KANDHA SHASHTI J K SIVAN

கந்த ஷஷ்டி   சூர ஸம்ஹாரம்  –  நங்கநல்லூர்  J K  SIVAN

 ஐப்பசி மாசம், சுக்ல பக்ஷம் முடிந்து க்ருஷ்ண பக்ஷத்தின் ஆறாம் நாள் தான் கந்த ஷஷ்டி.  ஷஷ்டி  என்றால் ஆறு, ஆறாவது.   ஐப்பசி  சதுர்த்தஸி  நாலாவது நாள் மாமன்  நரகாசுரனை கொன்றநாள். 20.10.25 அன்று  தான் தீபாவளி. ஆறாவது நாள்  22.10.25  இன்று. இன்று முதல்  ஆறுநாள் நாள் சுப்ரமண்யனுக்கு உகந்த ஷஷ்டி  விரத  திருநாள். தெய்வீக வெற்றி விழா.  சூரபத்மனோடுபோர் புரிந்து சூரனை சம்ஹாரம் செய்தது ஆறாவது நாள் அன்று.
சூரபத்மன், சிங்கமுகன், தாரகாசுரன் ஆகிய மூன்று  அரக்கர்கள் தவமிருந்து சிவபெருமானின் ஆசீர்வாதத்தால் அசாதாரண வலிமை பெற்றனர்.அவர்கள்  அபரிமித சக்தி பெற்று, தேவர்களை துன்புறுத்தினர். சிறை வைத்தனர். கொடுமை பல செய்தனர்.
இதற்கு விடி மோக்ஷமாக  பரமனின் நெற்றிக்கண் பொறியாக வெளிப்பட்டு சரவணப்பொய்கையில் ஷண்முகனாகஉருவாகி, சூரனை வதம் செய்தவர் ஷண்முக பெருமான், எண்ணற்ற பெயர்கள் உடையவர். முக்கியமாக  கந்தன், முருகன், ஸ்கந்தன், சுப்பிரமணியன். சூரனைக்  கொன்றதும் அவன் சேவலும் மயிலுமானான்.
விரதம் பிரதமை திதி முதல் ஷஷ்டி வரை 6 நாட்கள்.  ஏழாம் நாள்  சுப்ரமணிய சுவாமி தேவானை  திருகக்கல்யாணம்திருப்பரங்குன்றத்தில் மட்டுமல்ல,  மற்ற அறுபடை வீடுகளிலும், எல்லா முருகன் கோவில்களிலும் விமரிசையாக நடைபெறும். திருச்செந்தூரில் கந்த ஷஷ்டி முக்கிய பண்டிகை. சூரசம்ஹாரம் நாடகம் நிகழும்  நான் தூத்துகுடியிலிருந்தபோது பல மைல்கள் ஆணும் பெண்ணும், குழந்தைகளோடு குடும்பமாக,  சிவப்பு, அல்லது மஞ்சள் ஆடை தரித்து  தலையில் ஆகாரம், துணி சமையல் பாத்திரங்கள்  மூட்டைகளோடு வெறும் காலோடு நடந்து திருச்செந்தூர் வருவார்கள்.  பார்த்திருக்கிறேன்.
என்றும்  பக்திக்கு பஞ்சமே இல்லை நமது பாரத தேசத்தில்.   கந்த சஷ்டியை ஒட்டி எல்லா  சிவன் கோவில்களிலும்  முருகன் கோவில்களிலும் ஆறு நாளும்  விசேஷ  அலங்காரத்தோடு முருகனுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கும். திருசெந்தூரில்  சூரசம்ஹார  வைபவம் அன்று லக்ஷக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து கண்டு களிப்பார்கள். அரோஹரா, முருகா, ஷண்முகா ஓம் சரவணபவா (ஷடாக்ஷரம் ) எனும் ஆறு எழுத்து மந்திரம் எல்லாம் உரக்க  எதிரொலித்து வானைப்  பிளக்கும்.  பல நாட்கள் விடாமல்  எங்கிருந்தெல்லாமோ  திருச்செந்தூருக்கு  நடந்து வரும் பக்தர்கள் எண்ணிலடங்கார்.எனது ஐந்து ஆறு வயதில் எண்பது வருஷங்களுக்கு முன்,   வடபழனியில் பிள்ளைமார் தெருவில்  எங்கள் வீட்டு வாசலில் சூரஸம்ஹார  வைபவம் கோலாகலமாக இரவில் நடைபெறும்.   வெற்றிவேல்!… வீரவேல்!… ஷண்முக அரஹரோஹரா சப்தம் எங்கும் கேட்கும்.   காஸ் லைட் எனப்படும் பெட்ரோமாக்ஸ் விளக்குகளை    நரிக்குறவர்கள்.தலையில்  சுமந்து ஒளி தருவார்கள். கரெண்ட் கிடையாது. தீவர்த்திகள் எங்கும் எரியும். வறுத்த, அவித்த, வேர்க்கடலை, கமர்கட், வெற்றிலை,  கோலி சோடா, கலர், அரை நெல்லிக்காய்,அப்பம், கொடுக்காப்புளி காய், முறுக்கு,  அதிரசம்  இரவு முழுதும் விற்பனை அசாத்தியம். ஆங்காங்கே  குச்சிகளில் கலர் கலராக  மிட்டாய், அதை கையில் கடிகாரம் மாதிரி கட்டி விட்டு வியாபாரம் அமோகமாக நடக்கும்.
 திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் அதிகாலை 1 மணிக்கே நடை திறக்கப்பட்டு அபிஷேகங்கள் நடக்கும்.  பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் லக்ஷக்கணக்கில் ஆரவாரத்துடன் இந்த கந்த சஷ்டி விழாவைக் காண திருச்செந்தூருக்கு வருவார்கள்.  திருச்செந்தூர் கடற்கரை பூரா ஊசி குத்த இடமில்லாமல் எங்கும்  பக்தர்கள்  நிறைந்திருப்பார்கள்.  கடல் அலை சப்தத்தை மீறி ”வெற்றி வேல், சக்தி வேல், வீர வேல், முருகனுக்கு அரோகரா” முழக்கம்  எதிரொலிக்கும்.  முருகனுக்கு இங்கே  ஜெயந்திநாதர் என்று பெயர்.
சூர ஸம்ஹார  உத்சவத்தில்   முதலில் யானை தலையுடன் வரும்  கஜமுகாசுரனை  ஜெயந்திநாதர்  சம்ஹாரம் செய்வார்.
இரண்டாவதாக சிங்கம் முகம் கொண்ட சிங்கமுகாசுரன் யுத்தத்துக்கு வருவான். அவனையும் வதம் செய்வார்.
மூன்றாவதாக சூரபத்மனை முருகனின் வேல்  பிளக்கும்.  சூரன் மயிலாகவும், சேவலாகவும் ஆட்கொள்ளப்படுவான் .

