அலமேலு மங்கம்மா. நங்கநல்லூர் J K SIVAN
சனிக்கிழமை என்றாலே வாய் தன்னிச்சையாக ”கோவிந்தா கோவிந்தா, ஏடு கொண்டலவாடா கோவிந்தா வேங்கடரமணா” என்று கூவுகிறது. கை தானாகவே சிரத்தின் மேல் எழுகிறது. நினைவு தெரிந்த நாள் முதல் திருப்பதி ஏழுமலையானைத் தரிஸிக்க லக்ஷோப லக்ஷம் பக்தர்கள் கூட்டம் தான் கண்ணில் படுகிறது. மணிக்கணக்காக காத்திருப் பது வழக்கமாகி விட்டது. அப்போதெல்லாம் பஸ் ஒன்று தான் மலை ஏறவோ இறங்கவோ ஒரே சாதனம். ஏறவும் இறங்கவும் ஒரே மலைப்பாதை தான். பஸ் குலுங்கி குலுங்கி எதிரும் புதிருமாக வேகமாக வளைந்து வளைந்து நகரும். தெலுங்கு பஸ் டிரைவர். கோவிந்தா கோவிந்தா சத்தம் பஸ் பிரயாணிகளிடமிருந்து கேட்கும். ஏறும் பஸ் நிறைய தாடி மீசை, இறங்கும் பஸ் முழுக்க மொட்டைத்தலை. சந்தன காப்பு. ஏறுபவர்ககு வழி விட்டு இறங்கும் பஸ் வழி விடும். இறங்கும் பஸ்ஸி லி ருந்து ஜன்னல் வழியாக வாந்தி எடுப்பவர்கள்
நிறைய பேர்.
ஒரு வழியாக மலையிலிருந்து பஸ் கீழே இறங்கிய வுடன் குதிரை வண்டிகள் நிறைய காத்திருக்கும் ஆட்டோ டாக்ஸி தெரியாத காலம். திருச்சானூர் அலமேலு மங்கா ஆலயத்துக்கு மண் பாதையில் ஓடி கொண்டு சேர்க்கும். அங்கே அவ்வளவு கும்பல் அப்போதெல்லாம் இல்லை. மங்காபுரம் திருப்பதியை ஒட்டிய ஒரு சிறு கிராமம், ஏழுமலையானை தரிசித்த வர்கள் கண்டிப்பாக தரிசிக்க வரும் இடம். கோவில் வாசலில் எங்கு பார்த்தாலும் சிகப்பு கலந்த வண்ணங் களில் குங்கும மலைகள் விற்கும் கடைகள்.
அலமேலு மங்கை அவளது புகழ்பெற்ற பெயர். அந்த ஊருக்கே அவள் பெயர் தான். அலமேலு மங்கா புரம். பத்மாவதி கதை சொல்லட்டுமா? கொஞ்சூண்
டாக சொல்கிறேன்.
வேதவதி அதிரூப சுந்தரி. தபஸ்வினி. காட்டில் தவமிருந்த போது அங்கே வந்து பார்த்த ராவணன்
”பெண்ணே, நானே உனக்கு ஏற்ற கணவன். என்னை திருமணம் செய்து கொள் ” என மிரட்டினான்.
”நேரத்தை வீணாக கடத்தாதே. நான் ராமபிரானைத் தவிர, வேறு யாரையும் திருமணம் செய்ய உத்தேச மில்லை ” என்றாள் வேதவதி.
”நான் உன்னை விடப்போவதில்லை இதோ பார் ” என்று நெருங்கினான் ராவணன்.
“பெண்ணிச்சையால் என்னைப் பலவந்தப்படுத்த எண்ணம் கொண்ட நீ இதே இச்சையால் அழிவாய்” என சாபமிட்ட வேதவதி தன் கற்பைக் காத்துக் கொள்வ தற்காக அக்னியில் விழுந்தாள். அக்னி அவளை எரிக்க வில்லை. அவள் ராம பிரானைச் சந்தித்தாள்.
‘ராமா, என்னை கல்யாணம் செய்து கொள்” என்ற கேட்ட வேதவதிக்கு,
“இப்பிறவியில் இல்லை அம்மா. நான் ஏற்கனவே கல்யாணம் ஆனவன். ஏகபத்தினி விரதன். கலியுகத்தில், நிச்சயம் நான் திருமலையில் சீனிவாசன் என்ற பெயரில் வந்து தங்குவேன். நீ, அந்த மலையை ஆளும் ஆகாசராஜன்- தரணிதேவி தம்பதியருக்கு புதல்வி யாகப் பிறப்பாய். அப்போது, உன்னைத் திருமணம் செய்து கொள்கிறேன் என ப்ராமிஸ் பண்ணி னார்
ராமபிரான்.
