
தாமோதர மாதம் – நங்கநல்லூர் ஜே .கே. சிவன்
8 பால்ய நண்பா வாடா.
கிருஷ்ணனுக்கு ஏழை பணக்காரர் வித்யாசமே தெரியாது. கிடையாது. இல்லாவிட்டால் சிறு வயதில் தன்னோடு படித்த சுதாமா பரம ஏழையாக வாசலில் துவாரகையில் நின்றிருந்தபோது கேள்விப்பட்டு உள்ளேயிருந்து ஓடிவந்து அவனை உபசரித்து அணைத்து உள்ளே அழைத்துக்கொண்டு போவானா? அந்த சம்பவத்தை மீண்டும் நினைவூட்டுகிறேன்.
ஐந்தாயிரம் வருஷங்களுக்கு முன்பு அது ஒரு மார்கழி முதல் புதன் கிழமை. அன்று தான் கிருஷ்ணனை சந்திக்க அவன் பால்ய நண்பன் பரம ஏழை பிராமணன் சுதாமா என்கிற குசேலன், மடியில் சிறிய அவல் மூட்டையுடன் துவாரகையில் சந்தித்தான். ஏன்?
சின்னவயதில், பரம ஏழைப் பிராமணன் குழந்தையாக வளர்ந்த சுதாமா குரு சாந்தீபனியிடம் சென்று கல்வி கற்ற போது இன்னும் ரெண்டு மாணவர்கள் குருகுல வாசம் செய்தவர்கள். ஒருவன் பலராமன், மற்றவன் கிருஷ்ணன். ரெண்டுபேருமே மதுராவிலிருந்து வரும் ராஜ குடும்ப மாணவர்கள். குருகுல வாசம். சுதாமாவுக்கும் அப்படியே தான் என்பதால் நல்ல நண்பர்கள் ஆனார்கள். அவ்வப்போது சுதாமா தனது வீட்டுக்கு செல்வான். வீட்டிலிருந்து அருமையான பக்ஷணங்கள் பண்ணிக் கொடுப்பார்கள். அதெல்லாம் கொண்டுவந்து நண்பர்களோடு சேர்ந்து தின்பான். குருகுலவாசம் முடிந்தது.
பலலராமனும் கிருஷ்ணனும் குருகுலவாசம் முடிந்து துவாரகை போய்விட்டார்கள். சுதாமா வீடு திரும்பி னான். திருமணம் நடந்தது. காலம் ஓடியது. வறுமை அவனை விடவில்லை. குசேலன் ரொம்ப பெரிய குடும்பஸ்தன் ஆகிவிட்டான். குழந்தைகள் என்ன ஒண்ணா ரெண்டா!! 27. மினி பள்ளிக்கூடமே நடத்த லாம். இது அத்தனைக்கும் வயிறார தினமும் மூணு வேளை சாப்பாட்டுக் கே ஒரு மனிஷன் ஓவர்டைம் பண்ணி தான் சம்பாதிக்கணும். ஆனால் அவன் உஞ்ச வ்ருத்தி எடுத்து கொண்டு வந்த சொல்ப வருமானத் திலேயே, கடைக்கு போகாமல், டிவி பார்க்காமல் அவர் மனைவி சுசீலா அந்தகுடும்பத்தை ஓட்டினாள் . வறுமை தாங்க முடியாத நிலையை எட்டியபோது யோசித்தாள், வழி தேடும்போது ஏதாவது ஒன்று தோன்றுமல்லவா?
”நாதா, உங்கள் நண்பன் ராஜாவாகிவிட்டானாமே, கிருஷ்ணன் உங்கள் பால்ய நண்பன், ரொம்ப நல்லவன். என்னைக் கண்டால் ரொம்ப பிடிக்கும் என்பீர்களே அடிக்கடி. இப்போது இந்த நிலையில் நீங்கள் ஒருநாள் அவரைச் சென்று நேரில் பார்த்து நமது நிலையை சொல்லி கொஞ்சம் பணம் பொருள் உதவி பெற்று வாருங்கள். இனிமேல் வறுமை நம்மை ஒவ்வொருவராக கொன்றுவிடும் என்ற நிலை வந்து விட்டது. வேறு வழியே தெரியவில்லை..”
