ARUNAGIRI SAVED… J K SIVAN

”எங்கே  நான் சொல்வதைப்  பாடு.”   நங்கநல்லூர்  J K  SIVAN 

இறைவன்  நம்மோடு  விளையாடுபவன். சோதிப்பவன். நம்மோடு பேசுவான். நம்மோடு  கூடவே இருப்பான்.
ஓஹோ  இறைவனோடு  இப்படி நட்பு கொண்டாட  நாம்  ரொம்ப ரொம்ப நல்லவனாக, யாருக்கும் எந்த தீங்கும் செய்யாத,   நிறைய பூஜை அபிஷேகம் எல்லாம் செய்தவனாக,  நிறைய  தவம் செய்திருக்க வேண்டும். உயர்குலத்தில் பிறந்திருக்க வேண்டும். நிறைய   வேதங்கள் சாஸ்திரங்கள் மந்திரங்கள் ஸ்தோத்திரங்கள் எல்லாம் தெரிந்திருக்கவேண்டும் என்று அர்த்தமா?  இல்லவே இல்லை, பரம ஏழையானாலும், ரொம்ப கெட்டவனாக இருந்தாலும் பாப  காரியங்கள் செய்பவனாக இருந்தாலும் பகவான் நமக்குஅருள் புரிபவன். கடவுளே  இல்லை என்று  கேவலமாக கடவுளை திட்டினாலும் அதை நிந்தா ஸ்துதியாக எடுத்துக்கொண்டு மகிழ்வான்.   நமக்கு தெரிந்த ஒருவர்  கண்ணதாசன்… கிருஷ்ண பக்தன்.
மனிதனின் அற்புத சக்திகள் திரை போட்டு  மாயையால்  மறைந்திருப்பதால் அவன் கெட்டவனாக காணப்படுகிறான். அவனைப்  பிடித்து அவன் மாயத்திரையை விலக்கினால் அவனைப் போல சிறந்த மஹான் கிடைக்க மாட்டான் என்பது உண்மை.
ஆகவே நாம்  யாருமே  கெட்டவர்கள், பாபிகள் இல்லை, நம்முள் உறைந்திருக்கும் நற்பண்புகளை  அறியாதவர்கள். உணராதவர்கள்.
 இறைவன் க்ருபை இருந்தால் நாமும் முற்றிலும் திருந்தி,  சிறப்பு, பெருமை பெறலாம்.  அப்படி பெருமை பெற்ற  ஒருவர் வாழ்க்கையை சொல்கிறேன். அவரும் உங்களுக்கு ஏற்கனவே தெரிந்தவர் தான் அவர்.

