
ஸௌந்தர்ய லஹரி ஸ்லோகங்கள் 76-85 – நங்கநல்லூர் J K SIVAN
ஆதி சங்கரர்
76. हरक्रोधज्वालावलिभिरवलीढेन वपुषा गभीरे ते नाभीसरसि कृतसङ्गो मनसिजः ।
समुत्तस्थौ तस्मादचलतनये धूमलतिका जनस्तां जानीते तव जननि रोमावलिरिति ॥76
Hara krodha jwalaavalibhir avaleedena vapusha Gabhire thee nabhisarasi kruthasangho manasija
Samuthasthou thasmath achalathanaye dhoomalathika Janastham janithe thava janani romaavalirithi
76 ஹரக்ரோத ஜ்வாலாவலீபி ரவலீடேன வபுஷா கபீரே தே நாபீ ஸரஸி க்ருதஸங்கோ மனஸிஜ:
ஸமுத்தஸ்த்தௌதஸ்மா தசல தனயே தூமலதிகா ஜனஸ்தாம் ஜானீதே தவ ஜனனி ரோமாவலிரிதி
மலையரசன் பெண்ணே ! ஹிமகிரி தனயே, பரமசிவனுடைய கோபத்தினின்று தோன்றிய அக்னி ஜ்வாலை களால் சூழப்பெற்ற சரீரம் உடையவனாய் உன்னுடைய ஆழமான நாபி என்னும் மடுவில் நாட்டம் உடையவன் ஆனான், அதில் மூழ்கினான், அதிலிருந்து கொடிபோன்ற புகை கிளம்பிற்று. அதை ஜனங்கள் உன்னுடைய நாபியிலிருந்து மெல்லிதாய் மேலே படரும் ரோம வரிசை என்றே கருதுகிறார்கள். மன்மதன் மக்கள் மனதை ஆக்கிரமிப்பவன், சர்வாதிகாரி. அவனை வெல்வது என்பது எவருக்கும் எளிதே அல்ல. திட சித்தம், பற்றற்ற வைராக்யம் கொண்டவர்களாக ஞானிகளால் மட்டுமே அவனை வெல்லமுடியும். ஞான தீபமான, ஆத்மநாதன் சிவனிடம் தன் கை வரிசையை காட்ட மன்மதன் கரும்பு வில்லால் மலரம்புகளை சிவன் மேல் செலுத்தி, அதனால் தன்னுடைய த்யானம் தடைப்பட்ட சிவன் நெற்றிக்கண்ணைத் திறக்க அக்கணமே மன்மதன் எரிந்து சாம்பலானான்.
77. यदेतत्कालिन्दी-तनुतर-तरङ्गाकृति शिवे कृशे मध्ये किञ्चिज्जननि तव यद्भाति सुधियाम् ।विमर्दा-दन्योन्यं कुचकलशयो-रन्तरगतं
तनूभूतं व्योम प्रविशदिव नाभिं कुहरिणीम् ॥ 77
Yadhethath kalindhi thanu thara ngaa kruthi shive Krushe mahye kinchid janani thawa yadbhathi sudheeyam
Vimardha –dhanyonyam kuchakalasayo –ranthara gatham Thanu bhootham vyoma pravishadhiva nabhim kuharinim
யதேதத் காலிந்தீ தனுதர தரங்காக்ருதி ஶிவே க்ருஶே மத்யே கிஞ்சிஜ்ஜனனி தவ யத்பாதி ஸுதியாம்
விமர்த்தா தன்யோன்யம் குசகலஶயோ ரந்தரகதம் தநூபூதம் வ்யோம ப்ரவிஶதிவ நாபிம் குஹரிணீம்
77. மங்களஸ்வரூபியே ! தாயே ! உன்னுடைய மெலிந்த இடையில் யமுனா நதியின் மிக மெல்லிய அலையின் வடிவு போன்ற யாதொரு இந்த ஒன்றுள்ளதோ – அதாவது ரோமவரிசையின் சிறு பொலிவு உண்டோ – எது ஞானிகளுக்கு தியானத்தில்புலப்படுகிறதோ – அது கலசங்கள் போன்ற இரு நகில்களின் நடுவில் அகப்பட்டுக் கொண்டதும், நகில்கள் ஒன்றோடொன்று உறைவதால் மெலிந்ததுமான நீல நிறமுள்ள ஆகாயம் குகைபோன்ற தொப்புள் குழியில் புகுவதுபோல் தோன்றுகிறது. அம்பாள் தான் சிவன், அம்பாள் லாவண்யத்தை வர்ணிக்கும் ஆதி சங்கரர் யமுனை நதி சிறிய கோடு போன்ற அளவிலிருந்து வெள்ள ப்ரவாஹமாக கடல் போல் பரந்து விரிந்து பாய்வதைப் போல் கொடியிடை முதல் மார்புபிரதேசம் வரை அகன்றது என்கிறார்.
