

”என் கேள்விக்கென்ன பதில்?” – நங்கநல்லூர் J K SIVAN
இன்று ஹாலில் டிவியில் ஒரு சினிமா பாட்டு உரக்க காதில் விழுந்தது.”என் கேள்விக்கென்ன பதில்?” இனிமையான ராகம். அதற்கு யாரோ ஒரு பெண் பதில் சொல்ல்லிக்கொண்டே ஆடுகிறாள்… அவள் கவனம் ஆட்டத்தில் அவன் கண்ணும் அவள் ஆட்டத்தில் தான். கருத்து அவள் பதிலில் இருந்ததா என்று தெரியாது… பட்டென்று டிவி சேனல் மாறி பாட்டு நின்றாலும் என் சிந்தனை மட்டும் தொடர்ந்தது. எனக்குள்ளும் சில கேள்விகள் எழுந்தது. அதற்கு விடை உங்களிடம் இருந்தால் நீங்களும் எனக்கு சொல்லலாம். நாம் ஒவ்வொருவருமே விடை காணவேண்டும். தேடினால் மட்டும் போதாது. அதை உலகத்தில் எல்லோரும் உணர்ந்து பின்பற்றவேண்டும் என்று தான் எனக்கு தோன்றுகிறது.விஷயத்துக்கு வருவோம்.
ஒவ்வொரு நாளும் நாம் வாழும் இந்த உலகத்தின் நிலைமை மாறிக்கொண்டே வருகிறது. அப்படியென்றால், மக்கள் மன நிலைமையும் மாறி வருகிறது என்று தானே அர்த்தம். நான் சொல்லவே வேண்டாம், யூட்யூப், வாட்ஸாப்ப் ஒன்றே போதும், எவ்வளவு ரத்தம், எவ்வளவு நெருப்பு, எவ்வளவு எரி பொருள், வீடு வாசல், உடைமைகள், சேதம், உயிர் பலி. யார் சொல்வது உண்மை, எது பொய்? எவர் சொல்வது நியாயம்?சத்யம் ? யாருடைய பேராசைக்கோ, மத வெறிக்கோ, ஏகாதிபத்திய செயலுக்கோ சம்பந்தமே இல்லாமல் எங்கெங்கோ இருப்பவர்கள் வாழ்வு நிலை பாதிக்கப்பட்டு அதற்கான துன்பத்தை அனுபவிக்கவேண்டுமா? எதிர்கொள்ள நிற்கும் பூதாகார தாண்டனைக்கு ஆளாக வேண்டுமா? இது தான் இன்றிய உலக நியதியா?
அன்பு, ஒற்றுமை, பொறுமை, விட்டுக்கொடுத்தல், சுயநலமின்மை, பரோபகாரம் இதெல்லாம் வெறும் ஏட்டில் தானா?
விஞ்ஞான வளர்ச்சியால் சராசரி மனிதனின் ஆயுள் காலம் அதிகமாகி உள்ளது. சந்தோஷம். வாஸ்தவம். நீண்ட ஆயுள் என்பதே தொடர்ந்து துன்பம் அனுபவிப்பதற்கா? வேகமான ஊர்திகளால்,உலகம் சுருங்கி விட்டது. சில மணி நேரத்தில் உலகெமெங்கும் சுற்றி வந்துவிடலாம்? உலகெங்கும் இருப்பவர்களோடு கண் இமைக்கும் நேரத்தில் தொடர்பு கொள்ள முடிகிறது, நேரிலே பார்க்க முடிகிறது, பேச முடிகிறது? எதற்கு ஒருவர் துன்பத்தை மற்றவர் கண்டு ரசிக்கவா?
நிறைய பேர் அநேக மொழிகளில் மனித உரிமை, சம அந்தஸ்து, சம நீதி என்று பேசுகிறார்களே, சும்மா கேட்பதற்காகவா? அதற்கு சக்தி,பலம், அர்த்தம் கிடையாதா?
யாருமே சந்தோஷமாக இருப்பதாக தெரியவில்லையே? எவ்வளவு வசதி இருந்தாலும், பணம் இருந்தாலும், தனிமை, மன இறுக்கம், நம்பிக்கையின்மை, ஆதங்கம், அழுத்தம், தான் நாகரிக, விஞ்ஞான உயர்ச்சிக்கு கூலியா? பரிசா?
