

கற்றுக்கொள்வோம் – நங்கநல்லூர் J K SIVAN
1.இருபுருவங்களின் நடுப்பகுதியில் மிக நுண்ணிய நரம்பு அதிர்வு நிலை உள்ளது.
மற்றவர்களின் கண் பார்வைக்கு, த்ரிஷ்டிக்கு ரொம்ப சக்தி உண்டு. அது அவர்களுக்கு தெரியாமலேயே நெற்றி வழியாக அதிகம் கவரப்படும், கண்ணில் பட்டவர்களை தன்னிலை இழக்கச் செய்வதும் வசப் படுத்துவதும் இதன் மூலமாக எளிதாக செய்துவிடலாம். மனோ தத்துவம், ஹிப்னாட்டிஸம், மெஸ்மரிஸம் இதிலெல்லாம் பார்வையும் மன எண்ணங்களும் தான் ரொம்ப முக்கியமானவை அல்லவா? கண்ணேறு திருஷ்டி என்கிற தேவையில்லாத எண்ணங்கள் ஊடுறுவதை தடுக்க விபூதி ரொம்ப உதவுகிறது. மன வசியத்தை (hypnotism ) தடுக்க நெற்றியில் திலகமும், திருநீறு, திருமண் போன்றவற்றை இடுவது பாதுகாப்பு என முன்னோர்கள் கண்டு அனுபவித்துள்ளார்கள்.
2.அருட் சோதி புருவ நடுவில் தோன்றுவது இல்லை. அது கபாலக் குகைக்குள் தான் தோன்றும். புருவ நடுப்பகுதி வழியாகக் கபாலக் குகைக்குள் நுழைய முடியும் என்பதைக் குறிக்க வேண்டும் என்பதற்காக திருக்குறிகளை அங்கு இட்டிருக்கலாம் என்பது அறிஞர்கள் வாக்கு. நமது உடலில் நெற்றி ரொம்ப முக்யமான அங்கம். அதன் வழியாக அதிகமாக சக்தி உள்ளே போகும் வெளியே வரும்.
சூரிய கிரணங்களின் சக்திகளை இழுத்து நெற்றி வழியாக உள்ளே செலுத்தும் வேலையை விபூதி புரிகிறது. மேலே சூரியனை பார்க்கும்போது முகத்தின் பிரதான பகுதி நெற்றி தானே. அதனால் தான் நெற்றியில் திருநீறு பூசும் வழக்கம் ஆரம்பித்தது.
ஆக்ஞா தியானம் செய்பவர்கள் தேகம் ஜிகு ஜிகு வென்று சூடாக இருக்கும். அந்த சூடு தணிய சந்தனம் பூசுவார்கள்.அதனால் தான் சாமி ஆடுபவர்கள்,குறி சொல்பவர்கள் , மந்திரவாதிகள் யோகிகள், முனிவர் கள், ரிஷிகள் அதனால் தான் உடம்பு பூரா விபூதி சந்தனம் பூசிக் கொள்கிறார்கள். மருத்துவ ரீதியாக உடலுக்கு மிக முக்கியமான ஹார்மோன் சுரக்கும் பிட்யூட்ட்டரி சுரப்பியை நெற்றி தூண்டச் செய்கிறதாம். ஆக்ஞா தியானம் என்பதே இந்த சுரப்பியை தூண்டத்தான்.
எரிவது என்றால் தீயோடு எரிவது. தீ இல்லாமல் வெறும் கனலால் எரிவதை நீற்றுப் போவது என்பார்கள். சுண் ணாம்பு தயாரிக்க சிப்பி ஓட்டையும் வெறும் நீரையும் சேர்க்கும் போது அது நீற்றுப்போகத் துவங்கும் கொதிக் கும், நெருப்பு இல்லாமல் புகையும், அதில் நெருப்பு இல்லை. ஒரு வகை வேதி வினை. அப்படி நீற்றி எடுக்கப்படுவது திருநீறு.
சுண்டு விரலை நமது நெற்றிப்பொட்டில் தொட்டும் தொடாமலும் நேராக பிடித்தால் நெற்றியில் ஒருவித உணர்வு ஏற்படும். அந்த உணர்வை அப்படியே வைத்து தியானம் செய்வது ஆக்ஞா (நெற்றி) தியானம், இது குண்டலினி யோகாவின் தொடக்கம். முறையாக செய்தால் நம் சிந்தனைகள் சீர்படும், மற்றவரை விட அதிகமாக சிந்திக்கலாம். மனம் ஒருநிலைப்படும். எதையும் எளிதாக புரிந்து கொள்ள முடியும், காரிய சித்தி உருவாகும். சாந்தி தியானமும் செய்யவேண்டும், இல்லையென்றால் அது ஒற்றைத் தலைவேதனையில் கொண்டுவந்து விட்டுவிடுமாம்.
வடதிசை அல்லது கிழக்கு திசையையாவது நோக்கி நின்றுகொண்டு, கீழே சிந்தாமல், வலது கையின் ஆட்காட்டி விரல், நடு விரல், மோதிர விரல் ஆகிய மூன்று விரல்களால் திருநீறை எடுத்து அண்ணாந்து நின்று, நெற்றியிலே பூசிக்கொள்ள வேண்டும். எடுக்கும் போது திருச்சிற்றம்பலம் என்றும் பூசும் போது சிவாயநம அல்லது சிவசிவ என்று உதடு பிரியாது மனம் ஒன்றிச் சொல்லிக் கொள்ளுதல் வேண்டும். ஒன்று நெற்றி முழுவதும் அல்லது 3 படுக்கை வசக் கோடுகளாகத் தரிக்க வேண்டும். காலை, மாலை, பூஜைக்கு முன்னும் பின்னும், ஆலயம் செல்வதற்கு முன்னும், இரவு உறங்கப் போவதற்கு முன்னும் திருநீறு தரிக்க வேண்டும். .நெற்றி யில் முழுவதும் பரவிப் பூசுவதை “உத்தூளனம்”
எனப்படும். மூன்று படுக்கை வசக்கோடுகளாக பூசுவதை “திரிபுண்டரம்” எனப்படும்.