78. स्थिरो गङ्गावर्तः स्तनमुकुलरोमावलिलता-कलावालं कुण्डं कुसुमशरतेजोहुतभुजः । रतेर्लीलागारं किमपि तव नाभिर्गिरिसुतेबिलद्वारं सिद्धेर्गिरिशनयनानां विजयते ॥ 78॥
Sthiro gangavartha sthana mukula romaa vali latha Kalaabhalam kundam kusuma sara thejo hutha bhuja
Rathe leelamgaram kimapi thava nabhir giri suthe Bhila dwaram siddhe rgirisa nayananam vijayathe
78 ஸ்திரோ கங்காவர்த்த: ஸ்தன முகுல ரோமவலி லதா கலாவாலம் குண்டம் குஸுமஶர தேஜோ ஹுதபுஜ:
ரதேர் லீலாகாரம் கிமபி தவ நாபிர் கிரிஸுதே பிலத்வாரம் ஸித்தேர் கிரிஶ நயனானாம் விஜயதே
மலையரசன் பெண்ணே ! உன்னுடைய நாபியானது கங்கை நீரின் சுழலா, ஆனால் அசையாமல் இருக்கிறதா? நகில்களாகிய மொட்டுக்களுடன் கூடிய ரோமவரிசையாகிற கொடியின் கிழங்கு இருக்கும் பாத்தியா ? மன்மதனுடைய ஒளியாகிய அக்கினியின் ஹோமகுண்டமா ? ரதியினுடைய விளையாட்டு வீடா ? பரமசிவனுடைய கண்கள் செய்த தவம் சித்திக்கும் குகையின் துவாரமா ? இன்னதென்று கூறமுடியாததாக அது விளங்குகிறது.“நாப்யாலவால ரோமாளி லதாபல குசத்வயீ” – நாபி எனும் பாத்தியிருந்து முளைத் தெழுந்தகொடி போன்ற ரோமவரிசையின் உச்சியில் பழுத்த பழங்களை ஒத்த இரு ஸ்தனங்களை உடையவள்” என்கிறது லலிதா ஸஹஸ்ரநாமம்.
79. निसर्गक्षीणस्य स्तनतटभरेण क्लमजुषो नमन्मूर्तेर्नारीतिलक शनकैस्त्रुट्यत इव ।चिरं ते मध्यस्य त्रुटिततटिनीतीरतरुणा समावस्थास्थेम्नो भवतु कुशलं शैलतनये ॥ 79॥
Nisargha ksheenasya sthana thata bharena klamajusho Namanmurthe narree thilaka sanakaii –sthrutayatha eva
Chiram thee Madhyasya thruthitha thatini theera tharuna Samavasthaa sthemno bhavathu kusalam sailathanaye
நிஸர்க்க க்ஷீணஸ்ய ஸ்தன தட பரேண க்லமஜுஷோ நமன்மூர்த்தேர் நாரீதிலக ஶனகைஸ் த்ருட்யத இவ
சிரம் தே மத்யஸ்ய த்ருடித தடினீ தீர தருணா ஸமாவஸ்தா ஸ்தேம்னோ பவது குஶலம் ஶைலதனயே
பெண்குலத்தின் திலகமான பார்வதியே ! இயற்கையாகவே மெல்லியதும் நகில்களின் பாரத்தினால் வருந்துவதும் அதனால் வளைந்த வடிவுள்ளதும் மெல்ல மெல்ல ஒடிந்துபோவதுபோல் இருப்பதும், இடிந்துபோன நதியின் கரையில் இருக்கும் மரத்திற்கு சமமான நிலையில் நிற்பதுமான இடைக்கு நீண்டகாலம் க்ஷேமம் உண்டாகட்டும்.