15ம்  நூற்றாண்டில் வாழ்ந்த சைவர்.  பிறந்தது ஒரு சாதாரண  தமிழ் குடும்பம்.  இளமையிலிருந்தே  ரொம்ப  தவறான பழக்கங்களுக்கு ஆளானவர். வாழ்க்கையை  பாழாக்கிக் கொண்டவர்.  இளம் வயதிலேயே  பெற்றோரை  இழந்த அந்த மனிதனை பல ஸ்ரமங்களுக்கு ஆளாகி வளர்த்தவள்  அவனுடைய அக்கா. அவளுடைய சேமிப்புகளை அழித்து, அவளை ஓட்டாண்டியாக்கி அவள் எவ்வளவோ முயன்றும் திருந்தாதவனாக இருந்தவர் அவர். அவள் திருவண்ணாமலை ஆலயத்தில்  குடிகொண்ட  ”முருகா, நீயே கதி என் சகோதரனை திருத்து, அவன் உனக்குத் தொண்டு புரிந்து திருந்த அருள் புரி” என்று கதறினாள். முருகன் செவி  சாய்த்தான்.
முற்றிலும் கெட்டுப்போன அந்த மனிதருக்கு ஒருநாள் ஞானோதயம் ஏற்பட்டது. இந்த வாழ்க்கை இனியும் தொடரக் கூடாது . பிரயோஜனம் இல்லாத இந்த  தேகம் அழியட்டும் என்று தீர்மானித்தார். நன்றி கொண்ட பாவியாக அக்காவுக்கே துரோகம் இழைத்ததை எண்ணி எண்ணி தவித்தார். அவர் மனசாக்ஷி உறுத்தியது.  எவ்வளவோ தவறுகளை எல்லாம் நான்  செய்தவன் . என் பாப செயல்களுக்கு  பலனாக,  பெர்மனெண்ட்டாக  நரகத்திலேயே   உழல வேண்டியவன் ” என்று வருந்தினார்.  இனியும் இந்த  வாழ்க்கையை வாழ்ந்து  என்ன பயன் என்று ஒருநாள் தோன்றியது
திருவண்ணாமலையில்  வாழ்ந்த  அந்த மனிதர்  ஆலயத்தில்  உலாவிக் கொண்டிருப்பார். இப்படி உயிரை மாய்த்துக் கொள்வோம் என்ற எண்ணம் தோன்றியவுடன்,  அங்கே இருந்த  சின்ன மலை, கோபுரத்தின் மேலேறி,  அதன் மேலிருந்து  கீழே  குதித்து தற்கொலை பண்ணிக் கொள்ள  முடிவெடுத்தார்.. இந்த ஜென்மத்தில் செய்த  பாபங்களாவது இதோடு  முடியட்டும் என்று அழுதார்.  மலையிலிருந்து  கீழே குதித்தார்.உடல் மேலே இருந்து வேகமாக  கீழே விழுந்து கொண்டிருந்தது. ஆனால் தரையில் பாறையில் விழுந்து மண்டை சிதறவில்லை. உடல் எலும்புகள் நொறுங்கி ரத்தம் சொட்ட  வில்லை.  அவர் சாகவில்லை. அட இது என்ன அதிசயம், ஆச்சர்யம்? மேலே இருந்து கீழே குதித்த எனக்கு என்ன ஆயிற்று?
சுற்றி முற்றி பார்த்தார். அவர் உடல் கீழே விழாமல் ஏதோ ஒன்று தடுத்திருக்கிறது. என்ன அது?   ஆஹா  ஒரு இளம்  பாலகன், சூரிய பிரகாசமாக இருக்கும் ஒளி பொருந்தியவன்  அல்லவோ என்னைத்  தாங்கி பிடித்துக்கொண்டு கீழே  விழுந்து  சிதறாமல்  காப்பாற்றியவன். அவன் யார்? எப்படி இங்கே வந்தான்?
அவனை உற்றுப்பார்த்தார். கண்கள் ஆச்சர்யத்தில் பெரிதாகியது. வார்த்தை வரவில்லை. அவன்.
ஆறு முகங்கள் கொண்டவன்,. அதில் அணிமுடி ஆறு,  நெற்றியில்  நீறு, நீண்ட புருவம், பன்னிரு கண்கள், பவளம் மாதிரி சிவந்த வாய்,  அழகான தீர்க்கமான  நெற்றி, அதில் நவமணி சுட்டி,  பன்னிரண்டு காதுகள்,  அதில் கண்ணைப்பறிக்கும் அழகிய குண்டலங்கள், பன்னிரு  பலம் வாய்ந்த தோள்கள்,  அகன்ற திடமான மார்பில் அழகான மணிகள் , நவரத்தினங்கள் படித்து ஆபரணங்கள், பதக்கம்,  நவரத்ன மாலைகள்,  பொன்னிற மார்பில் வெண்ணிற   பூணல்,  முத்துக்கள் மறைக்கும் பரந்துவிரிந்த மார்பு,  அழகான இடை, வயிறு, அந்த அழகூட்டும்  இடுப்பில் ஒளிவீசும் பட்டு வஸ்திரம் அணித்திருக்கிறான்.  நவரத்தினங்கள் ஒட்டியாணமாக இடையில்.   வலுவான  இரு தொடைகள்,  ஜோடியான அழகிய  ரெண்டு  முழங்கால்கள். ஆஹா,  அவன் திருவடிகள்  தாமரை இதழ்களோ என்று வியக்க வைக்கிறதே.  பளபளவென தங்கம்போல் ஜொலிக்கும் அந்த கால்களில் தண்டை, சிலம்பு அணிந்திருக்கிறான். அவையல்லவோ, அவன் நடக்கையில்  இசையென வேதமாக ஒலிக்கிறது.

