KODUNGALUR BAGAVATHY AMMAN J K SIVAN

பரசுராம க்ஷேத்ர யாத்திரை – நங்கநல்லூர் J K SIVAN
17.4. 26 – 22.4.2026

கொடுங்களூர் பகவதி

20.4.26 அன்று நண்பர் இல்லத்தில் அவர் பேரன் பூணல் கல்யாண வைபவத்தில் பங்கேற்று, அன்று மாலை உள்ளூர் கடைகளுக்கு சென்று துணி மணிகள், வீட்டு வேண்டிய நேந்திரங்காய் பக்ஷண வகையறா வெல்
லாம் வாங்கிக்கொண்டு எங்கள் விடுதிக்கு வந்து பெட்டி படுக்கைகளை மூட்டை கட்டினோம். மறுநாள் 21.4.26 விடிகாலை பெரும்பாவூரை விட்டு கிளம்பி யாத்ரா மார்கமாக சென்னை செல்லவேண்டும் என்று தீர்மானம். 23.4.26 சென்னையில் இருக்க வேண்டும். தேர்தல் வாக்களிக்க வேண்டும். அது நமது அத்யாய கடமை அல்லவா?

21.4.2026 அன்று விடியற்காலை 4 மணிக்கு விடுதியை காலி செய்து விட்டு கிளம்பினேன். குருவாயூருக்கு செல்லும் வழியில் பெரும்பாவூரிலிருந்து 43 கி.மீ. தூரத்தில் கொடுங்களூர் பகவதி அம்மன் ஆலயம் உள்ளது.

கேரளாவில் தாந்த்ரீக வழிபாடு அதிகம். அம்மன் பகவதி எனப்படுபவள். பத்ரகாளி ஸ்வரூபம். கொடுங்களூரில் பகவதி அம்மன் பிரதான தெய்வம். சிவனின் கோபத்தில் ​, நெற்றிக்கண்ணிலிருந்து
உருவானவள்.​ ‘கொடும் காளி ஊர்” தான் கொடுங்களூர் ஆயிற்று என்பார்கள்.

புராணங்களின்படி, Lord Shiva அவரின் கோபத்திலிருந்து பத்ரகாளி உருவானார். இந்த பகவதி ​தாருகன்
எனும் அசுரனை அழிக்க உருவானவள். ரொம்ப புராதன சக்தி பீடம். 64 சக்தி பீடங்களில் ஒன்று. அய்யாவை காட்டிலும் அம்மாவின் மேல் பக்தர்களுக்கு அதிக நம்பிக்கை. அவள் லோக மாதா அல்லவா? தீய சக்தியை அழிப்பவள். பலவித வித்தியாச வழிபாட்டு முறைகள் பின்பற்றப்படுகிறது.’

​கொடுங்களூரில் அம்மன் குரும்ப பகவதி. திரிசூர் ஜில்லாவை சேர்ந்தது. ஸ்ரீ குரும்பூர் பகவதி அம்மை. மூலஸ்தானத்தில் வடக்கே பார்த்து நிற்கிறாள். அஷ்ட புஜங்கள் கொண்டவள். ஒன்று கரத்தில் வெட்டப்பட்ட தாருகன் தலை. ஒரு கையில் வெட்டிய அரிவாள். மற்ற கரங்களில் மணி, தண்டை மாலை எல்லாம் உண்டு.
​கேரள க்ஷேஹராத்தை பரசுராமன் உருவாக்கிய போது தாருகன் அவருக்கு இடையூறுகள் நிறைய கொடுத்தான். பரசுராமன் பரமேஸ்வரனை வேண்டினார். சிவன் சொற்படி பரசுராமர் இந்த ஆலயத்தை நிறுவி அதில் பகவதியை பிரதிஷ்டை செய்தார். பகவதி பராசக்தி அம்சம். பகவான் அவனை ஸம்ஹாரம் செய்தார். இந்த ஆலயம் கொச்சி தேவாஸ்வம் நிர்வாகத்தில் உள்ளது. கொடுங்களூர் ஒரு காலத்தில் திருவாஞ்சிக்குள தலைநகரம்.

இன்னொரு விஷயமும் இந்த கோவிலைப் பற்றி கேள்விப்பட்டேன். நமக்கு கண்ணகி கோவலன் கதை தெரியுமே. சங்க காலத்து சிலப்பதிகாரம் ஐம்பெரும் காப்பியத்தில் ஒன்று. தலபோலி என்று ஒரு பண்டிகை. அதில் இங்கே வருஷாவருஷம் கண்ணகி பற்றிய சங்கம் விழா விளையாட்டுகள் நடக்கிறது.

சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு இப்போதிருக்கும் கோவிலுக்கு ரெண்டு கி.மீ. தள்ளி ஒரு இடத்தில் கோவில் கட்டினான். கோழிகள் காவு கொடுக்கப்பட்டன. கள் ஏராளமாக விநியோகம். அவள் உக்கிரத்தை தணிக்க அவளை இந்த கோவிலில் சிவன் எதிரே பிரதிஷ்டை பண்ணினார்கள். சிவன் தெற்கே பார்த்து, பகவதி வடக்கே பார்த்து. பத்ரகாளி மேற்கே பார்த்து.

கொடுங்களூர் வரு முன்பு கண்ணகி ஆட்டுக்கால் எனும் இடத்தில் மக்களுக்கு தரிசனம் தந்ததால் ஆட்டுக்கால் பகவதி எனப்படுகிறாள்.ஆதி சங்கராச்சார்யா ஐந்து சக்ரங்களை பிரதிஷ்டை பண்ணி இருக்கிறார். மகர மாசம், ஜனவரி பிப்ரவரி , சங்கராந்தி, சமயத்தில் தலபோலி விழா நாலு நாள் நடக்கும். யானை ஊர்வலம் , வாண வேடிக்கைகள், வெடிகள், மலையராயன் வகுப்பினர் இருமுடி கட்டிக்கொள்வார்கள். மஞ்சள் மிளகு தானம் நடக்கும் பூஜைகள் விமரிசையாக இருக்கும். குடும்பி வகுப்பினர் வாத்தியங்கள் கோலாகலமாக இருக்கும்.சுவாசினி பூஜை கோவிலில் நடைபெறும். மூன்றால் நாள் பதினெட்டரயளம் கோவிலகம் இடத்திலிருந்து ஊர்வலம் துவங்கும்.

அம்பாள் மேல் பக்தர்கள் உச்சரிக்கும் அருமையான ஸ்லோகம்:

या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता । नमस्तस्यै नमस्तस्यै नमस्तस्यै नमो नमः ॥
yā dēvī sarvabhūtēṣu śakti rūpēṇa saṁsthitā namastasyai namastasyai namastasyai namō namaḥ
”எல்லா உயிர்களிலும் சக்தியாக உள்ள தேவிக்கு மீண்டும் மீண்டும் நமஸ்காரம்”

सर्वमंगल मांगल्ये शिवे सर्वार्थ साधिके । शरण्ये त्र्यम्बके देवी नारायणि नमोऽस्तु ते ॥
sarva maṅgala māṅgalyē śivē sarvārtha sādhikē śaraṇyē tryambakē dēvī nārāyaṇi namō’stu tē
அனைத்து மங்களங்களுக்கும் காரணமானவளே, எல்லாவற்றையும் அருள்புரிவவளே, உமக்கு வணக்கம்.

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2561

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;