
ஸ்ரீ ஸ்வாமி தேசிகனின் ஸ்ரீ ஸ்துதி – நங்கநல்லூர் J K SIVAN
ஸ்லோகம் 19-25 ( இத்துடன் நிறைவு பெறுகிறது) இதை இலவச புத்தகமாக்கி அளிக்க முன்வருபவர்கள் என்னை அணுகலாம். ஜே கே சிவன் 9840279080
19: जाता काङ्क्षा जननि युवयोर् एक सेवाधि कारे, माया लीढं विभवम् अखिलं मन्य मानास् तृणाय।
प्रीत्यै विष्णोस्तव च कट्टतिनः प्रीतिमन्तो भजन्ते वेलाभङ्गः प्रशमनफलं वैदिकं धर्मसेतुम्॥ १९॥
jātā kāṅkṣā janani yuvayor eka sevādhi kāre māyā līḍhaṁ vibhavam akhilaṁ manya mānās tṛṇāya|
prītyai viṣṇostava ca kaṭṭatinaḥ prītimanto bhajante velābhaṅgaḥ praśamanaphalaṁ vaidikaṁ dharmasetum|| 19||
தெய்வமே, தாயே, ஸ்ரீ விஷ்ணுவையும் விஷ்ணு பத்தினியான உன்னையும் இரு கண்களாக வணங்கி தொழும் பக்தர்களுக்கு எதுவும் குறைவில்லை. எதுவும் தேவை இல்லை. இந்த உலக சம்பத்துகள் எல்லாம் ஒரு புல்லாக திரணமாக மதிப்பவர்கள். வேத கர்மாக்களை முறையாக அனுஷ்டிப்பதன் மூலம் உங்களது பூரண த்ரிப்தியை பெறுபவர்கள்.
20. सेवे देवि त्रिदशमहिलामौलिमालार्चितं ते सिद्धिक्षेत्रं शमितविपदां सम्पदां पादपद्मम् ।
यस्मिन्नीषन्नमितशिरसो यापयित्वा शरीरं वर्तिष्यन्ते वितमसि पदे वासुदेवस्य धन्याः ॥ २०॥
seve devi tridaśa mahilā mauli mālārcitaṁ te siddhi kṣetraṁ śamita vipadāṁ saṁpadāṁ pāda padmam|
yasmin nīṣan namita śiraso yāpayitvā śarīraṁ vartiṣyante vitamasi pade vāsudevasya dhanyāḥ|| 20||
மஹா தேவி, உன் திருவடிகளை சரணடைந்தவரகளள் பாக்கியசாலிகள். இந்த ஊத்த சரீரத்தை விட்டபிறகு அவர்கள் நேராக உனது நாதன் வாசம் செய்யும் ஸ்ரீ வைகுண்டத்துக்கு அல்லவோ செல்பவர்கள். அடியேனும் உனது தாமரைத் திருவடிகளை கெட்டியாக பிடித்துக்கொண்டு சரணடைகிறேன். தேவாதி தேவர்கள் அனைவரும் தமது சிரத்தை அந்த பாதங்களில் வைத்து வணங்குபவர்கள் அல்ல? சகல சர்வ சம்பத்தும் தோன்றும் இடமாயிற்றே உன் திருவடிகள். பரம பதம் அடைய அது ஒன்று தானே வழி.
21. सानुप्रास प्रकटित दयैः सान्द्र वात्सल्य दिग्धैः अम्ब स्निग्धैर् अमृत लहरी लब्ध सब्रह्मचर्यैः।
घर्मे तापत्रय विरचिते गाढ तप्तं क्षणं माम् आकिञ्चन्य ग्लपित मनट्टैर् आर्द्रयेथाः कटाक्षैः॥ २१॥
sānuprāsa prakaṭita dayaiḥ sāndra vātsalya digdhaiḥ amba snigdhair amṛta laharī labdha sabrahmacaryaiḥ|
gharme tāpatraya viracite gāḍha taptaṁ kṣaṇaṁ mām ākiñcanya glapita manaṭṭair ārdrayethāḥ kaṭākṣaiḥ|| 21||
அம்மா, உன் திவ்ய நேத்ர கடாக்ஷத்தின் சக்தி உலகறியும். உயிர்த்தேனை வாரி வழங்குபவை அவை. நிர்க்கதியாக நிற்பவரை கை தூக்கி காப்பவை. ஸம்ஸார துக்கங்களிலிருந்தும் துன்பங்களிலிருந்தும் காப்பவை. அடியேன் அவதியுறுகின்ற ஆதி ஆத்மீக, ஆதி பௌதிக, ஆதிதைவ துன்பங்களிலிருந்து என்னைக் கரை சேர்ப்பாயா?
