
everyonefollowme விக்ரமாதித்தன் வேதாளம் கதைகள் – நங்கநல்லூர் J K SIVAN
சத்வசீலன் கதை
முருங்கை மரத்திலிருந்து வேதாளத்தை மீட்டு தோளில் போட்டுக்கொண்டு விக்கிரமாதித்தன் ஜிங்கு ஜிங்கு என்று வேகமாக நடந்தபோது வேதாளம் அடுத்த கதையை சொல்கிறது.
”விக்ரமாதித்தா உனக்கு கிழக்குக் கடற்கரையிலே தமபரலிப்தி பட்டணம் தெரியுமா? பாமபுரம் என்றும் கூட அதற்கு பெயர். அதற்கு ராஜா சண்டஸிம்ஹன். நீதி நெறி வழுவாத நேர்மையான ராஜா. ராஜாவின் அரண்மனைக்கு ஒருநாள் சத்வசீலன் என்ற க்ஷத்ரியன், ராஜ குடும்பத்தை சேர்ந்த ஏழை ஒருவன் வந்தான். ராஜாவின் காலாட்படைகளில் ஒருவனாக வேலை கிடைத்தது. சம்பளம் வேண்டாம் என்று சொல்லி விட்டான்.
சத்வசீலனுக்கு ரொம்ப விசனம். நான் ராஜ குடும்பத் தில் பிறந்தும் பரம ஏழையாக இருந்தும் ஆண்டவன் ஏன் எனக்கு அதிகமான ஆசாபாசங்களை கொடுத்தி ருக் கிறான். ராஜாவிடம் மிகுந்த விசுவாசத்துடனும் சிரத்தையுடனும் உழைக்கிறேன். ஆனாலும் இது வரையில் ராஜாவின் பார்வை என்மேல் ஏனோ விழவில்லையே. நீண்ட காலமாகவே, நான் பசியால் வாடுகிறேன்; என்னுடன் வந்தவர்களும் கஷ்டப் படுகிறார்கள். இது ஏன்?”
ஒருநாள் ராஜாவுடன் வேட்டைக்குக் கிளம்பினான். கொடிய மிருகங்கள் வாழும் காடு அது. ஒரு காட்டு பன்றி ராஜாவிடமிருந்து தப்பி ஓடியது. துரத்தினான். அடர்ந்த நடு காட்டுக்குள் ஓடிவிவிட்டது. ராஜா பன்றி யை கோட்டை விட்டான். அவனுக்கு ரொம்ப களைப்பு தாகம் பசி. ராஜாவோடு தன்னோடு வந்த வீரர்களை விட்டு தனியாக அல்லவோ இந்த காட்டில் மாட்டிக் கொண்டு விட்டான். அவன் ஒட்டிக்கொண்டு வந்த குதிரைக்கும் களைப்பு. சத்வசீலன் மட்டும் தன் உயிரை யும் லக்ஷ்யம் செய்யாமல் ராஜாவுடன் கூடவே ஓடிவந் தான்.
”சத்வசீலா, உனக்கு நாம் வந்தவழி தெரியுமா?” என்று கேட்டான் ராஜா .
“தெரியும் ராஜா . ஆயினும் இப்போது சூரியன் உச்சிக்கு வந்து வெய்யில் கொளுத்துகிறது. நீங்கள் கொஞ்சம் ஒய்வு எடுத்துக்கொண்டு இளைப்பாருங்கள் பிறகு திரும்பலாம்”
“அப்படியானால் சரி, நீ எங்காவது கொஞ்சம் தண்ணீர் அகப்படுமா என்று பார்த்து கொண்டுவா ” என்றான் ராஜா
.
“அப்படியே” என்று சொல்லி விட்டு சத்வசீலன் பக்கத்தில் இருந்த மரத்தின் மீது ஏறி நாற்புறமும் சுற்றிப் பார்த்தான். கொஞ்ச்ம தூரத்தில் ஒரு ஆறு ஓடுவதைப் பார்த்து மரத்தில் இருந்து இறங்கி ராஜாவோடு அந்த பக்கம் சென்றான். .