சின்னஞ் சிறிய மருங்கினில் சாத்திய செய்யபட்டும்
பென்னம் பெரிய முலையும் முத்தாரமும் பிச்சிமொய்த்த
கன்னங் கரிய குழலும்கண் மூன்றும் கருத்தில்வைத்துத்
தன்னந் தனியிருப் பார்க்கிதுபோலும் தவமில்லையே — அபிராமியந்தாதி53
80. कुचौ सद्यःस्विद्यत्तटघटितकूर्पासभिदुरौ कषन्तौ दोर्मूले कनककलशाभौ कलयता । तव त्रातुं भङ्गादलमिति वलग्नं तनुभुवा त्रिधा नद्धं देवि त्रिवलि लवलीवल्लिभिरिव ॥ 80॥
Kuchou sadhya swidhya-sthata =ghatitha koorpasabhidurou Kasnthou dhormule kanaka kalasabhou kalayatha
Thava thrathum bhangadhalamithi valagnam thanubhava Thridha naddham devi trivali lavalovallibhiriva
குசௌ ஸத்ய: ஸ்வித்யத் தடகடித ஸூர்ப்பாஸபிதுரௌ க ஷந்தௌ தோர் மூலே கனக கலஶாபௌ கலயதா
தவ த்ராதும் பங்காதலமிதி வலக்னம் தனுபுவா த்ரிதா நத்தம் தேவி த்ரிவலி லவலீ வல்லிபிரிவ
80, இடையில் மூன்று ரேகைகளின் அழகு -மன்மதனை வெல்லும் திறமை, இந்திரஜாலம் மிகுந்த
தேவியே ! பரமேசுவரனுடைய பெருமையை நினைத்த அதே க்ஷணத்தில் உடலுடன் ஒட்டிக்கொண்டிருக்கிற ரவிக்கையை கிழிப்பனவாகவும், தோளின் அடிப்பக்கத்தில் உறைகின்றனவாகவும், பொன்குடங்களைப் போன்ற உனது நகில்களை செய்கின்ற மன்மதனால் உனது இடுப்பை ஒடிந்துபோகாமல் போதுமான வகையில் காப்பதற்கு இருக்கட்டும் என்று இடுப்பில் மூன்று மடிப்புகளாகத் தோன்றும் வள்ளிக் கொடிகளால் மூன்றுதடவை சுற்றிக் கட்டப்பட்டதுபோல் காண்கின்றது.
81. गुरुत्वं विस्तारं क्षितिधरपतिः पार्वति निजा- न्नितम्बादाच्छिद्य त्वयि हरणरूपेण निदधे । अतस्ते विस्तीर्णो गुरुरयमशेषां वसुमतीं नितम्बप्राग्भारः स्थगयति लघुत्वं नयति च ॥81॥
Guruthvam vistharam ksithidharapathi paravathy nijaath Nithambha Dhhachhidhya twayi harana roopena nidhadhe
Athasthe vistheerno guruyamasesham vasumathim Nithambha =praabhara sthagayathi lagutwam nayathi cha 81
குருத்வம் விஸ்தாரம் க்ஷிதிதரபதி: பார்வதி நிஜாத் நிதம்பா தாச்சித்ய த்வயி ஹரணரூபேண நிததே
அதஸ்தே விஸ்தீர்ணோ குருரய மஶேஷாம் வஸுமதீம் நிதம்ப ப்ராக்பார: ஸ்தகயதி லகுத்வம் நயதி ச
81. பார்வதியே ! மலையரசன் கனத்தையும் விஸ்தாரத்தையும் தன்னுடைய அடிவாரத்தின்றும் எடுத்து உன்னிடத்தில் கொடுத்துவிட்டார் போலும். அதனால்தான் பருத்தும் விசாலமாகவும் இருக்கிற உன்னுடைய இந்த (hip) நிதம்பத்தின் பின்புறம் பூமி முழுவதையும் மறைக்கிறது, அதை லேசாகவும் செய்துவிடுகிறது.
