
அட கலிகாலமே! – நங்கநல்லூர் J K SIVAN
தற்காலத்தில் ஒவ்வொரு வினாடியும் நடக்கும் உலக சம்பவங்கள் நம்மை திடுக்கிட செயகிறது. எங்கே எப்போது யாரால் குண்டு வெடிக்கப்படுமோ, அதனால் நேரும் விளைவுகள் உலகெங்கும் மக்களின் வாழ்வை எப்படி பாதிக்கப்படுமா என்கிற பீதி நிலவுகிறது. விலைவாசிக்கு எப்போதுமே மேலே மேலே ஏறத்தான் தெரியுமே தவிர இறங்கவே தெரியாது. கச்சா எண் ணெய் , அடுப்பெரிக்கும் எண்ணெய் எல்லாவற்றுக்கும் தட்டுப்பாடு, விமான போக்குவரத்தில் சிக்கல், … இன்னும் என்னென்னவோ..
அட கலிகாலமே கட்டுரை யாரையும் பயமுறுத்த எழுதப்பட்டதல்ல. இப்போது நடப்பவற்றை ஏறக்குறைய சரியாகவே ஐந்தாயிரம் வருஷங்களுக்கு முன் கணித்த ஒரு ரிஷியின் ஸ்லோகங்கள் நமக்கு உணர்த்துபவை மட்டும் தான். என் கைச்சரக்கு இதில் எதுவுமில்லை கொஞ்சம் அதை விளக்கமாக புரியும்படி சொல்வது மட்டுமே.
சுகப்பிரம்ம ரிஷி ரொம்ப விசித்ரமானவர். நமக்கு இன்று இன்னும் ஒரு மணி நேரத்தில் என்ன நடக்கப் போகிறது என்பதே தெரியவில்லை.
பரீக்ஷித் மண்டையில் ஆயிரத்தெட்டு மின்னல் பூச்சிகள். அடுத்து ஒரு கேள்வி கேட்கிறான்.
”முனி புங்கவரே, கலிகாலம் ஆரம்பித்துவிட்டதே. இந்த கலிகாலத்தில் இன்னும் என்ன நடக்கும்? . அவனைப் பொருத்தவரை தனக்கு இன்னும் ஏழு நாளில் என்ன நடக்கப் போகிறது என்று தெரிந்தவன் . 7ம் நாள் அவனுக்கு தக்ஷகன் எனும் கொடிய சர்ப்பம் தீண்டி மரணம் நிச்சயம். அது வரை எதிர்காலத்தில் எப்போது என்ன நடக்கப்போகிறது என்று அறிந்து கொள்வதில் ஏனோ ஆவல்!
ஹே ராஜன், சொல்கிறேன் கேள். கலியுகத்தில் எண் சாண் உடம்புக்கு வயிறே பிரதானம் என்று ஆகும். உண்பதே உடல் எடுத்ததின் காரணம். அடாவடி, அதிரடி, தில்லு முல்லு , சவடால், அக்கிரமம், பொய் , அதிகார துஷ்ப்ரயோகம், போன்ற பாபச் செயல்,சாத்தியமாகும். அதுவே சத்தியமும் ஆகும். எல்லாம் பண பலம் அதிகார பலம். ஒவ்வொரு மனிதனுக்கும் தன் குடும்பத்தை காப்பதே பெரிய உயர்ந்த தியாகச் செயல் என்றநிலை உருவாகும். குடும்பம் சிதறிவிடும்.
அதிகமாக சொத்து, காசு உள்ளவன் செய்வது சரி. அவன் சொல் ஒன்றே வேத வாக்கு. அந்த சொத்து காசு வகையறா எப்படி சேர்ந்தது? என்பது முக்கியமில்லை. அது சாமர்த்தியமாக போற்றப்படும். அவனையே சிறந்த தலைவனாக, அறிவாளியாக, கௌரவம் கொண்டவனாக, யுக புருஷனாக தலைவனாக கை தட்டி வரவேற்பார்கள்.
எவன் ஒரு நாளைக்கு ஒரு வேளைக்கு தனது காரியம் நறைவேற மற்றவர்களுக்கு வயிறார உணவு அளிக்கி றானோ அவன் தெய்வமாக கொண்டாடப் படுவான். ஏனென்றால் கலியுகத்தில் பசி மக்களை வாட்டும். அலைக்கழிக்கும். உணவின் வாசனை கூட கிட்டாத வனுக்கு ஒருவேளை ஒரு நாள் சாப்பாடு பரிபூர்ண திருப்தியை ஆனந்தத்தை அளிக்கும் அல்லவா.