ஆகவே காத்திருந்த வேதவதி கலியுகத்தில் ஆகாச ராஜன் என்னும் இந்த ஊர் ராஜாவுக்கு அலமேலு என்ற பெண்ணானாள். அவள் ஸ்ரீ லக்ஷ்மி அம்சம், முற்பிறப் பில் வேதவதி என்று ராஜாவுக்கும் வேறு யாருக்குமே தெரியாது.
அப்புறம் திருமலைக்கு சீனிவாசன் வந்து பத்மாவதி யைச் சந்தித்தார். தன் காதலை அவளிடம் வெளிப் படுத்தினார். தன் முற்பிறவி வரலாறை மறந்துவிட்ட பத்மாவதி, அவரைக் கண்டு அஞ்சினாள். பத்மாவதியின் தோழி கள் அவர் மீது கல்லெறிந்து துரத்தினர். காய மடைந்த சீனிவாசன், தன்னை வளர்த்து ஆளாக்கிய வகுளாதேவியிடம் தன் விருப்பத்தை தெரிவித்தார்.
சீனிவாசனுக்காக ஆகாசராஜனிடம் தூது சென்றாள் வகுளாதேவி. தன் மகன் சீனிவாசன், நாராயணனின் அம்சம் என்பதை மன்னனிடம் தெரிவித்தாள். அது கேட்டு ஆனந்தமடைந்த ஆகாசராஜன் திருமண ஏற்பாடுகள் வேகமாக நடத்தி, சீனிவாசனுக்கும், பத்மாவதிக்கும் திருமணம் நடந்தது. அதைக் காண தேவலோகமே கூடியது.
சீனிவாசன் ஏழை என்பதால், ராஜா வீட்டுப்பெண்ணை மணம் முடிக்க வேண்டிய நிலையில், திருமணச் செலவுக் காக குபேரனிடம் கடன் வாங்கினார்.
”ஸ்ரீநிவாஸா உனக்கு கடன் தருகிறேன். கல்யாணத் துக்காக கேட்கிறாய். அவசியம் தருவேன். ஆனால் எப்படி திருப்பி தருவாய் அதைச் சொல்” என்றான் குபேரன். அவன் கேட்டது நியாயம் தானே?
“குபேரா! நான் ஏழையானால் என்ன. என் திட்டம் இது தான். என்னை வணங்குவதற்கு இந்த திருத்தலத்துக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள். அவர்களின் பாவக்கணக்குக்கு ஏற்ப அவர்களிடம் நான் செல்வத்தை வசூலித்து விடுவேன். அதை உனக்கு வட்டியாகத் தருவேன்! கலியுகம் முடியும் போது அசலை முழுமையாகத் தந்துவிடுவேன். வாயால் சொன்னால் போதுமா சீனிவாசா? கடன் பாத்திரம் எழுதி வாங்கி னான் குபேரன்.
சீனிவாசன்- பத்மாவதி திருமணம் இனிதே முடிந்தது.
”மோசம் போய் விட்டாய் லக்ஷ்மி. உன் புருஷன் நாராயணன், பூலோகத்தில் திருமலையில் இன்னொரு பெண்ணை திருமணம் பண்ணிக் கொண்டுவிட்டாரே உனக்கு தெரியுமோ?” என மஹா லக்ஷ்மி யிடம் சென்று சிண்டுமுடித்தார் நாரதர். கோபமடைந்த லட்சுமி, சீனிவாசனிடம் வந்து விவரம் அறிந்தாள் . காரணம் கேட்டபோது அவளைச் சமாதானம் செய்து விளக்க மளித்தார் சீனிவாசன்.
“லக்ஷ்மி! முற்பிறவியில் நீ சீதையாக பிறந்த போது ராவணன் உன்னைக் கடத்த வந்தான். அப்போது அக்னியின் பாதுகாப்பில் இருந்த மாய சீதையான இவள், உனக்குப் பதிலாக ராவணனுடன் சென்றாள். உண்மையில் இவள் உன்னைக் காப்பாற்றியவள்…’ என்றார். சமாதானமடைந்த லட்சுமி, பத்மாவதியைத் தன் தங்கையாக ஏற்றாள்.