ராஜா ஆற்றில் குளித்தான். பசி வயிற்றை கிள்ளியது. சத்வசீலனுக்கும் நல்ல பசி. தன்னுடைய வேஷ்டியில் ஒரு நுனியில் முடிந்து வைத்திருந்த நெல்லிக் காய்க
ளை எடுத்து அலம்பி ராஜாவிடம் கொடுத்தான்.
”எங்கே இருந்து உனக்கு நெல்லிக்காய் கிடைத்தது சொல்?” என்றான் ராஜா.
“சென்ற பத்து வருட காலமாக நான் பசிக்கு இந்த நெல்லிக்காய்களை மட்டும் தின்று குடும்பத்திலே உழலும் துறவியாக வாழ்ந்து வருகிறேன்”
என்றான் சத்வசீலன். ராஜாவின் மனம் வருந்தியது.
‘அடாடா என் வேலைக்காரர்களில் யார் யார் சௌகர்ய மாக வாழ்கிறார்கள் என்று விசாரிக்க தவறி விட்டேனே’ என அவமானப் பட்டான். இதை எனக்கு எடுத்துச் சொல்லாத என் மந்திரிகளும் மஹா பாவிகள்” என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.
சிறிது நேரத்தில் குதிரைக்குச் சேணமிட்டு ரெடியாகி ராஜா அரண்மனைக்கு திரும்பினான். வழியில் அவனுக்காக கூடவந்தவர்கள் காத்திருந்தார்கள். சத்வசீலனை ராஜாவுக்கு பிடித்து விட்டது. ஏராளமான பணம் சில ஊர்களையும் அவனுக்கு பரிசளித்தான். அவனை ஒரு அதிகாரியாக்கி கூடவே வைத்துக் கொண் டான்.
ஒருநாள் ராஜா சத்வசீலனை கூப்பிட்டு ” நீ இலங்கை போ. அந்த ஊர் ராஜாவின் குமாரியை எனக்கு கல்யா ணம் பண்ண ஏற்பாடு செய்ய ஏற்பாடு பண்ணிவிட்டு வா” என அனுப்பினான். சத்வத்சீலன் தனது குலதெய் வங்களைப் பிரார்த்தித்துக் கொண்டு ராஜா அனுப்பிய புரோகிதர்களோடு லங்கைக்கு படகில் புறப்பட்டான்.
பாதி வழியில் கடலில் ஒரு சூறாவளி. பலத்த காற்று, பேய் மழை. படகு மூழ்க ஆரம்பித்தது. எல்லோரும் கடலில் விழுந்தார்கள். சத்வசீலன் நீந்தினான். எப்படியோ ஒரு மணல் திட்டின் மேல் போய் விழுந்தான். யாருமில்லாத ஒரு தீவு அது. அதில் நடந்த பொது தூரத்தில் ஒரு மாளிகை தென்பட்டது. அந்த தீவு நகரம் பொன்னாலும், மணிகளாலும் இழைக்கப்பட்ட மாட மாளிகைகளையும் நந்தவனங்களையும் தடாகங்களையும் கொண்டு ஜொலித்தது. ஆனால் மனித சஞ்சாரமே இல்லை. ஒரு பெரிய துர்க்கை கோயில் தெரிந்தது. சத்வசீலன் துர்க்கையை வணங்கினான் .இது என்னடா மாயம் என்று ஒரு ஓரமாக போய் உட்கார்ந்தான்.
கோயிலுக்கு எதிர்புறத்தில் பிரகாசமாக ஒரு மாளிகை தெரிந்தது. அதன் கதவைத் திறந்து கொண்டு ஒரு அழகி வந்தாள் .
வந்தாள். நீலோத்பல கண்கள். அவளைத் தொடர்ந்து நிறைய தோழியர்கள். துர்க்கை கோயிலுக்குள் நுழைந்தாள். அவள் அழகில் சத்வசீலன் மயங்கினான். அவள் திரும்பி மாளிகைக்குள் போகும்போது கூடவே சத்வசீலனும் போனான்.
மாளிகைக்குள்ளே இன்னொரு அழகிய பட்டணம்.
