

நவராத்ரி கொலு – நங்கநல்லூர் J K SIVAN
முன்பு நான் செய்ததை இப்போது பையன் செய்கிறான். உயரே படி ஏறினால் தலை சுற்றுகிறதே (86+ அல்லவா) நவராத்ரி கொலு பொம்மைகள் பரணிலிருந்து இறக்கப்பட்டன. கிட்டத்தட்ட 60 வருஷத்துக்கு மேல் வயதான பொம்மைகள் இன்னும் சில இருக்கிறது. சிலது ஒரிஜினல் கலர் போனாலும் அதன் உருவம் பாராட்டும் படி இருக்கிறது. பழைய ஞாபகங்கள் வருஷா வருஷம் அவற்றைப் பார்க்கும்போது வருவது ஒரு வித ஆனந் தானுபவம். இந்த உலகத்தில் எத்தனையோ மாதங்கள் இருந்தாலும் வருஷா வருஷம் வீடுகளில், ஆலயங்களில்,ஏன் இப்போது பேங்க் ஆபீஸ்களிலும் கொலுப்படிகள் வைத்து பொம்மைகளை அலங்காரமாக வைக்கும் வழக்கம் ஹிந்துக்களுக்கு ப்ரத்யேகமானது. பாராட்டத்தக்கது. பெண்குழதைகளுக்கு சந்தோஷம் அளிக்கும் ஒன்பது நாட்கள்.
”ஆத்துக்கு பெரியவா உங்க கையாலே முதல் கொலு பொம்மை வையுங்கோ”
என் கையால் வீணை மீட்டும் வெள்ளைப் புடவைக் காரி சரஸ்வதி, செங்கமலத்தில் வீற்றிருக்கும் லக்ஷ்மி பச்சைப் பெண் பார்வதி பொம்மைகளோடு விக்னேஸ்வரர் பொம்மை ஒன்றும் வைத்து நமஸ்கரித்தேன். பழைய கால களிமண் பொம்மை கள் ரொம்ப கன மானவை.. இப்போது அநேகமாக எல்லாமே பிளாஸ்டிக் அல்லது பேப்பர் மேஷ் papermache.
என் அறையில் வருஷம் முழுதும் புத்தக அலமாரியாக இருந்த ஐந்து அடுக்கு ஸ்டீல் தகடு பீரோ உருவத்தை படிக்கட்டாக மாற்றிக் கொண்டு ஹாலில் இன்று புரட்டாசி மாசம் நவராத்ரி ஆரம்பமாகும்போது பத்து நாளைக்கு பட்டு புடவை போர்த்திக்கொண்டு, இல்லையென்றால் என் வெள்ளை வேஷ்டியை அணிந்து கொண்டு கலர் பல்புகள் ஒளிவீச ரம்ய மாக கொலுப்படிகளாக காட்சி தரும்.
நவராத்திரியின் போது நிறைய வீடுகளில் தேவி பாகவதம் படிப்பார்கள், அதில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் சொல்கிறேன்.
சும்பன், நிசும்பன் என இரு ராக்ஷஸர்கள். ராக்ஷஸர்கள் பலமும், பிடிவாதமும், நெஞ்சுரமும், தன்னம்பிக்கையும் அதிகம் கொண்டவர்கள். யாராலும் தங்களுக்கு மரணம் கிடையாது என்பதை உறுதிப் படுத்திக் கொள்வதற்கு கடும் தவம் செய்தார்கள்.
இக்காலத்தில் சிலர் வெள்ளையும் சொள்ளையுமாக, பாக்கெட்டில் யாரோ சிரிக்கும் பொம்மை தெரிய, ரெண்டு கை கூப்பி நெற்றியில் விபூதி குங்குமத்தோடு நம்மை அணுகி வாக்கு கேட்டு வாங்கி அரசாளும் பதவி பெற்றதும் நாம் படும் துன்பம் தாங்க முடியாத அனுபவம் என்று நமக்கே இருக்கும்போது, சும்ப நிசும்பர்கள் வரம் பெற்ற பிறகு படுத்திய துன்பம் தாங்காமல் தேவர்கள் மஹா விஷ்ணு விடமும், சிவனிடமும் சென்று முறையிட்டதில் என்ன அதிசயம்?
ப்ரம்மா விஷ்ணு சிவனால் அழிக்க முடியாத அந்த ராக்ஷஸர்களை அன்னை ஆதி சக்தியால் மட்டுமே வதம் செய்ய முடியும். ஆகவே பிரம்மா, விஷ்ணு, சிவன் தங்களுடைய சக்திகளை எல்லாவற்றையும் ஒன்று திரட்டி அம்பாளுக்கு அளிக்க, சக்தி இழந்த ப்ரம்மா. விஷ்ணு, சிவன், தேவர்கள் ரிஷிகள் அனைவருமே வெறும் பொம்மையாகி விட்டார்கள்.அதனால் தான் பொம்மைக் கொலு வைக்கும் பழக்கம் வந்தது.
