
தேனுகாம்பா சமேத தேனுபுரீஸ்வரர் தரிசனம் – நங்கநல்லூர் J K SIVAN
தற்போதைய சூழ்நிலையில் உறவினர்களோ நண்பர்களோ ஒருவரை ஒருவர் அவரவர் வீட்டுக்கு சென்று சந்திப்பது குறைந்து போய் விட்டது. அடிக்கடி இது நடக்க வழியில்லை. காரணம். யாருக்குமே நேரம் இல்லை. ரெண்டாவது போக்குவரத்துக்கு பல வசதிகள் இருந்தும் அதற்கு செலவழிக்கும் கட்டணம் உயர்ந்து கொண்டே போவதால் கை மீறிய விஷயமாக யோசிக் க வைக்கிறது. விஷம் போல் ஏறும் விலை வாசி யைக் கட்துப்படுத்துவது பற்றி யாருமே கவலைப்படாதது வாடிக்கையாகிப் போய்விட்டது நமது துரதிர்ஷ்டம்.
ஆகவே உறவினர்கள் நண்பர்களை சந்திக்கும் ஒரே சந்தர்ப்பம் எங்காவது கல்யாணம் மற்ற பொது விசேஷங்களில் தான். வெகு காலத்துக்குப் பிறகு பல அன்பு மிக்க உறவு முகங்களை ஒரே இடத்தில் சந்திக்க மாடம்பாக்கத்தில் இன்று வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஒரு உறவினர் வீட்டு கல்யாணம். அங்கே கிடைத்த இன்னொரு அற்புதமான அதிர்ஷ்டம் தேனுபுரீஸ்வரர் ஆலய தர்சனம்.
நங்கநல்லூரிலிருந்து மாடம்பாக்கத்துக்கு போகும் வழி ஏதோ ஆப்பிரிக்க காடுகளில் செல்வது போல குண்டும் குழியுமாக இருந்தாலும், முதல் நாள் பெய்த மழையில் அது சேரும் சகதியுமாக இருந்தது இன்னும் விசேஷம். மாடம்பாக்கத்தின் இன்னொரு பெயர் திரு மாட நகர். அருணாகிரி நாதர் இங்கே வந்திருக்கிறார் அவருக்கு தெரிந்த அப்போதைய பெயர் திரு மடையம்பதி. மாடு என்றால் செல்வம் என்றும் காமதேனுவையும் குறிக்கும். காமதேனுவே கேட்டதெல்லாம் அளிக்கும் செல்வம் தானே.
மாடம்பாக்கம் ஸ்ரீ தேனுபுரீஸ்வரர் கோவில் கிழக்கு தாம்பரத்திலிருந்து சுமார் 10 கிமீ தொலைவில் மாடம்பாக்கம் கிராமத்தில் உள்ளது. தாம்பரம் – வேளச்சேரி முக்கிய சாலையில் வடக்கு நோக்கிச் சென்று ராஜகீழ்ப்பாக்கம் அருகே மாடம்பாக்கம் முக்கிய சாலையில் திரும்பிச் சென்றால் கோயிலை அடையலாம்.
மாடம்பாக்கத்தில் திருப்பதி மஹால் எனும் கல்யாண மண்டபத்திற்கு அடுத்த கட்டிடமாக அமைந்துள்ளது ஒரு பழங்கால புராதன அற்புத சிவாலயம். ஸ்ரீ தேனு காம்பாள் சமேத ஸ்ரீ தேனு புரீஸ்வரர் ஆலயம். காலை முகூர்த்தமாக இருந்ததால் ஒரே எட்டில் தாவி அற்புத மான அந்த சிவாலயத்துக்கும் சென்று தரிசிக்க வசதியாக இருந்தது.