”சுசீலா, நான் கிருஷ்ணனோடு படித்தவன் என்றாலும் அவன் இப்போது துவாரகை ராஜா. இதுவரை நான் அவனிடம் எந்த உதவியும் கேட்டதில்லை, என் ஞாபகம் அவனுக்கு இருக்குமா என்றும் தெரியவில்லை. எதற்கும் நீ சொல்வதால் நான் போகிறேன். யாசகம் கேட்கிறேன்”
தரித்ரத்தின் உச்சத்தில் இருந்தாலும், வெறும் கையோடு பழைய நண்பனை, அதுவும் ராஜாவை இருப்பவனை, எப்படி பார்ப்பது என்று எங்கோ கொஞ்சம் கடன் வாங்கி நெல் பொறித்து அவல் பொட்டலம் கொடுத்து அனுப்பினாள் . மேல் துண்டில் அதை முடிந்து கொண்டு குசேலர் துவாரகை நடந்தார்.
துவாரகையில் கிருஷ்ணன் அரண்மனை வாசலில் செக்யூரிட்டி ஆட்கள் ஏற இறங்க சுதாமாவை பார்த்து
”யாரு அய்யரே நீங்க, என்ன வேணும் ?” என்கிறார்கள்
.
”நான் சுதாமா, உங்க ராஜா கிருஷ்ணன் என்னுடைய நண்பன். நாங்க இருவரும் ஒண்ணாகவே ஒரே வாத்யார் கிட்டே படிச்சவங்க. கிருஷ்ணனை பார்க்க வந்தேன்”
“இந்த கிழிசல் வேஷ்டி ஆசாமி கொஞ்சம் ஸ்க்ரு லூஸ் போல இருக்கு, பாவம்” — காவலாளிகள் சுதாமாவை உள்ளே போக விடவில்லை .
புண்யவான் ஒரு காவலாளி மட்டும் உள்ளே சென்று ராஜாவிடம் விவரம் சொன்னான்.
”யார் வந்திருக்கிறார்? சுதாமாவா, என்னோடு படித்தவர் என்று சொன்னாரா? இதோ நானே வருகிறேன்”
மிக்க சந்தோஷத்துடன் கட்டின துணியோடு கால் செருப்பு கூட இல்லாமல் கிருஷ்ணன் வாசலுக்கு ஓடி வந்தான். வெளியே அவன் நண்பன் பரம தரித்ரன் குசேலன் நின்றுகொண்டிருந்தான். அப்படியே இழுத்து பிடிச்சு நண்பனை கட்டிகொண்டான். செக்யூரிட்டி ஆட்களுக்கு ஹார்ட் அட்டாக்!!!!
“ சுதாமா, நீ வருவதாக ஏனப்பா முன்கூட்டியே தகவல் சொல்லவில்லை . நாம் சந்தித்து எத்தனை காலமாகி விட்டது? நான் உனக்கு தேர் அனுப்பியிருப்பேனே நண்பா !.
நண்பனைக் கட்டி அணைத்து உள்ளே அழைத்துச் சென்று தன் கட்டிலில் அமர்த்தி அவன் புண் பட்ட பாதங் களை பிடித்து விட்டு கொண்டிருந்தான் கண்ணன்.
“இல்லை, கிருஷ்ணா, என்னதான் நாம் சிறுவர்களாக இருந்தபோது சாந்திபநி ரிஷியிடம் ஒண்ணாக குருகுல வாசம் செய்தாலும், நீ இப்போ ராஜா எப்போதும் ராஜ்ய விவகாரங்களில் அலைந்துகொண்டு பிரயாணத்தில் இருப்பவன். உன்னை ஒரு சாதாரணன் நான் எப்படி யப்பா பழைய ஸ்நேஹிதத்தை சாக்காக வைத்து உறவு கொண்டாட முடியும்.??”
“சுதாமா, நீ இப்போ வேறே சுதாமாவாக மாறிவிட்டாயா? . நான் உன்னை என்றும் என் பால்ய நண்பனாக அல்ல வோ பார்க்கிறேன்!!.
“கிருஷ்ணா, நானும் மாற வில்லையடா. நம் வாழ்க்கை தரம் தான் நடுவில் ரொம்ப தூரத்தை……”
“நிறுத்து சுதாமா, வித்தியாசம் மனதில் தான் உண்டாகி றது இயற்கையில் இல்லை. உனக்கு தெரியாததையா நான் சொல்லபோகிறேன்”.
