THIS IS THE LIFE WE LIVE…. J K SIVAN

இது தான் உலகம்…. நங்கநல்லூர் J K SIVAN
இதை ஏன் எழுதினாய் என்று கேட்க்காதீர்கள். என்ன புதிதாக எழுதி விட்டாய், எல்லாமே எல்லோருக்குமே
தெரிந்த விஷயம். திரும்ப திரும்ப அரைத்த மாவையே அரைக்கிறாயே என்றும் என்னை திட்டுங்கள் . அதனா லும் ஏதாவது பலன் இருந்தால் இருக்கட்டுமே என்று தான் இதை செய்கிறேன்.
மார்ச் நெருங்கிவிட்டது…வெயில் சுள்ளென்று கொளுத்த
ஆரம்பித்துவிட்டது. நங்கநல்லூர் மார்க்கெட்டில் நாலு சக்கர வண்டிகளில் பச்சையாக பெரிதாக தர்பூசணி பழக்கம், தர்பீஸ் தர்பீஸ் என்று வியாபாரிகள் குரல், நறுக்கி வைத்த பச்சை பழங்கள் உள்ளே ரத்தச்சிவப் பாக காட்சி தந்து பலர் வண்டி அருகே துண்டுகளை தின்று கொண்டிருக்கிறார்கள். மஞ்சளாக முலாம் பழத்துக்கும் டிமாண்ட். இதெல்லாம் வெயில் கால பழங்கள். ஒருகாலத்தில் இவை நடுத்தர அடித்தட்டு மக்களின் ஐஸ் க்ரீம் கடைகள்… இப்போது? விலையை விசாரித்து விட்டு நாக்கில் நீர் சொட்ட பழத்தை மட்டும் பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்து தண்ணீர் குடிக்க வேண்டிய நிலை.
வெயில் காலத்தில் யார் வந்தாலும் சில்லென்று நீர் மோர் கொடுக்கும் வழக்கம் எனக்குண்டு. சிலர் வேண்டா மென்றாலும் பெருங்காயம், கருவேப்பிலை ,கொத்தமல்லி, இஞ்சி போட்ட கடைந்த நீர் மோர் வேண்டாம் என்று சொல்லாதீர்கள் உடல் உள்ள உஷ்ணங் களை என்னிடம் தீர்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி கட்டாயப்படுத்தி அரை டம்ளராவது குடிக்க வைப்பேன்.
கடவுள் சீதோஷ்ண நிலையை வேண்டுமென்று தான் நமக்கு கொடுத்திருக்கிறான். இதுவும் உலகத்துக்கு மக்கள் வாழ தேவை. எல்லோரும் இன்புற்றிருக்க வேண் டும் என்பது தான் தந்தையும் தாயுமான அவன் விருப்ப ம்.
சுகம் இருந்தால் தான் கஷ்டத்தின் துன்பம் தெரியும். கஷ்டம் இருந்தால் தான் சுகம் எது என்று புரியும். வெயில் மழை, இருட்டு வெளிச்சம், பகல் இரவு, மரணம் ஜனனம் எல்லாமே இப்படித்தான் எதிர்மறைகள்.
நமக்குள்ளே ஆஸ்திகம் நாஸ்திகம் இப்படித்தான் உலவுகிறது.
தாவர சங்கம,மனித உயிரினங்கள் எல்லாவற்றுக்கும் ஒரு நியதி வைத்திருக்கிறான். அதுவே அதற்கு தர்மம் (பிச்சை எடுப்பவனுக்கு கொடுப்பதல்ல இது) ஒவ்வொரு
வருக்கும் கொடுக்கப்பட்ட கடமை, நியதி, அதை மீறக்
கூடாது. எல்லோரும் சுபிக்ஷமாக இருக்க இது ஒரு சாத்
வீக வழி. மத சுதந்திரமும் அப்படித்தான்.
யாருக்கு என்ன கடவுளோ, எந்த மத புஸ்தகமோ அதை படித்து நம்பி வாழலாம். இன்புறலாம். அடுத்தவன் அதை பின்பற்ற வேண்டிய அவசியமே இல்லை. தனி மனித சுதந்திரம் இது. அதில் தலையிடக்கூடாது, தவறு என்று குறை சொல்லக்கூடாது. அதற்கு உரிமைஇல்லை. எல்லை தாண்டும் வேலை இது.மற்றவர் மனது புண்படக் கூடாது.
உயிரினம் முதலில் ஒன்றை ஒன்று அடித்துக் கொன்று தின்று வாழ்ந்தது. பிறகு தாவரங்களை பயன் படுத்தி யது. மிருகங்களை பயன்படுத்தியது. பிறகு கூட்டமாக வாழ்ந்தது. பிறகு வாழ்க்கை சௌகரியங்களை தேடி கண்டுபிடித்து ஜீவித்தது. பணத்தை கண்டு பிடித்தது. நாசமாக போய்க்கொண்டிருக்கிறது.
கொலை, கொள்ளை, திருட்டு, ஏமாற்றுவது, எல்லாமே பணத்தின் மேல் இருக்கும் தீராத தாகம் தான். உழைக் காமல் ஊதியம் பெற எல்லோருக்கும் ஆவல், ஆர்வம் பெருகிவிட்டது. அரசாங்கமும் இதை ஆதரிக்கும்போது யாரிடம் போய் குறை சொல்வது? கடவுள் விட்ட வழி.