இந்த கோவிலின் விசேஷம் இது கபில மகரிஷி வழிபட்ட ஸ்தலம். இங்கே ஒரு தூணில் ஸரபேஸ்வரர் தரிசனம் தருகிறார். அவரை வழிபட ஆயிரக்கணக் கான பக்தர்கள் குழுமுகிறார்கள். இது ஒரு பிரார்த்த னை பரிஹார ஸ்தலம். தேனு புரீஸ்வரருக்கு பழம் பெரும் பெயர் ஒன்று உண்டு. சித்தேரி நாதர். சிறிய ஏரி ஒன்று இருந்ததாம். அங்கே ஸ்வயம்புவாக தோன்றிய வர் ஈஸ்வரன். உலகத்திலேயே மிகச் சிறிய ஒரு சாண் உயரம் 3 விரற்கடை அகல சுற்றளவு கொண்ட வெண்மையான நிறம் ஸ்வயம்பு லிங்க உருவமாக இருக்கிறார். காமதேனு, ஒரு காராம்பசுவாக அந்த ஸ்வயம்பு லிங்கம் புதைந்திருந்த புற்றின் மேல் பால் சொரிந்து பாலபிஷேகம் பண்ணி பூஜை செய்ததால் தேனு புரீஸ்வரர் என்ற பெயர் வந்ததாக ஸ்தலபுராணம் சொல்கிறது. ஏன் இந்த இடத்தில் பசு தானாகவே
அடிக்கடி ஒரு புற்றின் மேல் பால் சொரிகிறது என அதிசயித்து விஷயம் ராஜாவின் காதுகளுக்கு எட்டி அவன் ஆட்களை அனுப்பி அங்கே தோண்டியபோது இந்த ஸ்வயம்பு லிங்கம் பூமிக்கடியில் காணப்பட்டது.
சிவலிங்கம், காமதேனு பசுவின் கொம்பு வடிவில் அமைந்துள்ளது. சதுர ஆவுடையாரின் நடுவில் மூன்று அங்குல அகலமும், எட்டு அங்குல உயரமும் கொண்டு இந்த தேனுபுரீஸ்வரர் அருள்பாலிக்கிறார். ஈசன் பல்வேறு தலங்களில் பல்வேறு வடிவங்களில் காட்சி யளித்தாலும், பசுவின் கொம்பைப் போல் தரிசனம் அளிக்கும் இந்தக் காட்சி அபூர்வமானது. . ஸ்வயம்பு லிங்கம் என்ன உலோகத்திலானவர் என்று அவருக்கு தான் தெரியும். 1500 வருஷங்களுக்கு முந்தைய கஜப்பிரஷ்ட(தூங்கானை) விமான ஆலயம்.
ஒரு தூணில் தக்ஷிணாமூர்த்தி தம்பதிகளாக காட்சி தருகிறார். நடராஜர், புன்னகை தவழும் வதன துர்க்கை, திரிபுராந்தகர், வீரபத்ரர், ஆஞ்சநேயர் விக்னேஸ்வரர், சுப்பிரமணியர் மற்றும் பல அற்புத சிலா ரூபங்களை இன்றெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்கலாம். சிறந்த வேலைப்பாடுகள் கொண்ட சிற்பங்களை கை தேர்ந்த சிற்பிகள் உருவாக்கியிருக்கி றார்கள்.
இதில் தனிச்சிறப்பானது ஒரு தூணில் காணும் சரபேஸ் வரர். சிவன், யாளி, பறவை, மனுஷ ரூபம்,கலந்த, எட்டு பாதங்கள், சோமன், சூர்யன் அக்னி நேத்ரம். ப்ரத்யங் கரா சூலினி , சிறகு, இறக்கைகள், கருட மூக்கு, மான் மழு ஏந்திய கரங்கள். இந்த ஸ்வரூபம் தான் சரபம் எனும் சரபேஸ்வரர் உருவம். நரசிம்ம உக்ரத்தைத் தணித்தவர். நரசிம்மர் சரபேஸ்வரனை 18 ஸ்லோகங் களால் போற்றி துதித்திருக்கிறார். ஒவ்வொரு ஞாயிறு அன்றும் ராகுகாலத்தில் சரபேஸ்வரருக்கு சிறப்பு வழிபாடு இங்கே நடக்கிறது.
தேனு புரீஸ்வரர் கர்ப்பகிரகத்தில் இருந்து குளத்துக்குச் செல்லும் சுரங்கப்பாதை இருந்ததை இப்போது மூடி விட்டார்கள். அற்புதமான சிற்பிகள் சூரிய கிரணங்கள் காலையில் நேராக தேனுபுரீஸ்வரர் மேல் ஏப்ரல் மாதம் 21/24 தேதிகளில் அவர் பாதத்தில் விழுந்து வணங்கு வதைப் போல் அமைத்திருக்கிறார்கள்.