“அது சரி, நீ எனக்கு அப்போதெல்லாம் ஏதாவது உன் வீட்டிலிருந்து தினமும் சாப்பிட கொண்டு தருவாயே. இன்று என்ன கொண்டு வந்தாய்?”
சுசீலா கட்டிகொடுத்த சிறு அவல் பொரி மூட்டையை இதுவரை மறந்தோ அல்லது எப்படி இதை ஒரு ராஜாவுக்கு கொடுப்பது என்றோ தெரிந்தும் கொடுக் காமல் இடுப்பில் வைத்திருந்ததை கண்ணன் பார்த்து விட்டான்.
”எப்போதும் உன் வீட்டிலிருந்து எங்களுக்கு ஏதாவது கொண்டு வந்து கொடுப்பாய், இன்று என்ன கொண்டு
வந்திருக்கிறாய் சுதாமா?”
உரிமையோடு சுதாமாவின் இடுப்பு வேஷ்டி முடிச்சி லிருந்து அவிழ்த்து பிரித்து அவலை ஒரு வாய் உண் டான் கிருஷ்ணன்..
“எனக்கில்லையா” என்று ருக்மணி உள்ளேயிருந்து வந்து மீதியை கிருஷ்ணன் கையிலிருந்து பிடுங்கிக் கொண்டு போய் விட்டாள்.
“ருக்மணி, உனக்கு தெரியுமா எப்போதும் சுதாமா தான் எனக்கு ஏதாவது கொடுப்பான் நான் ஒன்றுமே அவனுக்
கு தந்ததில்லை” என சிரித்தான் கிருஷ்ணன். வாய் ஓயாமல் இருவரும் பழங்கதைகள் சுவாரஸ்யமாக பேசினார்கள்
ஒரு சில காலம் கிருஷ்ணனுடன் இருந்து விட்டு சுதாமாபுறப்பட்டான் கிருஷ்ணனின் தேர்பாகன் அவனை ஊரில் கொண்டு விட்டான்..
வீடு நெருங்கும் சமயம் தான் சுரீர் என்று தேள் கொட்டியது சுதாமாவுக்கு.
“அடாடா, சுசீலா கிருஷ்ணனிடம் நிதி பொருள் உதவி கேட்க சொன்னாளே. அதற்காக தானே கிருஷ்ணனிடம் சென்றோம். அதை விட்டு வேறு எதெல்லாம் பேசிவிட்டு வெறுமனே வீடு திரும்பினேனே! கிருஷ்ணா நான் உன்னிடம் எப்படியடா கேட்பேன். வெட்கம் பிடுங்கி தின்றதே எனக்கு”
”ஐயா உங்க வீடு எங்கே இருக்கிறது, காட்டுங்க, நான் தேரை அங்கே கொண்டு நிறுத்துகிறேன்” என்று தேர் பாகன் கேட்ட போது சுதாமாவும் அவனோடு சேர்ந்து ”தன் வீட்டைத்” தேடினான்!!. அவனுக்கு தலைசுற்றியது அவன் இருந்த தெருவில், அவனது பழைய ஓட்டுவீடு இருந்த இடத்தில் இப்போது ஏதோ ஒரு பெரிய மாளிகை அல்லவோ நிற்கிறது? எங்கே என் வீடு? ஐயோ என்ன ஆனார்கள் என் மனைவியும் குழந்தைகளும்?”அவன் வீட்டுக்கு பக்கத்தில், எதிரில் இருந்த வீடுகளை அடை
யா ளம் வைத்துக்கொண்டு தன் ஒட்டு வீடு இருந்த இடத்தை உற்று பார்த்தான்…. அந்த மாளிகையின் வாசலில் தேர் நின்றது..
”என்ன ஆச்சர்யம் இது? குசேலன் குழந்தைகளும் மனைவி சுசீலாவும் புத்தாடை நகைகள் எல்லாம் அணிந்து வெளியே வந்து அவனை வரவேற்றனர். அப்போது தான் சுதாமாவுக்கு கிருஷ்ணன் ருக்மணி யிடம் சொன்ன வார்த்தையின் அர்த்தம் புரிந்தது.
