
@followers சாணக்யனின் நேர்மை ஆட்சி – நங்கநல்லூர் J K SIVAN
இன்னும் சில வாரங்களில் ஏதோ ஒரு புது அரசு நம்மை ஆளப்போகிறது. பழையதே புதிதாக வருமா?அல்லது புதியது பழசைப் போலவே ஆளுமா?? எதுவானாலும் நம் நிலைமை எப்போதும் மாறாததாகவே தான் இருக்கிறது. பல அரசுகளை பார்த்துவிட்டதால் இப்படி ஒரு விரக்தி.
இதற்கிடையே சாணக்யனை கனவில் நேற்று கண்ட போது நான் அவனோடு பேசினேன்:
” உன் கையில் என்ன நீல மை?
”ஒட்டு போட்டேன். மறுபடியும் ஏமாற்றி போடாத படிக்கு ஒரு அடையாளம்”’
‘என் காலத்தில் நான் வகுத்த திட்டங்கள் வேறே.’
”’தெரியும் உன் அர்த்தசாஸ்திரம் இப்போது செல்லாது”
”ஏன், நல்லது பிடிக்காதா?
”’மக்களுக்கு பிடிப்பது மக்களை ஆள்பவர்களுக்கு பிடிக்குமா”? இருந்தாலும் உன் திட்டத்தை சொல்லேன் ஒருமுறை காதாலாவது கேட்கிறேன்.
”என் காலத்திலும் கணக்கு காட்டுவதில் மோசடி இருந்தது. வருவாயை உண்மையாக கணக்கில்
காட்ட மாட்டான். வந்ததை பதுக்கி வைப்பான். உண்மையான வருவாயை மறைத்து குறைவான அளவில் பதிவு செய்வான். செலவினங்களை அதிகப் படுத்தி காட்டுவான். செலவு செய்யாமலே செலவு .கணக்கு காட்டுவான். ஒரே செலவை ரெண்டு வித கணக்கில் காட்டுவான். உண்மையான கணக்குகளை சீக்கிரமே அழித்து விடுவான். தன்னுடைய அதிகாரம், பதவியை சாதகமாக்கிக்கொண்டு எவ்வளவு அட்டூழி யம், அக்கிரமம் பண்ணமுடியோ அவ்வளவும் சுயநலத்
துக்காக பண்ணுவான். தன்னுடைய கடமையை செய்வ தற்கு கூசாமல் லஞ்சம் கேட்டு வாங்குவான். தரமில் லாத பொருள்களை வாங்கி மக்களுக்கு கொடுத்து விட்டு காசு பார்ப்பான். மேலே ஒரு அளவு, உள்ளே ஒரு அளவு என்று பொட்டலங்கள் இருக்கும். கலப்படம் செயது காசு சம்பாதிப்பான். தனக்கு சாதகமான போலி ஊழியர்கள், திருட்டு ஆசாமிகளை வேலைக்கு வைத்துக் கொள்வான். ஆட்களை நியமிக்காமலேயே
அவர்கள் இருப்பதாக கணக்கு காட்டி சம்பளம் கொடுத்த தாக ஆவணங்கள் தயார் செய்வான். அதன் மூலம் பெருத்த லாபம் சம்பாதிப்பான். டெண்டர் விடுவ
தில் நிபுணன். தனது ஆட்களுக்கே டெண்டர் கிடைக்கும்
படியாக செய்வான். முக்கியமான பணிகளை தனக்கு சாதகமாகும் வரை ஆறப்போடுவான்.. தாமதப் படுத்து
வான். சட்டத்தை எவ்வளவு தூரம் துஷ்ப்ரயோகம்
பண்ணமுடியுமோ அவ்வளவு பயன் படுத்துவான். அரசு ரஹஸ்யங்களை விற்பான். கூட்டு மோசடிகளில் ஈடு படுவான். நீதி மன்றங்களில் தனக்கு சாதகமான ஆட்களை வைத்து அநீதியான தீர்ப்புகளை அளிப்பான். பெரிய வியாபாரிகளோடு கூட்டு சேர்ந்து விலை ஏற்றி அக்ரமமாக பணம் சம்பாதிப்பான். பொய் கையெழுத் து போடுவான். கண் பார்த்த நிலங்களை அபகரிப்பான்.
இப்படிப்பட்ட அதிகாரிகளை பற்றி நான் என்ன சொல்லி இருக்கிறேன் தெரியுமா?
“நீரில் மீன் குடிப்பதைப் பார்க்க முடியாதது போல இந்த மாதிரி அதிகாரிகள் திருடுவதை கண்டுபிடிக்க கடினம்” என்று அதீத புத்திசாலியே தலையை ஆட்டி ஒப்புக்கொள்கிறான்.
”சாணக்யா, நீ இப்படி யோசிக்க காரணம் என்ன?
”நான் மனிதனை நம்பவில்லை, ஒரு நல்ல ஒழுங்கான
கட்டமைப்பையே நம்பி திட்டமிட்டேன். தண்டனை களை கடுமையாக்கினேன்.இரக்கம் காட்டவில்லை. பயத்திலே தான் அவர்களை கொஞ்சமாவது கட்டுப் படுத்த முடியும் . வரி வசூலிக்க வேண்டியவனே
திருட்டுப் பயலாக இருந்தால் எப்படி நேர்மையாக பனி புரிய முடியும்? எல்லாம் அதிகாரம் கொடுக்கும் சலுகை அல்லவா? லஞ்சம் வாங்கிக் கொண்டு குறைந்த வரி போடுவான். வசூலிப்பான் .
