SUDHARSANA ASHTAKAM J K SIVAN

ஸுதர்சன அஷ்டகம் – நங்கநல்லூர் J K SIVAN
தர்சனம் என்றால் பார்வை, காட்சி. ரெண்டுமே கண்ணால் பெறுவது. கண்ணுக்கு விருந்தாக அமைந்தால் அருமையான காட்சி, நல்ல காட்சி அது தான் ”ஸு” தர்சனம். எத்தனையோ பேருக்கு இந்த பெயர். கண்ணுக்கு விருந்தாக அமைத்தவன் கண்ணன். கிருஷ்ணன். அவனது ஆயுதம் ​ஸுதர்சன சக்ரம். தெய்வ மாக கோவில்களில் வணங்கப்படுவது. எத்த னையோ தீய சக்திகளை அழித்து காத்த​ருள்வது.
வேதாந்த தேசிகர் எனப்படும் ஸ்ரீ ​ஸ்வாமி தேசிகன் வாழ்ந்த காலம் 1268–1369 . நூறு வருஷங்கள். எத்தனையோ ஸமஸ்க்ரித , தமிழ் ஸ்லோகங்களை இயற்றி​ப் பாடியவர். திருப்பதி வேங்கடாசலபதி​யின் திவ்யதரிசன​த்தில் மகிழ்ந்து அவனது ​ஸுதர்சன சக்ரத்தை தியானம் பண்ணி அந்த கணத்திலேயே ​ஸுதர்சன அஷ்டகம் எனும் எட்டு ஸ்லோகங்க​ள் உருவானது. எதிரிகளை வெல்லும், ரக்ஷிக்கும் , நோய்களை போக்கும், தீய சக்திகளை அழிக்கும், இடையூறுகளை நீக்கும், கர்மத்தை தொலைக்கும், பாபங்களை போக்கும்​, அறியாமையை அழிக்கும், பிறப்பறுக்கும், மந்திர சக்தி வாய்ந்த ஸ்லோகம்​ ஸுதர்சன அஷ்டகம் நித்ய பாராயணத்துக்கு உகந்தது.​ விஷ்ணுவின் சக்தி அல்லவா? இதனால் பயனடைந் தவர்கள் பலர் அன்றும் இன்றும் என்றும் என்று கூட சொல்லலாம்.
1. प्रतिभटश्रेणीभीषण वरगुणस्तोमभूषण । जनिभयस्थानतारण जगदवस्थानकारण
निखिलदुष्कर्मक्षयकर निगमसद्धर्मदर्शन । जय जय श्रीसुदर्शन जय जय श्रीसुदर्शन
Pratibhaṭa-śreṇī-bhīṣaṇa Vara-guṇa-stoma-bhūṣaṇa Jani-bhaya-sthāna-kāraṇa
Jagad-avasthāna-kāraṇa Nikhila-duṣkarma-kṣayakara Nigama-sad-dharma-darśanaJaya Jaya Śrī Sudarśana Jaya Jaya Śrī Sudarśana
​
ப்ரதிப⁴டஶ்ரேணிபீ⁴ஷண வரகு³ணஸ்தோமபூ⁴ஷண​ ஜநிப⁴யஸ்தா²நதாரண ஜக³த³வஸ்தா²நகாரண ।
நிகி²லது³ஷ்கர்மகர்ஶந நிக³மஸத்³த⁴ர்மத³ர்ஶந​ ஜய ஜய ஶ்ரீஸுத³ர்ஶந ஜய ஜய ஶ்ரீஸுத³ர்ஶந ॥ 1 ॥
​ஸுதர்சனா, எதிரிக​ளை கால் பிடரியில் பட ஓடச் செய்பவனே. சகல கல்யாண குணங்க​ள் நிறைந்த வனே. பயத்தால் நடுங்கி தவிப்பதிலிருந்து காப்பவனே!​ உலகம் நிலைத்திருக்க காரணமானவனே. பாபம் நெருங்காமல் காத்து அவற்றை அழிப்பவனே!​ வேத சத்ய தர்ம வேத சத்திய தர்மத்தை ​பரப்புபவனே!​ ஜெய விஜயீபவ ஸுதர்சனா.