பணமில்லாதவன் அசுத்தமானவன் என்பார்கள். ஏமாற்று வித்தை, நயவஞ்சகம், போன்றவை ஒருவனின் சிறந்த குணமாக ஏற்கப்படும். கல்யாணம் என்பது பேச்சு சாமர்த்தியத்தால் நிச்சயிக்கப்படும். ஒரு பக்கெட் தண்ணியோ, ஐந்தாறு சொம்பு தண்ணீரோ மேலே ஊற்றிக் கொண்டாலே ஒருவன் சமூகத்தில் சுத்தமா னவனாக அங்கீகாரம் பெறுவான்.
எங்கேயாவது ஒரு குட்டையில் தண்ணீர் தேங்கி நின்றாலே போதும். அது ஒரு புண்ய க்ஷேத்ரம் என்பார்கள். தலையை கன்னா பின்னா என்று மனம் போனபடி சிரைத்துக் கொள்வது தான் அழகு, நாகரீகம் என்று கருதப்படும். வயிற்றை நிரப்புவது ஒன்று தான் வாழ்வின் லக்ஷ்யமாகும். அடாவடித்தனம் தான் தலைவனாக அவசியம், நியாயம் ஆகும். குடும்பம் நடத்துவதே ரொம்ப கெட்டிக்காரத்தனம் ஆகிவிடும். ஊருக்காகவும் பேருக்காகவும் தான் ஆன்மிகம், தெய்வீகம் என்று ஆகிவிடும்.. இது தான் கலிகால பண்பு, என்று இன்று நடப்பதை, அன்றே, சுகர் சொன்னவர்.
”பரீக்ஷித் மஹாராஜா, கலியுகம் என்பது எப்படி இருக் கும், மக்கள் எவ்வாறு நடந்துகொள்வார்கள் என்று மேலும் சொல்கிறேன். கேளுங்கள்” என தொடர்கிறார் சுகப்பிரம்ம ரிஷி.
க்ஷேத்ரம் என்றால் பகவான் அவதரித்த ஸ்தலம், புண்ய காரியங்கள் நடந்த இடம், பல மஹான்கள் சஞ்சரித்த, அவதரித்த, வாழ்ந்த இடம், சில நல்ல பலன்களை கொடுக்கும் ஸ்தலம் என்பதெல்லாம் மறந்து விடும், மறைந்துவிடும்.
அழகு என்பது சாமுத்திரிகா லக்ஷணம் இல்லை.தலை முடி ஸ்டைல் எப்படி இருக்கிறதோ அது தான் அழகு என்ற நிலை வந்துவிடும். இப்போது MKT பாகவதர் கிராப் யாராவது அழகு என்று ஒப்புக் கொள்வார்களா? ஒரு காலத்தில் அதற்கு எவ்வளவு மௌஸு!, கை ரிக்ஷா இழுத்துக் கொண்டு போகிறவன், குதிரை வண்டி ஓட்டுபவன் கூட அப்படி ஒரு தலை முடி வளர்த்து நெற்றியில் ஜவ்வாது போட்டு வைத்துக்கொள்ள வசதியில்லாததால் குங்குமப்பொட்டு ரூபாய் அளவு வைத்துக்கொண்டு ”மன்மத லீலையை” சாருகேசி ராகம் தெரியாமலேயே பாடிக் கொண்டு வண்டி இழுத்துக்கொண்டு ஓடுவதை நான் சிறுவபதில் கோடம்பாக்கத்தில் பார்த்திருக்கிறேன்.
அமெரிக்காவில் புதுப் புது HAIR ஸ்டைல். ஏன் நாம் பார்க்கும் IPL விளையாட்டுகளில், ஒலிம்பிக் விளையாட்டுகளில் பங்கேற்கும் சில வீரர்கள், வீராங்கனைகள் தலையே பொட்டுக்கூடை தகவல் சொல்ல வில்லையா? அதற்கென்றே நிறைய பணம் செலவு செய்து நம் வீட்டு பிள்ளைகள் தலையை அப்படி அலங்கரித்துக் கொண்டு வந்து, வீட்டில் தாத்தா பாட்டி சாபம் வாங்குவது தெரியாதா?