82. करीन्द्राणां शुण्डान् कनककदलीकाण्डपटली- मुभाभ्यामूरुभ्यामुभयमपि निर्जित्य भवती । सुवृत्ताभ्यां पत्युः प्रणतिकठिनाभ्यां गिरिसुते विधिज्ञ्ये जानुभ्यां विबुधकरिकुम्भद्वयमसि ॥ 82॥
கரீந்த்ராணாம் ஶுண்டான் கனககதலீ காண்டபடலீம் உபாப்யாமுரூப்யா முபயமபி நிர்ஜித்ய பவதி
ஸுவ்ருத்தாப்யாம் பத்யு: ப்ரணதி கடினாப்யாம் கிரிஸுதே விதிஜ்ஞே ஜானுப்யாம் விபுத கரிகும்ப த்வயமஸி
82 யானையின் துதிக்கை போன்ற தொடை-ஜலஸ்தம்பம், இந்திரபதவிக்கொத்த பதவி
பகவதி ! பார்வதி ! சிறந்த யானைகளின் துதிக்கைகள், பொன்வாழை மரங்கள் ஆகிய இவ்விரண்டையும் இரண்டு தொடைகளால் ஜயித்தும் சாஸ்திரத்தை அறிந்தவளே ! பதியாகிய பரமசிவனுக்கு நமஸ்காரம் செய்யும் பழக்கத்தால் கடினமாகவும் நன்கு திரண்டு உருண்டும் இருக்கும் முழங்கால் முட்டிகளால் இந்திரனுடைய யானையாகிய ஐராவதத்தின் இரண்டுகும்பங்களையும் ஜயித்தும் இருக்கிறாய்.
83. पराजेतुं रुद्रं द्विगुणशरगर्भौ गिरिसुते निषङ्गौ जङ्घे ते विषमविशिखो बाढमकृत ।यदग्रे दृश्यन्ते दशशरफलाः पादयुगली- नखाग्रच्छद्मानः सुरमकुटशाणैकनिशिताः ॥83॥
Paraajethum rudhram dwigunasara garbhoy girisuthe Nishanghou Unghe thee vishamavishikho bhada –maakrutha
Yadagre drishyanthe dasa satra phalaa paadayugali Nakhagrachadhyan sura makuta sanayika nishitha
பராஜேதும் ருத்ரம் த்விகுணஶரகர்ப்பௌ கிரிஸுதே நிஷங்கௌ ஜங்கே தே விஷமவிஶிகோ பாட மக்ருத
யதக்ரே த்ருஶ்யந்தே தஶஶர பலா: பாதயுகலீ நகாக்ரச்சத்மான: ஸுர மகுட ஶாணைக நிஶிதா:
83.பார்வதி ! பஞ்சபாணனாகிய மன்மதன் ருத்திரனை ஜயிப்பதற்கு உன்னுடைய முழந்தாள்களை நிறைந்த அம்பறாத் தூணிகளாக செய்திருக்கிறான். ஆம், நிச்சயம், அவ்வம்பறாத் தூணிகளின் நுனியில் இரண்டுபாதங்களுடைய நகங்களின் நுனிகள் எனப் புனைப்பெயர் கொண்டவையும் தேவர்களின் கிரீடங்களாகிய சாணைக் கற்களால் தீட்டப் பெற்றவையுமான பத்துப் பாணங்களின் இரும்புமுனைகள்தான் காணப்படுகின்றன.