”உன் தலையில் நீயே மண்ணை வாரி போட்டுக் கொண்டு என்னிடம் வந்து என்னடா பிரயோஜனம் ?என்று பேசாமல் அபய ஹஸ்தம் காட்டுகிறார். அதற்கு என்ன அர்த்தம்?
”பொறு பொறு என்றாவது ஒருநாள் இது வழியல்ல என்று நீயே புரிந்து கொண்டு திருந்தும் வரை. அப்புறம் என் காலடிக்கு வா. நிறைய நான் சொல்லி இருக்கி றேன், நான் சொன்னதை புஸ்தகங்களாக போட்டு இருக்கி றார்கள். கொஞ்சமாவது படித்து அர்த்தம் புரிந்து கொள்ளமாட்டாயா?. நிச்சயம் ஒருநாள் அது நேரும். அது வரை உன் கர்ம பலனை நீ அனுபவித்து விட்டு என்னிடம் வா ” என்று அவரது ஒரு கை தனது திருவடிகளைக் காட்டுகிறது.
இந்த பிரபஞ்சத்தை படைத்தவன் நமக்கு சுகமாக வாழ அன்போடு இணைந்து அனுபவிக்க எல்லாம் தந்திருக் கிறான். அதை மொழிவாரி, இனம் வாரி, கட்சி வாரி, கொள்கை வாரி, நிறம், மதம் வாரியாக எல்லாம் பிரித் துக் கொண்டு அவன் அவஸ்தைப்பட வைக்கவில்லை, பணத்தை படைக்கவில்லையே. தங்கமும் வெள்ளியும், நிலக்கரியும், தாமிர, எண்ணெய் சுரங்கங்கள் கொடுத்த து நாம் சுகமாக சம பங்கு போட்டுக்கொண்டு வாழ.
என்ன படித்து என்ன லாபம்? இந்த உலகம் ஒரு வாடகை உல்லாச விடுதி. அவரவர் நேரம் முடிந்து காலி செய்ய வேண்டியது. நமக்கு பின்னால் அநேக யாத்ரிகர்
கள் வரிசையாக காத்திருக் கிறார்கள். அவர்களும் அனுபவிக்க வேண்டுமே சிலநாள். இருக்கும் வரை ஆனந்தமாக வசித்து விட்டு துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு வெறும் காலோடு, கையோடு நடையைக் கட்டிவிட்டு, சத்திரத்தின் திண்ணையி
லிருந்து புறப்படவேண்டும். எதுவும் நம்மோடு வரப் போவதில்லை…பட்டினத்தாரின் ‘ காதறுந்த ஊசி….”. சமாச்சாரம் ஞாபகம் இருக்கிறதா?
ஒவ்வொரு புது வருஷமும் வேப்பம்பூ பச்சடி கசப்பாக சாப்பிடுவதும் இனிப்பு சாப்பிடுவதும் இன்ப துன்பங்க ளை சமமாக ஏற்க, எல்லோரையும் ஒன்றாக பாவித்து அன்போடு பழக . இதெல்லாம் எந்த பாஷையில் எவ்வளவு தடவை புரியும்படியாக சொன்னாலும் புரிந்து கொள்ளமாட்டேன் என்றால் எப்படி உணர்விப்பது?.
அவரவர் சுய அனுபவம் மூலம் தான் பாடம் கற்க வேண் டும் என்றால் அதற்கு தான் பல பிறவிகள் எடுக்க வேண்டி இருக்கிறது… நரகம் ஸ்வர்கம் கதைகள் எல்லாம் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். பாபம் புண்ய விஷயங்கள் எப்போவாவது புரியாதா?. அது தான்தொடர்ந்து மெதுவாக நடந்து கொண்டிருக் கிறது. .எத்தனை ஒளரங்க சீப்புகள் வந்தாலும் கோயில் கள் வளர்ந்து கொண்டு தான் இருக்கும். எவ்வளவு பணம் திட்டினாலும் வரிசையாக பொறுமையாக நின்று பல மணி நேரங்கள் காத்திருந்து பகவான் தரிசனம் பெற்றுக் கொண்டே தான் இருப்போம். ராமனின் பெற் றோர் பக்தி, கிருஷ்ணனின் சம தர்சனம் எல்லாம் சொல்லிக் கொண்டே இருப்போம். எத்தனையோ காதுக ளில் இதெல்லாம் விழுந்து கொண்டே இருந்தாலும் சில காதுகள் மூலம் செல்லும் நற்பண்பு விஷயம் நல்ல மனங்கள் சிலவற்றில் விழுந்து நல்ல பலன் விலைக்கும்.
வயலில் வீசும் அத்தனை விதைகளுமா வளர்ந்து
விருக்ஷமாகிறது…சிலவற்றால் எத்தனை பயன் பெறுகிறோம்…..

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2561

One comment

  1. எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் இனிய பெரிய விஷயங்கள்….மனதைக் கவரும் வகையில்..விரும்பிப்படிக்கிறேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;