
கந்தகோட்டம் நங்கநல்லூர் J K SIVAN
ஒரு நண்பர் நினைவு கூர்கிறார்;
”1967ல் திமுக அரசு அமைந்தபோது, சென்னையில் வள்ளலார் வாழ்ந்த பகுதி உள்ளிட்ட “மின்ட்” பகுதியை ” வள்ளலார் நகர்” என்று பெயரிட்டது. இப்போதுள்ள நமது சென்னை வள்ளலார் காலத்து ” தருமமிகு சென்னை” இல்லை. ரொம்பவே மாறிவிட்டது.
ஒரு நண்பர் சொல்கிறார்: ‘நான் ஆறாம் வகுப்புப் பāடித்துக் கொண்டிருந்த பொது நடந்த ஒரு நிகழ்வைத் தங்களுடன் பகிர்ந்து கொள்ள விருப்பம் ! எங்களது வீட்டில் 60-70 களில் அநேகமாக தமிழ்நாட்டின் உள்ள அனைத்து முருகன் ஆலய திருவுருவப் படங்கள் இருப்பதுண்டு . அதில் ஒன்றில் ” சென்னை கந்த கோட்டம் ஸ்ரீ கந்த சாமி” என்று அச்சிட்ட ஒரு முருகன் படம் இருந்தது. மற்ற படங்களில் பழனி கோவில், திருத்தணி திருசெந்தூர் கோவில் என்று இருக்கிறது – இதில் மட்டும் ஏன் “கோட்டம்” என்று இருக்கிறது என்று எனது தந்தையாரிடம் கேட்ட போது அவர் கூறினார்” கோட்டம் என்றாலும், கோவில் என்றாலும் ஒன்று தான்” வள்ளலார் சென்னையில் உள்ள கந்தசாமிக் கோவிலை “கந்த கோட்டம் ” என்று தான் தமது பாடல்களில் குறிப்பிடுவார், அன்றாடம் எனது தந்தையார் இறைவழிபாட்டில் பாடும் “ஒருமையுடன் நினது திருமலரடி” என்று ஆரம்பிக்கும் பாடலில் தருமமிகு சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர் தலமோங்கு கந்த வேளே” என்று கூறியிருக்கார் ” என்று சொன்னார்.
அடுத்த நாள் எனது பள்ளியில் வருடாந்திர கல்வி அதிகாரியின் நேரடி வகுப்பு ஆய்வு ! எந்த நேரத்தில் எந்த ஆசிரியர் எந்த பாடம் எடுக்கும்போது ஆய்வாளர் எந்த வகுப்பறைக்குச் செல்வார் என்று ஆய்வாளரைத் தவிர யாருக்கும் தெரியாத ‘அதிரடி” ஆய்வுகள் நிகழ்ந்த கால கட்டம் ! எனது தமிழாசிரியர் செய்யுள் பகுதி நடத்திக் கொண்டிருக்கும் போது கல்வி அதிகாரி மற்றும் தலைமை ஆசிரியர் இருவரும் எங்கāகுப்பிற்கு வந்தார்கள் ! கல்வி ஆய்வாளர் எனது தமிழாசிரியாரிடம் என்ன பாடம் சொல்லிக்கொடுத்துக் கொண்டு உள்ளீர்கள் என்றார் ! எனது ஆசிரியர் தமிழ் செய்யுள் பகுதி சொல்லிக் கொடுத்துக் கொண்டு உள்ளேன் என்றார். கல்வி அதிகாரி, ” சரி நான், மாணவர்களை சில கேள்விகள் கேட்கிறேன் ” என்று சொல்லிவிட்டு, தமிழாசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் மற்றும் மாணவர்கள் நாங்கள் அனைவரும் அதிகாரி என்ன கேள்வி கேட்கப் போகிறாரோ என்ற பதைபதைப்பில் இருக்க, கோவில் என்றால் – ஆலயம் – சாமி கும்பிடும் இடம் என்று தெரியும், “கோட்டம் என்றால்” என்ன என்று யாருக்காவது தெரியுமா ? என்று கேட்டார். அதுவரை தமிழ்ப் பாடத்தில் நடத்தப்பட்ட செய்யுள் அல்லது பாடங்களில் கோட்டம் என்ற சொல்லே வந்ததில்லை அதனால் தமிழாசிரியர் கோட்டம் என்றால் என்ன என்று சொல்லிக் கொடுக்க சந்தர்ப்பமில்லை. எனவே, மாணவர்கள் இந்த ஆய்வாளரின் இந்த கேள்விக்கு எப்படி பதில் அளிப்பார்கள் என்ற திகிலில் தமிழாசிரியர் ! முந்தைய தினம் தான் வீட்டில் இருந்த “கந்த கோட்டம் முருகன் படத்தில் இருந்த வாசகங்களுக்கு எனது தந்தையார் கூறிய விளக்கங்கள் என்னுடைய நினைவில் இருந்ததால், சற்றும் தாமதிக்காமல் முன் வரிசையில் இருந்த நான், “பதில் சொல்லுகிறேன்” என்று கூற, முன் பெஞ்சில் இருந்த நான் கையை உயர்த்தினேன் ! உடனே, கல்வி அதிகாரி, ” சரி சொல்லு” என்றார். எனāலை “கந்த கோட்டம் ” என்று தான் தமது பாடல்களில் குறிப்பிடுவார், அன்றாடம் எனது தந்தையார் இறைவழிபாட்டில் பாடும் “ஒருமையுடன் நினது திருமலரடி” என்று ஆரம்பிக்கும் பாடலில் தருமமிகு சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர் தலமோங்கு கந்த வேளே” என்று கூறியிருக்கார் ” என்று சொன்னார்.