அன்னை பராசக்தி திரிமூர்த்திகள் தந்த ஆயுதங்களை பத்துக் கரங்களில் ஏந்தி. போர்க் கோலம் பூண்டு சும்ப, நிசும்பர் களையும், அவர்களது படைத் தளபதிகளான மது, கைடபன், ரக்த பீஜனையும் அழித்து தர்மத்தை நிலைநாட்டினாள். ஒன்பது நாள் யுத்தம். அவள் வெற்றி பெற்ற தினமே விஜயதசமி.
அம்பாள் யுத்தம் செய்த அந்த ஒன்பது நாட்களை நவராத்திரியாகக் கொண்டாடுகிறோம். அந்நாட் களில் மாலை நேரம் சூரிய அஸ்தமனம் ஆன பிறகு போர் புரிய மாட்டார்கள். படைகள் தங்கள் கூடாரங் களில் ஓய்வெடுத்துக் கொள்ளும். அப்போது அன்னை யின் படைக்கு ஊக்கம் கொடுக்கவும், மறு நாளைய போரில் உற்சாகமாகப் போரிடவும் வேண்டி அன்னை யைக் குறித்த ஆடல், பாடல் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். இப்படி ஒன்பது இரவுகள் நடந்தது. அதனாலேயே நாம் நவராத்திரியின் போது கலை நிகழ்ச்சிகள், விழா, கொண்டாடுகிறோம். நவராத்திரியில் அம்பிகையை வெவ்வேறு வடிவங்களில் அலங்கரித்து வழிபடுகிறோம்..
அம்பிகையை.துர்க்கையாக, முதல் மூன்று நாள், லக்ஷ்மியாக அடுத்த மூன்று நாள், கடைசி மூன்று நாட்கள் ஸரஸ்வதி யாஎன்று முப்பெரும் சக்தியாக வழிபடுகிறோம்.
பத்தாம் நாள் அசுரர்களை அழித்து அம்பிகை பெற்ற வெற்றியைக் குறிப்பது தான் விஜயதசமி. அன்று அன்னை வெற்றித் திருமகளாக அலங்காரத்தோடு ஆராதிக்கப்படுகிறாள். எடுத்த காரியம் யாவினும் வெற்றி அன்று. இப்படி அம்பாளை வழிபடுவோர் நவநிதிகளும் பெற்று, நீடுழி வாழ அன்னை அருள் புரிவாள். அழுகிற குழந்தைகள் பள்ளிக்கூடத்தில் சேரும்.
வருஷத்தில் ரெண்டு முறை நவராத்திரி என தேவி புராணம் சொல்கிறது. சித்திரையில் வரும் நவரா த்ரி வசந்த நவராத்ரி. இப்போது புரட்டாசியில் சரத் ருது என்று மாரிக்காலத்துக்கு முன்பு ரிஷிகள், முனிவர்கள் விரதமிருக்கும் சாதுர்மாஸ்ய சமயத்தில் (AUTUMN ) வரும் பண்டிகையாதலால் சாரத நவராத் திரி சாரதா என்பது சரஸ்வதிக்கும் ஒரு பெயர். இந்த ரெண்டுமே எமனுடைய கோரைப் பற்கள். கோடை, குளிர் என பருவகாலம் மாறும் போது நோய் நொடிகள் பரவும். இந்த ஆபத்திலிருந்து மக்களைக் காக்கும்படி தேவியைப் பூஜிக்க பழைய காலத்தில் இந்த ஏற்பாடு.
புரட்டாசி சாரத நவராத்திரி தான் பிரபலம். நவராத்ரி பூஜையை, தெய்வங்களும், தேவர்களும்கூட செய்து பலன் பெற்றுள் ளனர். நாரதர் அறிவுரைப்படி ராமர் கடைப்பிடித்து ராவணனை அழித்து சீதையை மீட்டு வந்தார். கண்ணபிரான், சியாமந்தக மணி காரணமாக அடைந்த அபவாதம் இப்பூஜை செய்ததால் நீங்கியது. பஞ்சபாண்டவர்கள் பாரதப் போரில் வென்றதும் இந்த பூஜை செய்ததால்தான். தீய சக்தி மேலோங்கும்போது காத்திட வேண்டினால் அம்பாள் சண்டிகையாக ஒன்பது கோடி வடிவங்கள் எடுத்து தீமையை அழித்து நன்மை செய்வாள் என தேவி மகாத்மியம் கூறுகிறது.