84. श्रुतीनां मूर्धानो दधति तव यौ शेखरतया ममाप्येतौ मातः शिरसि दयया धेहि चरणौ । ययोः पाद्यं पाथः पशुपतिजटाजूटतटिनी ययोर्लाक्षालक्ष्मीररुणहरिचूडामणिरुचिः ॥ 84॥
ஶ்ருதீனாம் மூர்த்தானோ தததி தவ யௌ ஶேகரதயா மமாப்யேதௌ மாத: ஶிரஸி தயயா தேஹி சரணௌ
யயோ: பாத்யம் பாத: பஶுபதி ஜடாஜூட தடினீ யயோர் லாக்ஷா லக்ஷ்மீ ரருண ஹரிசூடாமணி ருசி:
84. தாயே ! உன்னுடைய எந்த பாதங்களை வேதங்களின் தலைபோன்ற உபநிஷதங்கள் சிரோபூஷணங்களாக தரிக்கின்றனவோ அந்தப் பாதங்களை என்னுடைய தலையிலும் கூட தயைகூர்ந்து வைத்தருள்வாயாக. அவற்றிற்கு பாத்யமாக அளிக்கப்பட்ட தீர்த்தம் பரமசிவனுடைய சடையில் இருக்கும் கங்கையாகிறது. அவற்றிற்கு பூசப்பட்ட லாக்ஷா ரஸத்தின் பொலிவு சிவப்பான காந்தியுடன் கூடினதும் விஷ்ணுவின் சிரஸை அலங்கரிப்பதுமான மாணிக்கமோ என்று எண்ணும்படி இருக்கின்றது.அம்பாளுடைய ஊடலைத்தணிக்கப் பரமசிவன் அம்பாளுடைய பாதத்தில் வணங்கும்போது அவருடைய சடையில் இருக்கும் கங்கை பெருகி அம்பாளுக்குப் பாத்யம் மாதிரி ஆகிறது. – லக்ஷ்மீதரர்
85. नमोवाकं ब्रूमो नयनरमणीयाय पदयो- स्तवास्मै द्वन्द्वाय स्फुटरुचिरसालक्तकवते ।असूयत्यत्यन्तं यदभिहननाय स्पृहयते पशूनामीशानः प्रमदवनकङ्केलितरवे ॥ 85॥
85. நமோவாகம் ப்ரூமோ நயன ரமணீயாய பதயோ: தவாஸ்மை த்வந்த்வாய ஸ்புட ருசி ரஸாலக்தகவதே
அஸூயத் யத்யந்தம் யதபிஹனனாய ஸ்ப்ருஹயதே பஶூனா மீஶான: ப்ரமதவன கங்கேலி தரவே 85
கண்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், பிரகாசம் மிக்கதாகவும், உலராத செம்பஞ்சுக்குழம்புடன் கூடியதாகவும் உள்ள உன்னுடைய பாதங்கள் இவ்விரண்டிற்கும் நமஸ்கார வார்த்தையை சொல்லுகிறோம். அந்தப் பாதங்களால் உதைக்கப் படுவதை விரும்புகிற நந்தவனத்தில் உள்ள அசோக மரத்தினிடம் பசுபதியானவர் மிகவும் பொறாமைப் படுகிறார். கங்கேலி, காமகேலி அல்லது அசோகம் எனப்படும் மரம் சிவப்புப்புஷ்பங்களைக் கொண்டது. அது புஷ்பிக்காத போது உத்தம ஸ்த்ரீகளின் பாதஸ்வர்சம் ஏற்பட்டால் புஷ்பிக்கும் என்பது நம்பிக்கை. “பாதாஹத: ப்ரமதயா விகஸத்யசோக” என்பது பழமொழி.
கங்கேலி, காமகேலி அல்லது அசோகம் எனப்படும் மரம் சிவப்புப்புஷ்பங்களைக் கொண்டது. அது புஷ்பிக்காத போது உத்தம ஸ்த்ரீகளின் பாதஸ்வர்சம் ஏற்பட்டால் புஷ்பிக்கும் என்பது நம்பிக்கை. “பாதாஹத: ப்ரமதயா விகஸத்யசோக” என்பது பழமொழி.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