தன்னம்பிக்கையை முன்பெல்லாம் பக்தி வளர்த்தது. அதையும் காசு கொடுத்து தான் இப்போது அடைய வேண்டுமா? அல்லது அது தேவையில்லாத வஸ்துவா? பண்பாடு, பாரம்பரியம் எல்லாம் காற்றில் பரந்து போய் ரொம்ப காலம் ஆகிவிட்டதே.
அன்றாட வாழ்க்கையில் ஒற்றுமை, பகிர்வு, தளர்ந்து போய் உள்ளதே.
குடும்பம் சுருங்கி இருவர், அல்லது பிரிந்து போய், ஒருவர் ஆகிக் கொண்டே வருகிறதே. அங்கும் பணம், ஆணவம், சுயநலம் தான் காரணமா?
மனித இதயங்கள் முற்றிலும் ஈரம் அற்று வறண்டு போகவில்லை என்பேன். ஈரம் நெஞ்சுக்குள் அதிகரிக்க நாம் என்ன செய்யப்போகிறோம்?
தனிமை, இதய, மன அழுத்தம் எல்லாமே புதுப் புது பெயர்கள் கொண்ட நோய்களை அறிமுகப்படுத்தி வெள்ளை கோட்டுகளும் ஆஸ்பத்திரிகளும் குருவி போல் காலமெல்லாம் சேமித்ததை நொடியில் பிடுங்கிக் கொள்வது தான் விஞ்ஞான வளர்ச்சியா? காப்பீடு insurance இருந்தால் ஒரு சார்ஜ், இல்லாவிட்டால் வேறே என்ற பாகுபாடு மூலம் தான் வியாதி, நோய் குணமாகுமா?இதெல்லாம் இல்லாதவர்கள் நிலை என்ன? ஏழை பணக்காரன் வித்தயாசம் எங்குமே வளர்ந்து விரிந்து கொண்டு தான் போகவேண்டுமா? எளிமை, ஆன்மீக அமைதி, எண்ணங்கள், பாசம், நேசம் எல்லாமே பயனற்ற சொற்களா?.. ”கட்டி அழும்போதும் பணப் பெட்டி மேலே கண் வையடா தாண்டவக்கோனே”…. தான் விதியா?
நான் கடந்த எண்பத்து ஏழு வருஷம் வித விதமான வாழ்க்கை முறையை பார்த்துக் கொண்டே வருகிறேன். என்னை எவ்வளவு சுருக்கி, குறுக்கி, மௌனியாக்கிக் கொள்ள முடியுமோ அப்படியெல்லாம் மாற்றிக்கொள்கிறேனே, என் அபிப்ராயங்களை வாரி வீசுவதில்லையே.
சத்யம் தர்மம் என்கிற வார்த்தைகளை ஒரு சில பைத்தியங்களே தான் என் போல் பேசுகிறது , எழுதுகிறது என்று மட்டும் புரிகிறது. இதற்கு வேறு வேலை இல்லை என்று எம்மைப் புறக்கணிப்பதும் தெரியும். அதையும் முகம் சுளிக்காமல் ஏற்கிறேன்.
க்ரித, சத்ய யுகம் போயே போய் விட்டது. அடுத்த த்ரேதா யுகத்தில் தர்மம், சத்யம், துளி வலுவிழந்தது. கிருஷ்ணன் கால த்வாபர யுகத்தில் மேலும் உருக்குலைந்தது .இப்போது கலியுகத்தில்….. இது பற்றி தனியாக நிறைய பதிவுகளாக எழுதிக்கொண்டு வருகிறேன்…. நாம் கலியுக மேல் விளிம்பில் தான் உலவுகிறோம். இன்னும் அதிக ஆழம் இருக்கிறது. கடப்பதற்கு.
மேலே என்னால் கேள்விகள் மட்டுமே கேட்க முடிந்தது. விடை?ஆன்மீக கோணத்தில், பாரத புண்ய பூமியில் நூல்கள் சொல்லும் விடை, நமக்கு புரியவில்லை. அது பழக்கமில்லை , ஏதோ சோழன், பல்லவன் கால கல்வெட்டு போல் படிக்கவே முடியவில்லை, படித்தாலும் புரியவில்லை.