எல்லாவித சு௧ போகங்களும் நிறைந்திருந்தது. மாளிகை ஒன்று. அதில் ஒரு தங்க ஆசனத்தில் அந்த அழகி உட்கார்ந்தாள். சத்வசீலன் மெதுவாக அவள் பக்கத்தில் சென்றான். அருகே ஒரு ஆசனத்தில் அவனும் அமர்ந்தான். அந்த ராணிக்கும் அவனை பிடித்து விட்டது. அருகில் நின்ற தோழிகளைப் பார்த் தாள். அதன் அர்த்தம் புரிந்தது அவர்கள் சத்வசீலனிடம் பேசினார்கள்.
“நீங்கள் எங்கள் எஜமானியின் விருந்தாளி. எங்கள் உபசாரத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். அருகே குளம் இருக்கிறது. குளித்து விட்டு சாப்பிட வாருங்கள்” என்கிறார்கள்.
குளத்தில் இறங்கி மூழ்கி தலையை நிமிர்த்திய போது என்ன ஆச்சர்யம்? அவன் தனது ஊர் தமரலிப்தியில் அவன் எஜமானன் ராஜாவின் குளத்தில் அல்லவோ இருக்கிறான்!
“என்ன அதிசயம் இது? சிறிது நேரத்துக்கு முன் எங்கோ ஓர் அழகிய அதிசய பட்டணத்திலிருந்தேன். எப்படி என் ஊருக்கே வந்தேன்? எங்கே அந்த அழகி? நான் கனவு காண வில்லையே, என்னை அந்த மாயக்காரிகள் பாதாளலோகத்துப் பெண்கள் எப்படியோ மயக்கி இழுத்துச் சென்றது இப்போது தான் புரிகிறது ” என சிந்தித்தான். அந்த அழகியின் முகம் அவனை வாட்டி யது. பிரிவை தாங்கமுடியாமல் சோகமானான். ராஜாவின் ஆட்கள் அவனைப் பார்த்துவிட்டு ராஜாவிடம் சொன்னார்கள். ராஜாவுக்கு ஆச்சர்யம்
.“சத்வசீலா, இதேல்லாம் என்ன? நீ இங்கே எப்படி வந்து சேர்ந்தாய்? சொல் ?’
‘
ராஜா விவரம் கேட்டு ஆச்சர்யப்பட்டான். நம் அதிர்ஷ்டத் தினால் தான், பூர்வ ஜன்ம புண்ணியத்தினால்தான், இவன் இவ்விதம் அந்த அழகி மேல் காதலில் சிக்கி னான். சத்வசீலனுக்கு எப்படியாவது உதவவேண்டும் என தீர்மானித்தான்.
“சத்வசீலா, கவலைப்படாதே, நானே உன்னை அந்த அசுரப்பெண் இருக்குமிடத்திற்கு அதே வழியாக அழைத்துச்செல்கிறேன்”
மறுநாளே ராஜா நாட்டு நிர்வாகத்தை மந்திரிகளி
டம் ஒப்படைத்து விட்டு. சத்வசீலன் வழி காட்ட, அவனுடன் கடலில் படகில் சென்றான். பாதி வழியில் முன்பு போலவே சூறாவளி
”கடலில் குதியுங்கள் ராஜா”
ரெண்டு பெரும் நீரில் மூழ்கி நீந்தி அந்த தீவை அடைந் தார்கள். துர்க்கையம்மன் கோவிலை அடைந்தார்கள். எதிரே அந்த அழகியின் மாளிகை. அழகி தோழியரு டன் வெளியே வந்தாள்.
”ராஜா அதோ பாருங்கள் அவள் தான்” என்றான். அந்த ராணி சத்வசீலன் பக்கத்தில் ஒரு ராஜாவும் உட்கார்ந்தி ருப்பதை பார்த்தாள்
“இவர் யாராக இருக்கக் கூடும்?”