கந்த புராண சுருக்கம் ;
தக்ஷன் எனும் ராக்ஷஸன்  தான் வளர்த்த பெரிய யாகத்திற்கு அவன் மகள் தாக்ஷாயணியை  மணந்த  பரம சிவனை அவமதித்து  யாகத்திற்கு அழைக்கவில்லை.  மற்ற லோகங்களுக்குச் சென்று பிரம்மா, திருமால், இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்களையும்  யாகத்திற்கு அழைத்தான்.  அவர்களும் அங்கே வந்தபிறகு தான் பரமசிவன் பார்வதி,  இருவரையும் அவமானப்படுத்த தக்ஷன் யாகத்திற்கு அழைக்கவில்லை என தெரிந்தது.  தந்தைக்குப் புத்தி  புகட்ட  பூலோகம் செல்ல  கணவனிடம் அனுமதி கேட்டாள்  ஈஸ்வரி.  ஈசன் வேண்டாம் என்று மறுத்தும், சிவன் சொல்லையும் மீறி, பூலோகம் சென்று  தக்ஷனிடம்  நியாயம் கேட்டாள் தாக்ஷாயணி. எல்லோர் எதிரிலும் அவளையும்  அவமானப்படுத்தி அனுப்பினான் தக்ஷன். மகள் ருத்ர காளியாக மாறினாள். யாகத்தீயிலேயே  மறைந்தாள்.  சிவனோ வீரபத்திரராக உருவெடுத்தார்.  யாக சாலையை அழித்தார்  முடிவில் தக்ஷனையும் கொன்றார்.
”தக்ஷா, நீ என் பக்தன் என்றாலும்  ஆணவத்தால் என்னை அவமதித்தாய்.  இனி  நீ ஆட்டுத் தலையுடன் திரிவாயாக. உனது அடுத்த ஜென்மத்தில் உனக்கு அசுர குணங்களே தலைதூக்கும். உன்னை அடக்க என்னில் பிறக்கும் ஒரு சக்தி உன்னிடம் வரும். சுப்ரமணியன் என்ற சக்தியிடம் நீ தோற்றுப் போவாய். நீ சூரபத்மன் என்றும், பத்மாசுரன் என்றும் பெயர் பெறுவாய். நீ செய்த நற்செயல்களின் பலனாக அகில உலகமும் உனக்கு கட்டுப்பட்டிருக்கும். உன் இறுதிக் காலத்தில், சுப்ரமணியன் உன்னை வதம் செய்வான்” என்று  சாபமிட்டார் சிவன்.

