26.2.2023 ANAKAPUTHTHUR SIVAN J K SIVAN

அனகா புதூர்  அகத்தீஸ்வரர் –  நங்கநல்லூர் J K  SIVAN 

நண்பர்  ஸ்ரீனிவாசனுடன்  ஆலய தர்சனம் செய்வது ஒரு அருமையான அனுபவம்.  26/2/2023  ஞாயிறு காலை  வழக்கம்போல  ஆறரை மணிக்கு புறப்பட்டு  முதலில்  தரிசனம் செய்தது  பல்லாவரம் பம்மல் தாண்டி வலது புறம் குன்றத்தூர் போகும் சாலையில் உள்ள  அகத்தீஸ்வரரை தான் முதலில்  அனகா புத்தூர்  என்ற  பெயர் கொண்ட ஸ்தலத்தில் தரிசித்தோம்.

 காலை 7 மணிக்கு  அங்கே  ஓரிருவர் மட்டும் தான் அந்த நேரத்தில் இருந்தார்கள். சாலை அதிகம் அகலமானது அல்ல. திருப்பம் வேறு. ஆகவே  ஜாக்கிரதையாக  தான் வண்டியை நிறுத்த இடம் தேடவேண்டும். வயதான பக்தர் ஒருவர்  ஜலத்தால்  தரையை அலம்பி துடைத்துக் கொண்டிருந்தார்.

தமிழ் இலக்கியத்தில்  சைவ மதத்தில்  பாடல் பெற்ற ஸ்தலங்கள்  வைப்பு ஸ்தலங்கள்  என்ற பிரிவு உண்டு. நாயன்மார்கள் நேரில் சென்று வழிபாட்டு பதிகம் போல்  பாடல்கள் பாடிய ஸ்தலங்களை பாடல் பெற்ற ஸ்தலம் என்கிறோம்.  வேறே எங்கோ ஒரு ஸ்தலத்தில் பாடும்போது  மற்றொரு ஸ்தல சிவனைப் பாடும் பாடல்களை உடையது வைப்பு  ஸ்தலம்.  தேவாரத்தில் அப்படி திருநாவுக்கரசரால்  பாடப்பட்ட ஸ்தலம் அனகாபுத்தூர்.  நந்திகேஸ்வரம், மஹாபலீஸ்வரம் , நாகேஸ்வரன், கோடீஸ்வரன், கொண்டீஸ்வரம்,குக்குடேஸ்வரம், அக்கீஸ்வரம் அல கேஸ்வரம்,அயனீஸ்வரம்  அத்தீஸ்வரம் ஸித்தீஸ்வரம், ராமேஸ்வரம் போன்ற ஸ்தலங்களில்  பாடல்களை பாடும்போது அதோடு அகத்தீஸ்வரம் பற்றியும் பாடியிருக்கிறார்.

நாடகமா டிடநந்தி கேச்சுரமா காளேச்
        சுரநாகேச் சுரநாக ளேச்சுராநன் கான
கோடீச் சுரங் கொண்டீச் சுரந்திண் டீச் சுரங்
           குக்குடேச் சுரமகத்தீச் சுரங்கூ றுங்கால்
ஆடகேச் சுரமகத்தீச் சுரமய னீச்சுர
            மத்தீக்சுரஞ் சித்தீக்கர மந்தண் கானல்
ஈடுதிரை யிராமேச்சுர மென்றென் றேத்தி
            யிறைவனுறை சுரம்பலவு மியம்பு வோமே
…. திருநாவுக்கரசு சுவாமிகள் ( 6-71-8 )

அமைதியான இந்த கோவிலில் சிவன் கம்பீர  லிங்கமாக  காட்சி தருகிறார் . அம்பாள் ஆனந்தவல்லி.   மூன்றடுக்கு  ராஜகோபுரம்,  பலிபீடம், கொடிமரம், நந்திகேஸ்வரன்.  இவர்களை தரிசனம் செய்துவிட்டு மூலவர்  கருவறை அருகே சென்று கைகூப்பி நின்றேன். உயரமான பீடம். வட்ட வடிவ  ஆவுடையார் மேல் அகத்தீஸ்வரர்  நம்முடைய மனம் எனும் அகத்தில் குடிகொண்டு ஆளுமை செய்யம்  ஈஸ்வரன்.  வண்ணமயமாக  வாசலில் இரு த்வார பாலகர்கள்.  மூலவர் கர்பகிரஹத்தை  சுற்றி  கோஷ்டங்களில்  விநாயகர்,தக்ஷிணாமூர்த்தி, மஹா விஷ்ணு,  ப்ரம்மா துர்கை சந்நிதிகள். ஆலயத்தில் தனியாக  ஐயப்பனுக்கு  சந்நிதி, அங்கே ஒரு முதியவர் அருமையாக பாடி விபூதி வழங்கினது  அன்றைய முதல் பிரசாதம்.தனித்தனியே  விநாயர், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், பைரவர்,  நவகிரஹங்கள்.   அம்பாள் ஆனந்தவல்லியின்  சதுர் புஜங்களில்  மேல் இரண்டில் பாசாங்குசம் மற்றவை அபய,  வரத,  ஹஸ்தங்கள்.
கோவிலில் தாராளமாக இடம் உள்ளது.சந்நிதிகள், கர்பகிரஹம், அர்த்த  மண்டபம், முக மண்டபம் எல்லாமே சீரமைக்கப் பட்டு பிரதக்ஷணம் செய்ய  சௌகர்யமாக இருக்கிறது. 

அநாகப்புத்தூர்  அகத்தீஸ்வரர் ஆலயம்   பல்லவ காலத்தில் உருவாகி பிற்காலத்தில் பலரால்  புனருத்தாரணம் செய்யப்பட்டு  பக்த்ர்களால்  பராமரிக்கப்பட்டு  10 வருஷங்களுக்கு முன்  கும்பாபிஷேகம் நடைபெற்ற  ஒரு பழைய  ஆலயம்.. அ னகாபுத்தூர் அகத்த்தீஸ்வரர்   தொண்டைமண்டல 108 பிரதான  சிவலிங்கங்களில் ஒருவர்.  வனவாசத்தில் பாண்டவர்கள் இங்கே வந்து  சிவ தரிசனம் பெற்றதாக ஒரு  ஐதீகம் .  ஒரு மண்டலம் இங்கே வந்து தரிசனம் பெற்று தியானம் செய்தவர்களுக்கு குறைகள் வியாதிகள் நீங்கும் என்று நம்பிக்கை. ஆனை (யானை) தும்பிக்கையில் ஜலம்  கொண்டுவந்து புஷ்பத்தோடு பூஜை செய்ததால் ஆனைக்கா புதூர்  இப்போது சுருங்கி அனகாபுத்தூர். சென்னை தாம்பரம் திருச்சி பெரிய சாலையில் பல்லாவரத்தில் இருந்து மேற்கே  3.3. கி.மீ. தூரம் தான்.
அடிக்கடி இந்த பக்கம் செல்லும்போது அகத்தீஸ்வரரை தரிசனம் செய்ய வசதி இருக்கிறதே.  நம்மால் கோவில் கட்ட முடியாவிட்டாலும் யாரோ கட்டிய கோவிலுக்கு சென்று வழிபடுவோமே .  I took photo of  Mrs and Mr Srinivasan and Mrs Sivan   in front of  the old Siva temple.

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2561

One comment

  1. Namaskaram mama,

    Thanks very much for the elaborate and wonderful post on Anakaputhur Agastheeswarar,Mahaperiyavaa sharanam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;