
குடுமீஸ்வரர், சிகாகிரி நாதர் – நங்கநல்லூர் J K SIVAN
குடுமி வைத்துக் கொள்வது அநாகரீகம் என்று இப்போது கருதுபவர்கள் அநேகர். ஆனால் தற்காலிக வாலிபர்கள் உலகளவில் குடுமியோடு, ரிஷிமாதிரி தலையில் நாரதர் கொண்டையோடு காணப்படு கிறார்கள். பிராமணர்கள் தான் குடுமி வைத்துக் கொள்ப வர்கள் என்ற எண்ணம் மறந்து போய்விட்டது. அக்காலத்தில் ஆண்கள் எல்லாருமே குடுமிக்கா ரர்க ள் தான். அதை மறைத்து தலைப்பாகை அணிந்தவர் கள் உத்யோகஸ்தர்கள், பெரிய மனிதர்கள், பஞ்ச கச்சம், காலில் கருப்பு பூட்ஸ், நிறைய பட்டன்கள் கொண்ட கோட்டு , அதன் இடது பக்க பாக்கெட்டில் சங்கிலியோடு ஒரு கோட்டு பட்டனை இணைத்த பாக்கெட் கடிகாரம். அங்கவஸ்திரம், மீசை, அல்லது மழ மழ க்ஷவர முகம், நெற்றியில் நாமம், விபூதி, சாந்து பொட்டு,,, இப்படி பல பேர் இருந்தார்கள்,
இன்னும் பலர் வீட்டில் இப்படிப்பட்ட பழங்கால மனிதர்கள் கருப்பு வெளுப்பில் உற்றுப் பார்த்துக் கொண்டு, நாற்காலியில் இரு கால்களுக்கு இடையில் ஒரு வாக்கிங் ஸ்டிக் சாய்த்து வைத்துக் கொண்டு ஏதோ ஒரு கையை அருகே ஒரு உயரமான ஸ்டூல் எல் வைக்கப்பட்டிருக்கும் தடிமனான புஸ்தகத்தைத் தொட்டுக் கொண்டு சுவற்றில் தொங்குவதை காணலாம். சிலருடன் இழுத்துப் போர்த்திய புல்லாக்கு பெண்களும் கோபமாக சிரிக்காமல் நின்று கொண் டு நம்மை பார்ப்பார்கள். ஒரு கருப்பு போர்வையால் முக்காலியில் நிற்கும் காமிராவோடு படமெடுப்பவர் போர்த்திக்கொண்டு படம் எடுக்கப்படுபவர் களை அசையாமல் அரைமணி நேரம் நிற்க சொல்வார். நம் மூதாதையர் கற்சிலையாக படத்தில் காணப்படுவது இதனால் தான்.
குடுமிக்கு சிகை என்று பெயர். எப்படி ஹிந்துக்கள் முன்பெல்லாம் சிகையில்லாமல் இருந்ததில்லையோ அவர்கள் நமது நாட்டை வெள்ளைக்காரர்கள் ஆளும் காலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களால் மாற்றப்பட்டார்கள். சிகையை, குடுமியை கிராப் தலை மாற்றி விட்டது. பஞ்சகச்சத்தை முழுக்கால் நிஜார், பேண்ட், தின்று விட்டது. பழங்கால குடுமி களான முழுக்குடுமி, அரைக் குடுமி, அப்பளாக் குடுமி, பின் குடுமி, முன் குடுமி, துளியூண்டு கிராப்பு க்கு பின்னால் தொங்கும் சிண்டு எனப்படும் பட் குடுமி , ஜீட் குடுமி எல்லாம் மறைய ஆரம்பித்து விட்டது. குடுமி இருந்தால் அதன் அடர்த்தியும் சுருங்கிவிட்டது. மனிதர்களே இப்படி குடுமியோடு இருந்த காலத்தில் பகவானும் குடுமி இல்லாமலா
இருப்பார்.
இக்காலத்திலும் ஒரு சில கோவில்களில் சிவ பெருமா னும் குடுமியோடு இருக்கிறார். செங்கல்பட்டு அருகில் பொன் விளைந்த களத்தூரில் முன்குடுமீஸ்வரர் ஆலயம் சென்றிருந்தேன். இன்னொரு பிரபல குடுமி நாதர் சிகாகிரி நாதர்.