தக்ஷன்  காஸ்யபமுனிவர்  மாயை தம்பதிகளுக்கு   சூரபத்மன் எனும் மகனாக பிறந்தான். தாரகன்  சிங்கமுகன் என்ற மகன்களையும், அஜமுகி என்ற மகளையும் காசியபர்  மாயை தம்பதிகள் பெற்றார்கள்.   சூரபத்மன் கடுந்தவம் புரிந்து  பரமேஸ்வரனை நோக்கி தவமிருந்து   அந்த பகிரண்டம் அனைத்தையும்  ஆளும் வரத்தையும், சிவனின் வழி வந்தவர் களைத் தவிர வேறு யாரும் தன்னை அழிக்கக் கூடாது எனவும்  வரம் பெற்றான்.  சூரபத்மன் பதுமகோமளையை  மணந்து பானுகோபன் எனும் ஒரு பிள்ளையும்  பிறந்தான்.

சூரன் பரமேஸ்வரனிடம் வரம் பெற்ற போது சிவன் தக்ஷிணாமூர்த்தி கோலத்தில் ஆழ்ந்த  மோன தவத்தில் இருந்தார். அவரின் தவத்தை கலைத்தவன்  மரணம் அடைவது நிச்சயம்  என அனைத்து கடவுள்களும் அறிந்திருந்தார்கள்.

தேவர்களின் வற்புறுத்தலால் மன்மதன் சிவ பெருமானின் தவத்தைக் கலைக்க ,  தவம்  கலைந்த  பரமசிவன்  நெற்றிக்கண் திறந்து  மன்மதனை எரித்தார்  வரம் பெற்ற  சூர பத்மன் தேவர்களை சித்திரவதை செய்து வந்தான்.  தேவர்கள் பிரம்மரிடம் சென்று  வேண்டினார்கள்.  சூரபத்மனை அழிக்க சிவனால் மட்டுமே முடியும் என்று பிரம்மா கூற  தேவர்கள் கயிலாயம் சென்று சிவனிடம் உதவி கேட்டனர். இதனால் சிவபெருமான் தனது நெற்றிக்கண்ணால் முருகனை உருவாக்கினார்.   சரவணப் பொய்கையில்  அறுமுகனாக முருகன் உருவானான். கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டு  சிக்கலில்  சிங்காரவேலன்  அன்னை  அளித்த  வேலாயுதத்தை பிரயோகித்து சூரனை ஸம்ஹாரம்  செய்கிறான்.

 ஆகவே  சூரபத்மனுக்கு திருச்செந்தூரில்  இறக்கும் நிலையில், தான்  முன்ஜென்மத்தில்  தக்ஷனாக இருந்தது நினைவுக்கு  வந்தது. எதிரே நிற்பது  தக்ஷனின் பேரன் ஷண்முகன் என அறிகிறான்.  மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்தான்.