புராதன கோவில்களுக்கு செல்லும் போது நம்மை அறியாமல் மனதில் ஒரு சந்தோஷம் குடி புக காரணம் அங்கே வியாபித்துள்ள அநேக புண்யாத்மாக்கள், நல்லாத்மாக்களின் கண்ணுக்குத்தெரியாத வாசம் தான். ஆயிரம் வருஷங்களில் எத்தனை மஹான்கள் வந்து பூஜித்த, வழிபட்ட புண்ய ஸ்தலம். அவர்கள் சுவாசித்த பிராணன் என்றும் அங்கே காற்றில் நிலை யாக கலந்திருக்கும். இதையே ஆங்கிலத்தில் வைப் ரேஷன் (vibration ) என்கிறோம். நிறைய பேர் ப்ரஹா ரத்தில் அமர்ந்து த்யானம் செய்வது மனது பூரிப்படை வதற்காகவே.
ஒரு அழகிய பெரிய புஷ்கரணி ஆலயத்தை ஒட்டி அமைந்துள்ளது. அங்கே தான் கபில மகரிஷி தவம் செய்து வழிபட்டார் என்பதால் கபில் தீர்த்தம் என்று பெயர். கபில ரிஷி முக்தியடைய சிவனை நோக்கி தவமிருந்தார். அவரிடமிருந்த சிவலிங்கத்திற்கு அன்றாட பூஜை. ஒருநாள் இடது கையில் சிவலிங்கத்தை பிடித்து வலது கையில் பால் அபிஷேகம் செய்ததால் தோஷம் வந்தது. இடது கையில் சிவனை தொடலாமா? மோக்ஷம் கிடைக்கவில்லை. அப்புறம் ரிஷி பசுவாக பிறந்து மேலே சொன்ன பால் சொரிந்த விஷயம் வருகிறது. இப்படி ரிஷி பரிஹாரம் தேடிக்கொண்டதால் தேனு புரீஸ்வரர் என்ற பெயர். மூலவர் பின்னால் பிரகாரத்தில் கபிலேஸ்வரர் எனும் சிவலிங்கம் கண்ணைப் பறிக்கிறது.
சித்தேரி தான் இப்போது ராஜகீழ்ப்பாக்கம் பகுதியில் மாடம்பாக்கம். பட்டயங்களில் இந்த ஊருக்கு உலகுய்யவந்த சோழ சதுர்வேதி மங்கலம் என பெயர் கொண்டது. இப்போது இந்த பெயர் சொல்வதற்குள் பஸ் போய்விடும். மாடம்பாக்கம் எல்லோரும் அறிந்த பெயர். மூலவர் தேனு புரீஸ்வரர். காமதேனுவாக கருதப்படும் பசு, கபிலர் அவதாரம். எனவே தேனு புரீஸ்வரர். அம்பாள் தேனுகாம்பாள்.
அருகே சித்தர்கள் வாழ்ந்த இடம் சித்தர் பாக்கம், இப்போது சித்தல பாக்கம் என பேர் மாறி காண்கிறது. தேனுபுரீஸ்வரர் அருகிலேயே சித்தர்கள் கோவில் இருக்கிறதே.
இந்த ஆலயத்தை ரெண்டாம் பராந்தக சோழன் கட்டியதாக வரலாறு. இந்த சோழன் தான் ராஜ ராஜ சோழனின் அப்பா, சுந்தர சோழன். முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் கற்றளி கோவி லாகியது.
இந்த கோவில் செல்பவர்கள் மறக்காமல் பார்க்க வேண்டியது ஒரு தூணில் உள்ள உக்கிர சரபேஸ்வரர். நரசிம்மனை கீழே சாய்த்து கோபத்தை அடக்குவது தத்ரூபம். படம் இணைத்திருக்கிறேன். ஒவ்வொரு இறக்கையிலும் துர்கா, பிரத்யங்கரா வையும் காணலாம். தேனுகாம்பாளுக்குத் தனிச் சந்நிதி. சிவகாமி அம்மையுடனும் மாணிக்க வாசகருடனும் நடராசர்.
