MAYIL RAVANAN J K SIVAN


மயில் ராவணன்.    நங்கநல்லூர் J K  SIVAN

 

ராவணனின்  தர்பார்.  அனல் பறக்கிறது விவாதங்களில்.  கேவலம் ஒரு  மனிதன். ராமன். கால் தூசி  போல எனக்கு. அவனை வெல்லமுடியாமல் நமது சேனை மேலும் மேலும் சேதமடைகிறதே? அவனிடம் இவ்வளவு பயமா? நமது வீரம் எங்கே போயிற்று? நம்முள் அவனை வெல்லும் வீரன் எவனும் இல்லையா?”

ராவணன் கொதித்தான். 
மந்திரி ப்ரஹஸ்தன் மெதுவாக இருக்கையை விட்டு எழுந்தான். 
”மஹாராஜா,  நீங்கள் அற்புதமான அசாதாரணமான ஒரு பக்க பலத்தை ஏன் இன்னும் நினைக்கவில்லை என்று எனக்கு புரியவில்லை”
”பிரஹஸ்தா, யாரைச் சொல்கிறாய் நீ?”
”உங்கள் உறவினன், பலம் மிக்க அசகாய சூரன் மயில் இராவணன்”
‘ஆஹா,  நான் ஏன் அவனை நினைக்கவே இல்லை?  எனக்கு அவனைப்  பற்றிய நினைப்பு ஏன் வராமல் போனது?  மயில்  ராவணன் நிச்சயம் ஒரு அசாத்திய சூரன். இந்த யோசனை நல்ல யோசனைதான். போகட்டும்,
 ”மயில் ராவணா, நான் உன்னைப் பார்க்க வேண்டுமே’ 
ராவணன் அவனை  நினைத்த  அடுத்த கணத்திலேயே  மயில் ராவணனுக்கு ராவணன் தன்னை நினைத்தது தெரிந்துவிட்டது. அவ்வளவு சக்தி உள்ள மாயாவி அவன். 
 
”ஏன் அண்ணா  ராவணேஸ்வரன் என்னை நினைக்கிறான்? தீர்க்க முடியாத கஷ்டம் இல்லை ஏதாவது  ஆபத்து என்றால் தவிர என்னை நினைக்க மாட்டானே. அப்படி அவனாலேயே தீர்க்க முடியாத  ஏதோ ஒரு  ஆபத்து அவனுக்கு   எது வந்திருக்கும்? இனி தாமதிக்கலாகாது…யோசனையும் செய்யக் கூடாது. உடனே நான் செல்ல வேண்டும்’  என்று முடிவெடுத்து பாதாளத்தில் இருந்து   சுனாமி போல  லங்கைக்கு வந்துவிட்டான். 
ராவணனை கட்டி நமஸ்கரித்தான். 
 
‘அண்ணா  என்ன ஆயிற்று உநாக்கு. நான் வரும் வழியெல்லாம் பார்த்தேன் . ஏன் லங்காபுரி  நிர்மூலமாகிக் கிடக்கிறது ?அங்கங்கே பிணக்  குவியலும், நாற்றமும் தாங்க முடியவில்லையே……என்ன நடந்தது ?
 
”வாடா,  மயில் ராவணா, உன்னை தான் நினைத்தேன்.  உனக்கு தெரியுமே  தசரதன். அயோத்தி ராஜா. அவன் பிள்ளைகள்  ரெண்டு பேர், ராமன், லக்ஷ்மணன். தண்டகாரண்ய  வனத்தில்  நம் தங்கை  சூர்ப்பனகை யை
 அந்த  லஷ்மணன் மானபங்கம் செய்து காயப்படுத்தியதால் அவள் ஓடிவந்து என்னிடம் து முறையிட்டாள். அதனால்  நான் கோபத்தோடு அவர்களுக்கு பாடம் கற்பிக்க ராமன் மனைவி சீதையை தூக்கிக் கொண்டு வந்து இங்கே  சிறையிலிட்டேன். ராமன் ஒரு பலசாலிக் குரங்கை அனுப்பி சீதையை தேடினபோது , அந்த குரங்கு இங்கே வந்து  சீதையைக் கண்டு பேசிவிட்டு  அதோடு நிற்காமல்  லங்கை முழுதும்  தீ வைத்து நாசப்படுத்தி விட்டுப் போயிற்று.   அதன் மூலம்  சீதை இங்கே இருப்பதை அறிந்த ராமனும் லக்ஷ்மணனும்  பெரிய  வானர சேனையுடன்  இங்கே வந்து  போர் புரிகிறார்கள். நம் சந்ததியினர் அனைவரையும் அழித்து விட்டார்கள்.  பாதிக்கு மேல்  நமது சேனை அழிந்து விட்டது. 
 