உடனே கல்வி அதிகாரி, “சபாஷ், சரியான பதிலைச் சொன்னாய்” என்று கூறிவிட்டு எனது தமிழாசிரியர் வசம், ” மாணவர் களுக்கு மிகச் சிறப்பாக சொல்லிக் கொடுக்கிறீர்கள் என்று பாராட்டி விட்டு, மேலும் பல வகுப்பறை ஆய்வுகளுக்குச் செல்ல வேண்டி இருந்ததில் அந்த ஒரு கேள்வி -பதிலிலேயே அவர் திருப்தியுடன் சென்றது-அதன் பின்னர் தமிழாசிரியரும் தலைமை ஆசிரியாரும் என்னைத் தட்டிக் கொடுத்ததும் இன்றும் நினைவில் உள்ளது !
எனது தந்தையார் மூலம் வள்ளலாரே “கோட்டத்திற் கு”விளக்கம் கூறி அடுத்த நாள் எங்கள் வகுப்பறையில் கல்வி ஆய்வாளர் வருகையை திருப்தி அடையச் செய்ததாகத்தான் இன்றும் கருதுகிறேன் !”
+++++++++++++++++++
அளவுக்கு மீறி பெருத்து விட்ட சென்னை நகர, நரக நெரிசலில் அமைதியாக பல நூற்றாண்டுகளாக சென்னை ராட்டன் பஜார் பகுதியில் திகழ்வது கந்தசாமி கோயில். ஐந்து நிலை ராஜ கோபுரம். பலமுறை சென்று முருகனை தரிசித்திருக்கிறேன். எனக்கு ரொம்ப பிடித்த முருகன் ஆலயம் இது.
1673ல் மாரி செட்டியார், கந்தப்ப ஆச்சாரி இருவரும் சேர்ந்து கட்டியது. ரெண்டு பேரும் திருப்போரூர் முருகன் கோவில் செல்லும் பக்தர்கள். அங்கே ஒரு புற்றுக்குள் அரசமரத்தடியில் கந்தசாமி விக்ரஹம் அவர்களுக்கு கிடைத்தது. முத்தியாலு நாயக்கருக்கு சொந்தமான இந்த இடத்தில் கந்தசாமி குடியேறினார். அப்போது அங்கே ஒரு சின்ன பிள்ளையார் தான் இருந்தார். தம்பிக்கு இடம் கொடுத்தார். மாரி செட்டி யார் மனைவி நகைகள் சொத்தெல்லாம் விற்று கோயில் கட்டினார். நண்பர் கந்தப்ப ஆச்சாரி எட்டு ஏக்கர் நிலத்தை கோவிலுக்கு கொடுத்தார். நமக்கு கந்த கோட்டம் கிடைத்ததை வரலாறு இது. சிதம்பரம் ஸ்வாமிகள், பாம்பன் ஸ்வாமிகள், ராமலிங்க அடிகளார், தண்டபாணி ஸ்வாமிகள், அருணகிரி நாதர், பாரதியார் ஆகிய மஹான்கள் தரிசித்த ஆலயம். வள்ளலாரின் ஆன்மீக வாழ்க்கை துவங்கிய ஆலயம். ‘தெய்வமணி மாலை’ இங்கே தான் இயற்றி பாடினார். அதில் எல்லோருக்கும் பிடித்த ஒரு பாடல் இது; அர்த்தம் சொல்ல தேவையே இல்லை;
”ஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவுவேண்டும்
உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவார் உறவு கலவாமைவேண்டும்
பெருமை பெறு நினது புகழ் பேச வேண்டும் பொய்மை பேசாதிருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய் பிடியாதிருக்கவேண்டும்
மருவு பெண் ஆசையை மறக்க வேண்டும் உனை மறவாதிருக்கவேண்டும்
மதி வேண்டும் நின் கருணை நிதிவேண்டும் நோயற்ற வாழ்வு நான் வாழ வேண்டும்
தரும மிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே
தண் முகத் துய்யமணி உண்முகச் சைவமணி சண்முகத் தெய்வமணியே.”
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.