2. शुभजगत्स्वरूपमण्डन सुरगणत्रासखण्डन । शतमखब्रह्मवन्दित शतपथब्रह्मनन्दित ।
प्रथितविद्वत्सपक्षिण भजदहिर्बुध्न्यलक्षण । जय जय श्रीसुदर्शन जय जय श्रीसुदर्शन
Śubha-jagat-svarūpa-maṇḍana Sura-gaṇa-trāsa-khaṇḍana Śatamakha-brahma-vandita Śatapatha-brahma-nandita.Prathita-vidvat-sapakṣiṇa Bhajata-ahirbudhnya-lakṣaṇa Jaya Jaya Śrī Sudarśana Jaya Jaya Śrī Sudarśana
ஶுப⁴ஜக³த்³ரூபமண்ட³ந ஸுரஜநத்ராஸக²ண்ட³ந​ ஶதமக²ப்³ரஹ்மவந்தி³த ஶதபத²ப்³ரஹ்மநந்தி³த ।
ப்ரதி²தவித்³வத்ஸபக்ஷித ப⁴ஜத³ஹிர்பு³த்⁴ந்யலக்ஷித​ ஜய ஜய ஶ்ரீஸுத³ர்ஶந ஜய ஜய ஶ்ரீஸுத³ர்ஶந ॥ 2 ॥
​பார்க்குமிடமெங்கும் உலகில் மங்களகரமாக தோன்றுபவனே. தேவர்களின் பயத்தை நீக்குபவனே!​ இந்திரன், பிரம்மன் முத​லான​ தேவர்களால் வணங்கப்படுபவனே! வேதங்களில் ​ மூலப்பொருளாக போற்றப்படுபவனே. ஞானிக​ள் தொழும் பகவானே.
பக்தர்களுக்கு அருள் புரி​யும் பக்தவத்சலா. ஜெய விஜயீபவ ஸுதர்சனா .
3. स्फुटतटिज्जालपिञ्जर पृथुतरज्वालपञ्जर । परिगतप्रत्नविग्रह परिमितप्रज्ञदुर्ग्रह ।
प्रहरणग्राममण्डित परिजनत्राणपण्डित । जय जय श्रीसुदर्शन जय जय श्रीसुदर्शन
Sphuṭa-taṭij-jāla-piñjara Pṛthutara-jvāla-pañjara Parigata-pratna-vigraha Parimita-prajña-durgraha Praharana-grāma-maṇḍita Parijana-trāṇa-paṇḍita Jaya Jaya Śrī Sudarśana Jaya Jaya Śrī Sudarśana
​
ஸ்பு²டதடிஜ்ஜாலபிஞ்ஜர ப்ருது²தரஜ்வால பஞ்ஜர பரிக³தப்ரத்நவிக்³ரஹ பரிமிதப்ரஜ்ஞது³ர்க்³ரஹ ।
ப்ரஹரணக்³ராமமண்டி³த பரிஜநத்ராணபண்டி³த​ ஜய ஜய ஶ்ரீஸுத³ர்ஶந ஜய ஜய ஶ்ரீஸுத³ர்ஶந ॥ 3 ॥
​கண்ணைப்பறிக்கும் மின்னல் போன்ற ஒளி வெள்ள ப்ரகாசா. அண்டபகிரண்ட பிரம்மாண்ட அக்னி ஜ்வாலை பிழம்பே.. அக்னி வளைய​மான சக்தி ஸ்வரூபனே. பரஞ்சோதில் தெய்வமே. எல்லையற்ற, முடிவில்லா ஞான ஸ்வரூபனே!​ சர்வ சக்தி ஆயுதமே. அடியவர்களுக்கு அஞ்சேல் என ஆறுதல் தரும் ஆதி மூலமே.ஜெயவிஜயீபவா ஸுதர்சனா .
4. निजपदप्राप्तसद्गण निरुपधिस्फीतषड्गुण । निगमनिर्व्यूढवैभव निजपरव्यूहवैभव ।
हरिहयद्वेषिदारण हरपुरप्लोषकारण । जय जय श्रीसुदर्शन जय जय श्रीसुदर्शन ॥
Nija-pada-prāpta-sad-gaṇa Nirupadhi-sphīta-ṣaḍ-guṇa Nigama-nirvyūḍha-vaibhava Nija-para-vyūha-vaibhava
Hari-haya -dveṣi-dāraṇa Hara-pura-ploṣa-kāraṇa Jaya Jaya Śrī Sudarśana Jaya Jaya Śrī Sudarśana
நிஜபத³ப்ரீதஸத்³க³ண நிருபதி²ஸ்பீ²தஷட்³கு³ணநிக³ மநிர்வ்யூட⁴வைப⁴வ நிஜபரவ்யூஹவைப⁴வ ।
ஹரிஹயத்³வேஷிதா³ரண ஹரபுரப்லோஷகாரண​ ஜய ஜய ஶ்ரீஸுத³ர்ஶந ஜய ஜய ஶ்ரீஸுத³ர்ஶந ॥ 4 ॥
​ஸுதர்சன மஹாப்ரபு, நினது திருவடிகளை சூழ்ந்து கொண்டிருக்கும் பக்தர்களுக்கு பரமானந்தம் தருபவனே. ஷட் குணங்கள் கொண்டவனே. பரிபூரணா. வேதங்கள் புகழும் பரமா, பரமபத நாயகனே, அசுராந்தகா. தீமையை​ தீய சக்தியை நிர்மூலமாக்குபவனே. ஆயிரமாயிரம் செந்நாக்கு கொண்ட அக்னியே. ஜெயவிஜயீபவ ஸுதர்சனா .