திகைப்போடு துர்க்கை கோயிலுக்குள் சென்றாள். அதற்குள் ராஜாவும் சத்வசீலனுடன் அவள் தோட்டத்து மாளிகைக்குள் நுழைந்தான். ராணி துர்க்கா பூஜை முடித்து விட்டு
”எனக்கு நல்ல கணவன்கிடைக்கவேண்டும்” என்று துர்க்கையை வேண்டிக்கொண்டு வெளியே வந்தபோது ராஜாவோ சத்வசீலனையோ காணோம். தோழி ஒருத்தியிடம் ”இங்கே உட்கார்ந்திருந்த அந்த ரெண்டு பேர் எங்கே என்று தேடி கண்டுபிடித்து அழைத்து வா ” என்றாள். தோழி தோட்டத்தில் ரெண்டு பேரும் இருப்பதை பார்த்துவிட்டு அவர்களை வணங்கி
”எஜமானி உங்களை உபசரிக்க வரவேற்கிறாள். வாருங்கள்” என்றாள் .ராஜா அவளிடம் “இந்தத் தோட்டமே ஒரு விருந்தாக இருக்கிறதே. இன்னும் வேறு என்ன உபசாரம் தேவை?”என்றான். ராணியிடம் தோழி விஷயம் சொல்ல ராணி மகிழ்ந்தாள்.
”ஆஹா துர்க்காதேவி என் பிரார்த்தனையை கேட்டு எனக்கு ஒரு நல்ல கணவனை அனுப்பி இருக்கிறாள்” என மகிழ்ந்து அவளே அவர்களிடம் வந்தாள். அவளுக் கு ராஜாவின் கம்பீரம், ஆடை ஆபரணம் எல்லாம் கண்டு மோகம்.
”என்னோடு வந்து உபசாரம் ஏற்றுக்கொள்ளவேண்டும்” என்று அழைத்தாள் .ராஜா அவளிடம் சத்வசீலனைச் சுட்டிக் காட்டி “இவன் குறிப்பிட்ட துர்க்காதேவியின் திருஉருவத்தை வழிபடுவதற் காகவே நான் இங்கே வந் தேன்.உன்னையும் கண்டேன். இன்னும் என்ன உபசரிப்பு இருக்கிறது?” என்று கேட்டான்
”அதிசயமான இந்த சிங்காரத் தோட்டத்தைப் பார்க்கவேண்டாமா? வாருங்கள்”
“அதைப் பற்றி இவனும் சொல்லியிருக்கிறான். இங்கே ஒரு குளம் இருக்கிறதாமே ” என்றான்.
”அரசே ,நான் உங்களுக்கு அடிமையாகி விட்டேன். அகவே என் கோரிக்கையை தட்டக் கூடாது!” என்றாள். ஆகவே அலைத்தொடர்ந்து ராஜாவும் சத்வசீலனும் தோட்டத்திற்கு போனார்கள். ராஜாவை அங்கே ஒரு மாளிகையில் ரத்தின சிம்மாசனத்தில் அமர்த்தி ராணி ராஜாவுக்கு முறைப்படி அர்க்கியம் வழங்கினாள்.
“பாதாள லோக ராஜாதி ராஜன் காலநேமியின் குமாரி நான். சக்ரதாரியான விஷ்ணு என் தந்தையை சுவர்க்கத்துக்கு அனுப்பிவிட்டார். எனக்குப் பிதிரார் ஜிதுமாகக் கிடைத்துள்ள இத்த இரு அதிசய நகரங்க ளும் விசுவகர்மாவினால் நிர்மாணிக்கப் பட்டவை. நினைத்தவை ஈடேறும் இந்த இடத்தில் சாவும் வியாதி யும் யாரையும் அணுகாது . இந்த அமானுஷ்யமான தீவில் ஆண்களே இல்லை. இந் நகரங்களை நான் ஒரு பெண் எத்தனை காலத்தான் தன்னந் தனியாக ஆள முடியும்? இதுவரை ஆணையும் நான் பார்த்ததில்லை. என்னை கல்யாணம் பண்ணிக்கொள்ளவேண்டும். உங்களை இந்த மாயத் தீவிலிருந்து போகவே விட மாட்டேன். இது துர்க்கை அம்மன் மேல் சத்யம். என் அப்பாவைப் போல் என்னை அனாதையாக இங்கே விட்டுவிடாதீர்கள்” என்று அழுதாள்.