திருப்புகழ்-பாடல் 701 திருப்புகழை படியுங்கள். அருணகிரி நாதர் வந்து தரிசித்து எழுதிய பாடல்.
தோடு றுங்குழை யாலே கோல்வளை
சூடு செங்கைக ளாலே யாழ்தரு
கீத மென்குர லாலே தூமணி …… நகையாலே
தூம மென்குழ லாலே யூறிய
தேனி லங்கித ழாலே யாலவி
லோச னங்களி னாலே சோபித …… அழகாலே
பாட கம்புனை தாளா லேமிக
வீசு தண்பனி நீரா லேவளர்
பார கொங்கைக ளாலே கோலிய …… விலைமாதர்
பாவ கங்களி னாலே யான்மயல்
மூழ்கி நின்றய ராதே நூபுர
பாத பங்கய மீதே யாள்வது …… கருதாயோ
நாட ருஞ்சுடர் தானா வோதுசி
வாக மங்களி னானா பேதவ
நாத தந்த்ரக லாமா போதக …… வடிவாகி
நால்வி தந்தரு வேதா வேதமு
நாடி நின்றதொர் மாயா தீதம
னோல யந்தரு நாதா ஆறிரு …… புயவேளே
வாட யங்கியவேலா லேபொரு
சூர்த டிந்தருள் வீரா மாமயி
லேறு கந்தவி நோதா கூறென …… அரனார்முன்
வாச கம்பிற வாதோர் ஞானசு
கோத யம்புகல் வாசா தேசிக
மாடை யம்பதி வாழ்வே தேவர்கள் …… பெருமாளே.
.சிவனே, உன் காதில் தோடு, குண்டலங்கள். உன் திரண்ட சக்தி வாய்ந்த கைகளில் கங்கணம் எனும் வளையல்கள். யாழ் ஓசை போல் செவிக்கினிய குரல். வெள்ளை வெளேரென பரிசுத்த பற்கள், (அகில்) புகை மணக்கும் கூந்தல், தேன் ஊறும் இதழ்கள், ஆலகால விஷத்தைப் போன்ற கண்கள் ஒளி வீசும் அழகு. பாடகம் என்னும் கொலுசு அணிந்த பாதங்கள். பன்னீர் கமகம என மணக்க பன்னீர் பூசிய மார்பகம், கண்டாலே கிறுகிறுக்க வைக்கும் மயக்கம் தரும் அழகிய முகம். சிலம்பு அணிந்த திருவடித் தாமரை கொண்ட தெய்வமே என்னை ஏற்றுக்கொள்ள கொஞ்சம் நினையேன் . தேடினாலும் நாடினாலும் கிடைக்காத அரிய ஜோதியே, இணையற்ற பரஞ் சோதியே, பரம்பொருளே, சகல சாஸ்திரங்களும் பாடும் ஞானவடிவே, பிரமனும் வேதங்களும் சதா பூஜித்து நாடும் ஒப்பற்ற மாயை கடந்த சாந்தி ஸ்வரூப பன்னிரு கரத்தானே, சூரனை சம்ஹரித்த வேலாயுதா, மயில் வாகனா , தந்தைக்கு பிரணவத்தை உபதேசித்த தகப்பன் சாமி, மாடையம்பதி எனும் மாடம்பாக்கத்தில் வாழும் அருள் புரியும் தேவசேனாபதி பெருமாளே.” என அற்புதமாக இங்கே யுள்ள சுப்ரமணிய ஸ்வாமி யை அருணகிரி நாதர் வர்ணிக்கிறார். இங்கே அற்பு தமாக கைங்கர்யம் செய்யும் ஸ்ரீ குரு எனப்படும் அர்ச்சகர் எனக்கு மாலையிட்டு கௌரவித்து கோவில் புராணங்களை விளக்கினார். பக்தர்கள் இப்படிப்பட்ட அர்ச்சகர்களைத்தான் கோவிலுக்குத் சென்றால் தேடு கிறார்கள். அபிஷேக விபூதி அணிந்து மகிழ்ந்தேன்.
இன்று எனக்கு ஒரு அதிர்ஷ்ட நாள்.
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.

