

சூர்யா உனக்கு நமஸ்காரம். – நங்கநல்லூர் J K SIVAN
பிராமணர்கள் இந்த விஞ்ஞான உலகத்தில் சந்தியாவந்தனம் பண்ணுவதே ஒரு ஆச்சர்யமான நிகழ்வுதான். அதன் அருமையை அவர்கள் உணராதது அவர்கள் தப்பு மட்டுமா? பெற்றோர், உறவுகள், சகவாசம், பள்ளிக்கூடம் கல்வி முறை, விஞ்ஞான ஆதிக்கம் இதெல்லாம் கூட காரணம். வெள்ளைக்காரன் காலெடுத்து வைத்த அன்றிலிருந்து சந்தியாவந்தனம் மட்டும் அல்ல, மற்ற நித்ய அனுஷ்டானங்கள், சம்பிரதாயங்கள்,பக்தி, பூஜை எல்லாமே கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்து மறையும் நிலையை அடைந்து விட்டது. கோவில்கள் அழிய ஆரம்பித்துவிட்டது.
ஆயிரமாயிரம் வருஷ வழக்கத்தை இருநூறு முன்னூறு வருஷ ஆங்கில ஆதிக்கம் இப்படிப் புரட்டிப் போட்டுவிட்டதே எப்படி, ஏன்?.
நமது ஆங்கில மோகம், சுயநலம், தற்பெருமை, சமூக அந்தஸ்து, பணம், பதவி, பட்டம், வறட்டு கௌரவம் போன்ற மாயைகள் நம்மை ஆக்ரமித்து விட்டதால் தான். மேலை நாட்டு நாகரீகம் நமது தொன்று தோட்ட பண்பாட்டை விழுங்க முற்பட்டதால்.ஆனால் பாரதீய உபநிஷதுகள், வேதங்கள் ரிஷிகளால் உருவான ஆழமான வேர்கள். மக்கள் மத்தியில் தலையெடுத்த காளான்களால் அழியாதது. எவ்வளவோ எதிர்ப்புகளை எதிர்கொண்டவை.
நித்ய கர்மாக்களில் ஆதாரமானது சந்தியா வந்தனம். அதன் பொருள், அர்த்தம் தெரிந்தால், எவ்வளவு மேன்மையானது என புரியும். தினமும் மூன்று வேளையும் பண்ணப்படுவது சந்தியாவந்தனம்.
உபநயனம் எனும் பூணல் சடங்கு ஒருவனை ரெண்டாம் பிறவியாளனாக மாற்றுகிறது. அப்போது முதல் அவன் வேதங்களை கற்று பலனடைய தகுதி பெறுகிறான். அப்போது முதல் தான் தினமும் மூன்று வேளை சந்தியாவந்தனம் பண்ண ப்ரம்மோபதேசம் பெறுகிறான்.
விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் நான்காவது, வாமன அவதாரம்.பாகவதம் அதை விவரிக்கும்போது வாமணனுக்கு உபநயனம் நடந்தபோது சூரிய பகவானே வந்து காயத்ரி மந்த்ர ப்ரம்மோபதேசம் செய்ததை, பிரஹஸ்பதி யக்னோபவீதம், பூணல் அணிவித்ததை, பூமாதேவி மான் தோலை ஆசனமாக தந்ததை, சோமன் பலாச தண்டத்தை கையில் கொடுத்ததை, வாமனனின் அம்மா அதிதி, (காஸ்யப ரிஷி அப்பா) கௌபீன வஸ்திரத்தை (கோவணம்) அளித்ததை, தேவர்கள் குடை தந்ததை, ப்ரம்மா கமண்டலம் கொடுத்ததை, சப்த ரிஷிகளும் தர்ப்பை புள் கொடுத்ததை, ஸரஸ்வதி தேவி ஜபமாலை தந்ததை, குபேரன் பிக்ஷை பாத்திரம் கொடுத்ததை, உமா தேவி பிக்ஷை தான்யம் அளித்ததை சொல்கிறது.
சந்த்யா வந்தனத்தில் பிரதான தெய்வம் சூர்யன். யஜுர்வேத, தாத்ரிய ஆரண்யகத்தில் அருண ப்ரஸ்னம் வருகிறது. சூரிய நமஸ்கார ஸ்தோத்ரம் அதில் வரும். விஞ்ஞானமே சூர்யன் தான் பூமியில் உயிர்வாழ அத்தியாவசியம் என்று தலையாட்டுகிறது.பூமியின் தட்ப வெட்ப நிலைக்கு உயிர், உணவு அளிக்க, ஜீவாதார சக்தி.
இப்போதிருக்கும் நிலை, ஸ்தானத்திலிருந்து ஒரு அங்குலம் பூமிக்கு அருகே சூரியன் வந்தாலே போதும். பூமியில் அனைத்தும் எரிந்து சாம்பலாகிவிடும். பகவான் எவ்வளவு கருணை உள்ளம் படைத்தவன் என்று புரிகிறதா. அவனை நினைக்காமல் இருப்பது முழுக்க முழுக்க துரோகம் இல்லையா?
வெளிச்சம் ஒளி என்பதே ஞானத்தின் அடையாளம். இருளை அகற்றுவது. விஞ்ஞானம் சூரியனை பகவானாக கருதாது. வெறும் உயிரற்ற ஒன்று, காற்று. உஷ்ண வாயுக்களின் கலவை என்று தான் சொல்லும். அப்படியென்றால் அது எப்படி பூமியில் உயிரினங்கள் தோன்ற காரணமாகும்? நமது பண்டை காலத்து ரிஷிக்கள் ஞானிகள். பல வருஷங்கள் யுகங்கள் தவமிருந்து பேருண்மைகளை அறிந்தவர்கள். அவர்கள் சொல்வதற்கு மதிப்பு உண்டு. சூரியனைப் பற்றி அகஸ்திய ரிஷி ராமனுக்கு உபதேசித்த ஆதித்ய ஹ்ருதயம் ஸ்லோகங்களை தமிழில் சின்ன புஸ்தகமாக இலவசமாக அநேகருக்கு கொடுத்துள்ளேன். யாருக்காவது வேண்டுமென்றால் என்னை நேரில் அணுகலாம். J K SIVAN 9840279080
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