எனக்கே  அதிர்ச்சி. என்ன செய்வது என்று கலங்கிய வேளையிலே பிரஹஸ்தன் உன்னை நினைவு படுத்தினான்.   மயில் ராவணா, நீ தான் உடனே சென்று அந்த ராம லக்ஷ்மணர்களை நிர்மூலமாக அழிக்க வேண்டும். அவர்களுக்கு ஆத்ம பலத்தை விட வேறேதோ பலமும் உள்ளது. அது என்ன என்பதே தெரியலே. அதனால்தான் அவர்களை மாயத்தாலேயே அழிக்க முடியும் என நினைத்தேன். மாயாஜால, மந்திர சக்தி உள்ள, ஜெகத்ஜால  வித்தகனான நீ  ராம லஷ்மணர்களையும், வானர சேனைகளையும் அழித்து என்னைக் காப்பாற்ற வேண்டும் ’.

மயில் ராவணனுக்கும்  திகைப்பு. ராவணனாவது தோற்பதாவது? மூவுலகும் அஞ்சு பராக்ரமன் அல்லவோ ராவணேஸ்வரன். 
 
‘அண்ணா, கலங்காதே,   நீ மஹா வீரன். அதிசூரன். உனக்கா இந்த நிலை. முன்பே நீ என்னை அழைக்காமல் போய்விட்டாயே. நான் என்ன செய்யவேண்டும் சொல். உடனே செய்கிறேன்’ ” மயில் ராவணன் கோபத்தில் கண்கள் சிவக்க கத்தினான். ஆக்ரோஷத்தோடு எழுந்து குதித்தான். 

”மயில் ராவணா  .பதற்றப்படாதே.  நீ நினைப்பது போல ராமனும் லஷ்மணனும் சாமான்யமானவர்கள்  இல்லை.  மிக மிக பலசாலிகள். அவர்களுக்கு எதோ தெய்வ அனுக்ரஹம் உள்ளது.அதனால்தான் நம் சேனைகளை காட்டிலே மரத்துக்கு மரம் தாவி பழம் தின்னும் வானரங்களைக் கொண்டே நிர்மூலப்படுத்தி விட்டார்கள். ஆகவே அவர்களை தந்திரத்தாலே  தான் அழிக்க வேண்டும். யோசி ”

” அண்ணா , நீ சொல்வது போல்  தந்திரமாக  அந்த ரெண்டு  பேரையும் பாதாளத்துக்கு கொண்டு போய் என் காளிக்கு பலி தருவேன். காளி மேல் சத்தியம்’.”

 
காளிக்கு பலி தருவேன் என்று மயில் ராவணன் சத்யம் செய்தான் என்றால் எவராலும் அவனை தடுக்க முடி யாது.   அதல பாதாள காளி  உக்ரமானவள். பலியை  ஏற்காமல் விட மாட்டாள்.
 
பாதாள காளிக்கு பலி தர சங்கல்பம் செய்யும்போது  யாரை பலி தரவேண்டுமோ அவர்களது  பொம்மைகளைச் செய்து காளி காலடியில் வைக்க வேண்டும். அவர்களைக் கொண்டு வர அவள் சக்திதர  வேண்டும் என பிரார்த்தித்து   அந்த பொம்மைகள்  மீது ரத்தத்தை கொட்டி சத்யம் செய்யவேண்டும். மயில் இராவணன் இப்படி செய்தான் 

ராவணன் அரண்மனையில்  ராவணனும், மயில் ராவணனும் பேசிக் கொண்டிருந்ததை விபீஷணனின் பெண் திரிசடை ஒட்டுக் கேட்டு விட்டாள்.  மயில் ராவணன்  வந்தபோதே அவளுக்கு சந்தேகம். ‘என்னிக்கும் இல்லாமல் இன்னிக்கு ஏன் இவன் வரான்?. ராம லக்ஷ்மணர்களை கொன்று காளிக்கு பலியிட  திட்டம் என கேட்டு கவலைப்பட்டாள் . பாதாள காளி படு ரொம்ப  கோபக்காரி. சக்தி வாய்ந்தவள். பிராத்திப்பதை கடுப்பவள் என்று தெரியும். 
 
