THE GREAT TWO POETS. J K SIVAN

எல்லாம்  பகவத் சங்கல்பம். –  நங்கநல்லூர்  J K  SIVAN
ஒரு கேள்வி கேட்கிறேன். அதற்கு எனக்கே பதில் தெரியாததால் தான் கேட்கிறேன்.  கம்பரும்  ஒளவையாரும் ஒரே காலத்தில் வாழ்ந்தவர்கள். இருவருமே  தமிழ் பாடல்கள்  இயற்றுவதில் வல்லவர்கள். எனினும் கம்பரை போற்றும் அளவு தமிழர்கள் ஏன் ஒளவையாரை நினைப்பதில்லை?? இது வாஸ்தவமா? நான் தவறா?

என்னைப் பொறுத்தவரை  தமிழ் இலக்கியத்தில் ரெண்டு பேருமே   மிகப் பெரிய சிகரங்கள். ராஜாக்கள் பிரபுக்களால் ஆதரிக்கப்பட்டு சிறப்பாக  மதிக்கப்பட்டவர்கள். ஒளவையார்  அரண்மனை வாசத்தை விரும்பாமல்  தேசாந்திரமாக  வீடு வீடாக சென்று  பசிக்கு உணவு பெறுவாள். கம்பர் வசதியாக ராஜ போக வாழ்க்கை வாழ்ந்தவர் என்று அறிகிறேன்.
12–13ம் நூற்றாண்டு  புலவர்கள் இருவருமே. சோழர்காலத்தவர்கள்.

கம்பர்  ராமாயணம் எழுதி புகழ் பெற்றவர். ஒளவையார் பிள்ளையார் பக்தை. எளிமை, நல்வழி, ஞானம் என குழந்தைகளுக்கு  ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், மூதுரை,  நல்வழி எழுதியவள் . காலத்தால் அழியாத நீதி போதனைகள் அளித்தவள் குமரன், தமிழ்க்கடவுளுடன்  சம்பாஷித்தவள். பிள்ளையார் அகவல் எழுதியவள் . அவளால்  மோக்ஷம் தூக்கிச்செல்லப்பட்டவள்.

கம்பர்  வேறே லெவல்.  வெண்பா, மற்றும் சிக்கலான கவிதை இலக்கண அமைப்பில் உயர்ந்த வடிவத்தில் தமிழைத் தந்தவர். உவமை,  கம்பீரம், கற்பனை உச்சம், அலங்காரத்தில்  பிரபலமானவர்.

கம்பர் தனது கவிதை வல்லமையைப் பற்றி அகம்பாவம், தற்பெருமை  கொண்டவர். அவரை ஒளவையார் ஒருநாள் சந்தித்தாள் .

“கம்பரே, நீர் பெரும் புலவர் என்று உலகம் புகழ்கிறதே,  நீங்கள்  ஒரு சொல் கொண்டு பல அர்த்தம் சொல்ல முடியுமா?”
”ஏய் கிழவி, என்னை சோதிக்கிறாயா. இதோ கேள் சொல்கிறேன் .
“மூக்கற்ற குதிரை ஓடும்”
”என்னய்யா  இது,  கொஞ்சம் புரியும்படியாக சொல்லுங்களேன். நான் “கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு”
சொல்கிறேன் கேளம்மா;   மூக்கு என்றால் வழிகாட்டி, கட்டுப்பாடு என்று அர்த்தம்.  குதிரை என்பது மனதைச்ஷோள்வது. அதன் வேகமான சக்திக்காக அதை குதிரை என்பது வழக்கம்.
கட்டுப்பாடில்லாத மனம் தெறி கெட்டு ஓடும் என்று அர்த்தம்.  மூக்கற்ற என்றால் திக்கு திசை நோக்கம் இல்லாத திறந்தவெளி  என்றும் பொருள். ஆகவே திசை தெரியாமல் ஓடும் குதிரையை போன்றது மனம் என்று பொருள் கொள்ளலாம்.
கம்பர்  சிறந்த தமிழறிஞர். ஒளவை ஞானி.  ஆகவே  ஒரு மரத்தின் அற்புதமான ரெண்டு கிளைகள் இவர்கள். பகவான் ரமணர்  ஒருமுறை  பக்தர்களிடம் பேசும்போது ஒளவை கம்பர் இருவர் பற்றி குறிப்பிடும்போது  சொன்னது;”நான்  மலையில் இருக்கும்போது  ஒரு பழைய இடிந்த ஆஸ்ரமம் கல், மண் சுவர்களோடு கட்டப்பட்டு  மேலே ஓலைக்கூரையோடு இருந்ததை பார்த்தேன். எங்கு பார்த்தாலும்  கரையான் புற்று மண் நிறைந்திருந்தது.  ஓலைக்கூரையை எடுத்துவிட்டு சுவர்களை இடித்துவிட்டார்கள். புற்று மண்ணை வாரி கொட்டி கரையானை அகற்றினார்கள்.   அது வரை அது  கரையான்களின் மாளிகையாக இருந்தது. அந்த புற்றை உற்று நோக்கினால் எண்ணற்ற  வெள்ளை எறும்புகள்  சாரி சாரியாக  உள்ளே போக, வர, தங்க, இடவசதிகளை பண்ணி வைத்திருக்கும். தனது குடும்பத்தோடு காலம் காலமாக வாழும்.
ஒரு மூலையில்  சிலந்தி கூடு கட்டி இருந்தது. மூன்று முனைகளை கெட்டியாக  ஆதாரமாக வைத்துக் கொண்டு  குறுக்கும் நெடுக்குமாக,  வாயில்  உமிழ் நீரில்  கெட்டியான  நூலை உண்டாக்கி க்கொண்டு  மூன்று முனைகளையும் சேர்த்த  வாறு கட்டம் கட்டமாக சிலந்தி  வெகு வேகமாக  ஒரு வலை பின்னும்.   வெகு நேர்த்தியாக  மெஷின் செய்தது போல் வலை பிரமிக்க வைக்கும். அதில் நடு நாயகமாக தான் அமர்ந்து கொண்டு எந்த பூச்சி  அந்த வலைக்குள் சிக்குகிறது என்று காத்திருந்து அதை நெருங்கி உண்ணும்.
குளவிகளும்  அப்படித்தான்.மண்ணைக்கொண்டு வந்து  ஜாக்கிரதையான இடம்  தேடி தேர்ந்தெடுத்து அங்கே கூடு கட்டும். பறவைகள் கூடு கட்டுவதும் மிக மிக அழகானது.
ஆகவே  இறைவன் படைப்பில் ஒவ்வொரு ஜீவராசியும் ஏதோ ஒரு தனித்துவ  திறமையோடு தான் செயல்படுகிறது. கம்பர் அப்படி தான் தமிழில் காவியம், காதைகள், கவிதைகள் படைத்தவர். அதில்  ஆச்சர்யம் எதுவுமில்லை.  எல்லாமே  பகவான் சங்கல்பம். ஏற்பாடு. 

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2561

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;