நவராத்ரியில் 9 நாட்களும் பூஜை விரதம் அனுஷ்டிக்க இயலாதவர்கள் அஷ்டமி நாளில் மட்டுமாவது விரதம் இருந்து பூஜை செய்யலாம். விஜயதசமி தினத்தில் அம்பிகை அசுரர்களை அழித்து வெற்றிவாகை சூடினாள். ஆணவம் சக்தியாலும், வறுமை செல்வத்தி னாலும், அறியாமை ஞானத்தினாலும் வெற்றி கொள்ளப் பட்ட தினம் என்பதால் வீரம், செல்வம், கல்விக்கு உரிய தேவியரான துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி என முப்பெரும் தேவியர்க்கும் உரியதாக இதை சிறப்பாகக் கொண் டாடு கின்றனர். அன்றைய தினம் புதிதாக காரியங்கள் துவங்கி எளிதாக நன்மை பெறுவார்கள். அன்று அபிராமி அந்தாதியினைப் படிப்பது மிகச் சிறந்த பலன் தரும்.
இன்னல்களை நீக்கி, தேவியின் இன்னருளைப் பெற்றுத் தரும் வழிபாட்டு நியதிகளை நவராத்ரி சொல்லித் தருகிறது. இந்த ஒன்பது நாளும், ஒவ்வொரு வடிவில் அம்பாளை தியானித்து, பூஜித்து வழிபட வேண்டும்.
”நவராத்ரி வ்ரதப் பூமௌ குருதேயோ நரோத்தம தஸ்ய புண்ய பலம் வக்தும் ஸக்தா ஸா பரமேஸ்வரீ.” இந்த ஸ்தோத்ரம் நவராத்ரி விரத பூஜாபலன் பற்றி சொல்கிறது.
கொலு வைப்பது நவராத்திரி சமயத்தில் எல்லோர் வீட்டிலும் ஒரு உற்சாகமான சம்பவம். எத்தனையோ வருஷங்கள், எத்தனையோ வம்சங்களாக, கொலு வைத்தாலும், இன்னும் அந்த உற்சாகம் குறையவே இல்லை. இப்போதெல்லாம் ஒற்றைப்படையில் 11-13 படிகள் வைக்க வீடுகளில் இடம் கிடையாது. 3-5 அதிக பக்ஷம் 7 என்பதோடு கொலு நின்றுவிடுகிறது. இந்த வருஷம் நிறைய பேர் ”நாங்களே கொலுப்படி, பொம்மை எல்லாம் கொண்டு வந்து வீட்டில் வைத்து, 10 நாள் வாடகை பெற்று எடுத்துச் செல்கிறோம்” என்று விளம்பரங்கள் . கலியுகத்தில் ”உங்களுக்காக நாங்களே சாப்பிடுகிறோம். வாடகை இவ்வளவு ரூபாய் கொடுத்தால் போதும் ” என்றும் விளம்பரம் வரலாம். சோம்பேறித் தனத்துக்கு எல்லையே இல்லாமல் போய்விட்டது.
மார்க்கண்டேய புராணத்தில் ஒரு ராஜா, சுரதா என்பவன்.தனது குரு சுமதாவிடம் ”குருநாதா, என் எதிரிகளை எப்படி ஜெயிக்கலாம்? என்று கேட்கிறான் .
”அதோ அங்கே பார், அங்கு தெரியும் பரிசுத்தமான ஆற்று மணலில் ஒரு காளி பொம்மை செய்து பூஜை பண்ணு, போ ” என்கிறார் சுரதா.
ராஜா காளி பொம்மை பண்ணி அலங்கரித்து, உபவாசம் இருந்து, மனதாலும் மெய்யாலும் வேண்டுவதால் அம்பிகை அவன் எதிரிகளை அழிக்கிறாள் என்று வரும். ”மண் பொம்மை யால் என்னைப் பூஜி.உனக்கு சகல சுகங்க ளையும், சௌபாக் யங்களையும் அளிக்கிறேன் ” என்கிறாள் அம்பிகை. இதனால் தான் நவராத்திரியில் கொலு வைத்து அம்மனை பூஜிக்கிறோம்.
கொலு என்றால் அழகு என அர்த்தம். அந்த கால ராஜாக் கள் கொலு வீற்றிருந்தார்கள் என்றால் பொம்மை மாதிரி சும்மா உட்கார்ந்து இருப்பது என்று கூட சிலர் அர்த்தம் எடுத்துக் கொள்ளலாம். மழை பெய்கிறதா என்று கூட மந்திரி தான் மேலே பார்த்துவிட்டு ராஜாவிடம் சொன்னதாக விஷயங்கள் நிறைய இருக்கிறது. .
கொலு வைப்பதற்கு முன்பு வீட்டை சுத்தம் செய்து, ஐந்து அல்லது ஏழு அல்லது ஒன்பது படிகளுடன் கொலு வைக்கப்படும். கடவுள் பொம்மைகள் கொலுப்படி களில் ஜாஸ்தியாக இருக்கும் .
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.

