KALIYUG PREDICTION J K SIVAN

இப்போதைய நிலைமை – நங்கநல்லூர் J K SIVAN

கலியுகம் எப்படி இருக்கும் என்ற 5000 வருஷத்துக்கு முந்திய கணிப்பு.

எல்லாவிதமான அக்கிரமங்களும், அநியாயங்களும் , அதர்மங்களும் ஒவ்வொருநாளும் நடக்கிறது. அது அதிகரித்துக்கொண்டும் வருகிறதே. மனஸாக்ஷி என்பது எல்லோருக்குமே செத்துவிட்டதா? எங்கு பார்த்தாலும், கற்பழிப்பு, கொலை, கொள்ளை,திருட்டு, லஞ்சம், என்று வயசு, ஆண்பால், பெண்பால், உறவு, நட்பு, எஜமானன், வேலைக்காரன், ஆபீசர், உதவியாளன் என்று இல்லாமல் கண்டமேனிக்கு நடக்கிறதே ஏன்? பத்திரிகைகள், டிவி, யூட்யூப் வாட்ஸாப் என்று விடாமல் நம்மை துரத்துகிறதே. முன்பெல்லாம் இப்படி இல்லையே. என் சின்னவயசில் இதெல்லாம் கேள்விப்பட்டதேயில் லையே….

”கர்மம். கர்மம்… மேலே இதைப்பத்தி பேசாதே. கஷ்டமா இருக்கு கேட்க. ஒண்ணு தெரிஞ்சுக்கோ, இப்படி எல்லாம் நடக்கப்போறதுன்னு என்று முன்னாலேயே ரிஷிகள் தீர்க்க த்ரிஷ்டியிலே பார்த்து சொல்லியிருக்கா.”
”என்ன சொல்றேள்? முன்னாலேயே தெரியுமா?

”ஆமாம், பாகவத புராணத்திலே இந்த கலியுகத்தில் என்னவெல்லாம் நடக்கும்னு 5000 வருஷத்துக்கு முன்னாலேயே சொல்லியிருக்கு. அதிலே கொஞ்சம் சொல்றேன் கேளு.வேதவியாசர் சாதாரண புலவரே, கவிஞரே இல்லைடா. மகரிஷி. விஷ்ணுஸ்வரூபம் ‘…வியாஸாய விஷ்ணு ரூபாய…ன்னு விஷ்ணு சஹஸ்ரநாமத்திலே வருதே மறந்துபோய்ட்டுதா?”

श्रीशुक उवाच: ततश्चानुदिनं धर्म: सत्यं शौचं क्षमा दया । कालेन बलिना राजन् नङ्‌क्ष्यत्यायुर्बलं स्मृति: ॥ १ ॥ பாகவதம் 12.2.1
śrī-śuka uvāca: tataś cānu-dinaṁ dharmaḥ satyaṁ śaucaṁ kṣamā dayā kālena balinā rājan naṅkṣyaty āyur balaṁ smṛtiḥ

கலியுகம் வளர வளர, அனர்த்தங்கள் அதிகரித்துக்கொண்டே வரும். தர்மம், சத்யம், தயை, சுத்தம், ழுக்கம், நேர்மை, நியாயம் கொஞ்சம் கொஞ்சமா செத்துண்டே வரும். சாஸ்திரம் சம்ப்ரதாயம், மத நம்பிக்கை மறுப்பு, மது, புகையிலை, காமம், மண்ணாசை எல்லாமே மனிதர்களை மிருகங்களாக மாற்றும்.

वित्तमेव कलौ नृणां जन्माचारगुणोदय: । धर्मन्यायव्यवस्थायां कारणं बलमेव हि ॥ २ ॥
vittam eva kalau nṝṇāṁ janmācāra-guṇodayaḥ dharma-nyāya-vyavasthāyāṁ kāraṇaṁ balam eva hi 12.2.2

கலியுகத்தில் பணம் தான் ராஜா. அது தான் கடவுள். பணக்காரன் தான் யோக்கியன், உயர் குலத்தவன். படித்தவன்! படிக்காமலேயே எல்லா பட்டமும் அதிகாரமும் அவன் கிட்டே இருக்கும். அவன் தான் நியாயவான், தர்மவான், நீதிமான். என்ன அக்கிரமம் அநீதி பண்ணினாலும் பணம் இருந்தா அவனை எதுவும் நெருங்காது… எவ்வளவு கரெக்ட்டா ரிஷி அப்போவே யூட்யூப் இல்லாமலேயே தெரிஞ்சிண்டிருக்கார் பாரு. எவ்வளவு யோக்யனா இருந்தாலும் காசில்லாதவேன் சொல் அம்பலமேறாது. வெறும் வெட்டிப்பயல்.’ இப்போ எங்க பார்த்தாலும் பணத்தாலே ஒட்டு வாங்கி ராஜாவாட்டமா மந்திரியாயிடுறான் பாரு. அவன் சொல்றது தான் சட்டம்.