”சாணக்யா, இதை நீ எப்படி கட்டுப்பாட்டில் கொண்டு வர முடிந்தது?’
‘அதை ஏன் கேட்கிறாய். பணம் மனித இயல்பை மாற்றி
விடும். நான் பல நம்பகமான ஆட்களை ரஹஸ்ய
உளவாளிகளாக நியமித்தேன். சாமியார்களாக, பாடகர்களாக, பிச்சைக்காரர்களாக, பண்டாரங்
களாக, பிரவசனம் பண்ணுபவர்களாக, புலிவேஷம், மயிலாட்டம் தெருக்கூத்து ஆடுபவர்களாகி, மாட்டு வண்டி குதிரை வண்டிக்காரர்களாக, வேலைக்காரர்
களாக, நடன, நாட்டிய, நாடக அவர்கள் மூலம் நாட்டில் நடப்பது பூராக உடனே எனக்கு தெரிந்துவிடும்.
கடுமையான தண்டனை விதிப்பேன். அபராதங்கள் ஜாஸ்தி விதிப்பேன். கருணையே காட்டமாட்டேன். எங்கு தப்பு தண்டா சமாச்சாரங்கள் நடந்தாலும் உடனே என் காதுக்கு எட்டி விடும் என்ற பயத்திலேயே அவர்களை
கண்காணித்தேன். அதிகாரிகளை பொறுப்பில் நியமிக்குமுன்பாக அவர்கள் பூர்வோத்தரங்களை விசாரித்து தகுதியானவனா என்று தீர்மானிப்பேன். அவர்கள் குடும்ப வளர்ச்சியை, சூழ்நிலையை அடிக்கடி கண்காணிப்பேன்அடிக்கடி அதிகாரிகளை இடம் மாற்றுவேன். பதவி மாற்றுவேன். ஒரே இடத்தில் ஊன்றி விட்டால், ஊறி விட்டால் அவனது ராஜ்ஜியம் பலம் வாய்ந்ததாகிவிடுமே. எலியை மசால் வடை வைத்து பொறிக்குள் பிடிப்பது போல மனசாட்சி மதிக்காத அதிகாரி களை , எனக்கு சந்தேகம் வலுப்படும்போது, சரியான சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுத்து வகையாக அவர்கள் சிக்கும்போது கையும் களவுமாக பிடிப்பேன். தண்டிப்பேன். அவர்கள் என் பிடியிலிருந்து தப்பவே
முடியாது. எதிர் பாரத நேரங்களில் கணக்கு சரி பார்ப்பேன். நேரே சென்று விசாரிக்க ஆள் அனுப்பு
வேன்.”
”சாணக்யா, நீ ரொம்பவே கஷ்டப்பட்டு நேர்மையை, நீதியை பாதுகாத்தாய். எங்களுக்கு அவ்வளவு சிரமம் இல்லை. எங்களிடம் இப்போது விஞ்ஞான வளர்ச்சி யால், cctv காமிராக்கள், ஆதார், pan, வருமான வரி சோதனை கள், போன்ற வசதிகள் இருப்பதால், மேம்பட்டு இருக்கிறோம்.”
”சரி தம்பி,என் கேள்விக்கு பதில்சொல்.? உங்கள் ஆட்கள் யோக்யமானவர்களா? லஞ்சம் விட்டதா? அவர்களும் வேறு வழிகள் வைத்திருப்பதை நீ அறிவாயா? அதற்கு என்ன செய்யப்போகிறாய்?”
”சாணக்யா, நாங்கள் கொடுத்தால் தானே அவர்கள் வாங்குவார்கள்? கொடுக்க விட்டால்??
”ஓஹோ உங்களில் அவ்வளவு பேருமே யோக்யர் களா? சந்தோஷம். …முன்கை நீண்டால் தானே முழங்கை நீளும்?? எல்லோருமே ஒழுங்கானவர்களா? நீதிக்கு, நேமைக்கு புறம்பாக எதையும் செய்யாத வர்களா? பலே பலே !!.’
‘இதற்கு என் கனவில் என்னால் சாணக்யனுக்கு பதில் சொல்ல தெரியவில்லை. கனவில் மட்டும் அல்ல. நினைவிலும் இதற்கு யார் பதில் சொல்ல முடியும்… நாம் யோக்யர்களா??
என்னையே கேட்டுக் கொள்கிறேன்..
.”ஆமாம், சட்டத்தை மதிப்பேன், விதிகளை மீறமாட் டேன், உண்மையாக நடந்து கொள்வேன்…. என்று என் மனஸாக்ஷி சொல்லுமா? அது சொன்னதாக கூசாமல் பொய் சொல்லப் போகிறேனா?
திருதிரு வென விழித்துக்கொண்டு பதிலுக்கு காத்திருக்
கிறேன்… நீங்கள் எப்படி??
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.