பின்னர், லக்ஷ்மியிடம், “நீ என் மார்பில் அமர்ந்துகொள். என் மார்பில் வலப்பக்கம் பத்மாவதி இருப்பாள். அவளது மற்றொரு வடிவத்தை பத்மசரோவர் தீர்த்தக்கரையில் அமையும் வகையில் ஏற்பாடு செய். நீங்கள் இருவரும் இங்கு வரும் பக்தர்களுக்கு அவரவர்களுடைய தகுதிக் கேற்ப அருள் வழங்குங்கள்…’ என்றார் சீனிவாசன்.
பத்மாவதி அமர்ந்த இடமே அலமேலுமங்காபுரம் ஆனது. திருச்சானூர் என்ற பெயர் ஏன் எப்படி என்று நான் இன்னும் யோசிக்கவில்லை. தேடிவிட்டு சொல்கிறேன்.
ஆரம்ப காலத்தில் வேங்கடேஸ்வரனுக்கு இங்கு தான் கோவில் இருந்தது. இட வசதி நெருக்கடியால் இடம் மாற்றம் செய்தார்கள். அதால் மக்களும் இந்த இடத்தை மறந்துவிட்டார்கள்.
பின்னர் 12ம் நூற்றாண்டில் யாதவ ராஜாக்கள் காலத்தில் கிருஷ்ண பலராம கோவில் வந்தது.
16ம் நூற்றாண்டில் சுந்தர வரதராஜன் கோவில் வந்தது. தனியாக பத்மாவதிக்கு ஒரு ஆலயம் திருச்சானூர் குளத்துடன் உண்டானது. இந்த குளத்தில் தான் பத்மாவதி தோன்றினதாக ஐதீகம். அவள் உட்கார்ந்திருப்பதே பத்மாசனத்தில் தானே.
வெங்கடேசனுக்கு திருச்சானூர் குளத்தில் தாமரை மலரில் தோன்றி காட்சி அளித்தாள் பத்மாவதி. பத்மம் என்றால் தாமரை . அப்புறம் அவளுக்கும் ஸ்ரீனிவாசனுக்கும் திருமணம் நடந்தது.
திருமலையில் வேங்கடாசலபதியை தரிசிக்கும் எவரும் திருச்சானூர் சென்று அங்கு வீற்றிருக்கும் பத்மாவதி தாயாரை வணங்காமல் திரும்பக்கூடாது என்று ஐதீகம். பாலாஜியை வணங்குவதால் கிடைக்கும் அருள், பத்மாவதி தாயாரை வணங்குவதன் மூலம் நிறை வேறும் என்பது தொன்றுதொட்டு இந்த ரெண்டு ஸ்தலங்களுக்கு செல்லும் பக்தர்கள் நம்பிக்கை.
பெருமாள் கோவிலுக்குச் சென்றால், முதலில் தாயாரை வணங்கி, அதன் பிறகே பெருமாளை வணங்குவது மரபு. ஆனால் திருப்பதி செல்பவர்கள், நேராக வெங்கடாச லபதியைத் தரிசித்த பிறகே திருச்சானூர் செல்கின் றனர்; ஆனால், முறைப்படி திருச்சானூர் சென்று, அலமேலு மங்கை எனப்படும் பத்மாவதி தாயாரைத் தரிசித்த பிறகே, வெங்கடாசலபதியை தரிசிக்க செல்ல வேண்டும். சொன்னால் யார் காதிலும் விழாது.
நான் திருச்சானூருக்கு அரும்பாக்கம் ஸ்ரீனிவாசன் எனும் நண்பரோடு ஒருமுறை சென்றேன். அவரது லக்ஷ்மியான மைதிலி மாமியும் வந்திருந்தார்.
காசு கொடுத்தால் சீக்கிரம் பார்க்க ஸ்பெஷல் கட்டணம் இப்போதெல்லாம் அலமேலு மங்காபுரத் திலும் இருக்கிறது. வளைந்து வளைந்து கம்பிகள் இடையே வரிசைகள். எந்த டிக்கெட் வாங்கி னாலும் தாயார் அருகே செல்லும்போது அனைவரையும் ஒன்றாக பாரபக்ஷமின்றி இணைத்து விடுகிறார்கள். அதிகமாக நசுங்காமல் அலமேலு மங்காவை தரிசித்து விட்டு வெளியேறி மாவு லட்டு பெற்று திரும்பினோம்.
அடுத்து நாராயண வனம் எனும் ஊர் சென்றோம். அங்கே தான் ஸ்ரீனிவாசன் பத்மாவதி கல்யாணம் நடந்து அப்புறம் தான் அலமேலு மங்காபுரம் சென்றார்கள் என்று அங்கே சொன்னதை அப்புறம் விவரிக்கிறேன்.

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2569

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;