दाम्पत्येऽभिरुचिर्हेतुर्मायैव व्यावहारिके । स्त्रीत्वे पुंस्त्वे च हि रतिर्विप्रत्वे सूत्रमेव हि ॥ ३ ॥
dāmpatye ’bhirucir hetur māyaiva vyāvahārike strītve puṁstve ca hi ratir vipratve sūtram eva hi 12.2. 3

மந்திரம் சம்ப்ரதாயம் எல்லாம் காத்துலே பறக்கும். ஆணும் பெண்ணும் கல்யாணம் இல்லாமலேயே தம்பதிகள். வயசு வித்யாசம் கிடையாது. சம்ப்ரதாய கல்யாணம் கோர்ட்லே போய் பிரிஞ்சு போகும். கருப்பு கோர்ட் சம்பாதிக்கும். ஆணுக்கும் பொண்ணுக்கும் வித்யாசமே கிடையாது. வெள்ளை நூலை மாட்டிண்டவன் பிராமணன்.கோவில் குளம் எல்லாம் யாரோ ஒரு சில பைத்யங்களுக்காக . தரிசனத்துக்கு 10 ஆயிரம் 11 ஆயிரம் கேட்பாங்க . ஒரு நிமிஷத்துக்கு மேலே நின்னா கழுத்தை பிடிச்சு தள்ளுவான்.

लिङ्गमेवाश्रमख्यातावन्योन्यापत्तिकारणम् । अवृत्त्या न्यायदौर्बल्यं पाण्डित्ये चापलं वच: ॥ ४ ॥ 12.2.4
liṅgam evāśrama-khyātāv anyonyāpatti-kāraṇam avṛttyā nyāya-daurbalyaṁ pāṇḍitye cāpalaṁ vacaḥ

பட்டை, கோட்டை, காவி துணி, மணி, மாலை இருந்தாலே போதும். பெரிய வேத வித்து, ரிஷி, முனிவர், துறவி.. வெறும் வேஷம் போதும்டா. நிறைய சம்பாதிக்கலாம். பொய் நிறைய சொல்லலாம். படிப்பு அத்யாயனம், கல்வி குருகுலம் எதுவும் தேவையில்லை ராஜா. காசுக்காக என்னவேணா பண்ணலாம். ஒழுக்கம் எல்லாம் புஸ்தகத்தில் தான் பார்க்கலாம். பகலிலே, வெளியிலே சந்நியாசி, இருட்டிலே, வீட்டிலே குடும்பஸ்தன்!

अनाढ्यतैवासाधुत्वे साधुत्वे दम्भ एव तु । स्वीकार एव चोद्वाहे स्न‍ानमेव प्रसाधनम् ॥ ५ ॥ 12.2.5
anāḍhyataivāsādhutve sādhutve dambha eva tu svīkāra eva codvāhe snānam eva prasādhanam

பாவம் பரிசுத்தமா, சாஸ்திரம் வேதம் எல்லாம் படிச்சு ஏழையா மனஸாக்ஷி பிரகாரம் நடக்கிறவன் பொழைக்கத்தெரியாத பந்தா பண்ண தெரியாத அப்பாவி. சுத்த வேஸ்ட் . அதுக்கு மதிப்பு மரியாதை கிடையாது. எவனும் லக்ஷியம் பண்ண மாட்டான். அவனைப் பார்த்தா நாய் கூட மோந்துபார்த்துட்டு ஒரு காலை தூக்கும். சும்மா குளிச்சுட்டு வந்தாலே அவன் பரிசுத்தமானவன். அந்தஸ்து, அமெரிக்கா வேலை பணம் பார்த்து தான் கல்யாணம். ஜாதகம் குடும்ப கௌரவம், பூர்வோத்தரம் பொருத்தம் எல்லாம் குப்பை.

दूरे वार्ययनं तीर्थं लावण्यं केशधारणम् । उदरंभरता स्वार्थ: सत्यत्वे धार्ष्ट्यमेव हि । दाक्ष्यं कुटुम्बभरणं यशोऽर्थे धर्मसेवनम् ॥ र्थं लावण्यं केशधारणम् ।उदरंभरता स्वार्थ: सत्यत्वे धार्ष्ट्यमेव हि ।दाक्ष्यं कुटुम्बभरणं यशोऽर्थे धर्मसेवनम् ॥ ६ ॥

dūre vāry-ayanaṁ tīrthaṁ lāvaṇyaṁ keśa-dhāraṇam udaraṁ-bharatā svārthaḥ satyatve dhārṣṭyam eva hi dākṣyaṁ kuṭumba-bharaṇaṁ
yaśo ’rthe dharma-sevanam

எங்காவது ஒரு குட்டை யில் தண்ணீர் இருந்தால் அது புனித நீராக கருதப்படும். ஒருவனது அழகு அவன் எப்படி தலையில் முடி சீவுகிறான் என்பதைப் பொறுத்து கணிக்கப்படும். வயிறை கண்டதை தின்று நிரப்புவது தான வாழ்க்கையின் லக்ஷியமாகிவிடும். அடாவடி பேச்சு காரன் தான் புத்திசாலி, கெட்டிக்காரன் என மதிக்கப்படுவான். கௌரவத்திற்காக மட்டும் கோவில், மதம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஈடுபாடு இருக்கும். பக்தி காற்றில் பறந்து பல யுகமாயிருக்கும்.!

இன்னும் பாதிக்கு மேல் விஷயங்கள் இருந்தாலும் இந்த முதல் பாதி இப்போதைக்கு போதுமல்லவா?

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2561

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;