முருகா! என் முற்பிறவிப்படி நீ என் பேரன். உன்னை என் முதுகில் சுமக்க ஆசைப்படுகிறேன். நான் உன் மடியில் எந்நாளும் இருந்தால், என்னை மீண்டும் ஆணவம் ஆட்கொள்ளாது! என்றான்.   இவ்வாறு  தாத்தாக்கள்  பேரன்களை முதுகில்  உப்பு மூட்டை சுமக்கும் சுகத்தை சூரன் அனுபவிக்க வேண்டினான். சூரனின்  உடல் மயிலாகி  முகுகன் வாகனமாகியது. மீதி   உடல் சேவல் கொடியாகியது.
முருகப்  பெருமானையே தமது முழுமுதற்கடவுளாக நினைத்துப் பலபாடல்கள் பாடிய வள்ளலார் இதனை சற்று சிந்தித்து பார்த்தார். அதன்பிறகு என்ன நடந்தது?   ‘எல்லாவற்றையும் விட்டுவிட்டேன்’ என்று திடமாகக் கூறினார். அதுமட்டுமல்ல அதன் உண்மையினை தெளிந்து அதனை உலகிற்கு எடுத்துரைக்கவும் அவர் தயங்கவில்லை. சுப்பரமணியன் என்பது என்ன? என்று விளக்கம் அளித்துள்ளார்.  வள்ளலார்  முற்றுப்புள்ளி இல்லாமல் நீளமாக எழுதுபவர். ஆனால் படித்தால் புரியும். கையெழுத்து மணிமணியாக இருக்கும். 

ஸ்ரீ ராமலிங்க ஸ்வாமிகள் எனும் வள்ளலார் சூரஸம்ஹாரம் பற்றி சொன்னது;
பதுமாசுரன் என்பது = பதுமம்+அ+சுரன் , பதுமம் – நாபி (கொப்பூழ்)  அ – அவா; சுரன் – சுழித்து எழுதல்
நாபியினிடமாய் அடங்காமல் எழும்பும் குணத்தை அடக்கியும், தடைபடாதது பத்மாசுரனாகிய அவா/ஆசை.
கஜமுகம் என்பது மதம் (வெறி).
சிங்கமுகம் என்பது மோகம்.
இவைகளை வெல்வது அதாவது மதம் மற்றும் மோகத்தை வெல்வது என்பது நமது ஐந்தறிவாலும் உபசத்தியான பஞ்சசத்தி யாலும் கூடாது.
ஐந்தறிவு என்பது – பார்க்கும் அறிவு, கேட்கும் அறிவு, தொடும் அறிவு, நுகரும் அறிவு, ருசிக்கும் அறிவு.
பஞ்சசத்தி என்பது – பரையாற்றல், முந்தையாற்றல், விருப்பாற்றல், அறிவாற்றல், வினையாற்றல் என்பதாகும்.

மேற்கண்ட சத்திகளாலும் அறிவாலும் மதம் மற்றும் மோகத்தை அடக்க முடியாது,த்தையும் ஒழிக்கமுடியவில்லை.
சுப்பிரமணியம் என்னும் சண்முகரால் அழிக்கப்படவேண்டியது எப்படி எனில்,
மேற்கண்ட பஞ்ச சத்தியோடு அனன்னியமாகிய (பஞ்ச சத்தியோடு ஒன்றியது) சம்வேதனை (சுத்த அறிவு ஆற்றல்) என்னும் அருட்சத்தியையுங் கூட்டிச் சுத்த அறிவே வடிவாகிய ஆறறிவு என்னும் முகங்களோடு,
சுத்தஞானம் சுத்தக்கிரியை என்னும் சத்தியுடன், கூர்மை பொருந்திய வேல் என்னும் விவேகத்தால், தயாவடிவாய் ஆசையென்னும் மதம், மோகங்களை நாசம் செய்வதே சூரசம்ஹாரம் ஆகும்.
மயில் வாகனம் என்பது, மேற்படி தத்துவங்களான மதம், மோகம் ஆகியவைகள் நாசமடைந்தபின்னும் அவற்றின் அக்கிரமம் (வரம்புமீறிய செயல்) அதிக்கிரமம் (நெறிதவறுதல்) கெட்டுக் கிரமம் (ஒழுங்கு) மாத்திரம் இருப்பது.

