

ஏகாதசி கிருஷ்ண தரிசனம்.- நங்கநல்லூர் J K SIVAN
‘நாளைக்கு காலை 6.30 மணிக்கு என்னோடு மஹாரண்யம் வருகிறீர்களா” என நண்பர் நவநீத கிருஷ்ணன் கேட்டால் அதுவும் ஏகாதசி அன்று கிருஷ்ண மந்த்ரம் ஒலிக்கும் முரளீதர ஸ்வாமிகளின் ஆஸ்ரமத்துக்கு போக வலிக்குமா?
நான் தயாராக இருக்கிறேன் என்று சொன்னதும் இன்று காலை 6.30 மணிக்கு வந்துவிட்டார்.
மஹாரண்ய கிராமத்தில் மதுராபுரி ஆஸ்ரமம் 1990ல் முரளீதர சுவாமிகளால் நிறுவப்பட்டது. நாற்பது நிமிஷத்தில் நங்கநல்லூரிலிந்து படப்பைக்கு காரில் சென்றுவிட்டோம். படப்பையில் யாரைக் கேட்டாலும் ஆஸ்ரமத்துக்கு வழி சொல்வார்கள். உள்ளே நுழையும்போதே பெரிய நீர்ப்பரப்பாக ஒரு ஏரி. கரையில் பெரிய வயசான அரசமரம். கிராமிய சூழலில் ஆன்மீக காடாக ”மஹாரண்யம்’ இங்கே ராமர் மூன்று இரவுகள் தங்கினதாக ஐதீகம். அருகே மணிமங்கலம் கிராமம் கிருஷ்ண சம்பந்தப்பட்டது. த்வாரகை கடலில் மூழ்கியபின் அங்கிருந்து பலர் மணிமங்கலத்துக்கு குடி பெயர்ந்து வாழ்ந்தார்கள் என்பார்கள்.
தனி ஆலயத்தில், ஸ்ரீ கல்யாண ஸ்ரீனிவாசர் அற்புதமாக திருப்பதி வெங்கடாசலபதியைப் போலவே அருள் பாலிக்கிறார். அருகே தெப்பக்குளம். பெரிய ஆஞ்சநேயர். ஆஸ்ரமத்தில் கோசாலையில் கிட்டத்தட்ட நூறு பசு, கன்றுகள் உள்ளன. .
ஆஸ்ரமத்தில் பெரிய பிரார்த்தனை ஹால் (”பாகவத பவனம” )ஒன்று இருபிரிவாக, ஆண்கள் பெண்கள் தனியே ஜம்மென்று உட்கார்ந்து மனதை ‘ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே, ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே” என்ற மனம் கவரும் ராகத்தில் பாடும் நாம சங்கீர்த்தனத்தில் காலை 6 முதல் மாலை 6 வரை சுகமாக ஈடுபட வைக்கிறது. அங்கே ப்ரேமிகா வரதனாக கிருஷ்ணன், மதுரி சகி யாக ராதா அருள் பாலிக்கி றார்கள். ஆஸ்ரமத்தில் இதர தெய்வங்களின் சந்ந்நிதிகளும் உண்டு. விநாயகர், பாண்டுரங்கன், வராஹர்,விஷ்ணு துர்கையை வணங்க வசதி உள்ளது. ஆஸ்ரமத்தில் கோவர்தன கிரி கூட உள்ளது. மதுராசலம் என்று பேர். கோவிந்த பட்டாபிஷேகம் இங்கே விமரிசையாக நடக்கும்.
ஒரு அருமையான விஷயம் என்ன தெரியுமா? ஸ்ரீ சாந்தீபனி குருகுலம் எனும் பாடசாலையில் நூறு மாணவர்கள் யஜுர், சாம வேதம் கற்கிறார்கள்.
ஐநூறுக்கு மேல் இன்று காலை பக்தர்கள் நாமசங்கீர்த்தனத்தில் ஈடுபட்டு ஸ்வாமிகள் நின்று கொண்டே அத்தனை பேருக்கும் தீர்த்த பிரசாதம் வழங்கினார். என்னுடைய புத்தகங்களில் சிலவற்றை ஆர்வத்தோடு பெற்றுக்கொண்டு எனக்கு மல்லிகை மலர், மாம்பழ பிரசாதம் அவர் கைகளால் வழங்கியது எனது பாக்யம். பெருமையோடு ஒரு விஷயம் நினைவு கூர்கிறேன்.
எனது சிறந்த படைப்பான ”ஐந்தாம் வேதம்” இரு பாகங்களை வெளியிட ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளை அணுகியபோது அந்த குறிப்பிட்ட தேதியில் அவர் சென்னையில் இல்லை என்று அறிந்து ஸ்ரீ ரகுவீரா பட்டாச்சாரியார் அவர்கள் வெளியிட்டார்கள். வெளியிடும் நாளுக்கு ஒரு வாரம் முன்பு மதுராந்தகம் சென்று ஸ்ரீ பட்டாச்சார்யரிடம் ஐந்தாம் வேதம் புத்தக பாகங்களை சமர்ப்பிக்க சென்ற அன்று காலை அவர் ஸ்ரீ ஏரி காத்த ராமன் ஆலயத்தில் பாராயணம் செய்து கொண்டிருப்பதாகவும் கோயிலுக்கே நேரில் வந்துவிடுங்கள் என்று சொன்னதால் நண்பர் அரும்பாக்கம் ஸ்ரீனிவாசனோடு ஏரி காத்த ராமனை தரிசிக்க சென்றபோது வாயிலில் பட்டாச்சாரியார் எங்களுக்காக காத்துக்கொண்டு நின்று இருந்தார். ”
மிருதுவான பனித்துளிபோல் மழைத்தூற்றல். எங்கள் காரை நிறுத்திவிட்டு அவரிடம் சென்றபோது ”வாருங்கள் சரியான சமயத்தில் வந்திருக்கிறீர்கள். ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் விழுப்புரம் வழியாக எங்கோ செல்லும்போது இப்போது வழியில் ராமர் கோயிலில் தரிசிக்க வந்திருக்கிறார். அவரையும் தரிசிக்கலாம் என்கிறார். ஸ்ரீ ஸ்வாமிகளும் எங்களோடு ஸ்ரீ பட்டாச்சார்யார் இல்லத்துக்கு வருகை தந்தார். அங்கே பூஜை அறையில் ஸ்வாமிகளிடம் பட்டாச்சார்யாருக் கென்று கொண்டுவந்த ”ஐந்தாம் வேதம்” இரு பாகங்களை அளித்து ”உங்கள் கையால் வெளியிட விரும்பிய எனக்கு இந்த முதல் பிரதிகளை உங்கள் திருக்கையில் சமர்ப்பிக்க இது ஒரு அதிசய சம்பவம். ஏரி காத்த ராமனே எதிர்பாராமல் இதை வைத்துள்ளான் என்று சொல்லி வணங்கினோம். ஆசிர்வதித்தார். முதல் பிரதியை பெற்றுக்கொண்டார். பிறகு பட்டாச்சார்யருக்கு மற்றொரு பிரதியை சென்னையிலிருந்து அனுப்பினேன். இன்று ஸ்வாமிகளை சந்தித்தபோது இந்த சம்பவத்தை நினைவூட்டியபோது புன்னகையோடு ”ஆமாம் நினைவிருக்கிறது” என்று சொல்லி விட்டு தான் பிரத்தியேகமாக பிரசாதங்களை எனக்கு வழங்கினார்.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.