‘குடுமியான்’ என்றால் ”நல்ல குணம் உடையவன்” என்றும் அர்த்தம். குடுமி என்றால் சிறு மலை. ஒரு மலைக் கோவிலில் உள்ளதால் இந்த கோவிலில் உள்ள சிவனுக்கு குடிமியான் என்ற பெயர். ஒரு கதை இருக்கிறது கேளுங்கள்;
சிவன் கோவில் அர்ச்சகர் ஒருவருக்கு ஒரு சினேகிதி. அவள் தினமும் கோவிலுக்கு வந்து சிவனை சந்திக்கா விட்டாலும் சிவாச்சாரியாரை தரிசித்து ஒருநாள் இருவரும் ச ந்தோஷமாக கோவிலில் பேசிக் கொண்டி
ருப்பார்கள்.
சிவ பக்தனான அந்த ராஜாவுக்கு தினமும் சுவாமி மேல் சாத்திய புஷ்பமாலையை அர்ச்சகர் அனுப்பி அதை ஏற்றுக்கொண்டு ராணிக்கு தந்து விட்டு சிவப் பிரசாதம் இட்டுக்கொண்டு பிறகு தான் ராஜா தினமும் சாப்பிடுவான்.
ஒருநாள் இப்படி அர்ச்சகரும் ஸ்நேகிதியும் கோவிலில் இருந்த போது ராஜாவுக்கு மாலை அனுப்பு முன் ஸ்நேகிதிக்கு அதை அணிவித்தார் அர்ச்சகர். பிறகு அவளிட மிருந்து அதைப் பெற்று ராஜாவுக்கு அனுப்ப நேரமாகி விட்டது.
ராஜாவழக்கம் போல் மாலையை கண்ணில் ஒற்றிக் கொண்டு பார்த்தபோது அதில் சில நீண்ட கேசங் கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தான். உடனே ஆட்களை அனுப்பி அர்ச்சகரை வரவழைத் தான். அர்ச்சகர் அரசன் எதிரில் கை கட்டிநின்றார் .
‘ எப்படி ஐயா இன்று இந்த மாலையில் சில கேசங்கள் காணப்படுகிறது? என்ன காரணம் சொல்லும்?
என்று கேட்டான்.
அர்ச்சகர் நடுங்கினார். உயிருக்கு பயந்து, ”மகாதேவா நீ தான் என்னைக் காப்பாற்ற வேண்டும் என்று மனதில் வேண்டிக்கொண்டு அரசே, ஒருவேளை மஹாதேவரின் குடுமியில் இருந்து சில கேசங்கள் மாலையில் கலந்திருக்கலாம்” என்று உளறி விட்டார்.
”என்ன சொல்கிறீர் நீர்? சிவலிங்கத்திற்கு குடுமியா? ஆஹா, ஆச்சர்யமாக இருக்கிறது. நாளைக் காலை ஆலயத்துக்கு வருகிறேன். மஹாதேவன் குடுமியை தரிசிக்க வேண்டும். ” என்றான் ராஜா.
”பரமேஸ்வரா என் உயிரைக் காப்பாற்று” என்று கதறினார் அர்ச்சகர். மறுநாள் காலையில் அரசன் ராணியோடு வந்து தரிசனம் செய்தபோது அவன் கண்களுக்கு லிங்கத்தின் உச்சியில் ஒரு குடுமி தெரிந்தது. அரசன் மிகவும் மகிழ்ந்து அர்ச்சகருக்கு பரிசுகள் கொடுத்தான்.
அர்ச்சகர் அந்த நேரம் பரமேஸ்வரா நீ என் உயிரைக் காப்பாற்றினாய் என்று நன்றி யோடு கதறிய வார்த் தை களை என்னால் எழுத முடியவில்லையே. ஆனால் பரமேஸ்வரன் அருளால் அர்ச்சகர் அந்த பெண்ணை மணந்து தம்பதியாக வெகு காலம் சந்ததியோடு சிவனுக்கு தொண்டு செய்தார்கள் என்பது சொன் னாலே போதும்.
