
மணிவாசகரின் திருவெம்பாவை.
நங்கநல்லூர் J K SIVAN
இறைவனே மகிழ்ந்து நீ மணி வாசகன் என்று புகழ்ந்த மாணிக்க வாசகரின் படைப்பு திருவெம்பாவை.
உய்யும் நெறியை உறுதியாகப் பற்ற வேண்டும். அதே நேரத்தில் அவ்வாறு பற்றுவதால் நாம் பெறும் இன்பத் தை அண்டை அயலார் எல்லோருக்கும் கிடைக்கும் வண்ணம், “எம்பிரான் மூலப் பண்டாரம் வழங்கு கின்றான்; வந்து முந்துமினே !” என அறைகூவி அழைத்தும், அறியாதவருடைய இல்லங்க ளுக்கே சென்று அவர் வாழ்வையும் அண்ணாமலையாரின் அருள் ஒளி நிறைந்ததாக ஆக்க வேண்டும் என்பதே திருவெம்பாவைல் பாடல்கள் மூலம் மணிவாசக ரின் நோக்கம்.
தூங்குபவரை எழுப்புவது என்பதே அறியாமையில், அஞ்ஞானத்தில் மூழ்கியவரை கைதூக்கி விட்டு ஞான மார்க்கத்தில் அழைத்து செல்வது என்று பொருள் கொள்ளவேண்டும். .
திருவெம்பாவையில் முதல் பாடல்:
1.ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய். 1
‘ஹே, தூங்கு மூஞ்சி தோழியே, இன்னுமா உனக்கு தூக்கம், உன் காதில் அண்ணா மலையானை பக்தர்கள் அழைக்கும் ”அண்ணாமலைக்கு அரோஹரா” சப்தம் ஒலிப்பது விழவில்லையா. கூர் வாள் போன்ற கண் ணுடையவளே, அதை அழகாக மூடி உறங்கு கிறாயே” என்று தோழியர் பெண்கள் சொல்லி இதற்கு முன் ஒரு பெண் இவ்வாறு தூங்கியவள் அவர்களது இன்னிசை பக்தி பூர்வமாக நெஞ்சில் பாய, உடனே துயில் எழுந்து தான் செய்த தவறுக்கு வருந்தி விம்மி விம்மி அழுதாள் என்கிற விவரமும் சேர்ந்து விட்டது.
”துவக்கம், இறுதி, ஆதி அந்தம் , இல்லாத அரிய பெரிய சோதியை நாங்கள் பாடுகின்றோமே. காதில் விழ முடியா தபடி உன் காது டமாரமா”? என்று தோழியர்கள் சொல்கிறார்கள்.
மெய்ம்மறந்து தூங்கிக்கொண்டிருந்த அந்த வீட்டுப் பெண்ணுக்கு மலர் நிறைந்த படுக்கையிலேயே பக்தி அவளை சிவன் பால் ஈர்த்தது. என்ன ஒரு பாக்கியசாலி அவள் ? அவளைப் பற்றிய சேதி கேட்டதுமே உனக் கும் பரமேஸ்வரன் மேல் பரவசம் உருவாகட்டும்.
எம்முடைய தோழியே !. தூக்கம் கண்களை மறைப்பது போல் சம்சார பந்தம் திரும்ப திரும்ப நம்மை இறைவனை நாட முடியாமல் உலக மாயையில் கட்டிப் போடுகிறது. அதிலிருந்து விடுபடுவோம், விஸ்வேஸ் வரன் வழிகாட்டுவான். ஆத்ம ஞான உணர்வைத் தூண்டும் பாடலாக அற்புதமாக இது அமைந்துள்ளது.
மார்கழி என்றவுடன் வில்லிபுத்தூர், ஆண்டாள், திருப்பாவை பாசுரங்கள், அதைப்பற்றிய பிரசங்கம், உபன்யாசம் நிகழ்ச்சிகள், பெருமாள் கோவில் பொங்கல் பிரசாதம் போன்றவை நினைவுக்கு உடனே வருவது போல் ஏனோ திருவெம்பாவையைப் பற்றி அதிகம் யோசிக்காதவர்கள் நாம்.
திருவெம்பாவை என்றால் என்ன என்றே என் நண்பர் கள், வயதானவர்கள் தான், கேட்கிறார்களே எனும் போதே நெஞ்சை உறுத்துகிறது.
எத்தனையோ பேர் நாம் திருவண்ணாமலைக்குச் சென்று அருணாசலேஸ்வரரை தரிசிக்கிறோம். நம்மைப் போல இல்லை மாணிக்க வாசகர். அவர் சென்றபோது மார்கழி மாதம். அப்போது அருணாச லேஸ்வரர் மேல் பாடியது. திருவெம்பாவை என்ன சொல்ல வருகிறது?
