THIS IS KRISHNA J K SIVAN

இது தான்  கிருஷ்ணன்.   நங்கநல்லூர்  J K SIVAN

விஷ்ணு  என்கிற ஸ்ரீமந்  நாராயணன் தான் சர்வமும். சகல தெய்வங்களும் அவர் ஒருத்தரே .  ப்ரம்மா, சிவன், ருத்ரன்,  ராமன், கிருஷ்ணன், எத்தனையோ பெயர்கள்  அவருக்கு உண்டு.  பல  அவதாரங்கள் எடுத்து அதற்கான ஆயிரக்கணக்கான நாமங்களை ரூபங்களை கொண்டவர். ஒரே தெய்வம் பல ரூபங்களில் பல நாமங்களில். அவ்வளவு தான்.  ‘ஈஸ்வர: பரம: கிருஷ்ணா:’  நாம் பார்க்கும்  பிரபஞ்சத்திலும்  அதற்கு அப்பால் இருந்தும் அதைக் கண்காணிக்கும்  ஒரு சக்திதான் கிருஷ்ணன்.

கீதையில் ஒன்றிரண்டு ஸ்லோகங்கள்;
मत्त: परतरं नान्यत्किञ्चिदस्ति धनञ्जय |मयि सर्वमिदं प्रोतं सूत्रे मणिगणा इव ||  கீதை  7. 7||
mattaḥ parataraṁ nānyat kiñchid asti dhanañjaya mayi sarvam idaṁ protaṁ sūtre maṇi-gaṇā iva 7.7:
மத்த: பரதரம் நாந்யத்கிஞ்சித³ஸ்தி த⁴நஞ்ஜய|மயி ஸர்வமித³ம் ப்ரோதம் ஸூத்ரே மணிக³ணா இவ | கீதை  7-7||

“என்னை  விட  பெரிய  உண்மை  எதுவும் இல்லேப்பா.  ஸர்வமும்  நானே.   எல்லாரும்  என்னையே சார்ந்து அல்லவோ  இருக்கிறார்கள்’.  ஒரு நெருக்கமாக கட்டிய  ஹாரத்தில் தங்கம்,  வெள்ளி,  வைர,  மரகத, முத்துமணிகள்  தான் கண்ணுக்கு பளிச்சென்று ஒளிவீசும்.   ஆனால் இந்த மணிகளை  எல்லாம் உள்ளே இருந்து இணைக்கும்  வெள்ளி, தங்க, தாமிர கம்பியோ,  சாதாரண நூல்  கயிறு கண்ணில் படாது.  நான் அப்படித்தான் உள்ளே இருந்து கொண்டு வெளியே தெரியாத கம்பி  மாதிரி உலகில் எல்லாவற்றையும் இணைப்பவன்”

न मे विदु: सुरगणा: प्रभवं न महर्षय: |अहमादिर्हि देवानां महर्षीणां च सर्वश: || கீதை  10.2.||
na me viduḥ sura-gaṇāḥ prabhavaṁ na maharṣhayaḥ aham ādir hi devānāṁ maharṣhīṇāṁ cha sarvaśhaḥ
ந மே விது³: ஸுரக³ணா: ப்ரப⁴வம் ந மஹர்ஷய: ।அஹமாதி³ர்ஹி தே³வானாம் மஹர்ஷீணாம் ச ஸர்வஶ: ॥ 2 ॥

மஹா ரிஷிகளாகட்டும்,  எண்ணற்ற தெய்வங்களாகட்டும், எல்லோருக்குமே  எல்லாவற்றுக்குமே நானே ஆதாரம். என்னை முழுமையாக அறிந்தவர்கள் எவருமே  இல்லை.

” அக்னி,   வாயு, இந்திரன், சந்திரன், முப்பத்து முக்கோடி  தெய்வங்கள் எதை வணங்கினாலும் அவற்றை  இயக்கும்  என்னையே  (கிருஷ்ணனையே )  அது சேரும். அதாவது  கிருஷ்ணன்  தான்  ‘சர்வ  ஆதார சக்தி’.   விஷ்ணுவின் அவதாரங் கள்  கார்யார்த்தமானவை. அவர்  மகா விஷ்ணு, கர்போதகசாயி விஷ்ணு,  க்ஷீரோதகசாயி விஷ்ணு  என்றும்  காணப் படுபவர். எந்த விஷ்ணுவாக வர்ணிக்கப் பட்டாலும்  எல்லாமே   நாராயணன் ஒருவரே தான்..