22. संपध्यन्ते भव भय तमी भानवस् त्वत् प्रसादात् भावाः सर्वे भगवति हरौ भवितमुद्वेलयन्तः।
याचे किं त्वाम् अहमिह यतः शीतलोदारशीला भूयो भूयो दिशसि महतां मङ्गलानां प्रबन्धान्॥ २२॥
saṁpadhyante bhava bhaya tamī bhānavas tvat prasādāt bhāvāḥ sarve bhagavati harau bhavitamudvelayantaḥ|
yāce kiṁ tvām ahamiha yataḥ śītalodāraśīlā bhūyo bhūyo diśasi Mahātāṁ maṅgalānāṁ prabandhān|| 22||
புண்யவதி, உன்னிடம் நான் ஒரு வரமும் கேட்கப்போவதில்லை. என்ன கேட்பேன் உன்னிடம்? உன் கடைக்கண் பார்வை ஒன்றே போதுமே. எண்ணிப்பார்க்க முடியாத சகல ஐஸ்வர்யங்களையும் கொண்டு வந்து கொட்டுமே. ஸ்ரீ, ஸ்ரீ நிவாஸன் உங்கள் இருவரிடமும் எனக்கு பக்தி இன்னும் பெறுக வேண்டும். அவ்வளவு தான்.
23. माता देवि त्वमसि भगवान् वासुदेवः पिता मे जातः सोऽहं जननि युवयोर् एक लक्ष्यं दयायाः।
दत्तो युष्मत् परिजनतया देशिकैरप्यतस्त्वं किं ते भूयः प्रियमिति किल स्मेर वक्त्रा विभासि॥२३॥
mātā devi tvamasi bhagavān vāsudevaḥ pitā me jātaḥ so’haṁ janani yuvayor eka lakṣyaṁ dayāyāḥ|
datto yuṣmat parijanatayā deśikairapyatastvaṁ kiṁ te bhūyaḥ priyamiti kila smera vaktrā vibhāsi||23||
மஹாலக்ஷ்மி தேவி, அடியேன் உங்கள் இருவரின் தயை, கருணையை, அருளை, வேண்டி உங்கள் திருவடியில் நிற்கும் ஒரு துகள். நீ என் தாய், ஸ்ரீனிவாசன் என் தந்தை. என் குரு என்னை உங்கள் தாசனாக அடிமையாக, பரிஜனமாக, காணிக்கையாக பணித்து விட்டார். அதுவே என் பாக்யம். எனக்கு வேறெதுவும் தேவையே இல்லை.
24. कल्याणानाम् अविकल निधिः काऽपि कारुण्य सीमा नित्यामोदा निगम वचसां मौलि मन्दार माला।
संपद् दिव्या मधु विजयिनः सन्निधत्तां सदा मे सैषा देवी सकल भुवन प्रार्थना कामधेनुः॥ २४॥
kalyāṇānām avikala nidhiḥ kā’pi kāruṇya sīmā nityāmodā nigama vacasāṁ mauli mandāra mālā|
saṁpad divyā madhu vijayinaḥ sannidhattāṁ sadā me saiṣā devī sakala bhuvana prārthanā kāmadhenuḥ|| 24||
என் இதயம் நீ அமரும் தாமரை ஆசனம். மஹா லக்ஷ்மி தேவி, வேதண்களின் மந்தார மாலை.லோக நாயகி, மங்களம் அருள்பவள். கருணைச்சுரங்கம். வரம் தரும் காமதேனு. எனக்கருள்புரிவாய். கருணைக்கு ஆதாரம்.
25. उपचित गुरु भक्तेर् उत्थितं वेट्टटेशात् कलि कलुष निवृत्त्यै कल्पमानं प्रजानाम्।
सरसिज निलयायाः स्तोत्रम् एतत् पठन्तः सकल कुशल सीमाः सार्व भौमा भवन्ति॥ २५॥
upacita guru bhakte utthitaṁ veṭṭaṭeśāt kali kaluṣa nivṛttyai kalpamānaṁ prajānām|
sarasija nilayāyāḥ stotram etat paṭhantaḥ sakala kuśala sīmāḥ sārva bhaumā bhavanti|| 25||
இது கடைசி ஸ்லோகம். பலஸ்ருதி . இந்த ஸ்தோத்ரத்தை பாராயணம் பண்ணுவதால் கிடைக்கும் நற்பலன் என்ன என்று விளக்கும் ஸ்லோகம். சர்வமங்கலமும் தரும் தங்கமழை பாடல் இது. அப்படியென்றால் இதை பா;பாராயணம் பண்ணுபவரால் பூலோக சக்ரவர்த்திகள் அல்லவா. மஹாலக்ஷ்மி மேல் சுவாமி தேசிகனுக்குள்ள அளவற்ற பக்தியில் விளைந்த ஸ்லோகங்கள் இவை. கலியுகத்தில் நாம் துன்புறும் இன்னல்களிலிருந்து நம்மை காப்பாற்றுபவை. ஸ்வாமி தேசிகன் ஸ்ரீமஹா லக்ஷ்மியின் அற்புதமான குணங்களைப் புகழ்ந்து இயற்றியவை.
மங்களானாம் ச மங்களம்: மங்களங்களின் மூலாதாரம்.அனைத்து உயிர்களுக்கும் சரணாகதி அளிப்பவள் .
ந்த ஸ்லோகத்தில், ஸ்வாமி தேசிகன் ஸ்ரீமஹாலட்சுமியை சரணாகதி செய்து, தேவியின் அருளைப் பெறும் வழியை இந்த கனகாதாரா ஸ்தவம் ஸ்லோகங்களில் காட்டுகிறார் ஸ்வாமி தேசிகன்.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



