SHODASOPACHARAM J K SIVAN

பதினாறு  வித உபசாரங்கள் –  நங்கநல்லூர்  J K   SIVAN
பகவானுக்கு பூஜை பண்ணுவது சாஸ்த்ரோக்தமாக  இருக்க வேண்டும் என்றால் பதினாறு வித உபசாரங்கள் அதில் அடக்கம்.  ஷோடஸ  உபசார பூஜை என்று அதற்கு பெயர்.  கோவில்களிலும் சில வீடுகளிலும் அப்படி பூஜை நடக்கும்.
அந்த  பதினாறு உபச்சாரம் என்ன?

1. த்யானம். பிரார்த்தனை. மனதை ஒருநிலைப் படுத்த இது தான் ஆரம்ப உபச்சாரம். பகவானின் தாமரைத் திருவடிகளை மனதில் நினைந்து கை  கூப்பி கண் மூடி மனதில் அவனை நினைத்து ஸ்லோகம் சொல்வது.
பிள்ளையாருக்கு தான் முதலில் பிரார்த்தனை செய்வது வழக்கம்.
2. பகவானை ஆவாஹனம் செய்வது.  ”வா இங்கே வந்து இரு,  கிருஷ்ணா, வா பரமேஸ்வரா, வா முருகா, என்று அவரை வரவேற்பது.  

3.  ஆசனம் சமர்ப்பிப்பது  – ”வா வந்து இதில் அமர்ந்து கொள் ” என்று  ஒரு பலகையோ, தாம்பளமோ அலங்கரித்து சுத்தமாக அளிப்பது
4.பாத்யம்.  என்பது நீரால்  பகவான் திருவடிகளை அபிஷேகிப்பது.  வீட்டில் பெரியோர்கள் வந்தால் அவர்கள் கால்களைக் கழுவும் பழைய கால குடும்பங்களில் உண்டு. எங்கள் வீட்டில் அப்பா அப்படி வீட்டுக்கு வரும் பெரியவர்களின் பாதங்களை கழுவுவதை பார்த்திருக்கிறேன்.
5.அர்க்கியம்.   பகவானின்  கைகளை சுத்தப்படுத்துவதற்கு ஜலம் அளிப்பது.
6. ஆசமனம்.  துளி நீர் பருக அளிப்பது.  சங்கல்பம் பண்ணும்போது நாமும் உத்ரணியில் நீர் துளி எடுத்து பருகி, உதடுகளை துடைத்துக் கொள்கிறோம்.
7. ஸ்னானம்.  பகவானுக்கு ஸ்னானம் செய்ய புனித ஜலம் , அல்லது பஞ்சாம்ருதம் அளிப்பது ஒரு உபச்சாரம்.உத்ரணியில் நீர் எடுத்து வலது காய் உள்ளங்கையில்  ஊற்றிக்கொண்டு பகவான் விக்ரஹத்தின் மேல்  தெளிப்பது. ப்ரோக்ஷணம் என்று பெயர்.  சில  ஆலயங்களில், வீட்டில்  பால், தயிர், நெய் , பழரசம்,சந்தனம், மஞ்சள் என்று ஸ்னானம் பண்ணி உபசரிப்பது வழக்கம்.
8. வஸ்திரம் – புது  ,ஆபரணங்கள் அணிவித்து  உபசரிப்பது. 9. யக்னோபவீதம். –  புது பூணல் அணிவிப்பது ஒரு உபச்சாரம்.  சில சமயம்  பூணலுக்கு பதிலாக  அக்ஷதை, புஷ்பம் சமர்ப்பித்து உபசரிப்பது.
10.கந்தம்.  –  சந்தனம் அரைத்து பூசுவது  உபச்சாரம். பழைய காலங்களில் வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கு நெற்றியில், மார்பில் கைகளில் சந்தனம் பூசி உபசரிப்பார்கள் . யாரும் சட்டை போட்டுக்கொள்ளாத காலம் என்பதால் மேல் வஸ்திரம் இடுப்பில் சுற்றிக்கொண்டு  மார்பில் சந்தனம் பூசிக்கொள்வது வழக்கம். 

11.அர்ச்சனை  பகவானின் திருநாமங்களை சொல்லி, 108  நாமங்கள் சொல்லும் அஷ்டோத்ரம், 1008  சொல்லும் சஹஸ்ரநாமம், லக்ஷம் தடவை சொல்லும் லக்ஷர்ச்சனை, கோடி அர்ச்சனை என்றெல்லாம்  கோவில்களில் விசேஷமாக  அர்ச்சனை செய்வார்கள். பார்க்க இப்போது காசு வாங்குகிறார்கள். அர்ச்சனை பண்ண காசு கட்டவேண்டிய கட்டாயமும் வந்துவிட்டது.
12.தூபம். –  சாம்பிராணி, தசாங்கம், ஊதுவத்தி போன்ற  வாசனை திரவியங்கள் கொண்ட தூப  ஆராதனை ஒரு உபச்சாரம்.
13.தீபம்  –  நெய் ,  இலுப்பை , நல்லெண்ணெய் தீபங்களால்  விளக்கேற்றி உபசரிப்பது.
14. நைவேத்தியம். சுத்தமாக,  பிரத்யேகமான பாத்திரங்களில்  வாய் மூக்கை மூடிக்கொண்டு  வாசனை, ருசி,  பார்க்காமல் தயாரித்து  பகவானுக்கு  உணவு அளிப்பது உபசாரம். இது தான் பிரசாதமாக பக்தர்களுக்கு  விநியோகிக்கப்படும். .
 15. தாம்பூலம்.    ஆகாரம் அளித்தபின்  ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு அளிப்பது முக்கியமான உபச்சாரம்.
கலசங்களில் புனித நீர்,  கங்கை, யமுனை, சிந்து, நர்மதை, சரஸ்வதி, கோதாவரி,காவேரி என்று  ஏழு நதிகளின் பெயர்களை சொல்லி அந்த தீர்த்தங்களை  கலச நீரில் ஆவாஹனம் செய்து உபசரிப்பது.
16.நீராஜனம்  –  கற்பூர ஹாரத்தி காட்டி உபசரிப்பது.  சிலர் கற்பூரங்களுக்கு பதிலாக  நெய் தீப ஹாரத்தி காட்டும் வழக்கம் உண்டு.  மந்த்ர புஷ்பம் என்ற ஸ்தோத்ரம் சொல்லி பூஜை உபச்சாரம் நிறைவு பெறும் பூஜை நிறைவேறும் முன் சொல்லும் ஒரு குட்டி மந்திரம்;
kayena vaacha, manasendriyairva   budhyatmana va prakriter swabhavat   karomi yad yad sakalam parasmai  narayanayeti samarpayami.

என்னப்பனே  ஸ்ரீமந்  நாராயணா, உன்னை  என் உடலால் எவ்வாறெல்லாம் முடியுமோ அப்படி, என் வார்த்தைகளால், மனசால்,  ஐம்புலன்களால் , ஆத்மாவால், புத்தியால், அதெல்லாவற்றையும் அர்ப்பணித்து உன்னை வணங்குகிறேன்.அப்புறம் நமஸ்கரபாம், ஆத்ம ப்ரதக்ஷிணம், சமர்ப்பணம், க்ஷமாபணம் , தீர்த்த பிரசாதம் இதெல்லாம் மேலே சொன்ன ஷோடசோபசாரத்தை தவிர உபரி உபசாரங்கள். 

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2561

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;