சச்சிதானந்த விக்ரஹ என்று  சொல்கிறோமே அதன் மூலம்  கிருஷ்ணன் எப்படி மற்றவற்றிலிருந்து வேறுபட்டவர் என்பது புரியும்.  கிருஷ்ணனின் சரீரம் ‘சத் (நிரந்தரம்), சித் (பூரண ஞானம்)’  ,ஆனந்தம் (எல்லையிலாத இன்பம்) இவற்றின் மொத்த உருவகம்.  நாம் எல்லோரும் அவரவர் கர்ம பலனுக்கேற்ற உடல்  தரிக்கிறோம். பிறக்கிறோம். உலகில் பிறக்கும்போது உலகத்தின் காரணமான  பஞ்ச பூதங்களிலிருந்தே உருவாகி அதிலேயே கரைகிறோம். இது உடல் பற்றி  மட்டுமே. உடலுக்கு உள்ளே  இருக்கிறதே  ஆத்மா, அது  இதில் சேராதது. சுதந்திரமானது. அது ஒன்றே  நமது  அடையாளம். மாறாதது.  உடல்  மாறக்கூடிய உருவம் கொண்டது, மரணம் எய்துவது.  ஆத்மா உருவமற்ற, மரணமற்ற ஒரு பாகம் நம்மில், நம்முள்.  அதன்  உண்மையான  தன்மை தான்  சத், சித், ஆனந்தம்.  எனவே  உடல்  அசத், அசித்,  நிரானந்தம்  கொண்டது என்று புரிகிறதா? எத்தனை தடவை திரும்ப திரும்ப சொன்னாலும்  மனதில் ஏறாத, பதியாத  ஒரு விஷயம் இது.  

கிருஷ்ணன்,  அழியாத ஆத்மாவையே  உடலாக கொண்டவன்.  உலக வியவஹாரங்களில்  சம்பந்தப் படாதவன். ஜனனம் மரணம் அற்றவன். இது ஒன்றே  கிருஷ்ணனை  மற்ற  முப்பத்து மூன்று கோடி தேவதைகளிலிருந்து தனித்து  காட்டுகிறது.  இந்த  தேவதைகள் எல்லாமே   நம்மைப் போன்றவர்கள் தாம் ஒரு வகையில்.   உருவம், உடல், கொண்டவை. மேலும்  ஒரு  சில  குறிப்பிட்ட  அதிகாரங்கள், சக்திகள் மட்டுமே  கொண்டவர்கள். பரம்பொருள் என்று  அவர்களை  அடையாளம் காண முடியாது. 

அவரவர் கர்ம பலனுக்கேற்ப  இந்த பூமியில்  தோன்றுபவர்கள்.  நமது உலகத்துக்கு அதனால் தான் கர்ம பூமி என்று பெயர். சத்வ குணம் அதிகம் காண்பின், அவர்கள் மனிதரை விட உயர்ந்த பதவிகளை  அடைபவர்கள். தேவர்கள்.  தேவதைகள்.   எல்லோருமே எல்லைக்குட்பட்ட ஸ்தானம் வகிப்பவர்கள்.  இந்திரன், கணபதி, பிரம்மா  ஆகியோர்  அந்தந்த  ஸ்தானத்தில்  வரையறுக்கப்பட்ட  காலத்திற்கு மட்டும்  தான்  பதவி, தலைமை வகிப்பார்கள் .  முடிவற்றதல்ல. மாயையில் கட்டுண்ட நாம்  பின் தங்கிய  நிலையில்  உள்ளோம்.  ரஜஸ்,  தமஸ்,  ஜாஸ்தி நம்மிடம் என்பது தான்  வித்யாசம்.  

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2560

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;