கரோனா சமயத்தில் பலர் தலைகள் முகங்கள் எல்லாமே ரிஷிகள் தலைகளாக கண்டதை மறந்து விட்டோமா ? சிலர் முகங்கள், தலைகள் அப்படியே நிலைத்து விட்டனவே. கண்டதை எல்லாம் சாப்பிட்டு வயிற்றை வளர்த்துக் கொள்வது, நிறைத்துக் கொள்வது தான் வாழ்க்கையின் லக்ஷியம் ஆகிவிடும். எவன் அடாவடி அடித்து காரியம் சாதித்துக் கொள்கிறானோ அவனே கெட்டிக்காரன், புத்திசாலி என்று மக்கள் தீர்மானிப்பார்கள். அங்கே நியாயம், நேர்மை நாணயம் காணாமல் போகும்.
एवं प्रजाभिर्दुष्टाभिराकीर्णे क्षितिमण्डले । ब्रह्मविट्क्षत्रशूद्राणां यो बली भविता नृप: ॥ ७ ॥12. 2.7
evaṁ prajābhir duṣṭābhir ākīrṇe kṣiti-maṇḍale brahma-viṭ-kṣatra-śūdrāṇāṁ yo balī bhavitā nṛpaḥ
லஞ்சம், ஊழல், கொள்ளை, களவு, இதெல்லாம் மலிந்த சமூகம் ஜனங்கள் தான் எங்கும் இருப்பார்கள். இதில் அதிக திறமை படைத்தவன் தான்அ ரசியலில் வெற்றிபெற்றவன். மற்றவர்களை ஆள்வான்.
एवं प्रजाभिर्दुष्टाभिराकीर्णे क्षितिमण्डले । ब्रह्मविट्क्षत्रशूद्राणां यो बली भविता नृप: ॥ ७ ॥
evaṁ prajābhir duṣṭābhir ākīrṇe kṣiti-maṇḍale brahma-viṭ-kṣatra-śūdrāṇāṁ yo balī bhavitā nṛpaḥ
ஏவம் பிரஜாபீர் துஷ்டபிர் அகிர்ணே க்ஷிதி மண்டலே ப்ரம்ம வித் க்ஷத்ர சூத்ரானாம் யோ பாலி பவிதா ந்ருபா:
சுகரின் கணிப்பில் கலிகாலத்தில் பார்க்கு மிடமெங்கும் நீக்கமற அயோக்யர்கள் அதர்மவான்கள், அந்யாயக்
கரார்கள், அக்ரமம் செய்பவர்களாக கூட்டம் கூட்டமாக காணப்படுவார்கள். உலகத்தில் ஊழல் நிறைந்த அரசியல்வாதிகள் நிறைந்துவிடுவர். தன் சமூகத்
தினிடையே தன்னை பலமானவன் என்று காட்டிக் கொள்பவன், அரசாளும் அதிகாரத்தைப் பெற்றிடுவான்
प्रजा हि लुब्धै राजन्यैर्निर्घृणैर्दस्युधर्मभि: । आच्छिन्नदारद्रविणा यास्यन्ति गिरिकाननम् ॥ ८ ॥12.2.8
prajā hi lubdhai rājanyair nirghṛṇair dasyu-dharmabhiḥ ācchinna-dāra-draviṇā yāsyanti giri-kānanam
நல்லவர்கள் இந்த மாதிரி ராஜ்யத்தில் வாழமாட் டார்கள். மனைவி மக்களை சொத்தை எல்லாம் இழக்க நேரிடும். கொடுமையான பேராசை பிடித்த, மனசாட்சி யற்ற கொடியவர்களிடமிருந்து தப்பி வேறெங்கோ ஓடிவிடுவார்கள். அடேயப்பா அமெரிக்கா ஐரோப்பா என்று நம்மவர்கள் ஓடுவது பற்றி சுகர் தெரிந்து வைத்திருக் கிறாரே .
शाकमूलामिषक्षौद्रफलपुष्पाष्टिभोजना: । अनावृष्टया विनङ्क्ष्यन्ति दुर्भिक्षकरपीडिता: ॥ 12.2.9
śāka-mūlāmiṣa-kṣaudra- phala-puṣpāṣṭi-bhojanāḥ anāvṛṣṭyā vinaṅkṣyanti durbhikṣa-kara-pīḍitāḥ
மக்கள் பஞ்சத்தாலும், அதிக வரி சுமையாலும் துடிப் பார் கள். கிழங்கு, இலை காய் பூ, பட்டை, விதை என்று எதையாவது சாப்பிட்டு உயிர்வாழ்வார்கள்.
WILL TELL U MORE …..
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