ராஜா ” பெண்ணே என் அருமை மகளே, நீ கவலைப் படாதே, உன்னை அனாதையாக விட்டுப் போகமாட் டேன். இந்த சத் வசீலன் என் அந்தரங்கத் தோழன். உன் மீது தீராத மோகம் கொண்டுள்ளான். மகளே! உன்னை இவனுக்கு அளிக்கிறேன்.இவன் உன்னையும் உன் நகரங்களையும் ஆளுவான்! நீயும் இவனும் ரதியும் மன்மதனும் போல் பிரளய பரியந்தம் இந்த மாயத் தீவிலே குதூகலமாய் இருங்கள்!” என்றான்.
குல தெய்வம் கொடுத்த வரமாக ராணி ஏற்றுக் கொண்டாள் . சத்வசீலன் ராணியை மணந்து மாயத் தீவிலுள்ள இரு நகரங்களின் ராஜாவானான்.
“சத்வசீலா, ஒருநாள் நடுக்காட்டில் பசியாக இருந்த எனக்குச் சாப்பிட. இரண்டு நெல்லிக் காய் கொடுத்தாய்.
அதற்கு ஈடாக இன்று நான் உனக்கு ஒரு பெண் கனி தந் தேன். சந்தோஷமா? என்று ராஜா கேட்டான்.
ராணியிடம் “என் ராஜ்யத்தின் தலைநகருக்கு நான் திரும்பிப் போக வழி காட்டு என்றான். ராணி அவனு க்கு ஒரு கத்தி ஒரு பழம் ரெண்டும் கொடுத்தாள். இந்த பழம் உனக்கு மூப்பே வராமல் இளமையைத் தரும்.
கத்தி எதிலும் வெற்றியே தரும் ” என்றாள்” பிறகு ராஜாவை குளத்தில் குளிக்க சொன்னாள் .
ராஜா குளத்திலிருந்து தலையை வெளியே தூக்கிய போது தமரலிப்தியில் தன் ராஜ்யத்தில் இருந்தான். சத்வசீலன் ராணியோடு தீவில் ராஜாவாக இருந்தான்.
கதை சொன்ன வேதாளம் ”விக்ரமாதித்தா, இப்போது நீ சொல். ராஜா, சத்வசீலன் , இருவரில் யாருடைய விஸ்வா சம் விசேஷமானது? தப்பாக பதில் சொன்னால் உன் தலை சுக்கு ஆயிரம் ஆகும். ஞாபகம் இருக்கட்டும்” என்று கேட்டது.
விக்ரமாதித்தனின் பதில்”:
“சேவகன் சத்வசீலன் நன்றி விசுவாசம் செலுத்துவது அவனுடைய கடமை !ராஜாவுக்கு வனுக்கு அது கடமை யல்ல! ஆகவே தன்னை மோகித்த அதிசய அழகி ராணியைத் தன் சினேகிதனுக்குத் தத்தம் செய்த நன்றி விசுவாசமே விசேஷமானது!”
“இவ்விருவருள் யார் அஞ்சா நெஞ்சுடன் கடல் நீரில் மூழ்கினார்கள்? யார் செயல் விசேஷமானது?” என்று கேட்டது வேதாளம்.
“இருவருள், சத்வசீலனே தைரியசாலி! உண்மையில் அவன் கடலில் குதித்தால் விளைவு என்ன ஆகும் என்பதை அறியாமல் முதலில் துணிந்து கடல் நீரில் குதித்தான். அரசனோ எல்லாவற்றையும் நன்றாக அறிந்துக் கொண்டு ஒரு காரியம் கை கூடுவதற் காகவே குதித்தான். அன்றியும் பாதாளகன்னிகையை மணப்பது தனக்குப் பொருத்தமில்லை என்று கருதியே அவன் அந்தப் பெண்ணின் மையலை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் சத்வசீலனே உயர்ந்தவன்!”அவ்வளவு தான் பழையபடி வேதாளம் விக்ரமாதித்தன் தோளிலிருந்து குதித்து அருகே ஒரு முருங்க மரத்தில் தொற்றிக் கொண்டது.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