குடுமியான் மலை குகைக் கோவில் புதுக் கோட்டை யில் மேற்கே 20 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. . பழம் பெயர் திருநல குன்றம். 2000 வருஷத்திய கோவில். சிவனுக்கு இங்கே குடிமியான் என்றர்த்தம் கொண்ட சிகாகிரி நாதர், நிகேதாசலேஸ்வரர், ஜெயந்தவ னேஸ்வரர் என்று பெயர்கள் உண்டு. ராமரால் பூஜிக்க ப்பட்ட க்ஷேத்ரம். அம்பாள் அகிலாண்டேஸ்வரி. ச்வேதகேது, நளன் , மீனத்வஜன், காங்கேயன், சுந்தர பாண்டியன், மற்றும் பல்லவ அரசர்களால் அவ்வப் போது நிர்மாணிக்கப்பட்ட கோவில். சிவ லிங்கம் கல்லால் செதுக்கிய குகை உள் வடிவில் உள்ள “சிகா கிரீஸ்வரர்”
8-ஆம் நூற்றாண்டு முதல் 10-ஆம் நூற்றாண்டு வரை தொடங்கி, பின்னர் சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகர நாயக்க மன்னர்களால் புனரமைக் கப்பட்ட பழம் பெரும் குகைக்கோயில். “பரிவாதினி” என்ற ஏழு கீற்று இசையகருவிக்கான இசை குறியீடு கள் இங்கே கல்லில் தீட்டப்பட்டுள்ளது. அழகான குகை சிற்பங்களை இங்கே காணமுடியும்.
மகா சிவராத்திரி வருஷம் வருஷமாக கோலாகலமாக இங்கே கொண்டாடப்படும். சனி பகவான் தொல்லை க்கு பரிகார க்ஷேத்ரம்.
63 நாயன்மார்கள் இந்த கோவிலில் விசித்ரமாக மலை உச்சியில் உள்ளார்கள். வழக்கமாக கோவில் பிராகர தில் வரிசையாக நின்று கடைசியில் ஒரு பிள்ளையா ரும் இருப்பார். ரிஷபா ரூடரக சிவன் இருக்க இரு புறமும் நாயன்மார்கள் இந்த கோவிலில் புது மாதிரி யாக காட்சி தரும் ஒரே கோவில் தமிழ் நாட்டில் இது தான்.
எண்ணற்ற சிற்பங்கள் நிறைந்த குகைக் கோவில். புதை பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தின் மேற் பார்வையில் இருக்கும் இந்த சிவன் கோவில் பார்க்க வேண்டிய ஒன்று. சில சிலைகளைக் கண்டு பயப் படும்படியாக இருக்கிறது. சில இன்றெல்லாம் பார்த்து க்கொண்டே இருக்க வைக்கிறது. உதாரணம்: உலகளந்த பெருமாள் சிலை, ரதி -மன்மதன், அகோர வீரபத்ரன், பத்து தலை ராவணன், விஷ்ணு மோகினி யாக, மற்றும் வினை தீர்க்கும் விநாயகர் சிலிக அபூர்வ ம். சிவன் கோவில் ஆனாலும் தூணில் தசாவதாரம்.
முதியவன், பையன், குதிரை கதை தெரியுமே – அதில் வரும் ஒரு முதியவன், பாலகன் குதிரை சிலைகள் அழகே அழகு. இதை கல்கி அவதாரம் என்றும் சொல்கிறார்கள். கண்ணிருக்கும்போது பார்க்க வேண்டிய சிற்ப அற்புதங்கள். சொல்லாமலே தெரிந்து கொள்ளவேண்டியது. பல்லவ கால குகைக் கோவில், சிற்பங்கள். நிறைய நம்மால் படிக்கமுடியாத எழுத்தில் (க்ரந்தம்?) சங்கீதம் பற்றி எழுதியிருக்கி றதாம். நமக்கு தான் சங்கீதமும் தெரியாதே.இந்த சங்கீத தேனில் மயங்கி அனேக தேனீக்கள். கிட்டே போய் தொட்டு கொட்டு வாங்கவேண்டாம். கிழக்கே பார்த்து இரு த்வார பாலகர்கள், ஒருவர் கோபமாக விழிக்க, இன்னொருவர் மந்தஹாசமாக சிரிக்கிறார். ஆயிரங்கால் மண்டபம் என்ற பெயரில் 644 கால் தான் (தூண்கள்) இந்த 9ம் நூற்றாண்டு கோவிலில் பார்க்க முடியும்
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.