பூர்வ வண்ணமாய் விரிந்து ஆடுவது இயல்பாததால், அவற்றை அசைய விடாமல் மத்தியில் ஏறி இருப்பதாகிய சுத்த அறிவே சண்முகம். விகல்பஜாலமே (மாயை) மயில் ஆகும். (ஒருபொருளைக்கண்டால் அது அப்பொருள்தானா? என எழும் ஐயமே விகல்பம். ஜாலம் என்பது ஏமாற்றும் வித்தை).    இவ்வண்ணமே அண்டத்திலும் உண்டு.
 நமது புருவ மத்தியில் ஆறுபட்டையாய் மணிபோல் ஒர் ஜோதியிருக்கின்றது. அந்த ஜோதியே சண்முகம்.
மேற்படி சூர தத்துவத்தை (மதம் மற்றும் காமம்) தயாவடிவாய் ஒழிக்கும்போது மேற்படி தத்துவம் மகாமாயை மாமரமாகவும், மாச்சரியம் (பகைமை) சேவலாகவும், விசித்திரமாயை (அழகாக இருப்பதுபோன்ற மாயை) மயிலாகவும், மகாமதம் (அடங்காத வெறி) யானைமுகமாகவும், அதிகுரோதம் (மிகையான கோபம்) சிங்கமாகவும் விளங்கும்.

இன்னொரு தடவை கொஞ்சம்  புரிகிறமாதிரியாக  வள்ளலாரை சொல்கிறேன்:
நமது உடம்பில் உள்ள தொப்புள் கொடியிலிருந்து சுழன்று வீறுகொண்டு எழக்கூடிய அவா/ஆசை எண்ணும் வெறி மற்றும் காமம்  தான் சூர பத்மன் .
நமது உடம்பில் புருவமத்தியில் உள்ள ஆறுபட்டையாய், ஆறு கோணமாக, மணிபோல் உள்ள ஓர் ஜோதிதான் முருகன். அந்த ஜோதியினை எவர் காணுகிறார்களோ அவர்களே முருகன் ஆகிவிடுகிறார்கள்.  அவர்களால் மட்டுமே ஆசைகளை வதம் செய்யமுடியும். அவர்களே ஞானி.
நமது ஆசைகளை நாம்  நாசம் செய்வது தான் சூரசம்ஹாரம். நமக்காகவும் மற்றவர்களுக்காகவும் நமது ஆசைகளை வதம்  செய்யவேண்டும்.    நமது உடலில் உள்ள தத்துவங்களே  சூரன் அவன் சகோதரர்களான ராக்ஷ ஸர்கள் , சுப்ரமணியன்  என  உருவகப்படுத்தப்பட்டுள்ளது.    நமது அகத்தில் உள்ள அந்த  அறுகோண, ஆறு பட்டை, ஜோதிமணியே கடவுள்,முருகன். புறத்தில் ஏதுமில்லை.
சூரசம்ஹாரம் என்பது நமக்குள் உள்ள ஜோதியினைக்கண்டு தயவின் குணம்கொண்டு, மாமாயைகளான ஆசைகளை வெல்வதே என்று தெளியவேண்டும்.

வள்ளலாரைப்போன்று எத்தனையோ ஞானிகள் இப்படிப்பட்ட சூரசம்ஹாரத்தை தங்களது அகத்தில் செய்திருக்கிறார்கள், நாமும் செய்வோம்.
பி.கு;  இன்று எனது நண்பர்  இறைஅருட்ச்செல்வர் இளநகர் காஞ்சிநாதன் ”செந்தூர் கலம்பகம்” நூற்றிரண்டு பாடல்கள் எழுதி அதற்கு புத்தகமாகு முன்  அணிந்துரை எழுத சொல்லி இன்று தான் அதை படித்து எழுதினேன். கந்த சஷ்டி அன்று அது முடியவேண்டும் என்பதும் அவன் அருள் தான்.
 

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2560

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;