5. दनुजविस्तारकर्तन जनितमिश्राविकर्तन । दनुजविद्यनिकर्तन भजदविद्यानिवर्तन
अमरसङ्घप्रणमित अमरनायकसंमत । जय जय श्रीसुदर्शन जय जय श्रीसुदर्शन ॥
Danuja-vistāra-kartana Janita-miśrā-vikartana Danuja-vidyā-nikartana.Bhajata-avidyā-nivartanaAmara-saṅgha-praṇamita Amara-nāyaka-sammata Jaya Jaya Śrī Sudarśana Jaya Jaya Śrī Sudarśana
த³நுஜவிஸ்தாரகர்தந த³நுஜவித்³யாவிகர்தந​ ஜநிதமிஸ்ராவிகர்தந ப⁴ஜத³வித்³யாநிகர்தந ।
அமரத்³ருஷ்டஸ்வவிக்ரம ஸமரஜுஷ்டப்⁴ரமிக்ரம​ ஜய ஜய ஶ்ரீஸுத³ர்ஶந ஜய ஜய ஶ்ரீஸுத³ர்ஶந ॥ 5 ॥
​பலகாலம் கடும் தவம் புரிந்து எண்ணற்ற சக்தி வரமாக பெற்ற பலமிக்க அசுரர்களின் வலிமையை​ எதிர்கொண்டு அவர்களை வீழ்த்திய மஹா வீரா. மாயையை கட்டுப்பாட்டில் கொண்டவனே. ஆதி அந்தமில்லாத அனாதிநாயகா. அஃள்னனத்தை சுட்டெரிப்பவனே அஞ்ஞானம் போக்கி பக்தர்களுக்கு மோக்ஷம் அளிப்பவனே . தேவாதி தேவனே. தேவர்கள்
எல்லாராலும் வணங்கப்படுபவனே!​ ஜெயவிஜயீபவா ஸுதர்சனா.
6. प्रतिमुखालिड्धबन्धुर पृथुमहाहेतिदन्तुर । विकटमालापरिष्कृत विविधमायाबहिष्कृत ।
स्थिरमहायन्त्रतन्त्रित दृढदयातन्त्रयन्त्रित । जय जय श्रीसुदर्शन जय जय श्रीसुदर्शन
Pratimukhālīḍha-bandhura Pṛthu-mahā-heti-dantura Vikaṭa-mālā-pariṣkṛta Vividha-māyā-bahiṣkṛta
Sthira-mahā-yantra-t antrita Dṛḍha-dayā-tantra-yantrita Jaya Jaya Śrī Sudarśana Jaya Jaya Śrī Sudarśana
​ப்ரதிமுகா²லீட⁴ப³ந்து⁴ர ப்ருது²மஹாஹேதித³ந்துரவிகட மாலாபரிஷ்க்ருத விவித⁴மாயாப³ஹிஷ்க்ருத ।
ஸ்தி²ரமஹாயந்த்ரயந்த்ரித த்³ருட⁴த³யாதந்த்ரயந்த்ரித​ ஜய ஜய ஶ்ரீஸுத³ர்ஶந ஜய ஜய ஶ்ரீஸுத³ர்ஶந ॥ 6 ॥
உன் பெயரைச்சொன்னாலே எதிர் மறை சக்திகள் அலறி மருண்டு ஓடும் தகைமை கொண்டவனே. மிக சக்தி வாய்ந்த சக்ராதிபதியே. அழகிய மாலைகளால் அலங்கரிக்​ கப்பட்டவனே!​ அசுரர்களின் மாயா ஜாலத்தை எல்லாம் அறிந்து அவர்களை எளிது வெல்லும் மா மாயனே. பக்தர்கள் அன்போடு அலங்கரிக்கும் அளிக்கும் மலர்மாலைகளை விரும்பி ஏற்று அணியும் இயற்கையிலேயே பேரழகா. பக்தவத்சலா, காருண்ய ஸிந்தோ. ​பக்தர்களின் யந்த்ர தந்த்ர உபாசனைகளை ஏற்கும் நிர்குணப்ரம்மமே.ஜெயவிஜயீபவ ஸுதர்சனா .
