில் மிஞ்சுவது நான் யார் என்பதை காட்டிவிடும் அல்லவா?
சாங்கிய கோட்பாடுகளா நீ என்று கேட்டால் ஹுஹும் நான் அதை சேர்ந்ததல்ல. அப்படியென்றால் சைவமோ? இல்லையே, அதுவும் இல்லை. ஓஹோ நான் வைணவர்கள் கடைபிடிக்கும் பாஞ்சராத்ரம் போல் இருக்கிறது என்று நினைத்தால் அதுவும் தவறு. நீங்கள் யோசிக்கும் முன்பு நானே சொல்லிவிடுகிறேன் நான் ஜைன மதமோ, மீமாம்ச சாஸ்திரமோ சொல்பவை எதுவும் இல்லை. ஏன் தெரியுமா? இந்த ஆத்மா இருக்கிறதே அது பரிசுத்த தனித்த சத்யம், உண்மை. அது தான் நான். விழிப்பு தூக்கத்தில் கனவு சகலத்திலும் இருப்பவன். நான் தான் சிவன். எல்லாவற் றையும் அகற்றினாலும் அதன் பின்னும் நிலையாக இருப்பவன்.
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