ஒவ்வொரு தனிமனிதனும் அகந்தையை விலக்கவேண்டும், ஆசை, பேராசையை அண்ட விடக் கூடாது. நான் சொல்வது நாட்டுக்கும் வீட்டுக்கும் தான். எல்லோரும் அமைதியை காக்கவே முயலவேண்டும், முன்வரவேண்டும். ஒற்றுமையை வளர்க்கவேண்டும். அதற்கு பாடு படவேண்டும். ஒற்றுமையாலுண்டு வாழ்வு, இல்லையேல் அனைவர்க்கும் தாழ்வு.
நமது அவஸ்தைக்கு காரணம். அவித்யா, அறியாமை, பரந்த நோக்கம் அற்ற குறுகிய எண்ணம்.
ஒவ்வொரு மனிதனும் நாடும், தனது உடல் வலிமை, பண பலம், பதவி ஆதிக்கம் இதையே நம்பி தீங்குகளை புரிகிறான். பிறரை, பிறவற்றை வென்று, அபகரித்து, ஆக்கிரமித்து, அதிகாரம் செலுத்த ஆசை அடங்கவில்லை. ஆத்மா அங்கே செயலற்று கிடக்கிறது. மனசாட்சி இறந்து, பறந்து போய் பேயாய் அலைந்து என்ன பயன்? அதன் விளைவாக தான் சுயநலம் ஆட்டுவிக்கிறது. சகிப்பு தன்மை இல்லை. கருணையும் அன்பும் குடிகொண்ட இதயத்தில் ஆத்திரம், வெறுப்பு, பழிவாங்கும் எண்ணம் நிரம்பி விட்டது.தர்மம் நிச்சயம் தழைக்கும், கெடுதி செய்வோர், அழிவர். சரித்திர புத்தகத்தில் இன்னும் பல பக்கங்கள் வெற்றிடமாக விஷயங்களை ஏற்றுக்கொள்ள காத்திருக்கிறது. ஞாபகம் இருக்கட்டும். அது இந்த உண்மைகளை, அதன் விளைவை எதிர்காலத்துக்கு எடுத்துக் காட்டும். ஹிட்லர், முசோலினி, கஜினி, கோரி, ஜெங்கிஸ்கான், மாலிக்காபூர், ஒளரங்கசீப், போன்ற பெயர்கள் கருப்பு வெளுப்பில் இருக்கிறதல்லவா? அதுபோலவே நன்மை புரிந்தோர், அமைதி காத்தோர் பெயர்களும் கூட இருக்கிறதே. நமது பெயர் எப்படி இருக்க வேண்டும்?
”நான்” செத்து, மடிந்து, ”நாம்” எல்லோர் மனத்திலும் நிறைவது எக்காலம்? மனிதன் இயந்திரமாக மாறியது குறைந்து இயந்திரம் மனிதனாக செயல்பட ஆரம்பித்துவிட்டது. அதன் வழியில் நாம் இழுத்துச் செல்லப் படுகிறோம். “உள் வளர்ச்சி இல்லாமல் வெளி வளர்ச்சி பயன் தராது ”. இந்த உண்மை நெஞ்சில் எதிரொலித்துக் கொண்டே இருக்கவேண்டும். AI எனும் தொழில் நுட்பத்துக்கு அடிமையாகி மனித மனத்தில் உயர்வை இழக்கிறோம். ”மனம்போன போக்கெல்லாம் போகவேண்டாம்” என்று கிழவி அப்போதே பாடியதை நினைப்போம். வள்ளுவர் குரல் ஒலிக்கட்டும்.
“அன்பிலார் எல்லாம் தமக்குரியர்; அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு.”
“இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்.” பழிவாங்கும் மனம் திருந்த வேண்டும். “கொத்துக் குவித்த செல்வமும் கொண்டு போக முடியாது”.ஆமாம்,,, பட்டினத்தாரே. நன்றாகவே சொன்னீர்கள் நீங்கள். நீங்கள் சொல்வதின் உண்மையை நாங்கள் தினமும் இரவும் பகலும் யூட்யூபில் பார்க்கிறோம் .
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.