திரிசடை கண்ணில் நீர்.  ஐயோ, இதென்ன நிலைமை.  என்அப்பா  விபீஷணன்  ராமனை  சரணாகதி அடைந்து அவருடன் இருக்கிறார். ராவணன் மந்த்ர தந்திர ரஹஸ்யம் தெரிந்ததால் தானே அவர் ராமலக்ஷ்மணர்களுக்கு உதவுகிறார். எப்படி  இந்த மயில் ராவணன் விஷயத்தை அப்பாவுக்கு தெரிவிப்பது?
ஆஹா  என்ன அதிர்ஷ்டம் இது !அந்த பக்கமாக வாயு பகவான்  வேகமாக சென்று கொண்டு இருந்தார். இலங்கை மீது செல்லும்போது அவருக்கு வானத்தில் பறந்து செல்லும் சக்தி மட்டுமே உண்டு. வேறேதும் சக்தி கிடையாது. அதனால்தான் சீதைக்கு அவரால் எந்த வழியிலும் உதவி செய்ய  முடியவில்லை. ஆனால் வாயு பகவானைக் பார்த்த திரிசடை  வாயுவை அழைத்து மயில் ராவணன் காளிக்கு சத்யம் செய்த விஷயத்தை சொல்லிவிட்டாள். 
”வாயு பகவானே, உடனே கிளம்பிச் சென்று இந்த செய்தியை என் தந்தை விபீஷணரிடம் சொல்லுங்கள். ராமலக்ஷ்மணர்களை  காப்பாற்றுங்கள்”.
 
இன்று ராத்திரி மேல் ராவணன்  தந்திரமாக ராம லஷ்மணர்களை கடத்திக் கொண்டு போய் பாதாளத்தில் காளிக்கு பலியாக்க பிரதிக்ஞை கொண்டுள்ளான். அவன் பெரும் மாயாவி. எளிதில் அனைவரையும் ஏமாற்றி விடுவான். காளியின் அருளினால் நினைத்ததை நடத்தி விடுவான். அதனால்தான் சொல்கிறேன், உடனே போய்  விபீஷனரிடம் விஷயம் சொல்லுங்கள்” என்றாள்  திரிசடை.
 
‘அம்மணி, உனக்கு  கோடி புண்யம். இதோ இப்போதே பறக்கிறேன்” என சொல்லி உடனே விபீஷணன் காதில் சேதியைப் போட்டார் வாயு.
 
”வாயு பகவானே கவலை வேண்டாம். எனக்கு தெரியும் மயில் ராவணனைப் பற்றி. அவன் திட்டத்தை முறியடிப்பேன்” என சொல்லிய விபீஷணன் ராம லக்ஷ்மணர்களை சென்று பார்த்தார். 
அங்கே  சுக்ரீவன் ஹனுமான்,  அங்கதன், நீலன் ஜாம்பவன் என பலர் அமர்ந்து இருந்தார்கள். 
 
 ‘என்ன விபீஷணரே, இன்று உங்கள் முகம் கறுத்து  வாடி வதங்கி உள்ளது. என்ன கவலை ?”என ராமன் கேட்க  அவரப்பி காதில் ரஹஸ்யமாக  திரிசடை சொல்லி அனுப்பிய விஷயத்தை சொன்னார் விபீஷணன்.
 
ராமபிரான் காதில் மட்டும் கேட்குமாறு வாயு பகவான் மூலம் தனக்கு கிடைத்த சேதி அனைத்தையுமே அவருக்குக் கூறினார்.
 
சிரித்துக்கொண்டே ராமர்  ”விபீஷணரே, இதென்ன பெரிய விஷயமா?கவலையா ?! மயில் ராவணன் மாயாவியாயிருந்தால் நமக்கென்ன? சுக்ரீவனிடமும் ஜாம்புவானிடமும்  கூறி அவர்களுடைய ஆலோசனைக் கேட்போம். நல்ல உயபாயம் சொல்பவர்கள்.  யார் அந்த மயில் ராவணன்? அவனுக்கென்ன பலம் என்பதை எங்களுக்கு சொல்லுங்கள்?” என்றார் .
 
விபீஷணர் சொல்வதை நாமும் அடுத்த பதிவில் கேட்போம். 
Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2560

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;