எத்தனை முறை படித்தாலும் புத்தம் புதிதாக தெரிந்து கொள்வதைப் போல் மனதுக்கு ரொம்ப திருப்தியாக சொல்பவள் பாட்டி. அவள் எழுத்துக்கள் மயிலிறகால் தடவிக்கொடுப்பது போல் மென்மையாக நெஞ்சத்தை சுகமாக வருடும். பக்தியும் ஞானமும் கலந்து எளிய தமிழில் நமக்கு இன்னமுது ஊட்டும் ஒளவைப் பாட்டியின் சில பாடல்களை இன்று தருகிறேன். ஏற்கனவே தெரிந்ததாக இருந்தாலும் உங்களுக்கு மீண்டும் படிக்கும்போது ஆனந்தம் பெருகுமே தவிர அலுப்பு தட்டாது. பாட்டி வாக்கு யின் அருள் வாக்கு .
”சிவாய நம என்று சிந்தித் திருப்போர்க்கு
அபாயம் ஒருநாளும் இல்லை – உபாயம்
இதுவே மதியாகும் அல்லாத எல்லாம்
விதியே மதியாய் விடும்”
”அடே என்னப்பனே , பரம சிவனே, என்று அவனை நெஞ்சில் இருத்திக் கொண்டு பேசாமல் சிவனே என்று இருப்பவனுக்கு எந்த அபாயமும் பத்து கிலோ மீட்டர் தூரத்துக்கு நெருங்காது. இது ஒரு சிறந்த உத்தரவாத முள்ள உபாயம். இது தான் சரியான அறிவுரை. இதைவிட்டு நெஞ்சில் வேறு எது எதையோ சுமந்து அலைந்து திரிந்து வாடுபவனுக்கு அவனை எதிர் நோக்கி இருக்கும் விதியே சிந்தனையை ஆக்ரமித்து அவனை கொஞ்சமாக கொஞ்சமாக தின்று விடும். திருவள்ளுவர் சொன்ன ”கனி இருப்ப காய் கவர்ந்த” சமாசாரம் இது தான்?
நீறில்லா நெற்றிபாழ்( 😉 நெய்யில்லா உண்டிபாழ்
ஆறில்லா ஊருக் (கு) அழகுபாழ் – மாறில்
உடன்பிறப் பில்லா உடம்புபாழ் ( ;)பாழே
மடக்கொடி இல்லா மனை.
மண்டையில் சம்மட்டியால் அடித்த மாதிரி பொருத்த மான உதாரணங்களோடு பாட்டி சொல்லும் போது யாருக்காவது இது புரியாமல் இருக்குமா? மோட்டு நெற்றியில் வெற்றிடம் எதற்கு? எங்கே திரு நீறு? குழைத்துப் பூசுடா . உன்னை கண்ணாடியில் பார். அட தெரிவது நீயா வேறு யாரோவா? இவ்வளவு தேஜஸ் உனக்கு எங்கிருந்து வந்தது? எனவே திருநீரற்ற நெற்றி ஒரு பாழடைந்த ஒரு வெற்றிடம். — உதாரணம் 1
ஒரு தனவந்தர் வீட்டில் விருந்து. எல்லோரும் இலைக்கு எதிரே ஆவலாக உணவுக்கு காத்திருக்கிறார்கள். நிறைய காய் கறி வகை வகையாக சமைத்து பரிமாறி யாயிற்று. சுடச்சுட அன்னம் இட்டு அதன் மேல் பருப்பு, சாம்பார் எல்லாம் பரிமாறு கிறார்கள். இருந் தாலும் அவற்றின் சுவை ஒரு சிறு ஸ்பூன் நெய்யால் தான் சாப்பாடு தூக்கலாக இருக்கிறது. இதைத்தான் உணர்ந்து நெய்யில்லா உண்டி பாழ் என்கிறாள். – உதாரணம் 2 .
என்னதான் வசதி இருந்தபோதிலும் ஒரு ஊர் என்றால் அதில் ஒரு ஆறு இருக்கவேண்டுமே? அதல்லவோ அந்த உண்மையான அழகு ஒரு ஊருக்கு. இதை உணர்ந்து தான் ஆறில்லா ஊருக்கு அழகு பாழ் என்கிறாள். உதாரணம் 3
கூடபிறந்தது யாருமில்லை என்கிற ஒரிக்கு உடம்பே பாழ். இதைத் தான் தானாடாவிட்டாலும் தன் சதையாடும் என்பார்கள் முன்னோர்கள். சகோதர சகோதரியில்லாதவன் கொடுத்து வைக்காதவன். – உதாரணம் 4
இதெல்லாம் எதற்கு கூறுகிறாள் கிழவி என்றால் எவ்வளவு தான் வசந்த மாளிகையாயிருந்தாலும் அதில் விளக்கேற்ற ஒரு பெண், மனைவி, என்பவள் இல்லையென்றால் வீடே பாழ் மனை என்கிறாள். ரசிப்பது ஒருபுறம் இருக்க, இதில் நமக்கு தேவையானது நீரில்லா நெற்றி பாழ். சிவனை நினைந்து அவன் பஸ்மம் இட்டுக்கொள்வது ஒன்றே சிறந்த கவசம்..
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