சிவனுக்குத் திருத்தொண்டு புரி என்ற ஒரு சின்ன வார்த்தை தான் அது. ஆண்டாளைபோலவே அவர் பாடல்களில் ஒவ்வொரு பாடலும் முடியும்போது “எம்பாவாய்” என்று முடிக்கிறார் மணி வாசகர். திரு என்ற அடைமொழியோடு ”பாவை” கிடைத்தது போலவே திரு என்ற அடைமொழியோடு ”எம்பாவை” நமக்கு பரிசாக கிடைத்திருக்கிறது.
இன்று முதல் திருவெம்பாவை ஒவ்வொரு பாடலும் பதிவிடுகிறேன்.
சிவசக்தியின் அருட்செயலையும், நவசக்திகள் ஒன்று சேர்ந்து சிவபெருமானைத் துதிப்பதும் திருவெம் பாவையின் தத்துவம். மனோன்மணி, சர்வ பூததமணி பலப்பிரதமனி, பலவிகரணி, கலவிகரணி, காளி, ரெளத்திரி, சேட்டை, வாமை என்ற ஒன்பது சக்திகளின் ஏவலால் பிரபஞ்ச காரியம் நடைபெறும். இதனை உணர்ந்து நோற்பதே பாவை நோன்பு .
பெண்கள் நோன்பு நோக்கச் செல்லும்போது தூங்குப வளை எழுப்பும் காட்சி திருப்பாவையில் வருவது போலவே திருவெம்பாவையிலும் வருகிறது. விடிகாலையில் தூங்கும் நேரம் தானே. தூங்குப வர்களை எழுப்பி தானே ”வா, ஸ்னானம் செய்து பகவானை தரிசித்து விட்டு நோன்பு நோற்போம்” என்று கூப்பிட முடியும்.
ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ் சோதி, சிவலோகன், தில்லைச் சிற்றம்பலத்து ஈசன், அத்தன், ஆனந்தன் அமுதன், விண்ணுக்கு ஒரு மருந்து, வேத விழுப்பொருள், சிவன், முன்னைப் பழம், தீயாடும் கூத்தன் என்று பலவாறு அருணாசலேஸ்வரனைப் பாடி நீராடி சிவபெருமானிடம் அடியார்கள் வேண்டுவது தான் ‘திருவெம்பாவை’.
மார்கழி மாதம் அதிகாலை 4.30 மணிக்குள்ளாக எழுந்து நீராடி, கோவிலுக்கு சென்றோ அல்லது வீட்டில் இருந்த படியாகவே திருப்பாவை பாடலை மூன்று முறை பாராயணம் செய்ய வேண்டும். திருப்பாவை பாடல் களை முழுமையாக அல்லாமல், மார்கழி மாதம் முழுவதற்கும் வருமாறு ஒரு நாளைக்கு ஒரு பாடலாக, அந்த ஒரு பாடலை மூன்று முறை பாடலாம்..
முதல் நாள் அன்று ‘மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்’ எனத் தொடங்கும் பாடலை மட்டும் மூன்று முறை பாராயணம் செய்வார்கள். மார்கழியில் 29 நாட்களே என்பதால் கடைசி நாளில் மட்டும் இரண்டு பாடல்களையும் சேர்த்து மூன்று முறை பாடுவது வழக்கம்.
ஸ்ரீ வைணவர்கள் இத்துடன் தினமும் வாரணமாயிரம் பகுதியில் இருந்து, ‘வாரணமாயிரம் சூழ வலம் வந்து, மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத’ உள்ளிட்ட பிடித்தமான பாடல்களையும் துதிப்பாடல்களாக சேர்த்து பாடுவார்கள். விரத நாட்களில் நெய், பால் சேர்த்த உணவு வகைகளை உண்ணக்கூடாது. மற்ற எளிய வகை உணவுகளைச் சாப்பிடுவது சம்ப்ரதாயம்.
ஆண்டாள், பெருமாள் படம் வைத்து உதிரிப்பூ தூவி காலையும், மாலையும் வழிபட வேண்டும். இவ்வாறு செய்வதால் ஆண்டாள் மனம் மகிழும்.
திருவெம்பாவை என்பது மாணிக்கவாசகரால் சைவ சமயத்தின் முழுமுதற்கடவுளான சிவபெருமானைக் குறித்து எழுதப்பட்ட பாடல்களின் தொகுப்பாகும். இந்த திருவெம்பாவை பாடல்களுடன், திருப்பள்ளியெழுச்சி பதிகத்தின் பாடல்களையும் இணைத்து மார்கழி மாதத்தில் பாடுவதை சைவர்கள் மரபாகக் கொண்டுள் ளார்கள
திருவெம்பாவை இருபது பாடல்கள் கொண்டது முதல் எட்டு பாடல்கள் சிவபெருமானின் புகழ்களைப் பாடிய படி நீராடச் செல்வதை சொல்லும். 9வது பாடல் சிவபெருமானிடம் தங்கள் வேண்டுதல்களைக் கூறுவது. 10வது பாடல் நீராடுதலை விவரிக்கும்.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