“….“ருக்மணி, உனக்கு தெரியுமா எப்போதும் சுதாமா தான் எனக்கு ஏதாவது கொடுப்பான் நான் ஒன்றுமே
அவனுக்கு தந்ததில்லை”
”நல்லவேளை ருக்மணி கிருஷ்ணன் மொத்த அவலை யும் சாப்பிட விடாமல் ஒருவாயோடு விட்டுவிட்டு மீதி யை எடுத்துச் சென்றுவிட்டாள். இதுவே எனக்கு பெரிய பாரம். அதையும் அவன் சாப்பிட்டிருந்தால்…. இனி
மேலும் என்னால் பாரம் சுமக்க முடியாது” என நினைத்தான் சுதாமா.
இறைவனுக்கு நாம் என்றும் அதே குழந்தைகள் தான். நாம் ஒரு அடி அவனை நோக்கி வைத்தால் அவன் பல அடிகள் நம்மை நோக்கி வருகிறான். நாம் சின்ன வயதில் ஆரம்ப பள்ளியில் படித்தபோது நம்மோடு கூட படித்தவர்கள் பெயர் ஞாபகம் இருக்கிறதா? சிலர் மறப்பதில்லை.
துவாபர யுகத்தில் பள்ளிக்கூடங்கள் இல்லை. கல்வி ஆசிரியர் வீட்டில் அவருடைய குடும்பத்தோடு தங்கி அவருக்கு சேவை செயது அவர் கற்பித்தது தான் பாடம். அது தான் சிலபஸ் SYLLABUS. பரிக்ஷைகள் மார்க் எல்லாம் கிடையாது. மாணவன் பாஸ் என்றால் எப்படி தெரியும்? செர்டிபிகேட் கிடையாதே. ”பையா, எனக்குத் தெரிந்ததை எல்லாம் உனக்குக் கற்று தந்துவிட்டேன், இனி நீ வேறு யாரிடமாவது சென்று மேற்கொண்டு வித்தைகளை கற்றுக்கொள். என் ஆசிகள் உனக்கு” என்று அனுப்பிவிடுவார். அது தான் ப்ரோமோஷன்.
இத்தனை காலம் அவரோடு வீட்டில் தங்கி அவரிடம் கற்ற கல்விக்கு மாணவன் ஏதாவது தன்னாலான சம்பாவனை கொடுத்து நமஸ்கரிப்பான். FEES எதுவும் கிடையாது.
நமது குடும்பங்களில் நூறு வருஷங்களுக்கு முன்னால் ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது பத்து உருப்படிகளாக இருக்கும். கூட்டுக் குடும்பமாக வாழ்ந்த காலம். குழந்
தைகள் ஆறு ஏழுக்கு குறைவில்லாமல் ஒவ்வொரு குடும்பத்திலும் இருந்தது. பத்து பன்னிரண்டு குழந் தைகள் என்பதெல்லாம் சாதாரண விஷயம். மருத்துவ விஞ்ஞானம் வளராத காலத்தில் பாதிக்கு மேல் இளம் வயதிலேயே மரணம் நம்பரைக் குறைத்து ஆறு ஏழு என்று ஆக்கி விட்டது. சிசு மரணத்தைத் தடுக்க அவர்களுக்கு தெரிந்த ஒரு வழி குழந்தைகளுக்கு பிச்சை, வேம்பு, குப்பு, குப்பம்மா, பிச்சம்மா, மூக்காண்டி என்றெல்லாம் பெயரிட்டு அழைப்பது. பேர் கொஞ்சம் இது போல் அட்ரேக்ஷன் ATTRACTION இல்லாமல் இருந்தால் எமன் அருவருப்புடன் ” சீ இந்த அசிங்க பேர் கொண்ட உயிர் வேண்டாம்” என்று கிட்டே வரமாட்டான். குழந்தை தப்பித்துக் கொள்ளும் என்று நம்பினார்கள். இதெல்லாம் மறைந்து போய் இப்போது ‘ஷ் ஷ்’ என்று முடியும் பல பேர்களில் குழந்தைகள் வளர்கிறார்கள். நாம் இருவர் நமக்கொருவர் என்று குழந்தைகள் எண்ணிக்கை குறைந்து விட்டது
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