யார் இந்த அதிசய மனிதர். வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல்  இருக்கிறதே. எங்கிருந்து வந்தவர்? எதற்கு என்னை கீழே விழாமல் அவர் கைகளில் தாங்கி மெத்து மெத்துவென்று பிடித்துக் கொண்டிருப்பவர். எனக்கு உயிர் பிச்சை கொடுத்தவர்?”
”ஐயா   நீர் யார்?
”நானும் உன் போல்  இங்கே இருப்பவன் தான்.”
”இங்கே என்றால்??”
இந்த கோயிலில் இருப்பவன் என்று வைத்துக் கொள்ளுமே ”
‘உமது முகம் இங்கே கோயிலில் பார்த்த முகமாக தான் எனக்கு தெரிகிறது””எல்லோரும்  அப்படி தான் சொல்வார்கள்”
‘உமது பெயர்?”
”கோபுர சுப்பிரமணியன் ” என்றும் கூப்பிடுவார்கள்”.
”என்னை எதற்கு காப்பாற்றினீர்கள்?”.
” நான் எங்கே  காப்பாற்றினேன்?  எல்லாம்  உன் அக்காளின் கட்டளை தான். நான் எப்படி அதை  மீற  முடியும்?”
”என் அக்காவை உங்களுக்கு தெரியுமா?
”அவள் தான் என்னை விடாமல் தொடர்பவளாயிற்றே, அவள் மிகப்பெரிய பொறுப்பை என் மேல் சுமத்தி விட்டதால் உன்னை நான் இப்போது சுமந்து கொண்டு  நிற்கிறேன்””
”ஐயா, என் அக்கா உங்களை வேண்டிக்கொண்டதால் நீங்கள் என் உயிரை காப்பாற்றினீர்களா??அடாடா நானெவ்வளவு பெரிய துரோகி. அவளுக்கு கெடுதல் செய்தவன்..””’உன் அக்கா பிரார்த்தனையால் மட்டும் அல்ல. உன்னுடைய தமிழ் பாடல்கள்  எனக்கு பிடிக்குமே  அதற்காக என்று வைத்துக் கொள் .என் சுயநலமும் இதில் சேர்ந்துள்ளதே””’எனக்கு தமிழ்  சரியாக பேசக்கூட  தெரியாதே.இப்போது பேசுகிறேன் அப்படி தான் பேச வரும். நீங்கள் சொல்வது போல் எனக்கு   பாடல் எதுவும் இயற்றவோ,  பாடவோ  தெரியாதே” எப்படி பாடுவேன்?””உனக்கேன் அந்த சிரமம். நான் உன்னை பாட வைக்கிறேனே?””ஐயா. கடவுளே, நான் எப்படி ஐயா  பாடுவேன் ஒரு வார்த்தையும் தெரியாதே…”உனக்கு நன்றாக  பாட தெரியும், மறந்து போயிருக்கிறாய், நான்  நினைவூட்டுகிறேன். எங்கே  நான் சொல்லும் வார்த்தையை உனக்கு தெரிந்த படி  திருப்பி சொல்லி  பாட்டு போல் பாடேன்  கேட்கிறேன்..”என்ன  வார்த்தை நான் சொல்லி பாடவேண்டும் என்கிறீர்கள்?””முத்தைத் தரு பத்தித் திருநகை”என்று உரக்க பாடு. கேட்கிறேன்.
தற்கொலை செய்துக்கொள்ள மேலே இருந்து குதித்த அந்த மனிதர்  இரு கை  கூப்பி  எதிரே நின்றவரை ஒரு வினாடி கண்டுவிட்டு கண்களை மூடிக்கொண்டு  ஆரம்பித்தார். ‘முத்தைத் தரு பத்தித் திருநகை….  என்று  பாட ஆரம்பித்த அந்த மனிதர்  அதற்குப்பிறகு 16000 பாடல்கள் பாடினார். கிட்டத்தட்ட  250  கோவில்களுக்கு சென்று முருகனைப்  போற்றி  பாடினார்.முருகனின் புகழை அவர் பாடியவை திருப்புகழ் என்று கிட்டதட்ட  1350 தான் நமக்கு கிடைத்திருக்கிறது. திருவண்ணாமலையில் கோபுர சுப்ரமணியனாக முதலில் காட்சி தந்த  முருக பெருமான் அதன் பின் அருணகிரி நாதருக்கு பல  முறை தரிசனம் தந்து வாழ்த்தியது தான்  சரித்திரம்.. அருண கிரிநாதரின் திருப்புகழ் ஒலிக்காத கோவில்கள் இல்லை, ஹிந்து பக்தர்கள் வீடுகள் உலகெங்கும் எங்கும் கிடையாதே.

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2560

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;