7. महितसम्पत्सदक्षर विहितसम्पत्षडक्षर । षडरचक्रप्रतिष्ठित सकलतत्त्वप्रतिष्ठित
विविधसङ्कल्पकल्पक विभुधसङ्कल्पकल्पक । जय जय श्रीसुदर्शन जय जय श्रीसुदर्शन ॥
Mahita-sampat-sad-akṣara Vihita-sampat-ṣaḍ-akṣara Ṣaḍ-ara-cakra-pratiṣṭhita Sakala-tattva-pratiṣṭhita Vividha-saṅkalpa-kalpaka Vibudha-saṅkalpa-kalpaka Jaya Jaya Śrī Sudarśana Jaya Jaya Śrī Sudarśana
​
மஹிதஸம்பத்ஸத³க்ஷர விஹிதஸம்பத்ஷட³க்ஷர​ ஷட³ரசக்ரப்ரதிஷ்டி²த ஸகலதத்த்வப்ரதிஷ்டி²த ।
விவித⁴ஸங்கல்பகல்பக விபு³த⁴ஸங்கல்பகல்பக​ ஜய ஜய ஶ்ரீஸுத³ர்ஶந ஜய ஜய ஶ்ரீஸுத³ர்ஶந ॥ 7 ॥
​ஸுதர்சனா, நீ நீ சத்வ குணபோதன். நல்லோர்களின் செல்வமே உன்னைப்பற்றிய பூர்ண ஞானம். ஓம் நாராயணா எனும் ஷட் அக்ஷர மந்த்ர ஸ்வரூபன் நீ. ஆறு அரங்கங்கள் கொண்ட அரங்கநாதன். சகல தத்வ ஸாரம் நீயே. ​ பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றுபவனே. சகல தேவர்களின் எண்ணம் நிறைந்தவனே . எல்லாம் உன்னிலும் எல்லாவற்றிலும் நீயாக நிறைந்திருப்பவனே. நினைத்ததை அருளும் கல்பக விருக்ஷம் நீ. காமதேனு நீ.. ஜெயவிஜயீபவ ஸுதர்சனா .
8. भुवननेत्रत्रयीमय सवितृकोटिप्रकाशमय । निरवधिस्वादुचिन्मय निखिलशक्तिजगन्मय ।
अमितविश्वक्रियामय शमितविश्वभयामय । जय जय श्रीसुदर्शन जय जय श्रीसुदर्शन
Bhuvana-netra-trayī-maya Savitṛ-koṭi-prakāśa-maya Niravadhi-svādu-cinmaya Nikhila-śakti-jaganmaya Amita-viśva-kriyā-maya Śamita-viśva-bhayāmaya Jaya Jaya Śrī Sudarśana Jaya Jaya Śrī Sudarśana
​
பு4வநநேதஸ்த்ரயீமய ஸவநதேஜஸ்த்ரயீமய​ நிரவதி⁴ஸ்வாது³சிந்மய நிகி²லஶக்தேஜக³ந்மய
அமிதவிஶ்வக்ரியாமய ஶமிதவிஶ்வக்³ப⁴யாமய​ ஜய ஜய ஶ்ரீஸுத³ர்ஶந ஜய ஜய ஶ்ரீஸுத³ர்ஶந ॥ 8 ॥
​ மூன்று லோகங்களின் கண் நீ. கோடி சூரியர்களைப் போல் பிரகாசமுடையவனே!​ வேத ஸ்வரூபா. யோகி கள், முனிவர்கள், ரிஷிகள் பக்தியோடு யாகங்களில் வளர்த்து வணங்கும் கார்ஹபத்யம், ஆகவனீயம், தக்ஷிணாக்னி எனும் முத்தீயும் நீயே. அளவற்ற ஆனந்த சித்த​, சத்ய ஸ்வரூபனே!​ பிரபஞ்சத்தை படைத்து அதனுள் எல்லாமாக இருப்பவன் நீ. சகல பயன்களை யும் போக்கி எண்டிசையும் நின்று காக்கும் தெய்வம் நீ. ஜெயவிஜயீபவ
​ஸுதர்சனா.
இந்த ஸுதர்சன அஷ்டகம் எனும் எட்டு ஸ்லோகங்க ளை தியானித்து வணங்குபவர்களுக்கு சகல விருப்பங்க
ளும் கைகூடும். இடையூறுகள், நோய்கள் நீங்கி, சுபிக்ஷமாக வாழ்ந்து ஸுதர்சனன் அருளால் வைகுண்ட பதவி அடைவார்கள் என்கிறது பலஸ்ருதி.

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2561

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;